பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினாய&#3

Discussion in 'IL'ite milestones' started by natpudan, Dec 10, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினாயிரம் தமிழ்க்கணக்கும்

    பண்டைய தமிழ் இலக்கியத்தில்,
    கீழ்க்கண்ட பதினெண்கீழ்க்கணக்கு போலே,
    ஐயலில் நாமறிந்த வேணி இங்கு தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம்,
    தன் பதிப்புகளை நாமறிந்த எளிய தமிழில் அதுவும் கவிதைகளாகவே இயற்றி,
    இன்று நமக்கென தன் பதினாயிரமாவது பதிப்பை பதித்து நம் நெஞ்சத்தில் நல்ல,
    படைப்பாளியாகவும், நண்பராகவும் வலம் வருகிறார் - தமிழ் பணியும், நட்பும் தொடரட்டும் என்றும். :thumbsup

    பதினெண்கீழ்க்கணக்கு

    1. நாலடியார்
    2. நான்மணிக்கடிகை
    3. இன்னா நாற்பது
    4. இனியவை நாற்பது
    5. கார் நாற்பது
    6. களவழி நாற்பது
    7. ஐந்திணை ஐம்பது
    8. திணை மொழி ஐம்பது
    9. ஐந்திணை எழுபது
    10. திணைமாலைநூற்றைம்பது
    11. திருக்குறள்
    12. திரிகடுகம்
    13. ஆசாரக்கோவை
    14. பழமொழி நானுறு
    15. சிறு பஞ்ச மூலம்
    16. முதுமொழிக் காஞ்சி
    17. ஏலாதி
    18. கைந்நிலை
    பதினெண்கீழ்க்கனக்கைப் படித்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை,
    நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை, நம் வேணியின் பதினாயிரம் தமிழ்க்கனக்கைப்,
    படித்து, புரிந்து, அவருடன் உரையாடும், வாய்ப்பைப் பெற்றதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

    பண்டைய பதினெண்கீழ்க்கனக்கைப் போலே,
    மேலும் பல பதினாயிரம் தமிழ்க்கனக்கைப் பதித்து,
    என்றும் நம் உயிரோடும், உணர்வோடும் கலந்த தமிழாக,
    மனம் வீசி மலர்ந்திருக்க வாழ்த்துக்கள் பல பதினாயிரங்கள். :thumbsup

    வேணி - பதினெண்கீழ்க்கணக்கை மேற்கோள் காட்டியதின் காரணம் விளங்குகிறதா?
    அவற்றைப் பற்றி படிக்கும் வாய்ப்பு உங்கள் எழுத்து வழி / எளிய வழி - என்றெண்ணியே... :)
     
    Last edited: Dec 10, 2010
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    வேணிம்மா.... வாழ்த்துக்கள்!!!!!!!!!! தமிழ் பதிவுகள் அத்தனையும் கவிதைகளா...அச்சோ... நீங்க கிரேட்!!! உங்கள் கவிதைக்கு நிகராக எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் மற்றவர் கவிதைக்கு கவிதையால் கொடுக்கும் பின்னூட்டம் தான்...வேதா அடிக்கடி சொல்வது போல ( நீங்க ரவுடியா இருந்தாலும் [​IMG] )மென்மையான கவிதைகள் தான் உங்கள் சிறப்பு!!!
    அத்தனை மலர்களையும் பற்றி அறிந்து அதை எங்களுக்கு கவிதையாலேயே விளக்கிய அழகுக்கு நிகரே இல்லை!!!![​IMG][​IMG][​IMG]

    (அவங்க ரெண்டு பேரும் தான் எப்பவும் முதல் வாழ்த்து சொல்றாங்க உங்களுக்கு...எனக்கு சான்ஸே கிடைக்கறதில்லை. [​IMG] அவங்க கூட டூ.. [​IMG] உங்களை பற்றி சொல்ற சாக்குல அவருக்கு பதினெண்கீழ்க்கணக்கு என்னென்ன ன்னு தெரியும்ன்னு சொல்லிட்டாரு நட்ஸ்...[​IMG])
     
    Last edited: Dec 10, 2010
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    அன்புள்ள ஜே வீ,

    தட்டிக் கொடுத்தே பிறரை முன்னுக்கு கொண்டு வரும் உங்கள் அன்பும், நட்பும், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. உங்களை இந்த தளத்தின் மூலம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ஆனால் ஏனோ கொஞ்சம் மிகைபடுத்தப்பட்ட மாதிரி ஒரு தோணல். இத்தனைக்கும் நான் தகுதியானவள் தானா??? என எனக்கே கொஞ்சம் ஐயம் வரும் போல இருக்கிறதே....

    அத்துனையுமா???? குருவியின் தலையில் பனங்காய் வைக்கலாம். பாரங்கல்லை வைக்கலாமா??? நீங்கள் சொல்லி நான் மறுக்கவும் வழி இல்லை.

    அப்படியே முடியாவிட்டாலும், சேது பந்தனம் கட்ட உதவிய அணிலாய், என்னால் முடிந்ததை சொல்கிறேன்.

