சின்னஞ் சிறு வயதில் மனதுக்கு பிடித்த முதல் பாடலை ஆவலோடு பாடிய பொழுதுகள் பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் அயராது சோர்வின்றி விளையாடிய பொழுதுகள் இளம் வயதில் தோழிகளுடன் ஊர் சுற்றி திரிந்து திரைப்படம் பார்த்த பொழுதுகள் மற்றும் பல இனிமையான நினைவுகள் பசுமையாய் இன்றும் மனதில் ஒரு மழை நாளில் மின்வெட்டு பொழுதில் சூடு கண்ட நிமிடங்கள் சிறு வயதிலே ஒரு பகல் பொழுது முழுதும் கவனித்த தாயின் கடைசி நிமிடங்கள் சமீபத்தில் தந்தையோடு கடைசியாக அரட்டை அடித்த அந்த சில நிமிடங்கள் ஆழி பேரலைகளாய் இந்நினைவுகளும் விழுங்க காத்திருக்க மறதி துடுப்பை எதிர்பார்த்து இன்றும் மனம் நினைவலைகளின் போராட்டங்களில் மறதி வரமா அல்ல நினைவுகள் சுமையா ?
Viruppamillatha Nigalvugal 'Marathiyagavum'.. Inimaiyana Nigalvugal 'Jynabagamaga' iruppathu Varam... vice versa is 'Sabam'..
- தேவைப் பட்ட பொழுது மறக்கத் தான் வேண்டி இருக்கிறது- - பகைமையை, இழப்புகளை, வார்த்தைகளை, முறிந்த உறவுகளை. வாழ்வில் முன்னோக்கிச் செல்ல இந்த மறதி தேவையாக இருக்கிறது. - "மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை " என்ற கூற்றில் நிறையவே தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட நேரங்களில் இந்த மறதி ஒரு வரமாகவே உள்ளது - வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுக்காமல், வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுது அடுப்பை அணைக்காமல், சாயந்திரம் சினிமாவுக்கு அழைதுப் போவதாக நேற்று கொடுத்த வாக்குறுதிகள் போன்ற மறதிகள் சாபமாகின்றன. - இப்படிப்பட்ட மறதிகளிலும் எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதை மறக்காமல் முடிவு செய்து கொண்டால், வாழ்வில் மறக்கப் பட வேண்டிய நாட்கள் குறைவே ! - --------
@jskls, The music stops, and yet it echoes on in sweet refrains . . . (Sweet or Sad) Selective Amnesia is a good idea