1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

நான் மட்டும் ஏன் பிழைத்தேன்?

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 1, 2021.

 1. Thyagarajan

  Thyagarajan IL Hall of Fame

  Messages:
  11,468
  Likes Received:
  12,332
  Trophy Points:
  615
  Gender:
  Male
  :hello: நான் மட்டும் ஏன் பிழைத்தேன்? :hello:
  -1945 ல் February மாஸம் பெரியவா சென்னையில் முகாம். சென்னையில் உள்ளே நாவலூர்கருமாரியம்மனுக்கு கோவில் கட்ட சில பக்தர்கள் முயற்சி மேற்கொண்டனர். மொத்த மதிப்பீட்டை கேட்டதும், பலர் “என்னது! இவ்வளவு லக்ஷமா?” என்று பின்வாங்கினர். பெரியவாளிடம் ப்ரார்த்தனை பண்ணினார்கள். “பெரிய லெவல்ல திட்டம் போட்டுட்டோம். நன்கொடை அவ்வளவு கெடைக்காது போலிருக்கு ஸாமி. பெரியவங்கதான் ஆஸிர்வாதம் பண்ணணும்” சில வினாடிகள்……..மௌனம். அருள்வாக்கு கொட்டியது….. “அம்பாளோட திருப்பணி. இல்லியா?…………அவளே பாத்துப்பா…..” “அந்த நம்பிக்கை இருக்கு ஸாமி. ஆனா, கால் பங்கு பணம் கூட இல்லீங்க ” “பூமிக்கு மேல, நாலடி ஒஸரத்துக்கு கட்டடம் கட்டுங்கோ” “சரிங்க. ஆனா, அப்புறம் கோவிலுக்கு………..சிலைங்க, கோபுரம், கும்பாபிஷேகம்…..ன்னு எல்லாத்துக்கும் எங்க ஸாமி போவோம்?” “அதுக்குன்னு ஒர்த்தர் வருவார்…….” ப்ரஸாதம் கிடைத்தது! அதோடு “யார் அந்த ஒருத்தர்?” என்ற கேள்வியும் குடைச்சலும் கிடைத்தது. ஆம். அந்த ‘ஒருத்தர்’ அப்போது எங்கே இருந்தார்? ……….. 1939 ல் தொடங்கிய இரண்டாவது உலகமஹா யுத்தம் 1945 லும் தொடர்ந்தது! பர்மாவில் தீவிரமான போர்! ஜப்பானியர்களுக்கு எதிரான போர்! ஐராவதி [பர்மாவில் உள்ளே ஒரு நதி] நதியில், நட்டாற்றில் போர்! இந்தியப் [ப்ரிட்டிஷ்] படையில் தலைவராக இருந்த ‘மேஜர்’ படைகளோடு கரையில் நின்று ஜப்பானியர்களை எதிர்த்தார் . “தோல்வி நிச்சயம்” என்று தெரிந்ததும், ஜப்பானியர்கள், ஆத்திரத்தில், கரையில் இருந்த இந்திய வீரர்களை குருவி சுடுவது போல் சுட்டுத் தள்ளினார்கள். அதில் பிழைத்த ஒரே ஒரு இந்தியர் – மேஜர் நாராயணஸ்வாமி ! “நான் ஏன் பிழைத்தேன்? எது பிழைக்க வைத்தது?” ……..அதற்கான விடை 1945 ல் மே மாஸம் கிடைத்தது. போர் முடிந்தது! மேஜர் நாராயணஸ்வாமி ஆர்மியிலிருந்து ஓய்வு பெற்று, மனைவி சந்த்ராவுடன் சென்னையில் புது வாழ்கை தொடங்கினார். ஒருநாள், மாலை இருவரும் மாலையில் “வாக்” போகும்போது, நாவலூர் கருமாரியம்மன் இவர்களை ஆட்கொண்டாள்! “நான் மட்டும் ஏன் பிழைத்தேன்?” என்று கேட்டாயே குழந்தாய் ! எனக்காகத்தான்! உன்னை பிழைக்க வைத்த நான், இந்த வெயிலிலும், மழையிலும் தவிக்கிறேனே ! எனக்கு ஒரு கூரை போட்டு தரமாட்டாயா?” என்று கேட்காமல் கேட்டாள் பராஶக்தி! என்ன அழகான ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த ப்ளான்! கொஞ்ச நாள் கழித்து பெரியவா தங்கியிருந்த முகாமில், அதே நாவலூர் கும்பாபிஷேக கோஷ்டி! கண்களில் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர்! “ஸாமி ! இவுங்க மிலிட்ரி மேஜர் நாராயணசாமி நாயுடு. அது அவுங்க ஸம்ஸாரம். மொத்த கோவிலையும் கட்டி, கும்பாபிஷேகம் பண்ணித்தர ஒத்துக்கிட்டாங்க ஸாமி! பெரியவங்க சொன்னபடி “அதுக்குன்னு ஒத்தர் வந்துட்டாருங்க” ! திருக்கரம் தூக்கி ஆஸிர்வதித்தார். நாம் நம்முடைய இத்துனூண்டு அறிவு, திருஷ்டியை மட்டும் வைத்துக் கொண்டு, ஏதோ உலகத்தையே புரட்டிப் போடுவதுபோல் அலட்டிக் கொள்வது எப்படி இருக்கிறது என்றால்…… எறும்புக்கூட்டம் ஒரு கைப்பிடி அன்னத்தை கண்டதும், அது “அன்ன மலை” என்று வாழ்நாள் ஸேமிப்பாக அதை எண்ணும். ஆனால், அதை பார்க்கும் நமக்கோ, அது வெறும் ஒரு சின்ன கைப்பிடி அளவே ! அந்த அன்னம் மட்டுமில்லை, அதை சுற்றி இருக்கும் வஸ்த்துக்கள் எல்லாம் நமக்கு தெரியும். அதேபோல், எறும்புக்கூட்டமாகிய நாம், நம் வீடு, சுற்றுவட்டாரம் என்று அதை மட்டுமே அறிவோம். ஆனால், பெரியவா போன்ற அவதார புருஷர்களோ, ஸ்ருஷ்டி,ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்ரஹம் என்று பஞ்ச க்ருத்யங்களையும், பஞ்ச பூதங்களையும் ஸங்கல்ப மாத்ரத்தில் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே ஸமயம் எதுவுமே தெரியாதவர் போல் அடக்கமாக இருப்பார்கள். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், நாம் அலட்டும் அலட்டல் மட்டும் ஓயவே ஓயாது !!

  படித்ததில் பிடித்தது.
   
  vidhyalakshmid likes this.
  Loading...

 2. vidhyalakshmid

  vidhyalakshmid IL Hall of Fame

  Messages:
  2,631
  Likes Received:
  1,744
  Trophy Points:
  325
  Gender:
  Female
  Superb one! Thanks for sharing. Let me tell the poem by Bharathidasan about the expanded view and universal vision.
  எத்தனை பெரிய வானம்
  எண்ணிப் பார் உனையே நீயும்
  இத்தரை கொய்யா பிஞ்சு
  நீயதில் சிற்றெறும்பே!
  My favorite lines and shared in my speeches many times.
   
  Thyagarajan likes this.

Share This Page