1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிலாரசிகன் கவிதைகள்..

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, May 16, 2009.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    1.அவள் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறாள்

    வெப்ப*த்தின் மிகுதியில்
    ஒவ்வொரு இத*ழாக*
    உதிர்ந்து
    சாம்பல் குவிய*லான*து
    என்னுட*ல்.
    நீல* நிற* பூக்க*ள்
    சில*வ*ற்றை
    குவிய*ல்மீது வைத்து
    திரும்பி செல்கிறாய்
    வீழ்ந்த* சாம்ப*ல்
    காற்றில் கரைந்து
    ம*றைகிற*து.
    எவ்வித மாற்றங்களுமின்றி
    உன்னுல*கில் இப்போதும்
    பெய்துகொண்டிருக்கிறது அதே மழை.

    2.சிலையுலகம்

    உறைந்த மெளனத்தை
    உகுத்துக்கொண்டிருக்கும்
    அந்தச் சிலையின்
    மர்ம அழகிலிருந்து
    எழும்பும் இசை
    மனதின் ஆழத்தில்
    ஒன்றன்மீது ஒன்றாய்
    படிந்துகொண்டிருந்தது.
    மெளனத்தின்
    மென்கரம் பற்றி
    சிலையுலகினுள் நுழைந்தேன்.
    சப்தங்களால் நிறைந்திருந்த
    அவ்வுலகை விட்டு
    வெளிக்குதிக்க என்
    கரம் பற்றும்
    அவசரத்தில் வரிசையில்
    நின்றன சிலைகள்.

    3.செந்நிற கூந்தல்காரி

    அவள் முகத்தில்
    பூனையொன்றின் சாயல்
    படர்ந்திருந்தது.
    காற்றில் அசைகின்ற
    செந்நிற கூந்தலும்
    உற்று நோக்குகின்ற
    நீல நிற கண்களும்
    அவளுக்கு வாய்த்திருந்தன.
    உதிரிந்துகிடக்கும்
    செர்ரிப் பழங்களை
    ஒவ்வொன்றாய் தேடிச்சென்று
    மிதித்துக்கொண்டிருந்தவள்
    சட்டென்று வான்நோக்கி
    பார்த்து சிரித்தாள்.
    பின்,
    ஏதுமறியா சிறுமியாய்
    புல்வெளியில் ஓடி விளையாடினாள்.
    பாவம் பைத்தியமென்றார்கள்
    பூங்காவிலிருந்தவர்கள்.
    மெல்ல மெல்ல
    தங்களது முகம்
    வேட்டைநாயின் முகமென
    மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.
     
    Last edited by a moderator: May 16, 2009
    Loading...

  2. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    காதலின்றி வேறில்லை *- சில காதல் கவிதைகள்

    பட்டாம்பூச்சியின்
    வண்ணச்சிறகில்
    கைகள் கோர்த்து
    அமர்ந்திருக்கிறோம்
    நாம்.
    வானமெங்கும் சுற்றித்திரிந்த
    பட்டாம்பூச்சி
    பூவொன்றின் இதழ்களில்
    உன்னை இறக்கிவிடுகிறது.
    பூவுக்குள் ஓடி மறைகிறாய்
    நீ.
    பூக்களின் பெயர்க்காரணத்தை
    உலகிற்கு அறிவிக்கிறேன்
    நான்!

    0

    ஓடிவந்து என்
    கழுத்தைக் கட்டிக்கொண்டு
    உன் கன்னம் உரச
    நீ பேசும்பொழுதெல்லாம்
    விதவித வண்ணங்களாய்
    என்னுள் பெய்கிறது மழை.

    0

    உனக்கு பிடித்த மண்வாசத்தில்
    நீயும்
    எனக்கு பிடித்த உன்வாசத்தில்
    நானும்
    ஒற்றை குடைக்குள்
    விரல்கள் கோர்த்து
    மெளனித்து நடக்கிறோம்.
    விரல்களின் ஸ்பரிசத்தில்
    வலுக்கிறது காதல்மழை.

    0

    சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
    முத்தைப்போல்
    உன் கன்னக்குழிக்குள்
    ஒளிந்திருக்கிறது
    எனக்கான காதல்புன்னகை!

    0
     

Share This Page