1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிறம் மாறும் நிலவே வா!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Apr 29, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks dear!

    need your response for this too:bowdown
     
  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    very good start dear.
    Again waiting for the next part.
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    yams,
    don't loose your temper,really it is nice pa.
    pinadi periya eluthalara varum pothu perumaiya solluvommla!
    yams,enna exam pa pandra,ellarum all the best solranga!
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks dear!:cheers
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks deepa dear!

    i am doing my b.e 3rd year thats what everyone wishing for my sems!:thumbsup
     
  6. apar_ram

    apar_ram Silver IL'ite

    Messages:
    804
    Likes Received:
    48
    Trophy Points:
    70
    Gender:
    Female
    Hey yams,
    Super start.. enna adutha kathaiyum on the go ezhutharaya.. good luckma for everything
    aparna
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    part-2:


    வீட்டிற்கு வந்தவளுக்கு வழக்கம் போல் பழகிய இடமே என்றாலும் முன் போல் சிரித்து பேசி விளையாட மனம் இல்லை!
    தலை வலி என்று கூறி தனியறையின் புகுந்து கொண்டவளுக்குள் நினைவுகள் என்னும் பிசாசு பேயாட்டம் போடுவதாய்!
    இப்படி எப்படி சொன்னாலும் கேட்காமல் அதை பற்றியே நினைக்கும் மனதை என்னவென்று சொல்வது? என்று சலித்தவளுக்கு எவ்வளவு தடுத்தும் அவனை பற்றி நினைக்காமல் இருப்பது சிரமமாய் தான் இருந்தது!
    பேசாமல் இந்த மனதிற்கும் ஒரு பூட்டு இருந்தால் அதையும் பூட்டி சாவியை தொலைதூரம் எறிந்திருப்பாள் ஆனால் அதெல்லாம் நடந்து விட்டால் மண்ணில் பாதி பேருக்கு மேல் கவலைகள் அற்று சந்தோஷனாய் அல்லவா இருப்பார்கள் கடவுளுக்கு அதில் இஷ்டம் இல்லை போல அதனால் தான் அப்படி படைக்கவில்லையா அவன்? என்று நொந்தவளுக்கு நினைவுகள் பின்னோக்கி போவதாய்!

    கல்லூரியில் சுற்றி திரிந்த பட்டாம்பூச்சி காலம் நினைவில் வந்து கண்ணீர் வடிக்க செய்தது!
    என்ன ஒரு ஆனந்தமான வாழ்க்கை அது! அதிலேயே வயது நின்று தொலைத்திருக்கலாம்! வகுப்பில் சக மாணவ மாணவியரோடு பேசி விளையாடி சிரித்து என ஆனந்தத்தை தத்தெடுத்த காலம் அது!
    முதல் மதிப்பெண்ணை மட்டும் தான் அவள் இது வரை பார்த்ததுண்டு என கூறும் அளவுக்கு படிப்பு விளையாட்டு என்று அனைத்திலும் தான் எத்தனை வெற்றிகள்??
    ஒரு வேலை அதற்கு மொத்தத்திற்கும் சேர்த்து தான் வாழ்வில் மொத்தமாய் தோற்றாலோ?

    கல்லூரி பருவத்திலும் தான் எத்தனை தோழிகள் அறிவுறுத்தி இருப்பார்கள் "மலர்! உன்னை மாதிரி பெண்ணை நாங்க பார்த்ததில்ல ஆனா உன்கிட்ட இருக்கறதுல இது ஒண்ணு தான் பெரிய மைனஸ்! தயவு செய்து இத விட்ரு இல்லன பின்னாடி வாழ்க்கையே நரகம் ஆயிடும்னு !" ஆனால் அதெல்லாம் இந்த மரமண்டையில் எங்கு ஏறியது?
    "இல்லையடி! எனக்கு இது ஒன்றும் அப்படி பெரிய குறையாய் தெரியவில்லை!"என்று மூஞ்சில் அடித்தது போல் பதில் அல்லவா கொடுக்க தோன்றியது தவிர கொஞ்சமும் ஏன் சொல்கிறார்கள் எதற்கு சொல்கிறார்கள் என்று யோசிக்க நேரமே இருந்ததில்லை!
    வாழ்க்கை என்றால் இன்பமயே என்றல்லவா நினைத்திருந்தால் ஆனால் அதில் இவ்வாறன துன்பங்களும் நேரும் என்று பாவம் அவள் அப்போது அறிந்தது ஏது?? கூட்டில் இருக்கும் சிட்டு குருவியாய் தான் இருந்தாள் இப்போது வெளியுலகை சந்திக்க வலிகளும் ரணங்களும் தான்
    மிச்சம் !!

