1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிரபராதி

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Mar 7, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பொய்யாக ஜோடிக்கப்பட்ட பாலியல் பலாத்கார குற்றச்சாட்டினால் 20 ஆண்டுகள் தண்டனை

    23 வயதில் சிறை சென்ற விஷ்ணு திவாரி நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளிவந்த போது அவருக்கு 43 அவர் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டி மனதை ரணமாக்குகிறது.

    எனது தந்தை என்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார், நான் தான் குடும்பத்தின் மூத்த மகன், என்னை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக பலகோடி பெறுமானமுள்ள எங்களது நிலங்களை சில ஆயிரங்களுக்கு விற்று வழக்கு நடத்தினார். ஒரு கட்டத்தில் பணம் அவரிடம் இல்லாமல் போனாலும் நான் நிரபராதி என்பதில் நம்பிக்கையுடன் இருந்தார், என்னை அடிக்கடி சிறையில் வந்து பார்த்து ஆறுதல் சொல்வார் திடீர் என்று அவர் வரவில்லை நான்கு ஐந்து மாதங்கள் கழித்து தான் எனது தந்தை இறந்துவிட்டார் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது, அவரின் இறுதி சடங்கிற்கு கூட செல்லமுடியாமல் போய்விட்டது.

    என் அம்மா, தம்பி, அப்பா என எனது குடும்பத்தில் அனைவரும் எங்கள் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றசாட்டை நினைத்தே இறந்துவிட்டனர். இப்பொழுது ஒரு தம்பி மட்டும் உயிருடன் இருக்கிறார் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது அரசாங்கம் எனக்கு கொடுத்த 600ரூபாயை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன் என் வாழ்வே நிலைகுலைந்து போய் விட்டது, 20 வருட சிறைவாசத்தில் மிஞ்சியது கையில் இருக்கும் கொப்பளங்களும், உடைந்துபோன உடம்பும், 600 ரூபாயும் தான் என்று கண்ணீர் மல்க பெட்டிகொடுத்துவிட்டு லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தன் கிராமத்துக்கு பேருந்தில் புறப்பட்டார்.

    தங்கள் குடும்பத்திற்கும் பக்கத்துக்கு வீட்டு குடும்பத்திற்கும் நில தகராறு இருந்த நிலையில் பக்கத்துக்கு வீட்டு பெண் தான் வயலில் வேலைசெய்துவிட்டு வீடு திரும்பும்போது தன்னை தாக்கி தன்னை வன்புணர்ச்சி செய்ததாக புகார் அளித்தார். மருத்துவ அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெனின் உடலில் காயங்களோ அல்லது வன்புணர்ச்சி செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது, அப்படி இருந்தும் லலித்பூர் நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. பிறகு எஸ்.சி/எஸ்டி வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இவரின் நன்னடத்தையை பார்த்து சிறைத்துறை அதிகாரிகள் அவர் வழக்கை தூசி தட்டி எடுத்து மேல்முறையீடு செய்துள்ளனர். “மருத்துவ ஆதாரத்தில் பலாத்காரம் செய்ததற்கான குறைந்த பட்ச அடையாளம் கூட இல்லை, விந்து இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. பெண்ணின் உடல் பாகங்கள் எதிலும் காயமில்லை, பின் எப்படி பலாத்காரம் நடந்திருக்க முடியும்? அரசு தரப்பு வாதங்கள், சாட்சிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை இவர் வாயைப்பொத்தி தரையில் வேகமாகத் தள்ளியதாக கூறப்பட்டாலும் அந்தப் பெண் உடலில் எந்த காயமும் தென்படவில்லை..

    மேலும் சாட்சியங்களின் குறுக்கு விசாரணையில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவர் மீது தவறாக குற்றவாளி என்று லலித்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அந்த தீர்ப்பை ரத்து செய்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுகிறோம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது..

    மேலும் இவரின் ஆயுள் தண்டனையைக் குறைக்க வாய்ப்பிருந்தும் மாநில அரசு அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..

    20 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்தாலும் வெளியே வந்த திவாரி தான் இழந்த நாட்களை திரும்ப பெற முடியுமா ? அவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் ? இனி வாழப்போகும் வாழ்கையாவது இனிமையாக அமையா அரசாங்கம் இவருக்கு உதவி செய்யவேண்டும் என்பதே பலரின் வேண்டுகோள்

    Jayasala42
     
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,749
    Likes Received:
    12,573
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Sorry state of affairs and the wrongly convicted lost his youth and family and he is reduced to a spent force.

    One would empathise with him, but it would be a herculean task to get his derailed life back on tracks.

    Higher court acquitted and fired the lower court . But who will punish the then concerned parties of lower court connected with error in judgement. Who will punish them? High level corruption must have played at all stages of this case. Many must have lined their pockets. Who will bring the erring judge to justice?

    There would never be a time to investigate how and why the lower court erred in judgement. The entire legal chain starting from the complainant side and the police are responsible.
     

Share This Page