1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசம் மறக்காது நெஞ்சம்!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jan 14, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உனக்கு மட்டும்தான் புரியவில்லை
    என் நேசமென நினைத்தேன், ஆனால்
    எனக்குமே அல்லவா புரியவில்லை
    ஏன் உன்னை நேசிக்கிறேன் என்று...

    எல்லாரும்தான் கேட்கிறார்கள்...ஆனால்
    எனக்கே தெரியாத பதிலை
    மற்றவருக்கு என்ன சொல்லி விளக்க நான்?

    சொல்லிவிட்டா வருகிறது காதல்?
    இல்லை நீ விலக சொன்னதால் மட்டும்
    விட்டுசெல்லவா போகிறது அது
    எந்தன் மனம் விட்டு?

    விளக்கம் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்க
    இது என்ன பல்கலைகழக பாடமா?
    நடித்துவிட்டு சென்றுவிட்டாய் நீ...
    ஆனால் தினமும் அதை ஒத்திகை நடத்தி
    பார்த்துக்கொண்டிருக்கிறது என் மனம்;

    என் காதல் கூட உன்னை
    காயப்படுத்த விடமாட்டேன்...
    இதுவரை உனக்கு புரியாமலே போனது
    இப்போதும் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே....
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நேசம் கொண்ட மனது
    இப்படித்தான் துடிக்கும்....அதுவும்
    நேசம் கொண்டவரே விலகினாலும்
    விடாது ..தொடர்ந்து நேசித்து கொண்டே
    இருக்கும்..நேசிப்பவரின் மனதை..என்றும் மாறாமல்
    என அழகாய் சொல்லிவிட்டாய் ....
    தேவா கவிதை வரிகள் அருமை.....:)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேவா...உன் வரிகள் படித்தவுடன்

    ஆசை முகம் மறந்து போச்சே -இதை
    யாரிடம் சொல்வேனடி தோழி
    நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
    நினைவு முகம் மறக்கலாமோ
    ....பாரதியார் வரிகள் என் நினைவிற்கு வருகிறது

    நெஞ்சம் மறப்பதில்லை நேசத்தை.
    கொஞ்சமும் மறுப்பதற்கில்லை
    அது விட்டுச் சென்ற ரணச் சுவடுகளை.
    ஆறாமல் இருக்கும் வடுக்கள் சொல்கிறது -உன்னில்
    நான் தொலைத்த என் வழுக்கல் வாழ்க்கையை ...

    நல்லா எழுதி இருக்கே.:)
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female

    சரோஜ் பழிக்கு பழியா......:rotfl:rotfl
    நல்ல இருக்கு உங்க விளையாட்டு......பின்னூட்டமும்....:)
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நம்ம எழுதறது நமக்கே புரியறதில்ல,
    இதுல உனக்கே புரியாததைப் பற்றி எழுதி,
    அத நான் படித்து புரிந்தும் புரியாமல் ஒரு பதில் தர,
    என்னால முடியாதும்மா, நீ புரிஞ்சிக்கிட்டு சொல்லி அனுப்பு வந்து பதில் தர்றேன்.
    இப்ப எழுதி உன் காயப்பட்ட மனதை மேலும் காயப் படுத்தற மனசு எனக்கு இல்லப்பா.
     
  6. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சொல்லாத நேசதிக்கு பாதிப்பு அதிகம் தான்
    சொல்லாமலே இருந்து நேசத்தை ரசிப்பது ஒரு புதுமை அனுபவம்.நன்றாக சொன்னீர்கள் பிரியா
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    kaayapaduthaatha kaadal alagai vanthathu arumai da:thumbsup
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி லதாக்கா!!!:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சரோஜ்....பார்த்தீர்களா உங்களையும் என்னை போல நல்லவளாக்கி விட்டேன்? சும்மா சொல்ல கூடாது.... கலாய்பதில் நீங்க டாக்டர் பட்டமே வாங்கிட்டீங்க.:rotfl:rotfl:rotfl

    ஆறாமல் இருக்கும் வடுக்கள் சொல்கிறது -உன்னில்
    நான் தொலைத்த என் வழுக்கல் வாழ்க்கையை ...


    நான் கஷ்டப்பட்டு சொன்னத நீங்க ரெண்டே வரியில் சொல்லிட்டீங்க...:)
    நன்றி சரோஜ்!
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஹ்ம்ம்...என்ன பண்றது லதாக்கா.....எனக்குன்னு இருந்த ஒரே வேலைக்கும் வெட்டு வைக்குறாங்க எல்லாரும்...:spin
     

Share This Page