1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பளிச் ! பளிச் ! என்று உடுத்து பெண்ணே!!!

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Mar 28, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    பளிச் ! பளிச் ! என்று உடுத்து பெண்ணே!!!
    -----------------------------------------------------------------
    ஒரு சிறு முயற்சி. ... தங்களின் கருத்துக்களை ... பகிரவும்....
    ----------------------------------------------------------------------------------------------
    நம் மேனியோடு இணைந்திருக்கும் ஆடை ... நம் பெருமை, சுவாசம் எல்லாம் அதற்குத் தெரியும் பெண்ணே....
    நம்மோடு கூடவே இருக்கும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமோ?? ஆமாம் !!!

    பிரம்மன் படைத்தான் பெண்ணை ... சிலரை அழகு தேவதைகளாக.... சிலரை சுமாராக... பலரை இன்னும் சாதாரணமாக..... இந்த மூன்றாம் ரகத்தில் இருப்பவர்கள் உண்மையில் ரசனை மிக்கவர்கள்... ஏனெனில், அவர்கள் தங்களை அழகு செய்ய முற்படுவர்..... தான் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் குறியாய் இருப்பர்... அதற்கு முயற்சியும் எடுப்பர்...
    ஏதாவது ஒரு வகையில் தன அழகை வெளிப்படுத்த முற்படும் பொழுது இந்த ஆடை கைக்கொடுக்கும்.... மிடுக்காய், நேர்த்தியாய், பளிச்சென்று உடுக்கையில் அவர்கள் அழகு மிளிரும் ..... ஆனந்தம் பொங்கும்... அதோடு நிற்கமாட்டார்கள்..... இன்னும் இன்னும் என்ன செய்யலாம் என்று முற்படும் பொழுது அவர்கள் ரசனைத் தன்மை வெளிப்படும்....

    ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு அழகு உண்டு... நீ உடுக்கும் உடையில் மறைந்திருக்கு உன் அழகு.... நீ அழகில்லை என்று ஏன் வருந்துகிறாய்!!! தேவையற்றது ,,,,

    அலங்காரம் என்பது ஒன்றும் குற்றமல்ல.... மணிக்கணக்கில் செய்வதல்ல அலங்காரம்... அது என்றோ ஒருநாள் விழாக்களுக்கு
    செய்து கொள்ளலாம்... ஆனால், தினசரி அவசர வாழ்க்கை சூழலில், அந்தந்த காலக்கட்டத்தில் உடுக்க வேண்டிய அழகு ஆடைகளை ரசித்து உடுத்துங்கள்..... ஆடையை சேர்த்து , சேர்த்து அலமாரிகளில் கொலு வைக்காதீர்கள்....அந்தக் கொலுவையும் நீங்களே தான் பார்க்கப் போகிறீர்கள் பின்? யாரு வந்து உங்கள் அலமாரியைப் பார்த்து "ஆஹ் ஆஹ் நீ இவ்வளவு ஆழகான ஆடைகள், புடவைகள் வைத்திருக்கியே "என்று நாம் சேர்த்து வைத்ததை பாராட்டப் போகிறார்கள் ? கிடையாது... அவை நம் மேனியைத் தழுவும் போதுதான் அழகு பெறுகிறது...உங்களுக்கே நேரம் இல்லை உடுத்த என்றால் , மற்றவற்கு உங்கள் அலாமாறியைப் பார்க்க நேரம் எங்கே???

    என்றுமே பளிச் என்ற ஆடையை அணியுங்கள்.... அதை மீண்டும் மீண்டும் கண்ணாடியில் பாருங்கள் உங்கள் மனம் லேசாவதை உணர்வீர்கள் .... சற்று சோர்வாய் இருக்கும் பொழுது உங்களுக்குப
    பிடித்த அல்லது கணவருக்குப பிடித்த புடவை/ ஆடையை எடுத்து உடுத்திப் பாருங்கள்..... உற்சாகமாவீர்கள். உண்மை...

    ஒரு பெண்ணை பலப் படுத்தும் கருவி ஆடை அலங்காரம்... இது ஆராய்ந்த உண்மை... வெறும் வார்த்தை அல்ல... உன்னை நீ முதலில் ரசிக்க கற்றுக்கொள்... மனம் சஞ்சலத்தில் இருக்கும் போதும் சரி,,, சிறு சர்ச்சை ஏற்பட்டிருந்தாலும் சரி, அதை ஒரு பக்கம் தள்ளி விட்டு ஒரு மிடுக்கான ஆடையை உடுத்தி நீங்கள் நடை போட்டுப் பாருங்கள்... நான் சொல்வது உண்மை என்பது விளங்கும்...தன்னம்பிக்கை பிறக்கும் இதில் ஐயம் இல்லை...

    பெண்ணே... நீ அழகுதான்.... உன் அழகை நீ ரசி.... ஏழு பிறவி இருக்கு என்று கூறலாம்... நமக்கு தெரிவது இப்பிரவிதான்.... அதில் நம்மை நாம் பெருமைப் படுத்திக்கொள்வோம்....

    பளிச்சென்று வருவேன் விரைவில்....
    மைதிலி ராம்ஜி
     
    Caide, Rajijb, periamma and 1 other person like this.
    Loading...

  2. DeepaMoha1

    DeepaMoha1 New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Superb! I agree with you.
     
    sugamaana07 likes this.
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Mythili தாங்கள் சொல்வது மிகச் சரி. நாம் தினமும் நமக்கு பி டித்த உடைகளையோ, அல்லது புதிய ஆடை களை உடுத்தி நாம் கண்ணாடி முன் நின்று நம்மை நாம் பார்த்தால் நாம் இத்தனை அழகா என்று நம் மனம் குதூகலிக்கும். நம் சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது. இந்த சி று சந்தோஷமே அன்றைய நாள் முழுவதும் energetic ஆக இருக்கும். நேற்று தான் என் அம்மாவிடம் சொன்னேன், அம்மா, உன்னிடம் இருக்கும் புதிய புடவை களை எடுத்து தினமும் கட்டி கொள். பட்டு புடவை களை உளளே வைத்து என்ன செய்ய போகிறாய். நீ புதிய புடவை கட்டி கொண்டு கண் ணாடி முன் நின்று பார். நீ சமையல் ரூமை மறந்து விட்டு சந்தோசம் ஆக இருப்பாய் , என்றேன். என் அம்மா நான் சொன்னதை மிகவும் ரசித்து சிரித்தார்கள். ஆம் , என் அம்மாவிற்கு 80 வயதாகிறது- அனைத்து வேலையும் அவர்கள் தான் செய்வார்கள். இந்த பதிவை படித்ததும் நேற்று என் அம்மாவிடம் பேசிய ஞாபகம் வந்தது.
    அழகிய எதார்த்தமான பதிவு இது. நன்றி
     
    sugamaana07 likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    "முதலில் நீ உன்னை ரசிக்க கற்று கொள்."உண்மை . மைதிலி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
     
    sugamaana07 likes this.
  5. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    thank u..
     
  6. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    nanri ...
     

Share This Page