    நன்றி, என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    நீ விட்டது போகத்தான் நாங்கள் சொல்கிறோம்.
    கவலைப் படாதே ப்ரியா - இன்னும் நிறைய எழுதுவாங்க,
    ரவுடி வேணி நமக்காக. :)

    அது தெரியாதனால தான அவங்கள எளிய தமிழில் எழுத சொல்றேன்.... :biglaugh
     
  5. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    நட்ஸ் ரொம்ப நன்றி வேணிக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்ததுக்கு. அனவைருக்கும் பதிநெந்கேழ் கணக்கு பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    Nats, the target you have given for Veni is superb. But I do not know how much I can contribute by way of reading. Because pathinenkeezhkanakku na ennaney theriyaatha oru jeevan!. It has something to do with Tamil Literature only that much I know. As Veni has observed, you really motivate every one.


    Veni dear, all the best to achieve the target set for you by our friend. You are really great Veni. I am surprised at the richness of your tamil language.
     
  7. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    என் அன்பான வாழ்த்துக்கள் வேணி. இதுவரை நீங்க எழுதின கவிதைகள் எதுவும் படிக்க வாய்ப்பிருந்ததில்லை. இனி படிக்க முயற்சி செய்கிறேன்.

    நட்பு சார், என்னை போல கத்துக்குட்டியிலையும் சின்ன கத்துகுட்டியானவங்களுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா? ஏன்னா மல்லிகா அவங்க சொன்னா மாதிரி பதினெண்கீழ்கணக்கு எனக்கும் புரியலைங்க. :bonk
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    நட்ஸ்.
    என்ன சொல்றதுன்னே தெரியல.
    தோழியின் தமிழ் தாகத்துக்கு நல்ல தீனி கொடுத்துள்ளீர்கள்...
    மிக்க நன்றி.[​IMG]
    அப்படி அவர்கள் எழுதும் விளக்கவுரைகளுக்கு உங்களது கோட்டோவியமும் இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.இது என் தாழ்மையான வேண்டுகோள்.


    வேணி.
    வாழ்த்த்த்த்.......இல்லை நான் வாழ்த்து சொல்ல ஆரம்பித்தால்
    என்னை மறந்து விடுவேன்.வந்த காரியம் மறந்து விடும்.
    புதிய பதிவுக்காய் காத்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்(சொல்லாமல் இருக்க முடியவில்லை..ஹி ஹி ஹி)[​IMG]


    தேவா.
    ஆமா நீ வந்து பேசிட்டாலும்....
    இல்லாத டவருக்கு ஒரு செல்போனு
    பேசவே முடியாத ஒரு செல் போனுக்கு காவல் இந்த பொண்ணு ....[​IMG]
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    மல்லிகா & மீனா

    அதாவது சங்க கால தமிழ் இலக்கியத்தை பல கூறுகளாக பிரித்து வைத்துள்ளனர்..
    தொல்காப்பியம்,பத்துப்பாட்டு ,எட்டுத் தொகை,பதினென்கீழ்க்கணக்கு நூல்கள்,
    அறநீதி நூல்கள்,பெருங் காப்பியங்கள்,சிறு காப்பியங்கள்
    பன்னிரண்டு திருமுறைகள்,வைணவ நூல்கள்.
    நாலாயிரத்திவ்விய பிரபந்தம், சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள்,
    கிறித்தவ தமிழ் இலக்கியங்கள்,இசுலாமிய தமிழ் இலக்கியங்கள்
    உலாக்கள்,பரணிகள்,புராணங்கள்,இலக்கண நூல்கள்,நிகண்டுகள்....

    இதில் பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் என்பன
    தமிழகத்தில் சங்கம் நிறுவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே சேர்ந்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.


    இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை.
    நீதி நூல்கள்:
    1. திருக்குறள்
    2. நாலடியார்
    3. நான்மணிக்கடிகை
    4. இன்னா நாற்பது
    5. இனியவை நாற்பது
    6. திரிகடுகம்
    7. ஆசாரக்கோவை
    8. பழமொழி நானூறு
    9. சிறுபஞ்சமூலம்
    10. ஏலாதி
    11. முதுமொழிக்காஞ்சி

    ஆறு நூல்கள் அகத்திணை(ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும்) சார்பானவை.

    அகத்திணை நூல்கள்

    1. ஐந்திணை ஐம்பது
    2. திணைமொழி ஐம்பது
    3. ஐந்திணை எழுபது
    4. திணைமாலை நூற்றைம்பது
    5. கைந்நிலை
    6. கார் நாற்பது


    ஒன்று புறத்திணை நூல்(பழந் தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது)

    புறத்திணை நூல்

    1. களவழி நாற்பது

    இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

    இந்த முகவுரை போதும்னு நினைக்கிறன்....:)
     
  10. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Re: பதினெண்கீழ்க்கணக்கும் வேணியின் பதினா&#2991

    அன்பு வேணி

    உனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாழ்த்துகளும் வரம்
    அதன் பின்னே இருபது உன் கடின உழைப்பு என்னும் தவம்

    நேயர் விருப் பத்தை நிறைவேற்ற நீ போறுபேர்ப்பாய்
    நேயர் தமிழ் தாகத்திற்கு வழி வகுப்பாய்

    காந்தா
     

Share This Page