1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாடலுக்கேற்ற இசை...

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Jun 4, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பாடலுக்கேற்ற இசை அமைந்தால், எத்துணை சிறப்பு!
    பாடல் ஒன்றின் இசை வடிவை, இங்கு ஆராதிக்கிறேன்!

    பாரதமே புகழும் 'சின்னச்சிறு கிளியே', என்ற பாடலுக்கு
    பாரதியார் தந்தார், பைரவி ராகத்தில் ஒரு எளிய மெட்டு!

    திரை இசை மேதையான C R சுப்புராமன், புதிய வடிவில்
    நிறைவான ராகமாலிகையாகக் கொடுத்தார், 1951 இல்!

    அறுபது ஆண்டுகளாக நிலைக்கும் இனிய மெட்டு, சிறப்-
    புறுவது தேர்ந்தெடுத்த ராக அமைப்பினாலேயே ஆகும்!

    செல்லம் கொஞ்சும் முதல் இரு கண்ணிகள், காபி ராகம்;
    செல்லப் பெண் ஓடி வரும் கண்ணி, ஆடுவோமே பள்ளுப்

    பாடுவோமே அமைந்த, துள்ளோட்டமான மாண்ட் ராகம்.
    பாடுவதிலே உச்சி முகர்ந்து, ஊர் மெச்சுவதில் ஆனந்திக்க,

    உயர்ந்த கம்பீரமான வசந்தா ராகம்; கள் வெறி கொள்ளும்
    உன்மத்த நிலைமை காட்ட, இனிமையான திலங் ராகம்.

    நெஞ்சில் உதிரம் கொட்டும் துன்பம் பரிமளிக்க, கேட்டதும்
    நெஞ்சை உருக்கும் நீலமணி ராகம், என அமைத்தார் அவர்!

    திரை இசை ஆனாலும், எல்லா முன்வரிசைக் கலைஞரும்
    நிறைவாகக் கச்சேரி முடிக்க, இதைத்தானே நாடுகின்றார்!

    காலத்தை வென்ற இந்த இசையைப் போற்றுவோம்; இந்த
    ஞாலத்தை மேம்படுத்த, இனிய இசை தேவை; அறிவோம்!
    [/COLOR]

    இனிய இசை வளர்க! வாழ்க!

    :my2cents
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    Nice Poetic Song. Bharathiyar padal varigal enrunrum ninaivil nirpavai.Chinnanjjirukileye MASTER PIECE of Bharathiar kavithaigal. Thanks for sharing
     
  3. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hello mam,

    >காலத்தை வென்ற இந்த இசையைப் போற்றுவோம்; இந்த
    ஞாலத்தை மேம்படுத்த, இனிய இசை தேவை; அறிவோம்!


    -How very true; you have brought out the unfathomable influence that music has on us:thumbsup

    Cheers,
    Saras
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Sree and Saras,

    Thanks for your nice comments.

    I play this song on veena when ever

    I get a chance to play before an audience!

    Raji Ram :)
     
  5. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    I have absolutely no knowledge in various ragas.. but your detail sounds really good rr... ilt
     
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Tulips!

    Those who know carnatic rAgAs can enjoy the write up more, as you say!

    And, I saw your reply to my comment on your blog! Really happy! :)

    Raji Ram :cheers
     

Share This Page