1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிசப்தம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Mar 1, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நீண்டதொரு இரவில் உறக்கம் பிடிக்காது,
    ஓசைகளைக் கேட்டவாறு படுத்திருந்தேன்.
    பல குரல்களும், வாகன ஒலிகளும் நில்லாது
    நெடுநேரம் ஒலித்ததில் சற்றே சலித்திருந்தேன்.

    மெல்ல அவை தேய்ந்திடவும், நானும் சற்றே
    நான் இருந்த இடத்தினையே நோட்டம் இட்டேன்.
    அருகிலே மற்றொருவரும் உறக்கம் அற்றே
    புரண்டு புரண்டு படுப்பதை நானும் கண்டேன்.

    "ஒரு வழியாய் ஓசைகள் குறைந்தது! இனிமேல்
    நன்றாக உறங்கலாம் என அவரிடம் சொன்னேன்.
    "இனியேது உறக்கம்?" எனச் சொல்லி தன் மேல்
    இருந்திட்ட போர்வையை அவர் உதறிடக் கண்டேன்.

    "ஏன் அப்படிச் சொன்னீர்கள்?" என்றே நானும்
    அவசரமாய் அவரிடத்தில் உடனே கேட்டேன்!
    "விழி இல்லா எனக்கு ஓசைகள் தான் எல்லாம்,
    நிசப்தத்தின் ஒலி மிகவும் கொடியது!" என்றார்!
     
  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,419
    Likes Received:
    24,196
    Trophy Points:
    538
    Gender:
    Male
    It is very touching. We don't appreciate what we have in life until we hear from others who don't have them.

    Viswa
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very true Sir. Thanks for your nice feedback. -rgs
     

Share This Page