    ஆனாலும் அவர்கள் பேச்சை கொஞ்சம் கேட்ருக்கலாம் என்று மனம் திரும்ப திரும்ப இடிக்க இப்போது அதை நினைப்பது கண்
    கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் தான் என்று தோன்றியது!
    இப்போதும் அவள் தன்னை மாற்றி கொண்டதாக தெரியவில்லை பிறப்போடு பிறந்தது மாறுமா என்ன?
    ஆனால் இப்படி ஒற்றை பிள்ளையாய் தாய் தந்தை செல்லம் அனைத்தும் ஒன்றாய் சேர்த்து கொடுகாதிருந்திருந்தால் தானும் ஒரு சாதாரண பெண்ணாய் அல்லவா வளர்ந்திருப்பாள்! தந்தை கிரிஷ்ணனுகேற்ற ராதையாய் தன் தாயை போல் அவளும் மதிகாய் காத்திருக்கும் அல்லி மலராய் அல்லவா காத்திருந்திருப்பாள்!


    ஆமாம் மதிவாணன் என்னும் அழகான பெயருக்கு சொந்தமானவன் தான் இதோ இந்த மலருக்கும் சொந்தமானவன்! ஆம்! இவள் ஒருத்திக்கு மட்டும்! கணவன் என்னும் பந்தத்தால்! எவ்வளவு பட்டாலும் திருந்தாத சாத்தனின் மனம் என்று தோன்றியது!
    அருமையாய் தானே வாழ்கை சென்றது அந்த ஒரே ஒரு சாத்தானை மட்டும் ஆட்கொண்டிருந்தால் இந்நேரம் அவள் மதியின் மடியில் அல்லவா துயில் கொண்டிருப்பாள்??
    கணவனின் மடியின் கதகதபிற்க்கு ஏங்கியது நெஞ்சம்! எப்போதும் தன்னை மடியிளிட்டு உறங்க செய்யும் கணவனை நினைக்க இந்த பஞ்சு மெத்தை முள்ளாய் தைத்தது!
    இனி அந்த சுகத்தை பற்றி நினைப்பது கூட முடியாது அந்த அளவல்லவா எட்டா கனியாய் ஆகி விட்டது என்று நினைக்கும் போதே சரம் சரமாய் விழி நீர் அவள் கன்னம் நனைத்தது!


    "மதி என்னை மறந்து விட்டீர்களா??" என்று மனம் மட்டும் ஊமையாய் கண்ணீர் வடித்தது!
    கண்ணீர் துடைக்க மார்கமும் இன்றி அப்படியே சிலை போல் அமர்ந்திருந்தாள்!
    இனி தன் வாழ்க்கை என்னும் பெரிய கேள்வி குறிக்கு பதில் தான் என்ன? என்று யோசித்தவளுக்கு ஆறுதலாய் நினைவில் நின்றது அவளில் படிப்பு மட்டுமே! எப்படியும் இனியும் வீட்டில் இருந்து மனதை போட்டு வாட்டி எடுப்பதை விட ஒரு நல்ல வேலையாய் சேர்ந்தால் மனமாற்றம் கிடைக்கும்! என்று யோசித்தவள் சற்றும் தாமதிக்காமல் அதற்கான முயற்சியில் இறங்கினாள்!
    ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறு நினைக்கிறதே!
     
    Last edited: Apr 30, 2010
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks aparna!:bowdown
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    part 2
    yams very nice divorce aayirumaaa
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    appa avasara thilagamae wait and see :thumbsup

    thanks for the immediate reply da!:bowdown
     

Share This Page