1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் பாரதியின் காதலி

Discussion in 'Regional Poetry' started by prana, Dec 16, 2010.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ஓடிவிளையாடு பாப்பா என்று
    பாடத்தில் படித்த நாளிலிருந்து
    தொடங்கியது இந்த நேசம்

    அகராதி இல்லாமலே எளியோரும்
    புரிந்துகொள்ள கூடிய பாடல்களின்
    நேர்த்தியில் கரைந்தது இந்த மனசு

    புதுக்கவிதையை தமிழுக்கு
    கைப்பிடித்து அழைத்துவந்த
    புதுமையில் வியந்த வியப்பு

    ஒரு பெண்ணின் பேச்சில்
    அறிவு தெளிந்து
    மனைவியின் தோளில் கைப்போட்டு
    சகதோழியாய் அரவணைத்த மென்மையில்
    கசிந்த நெஞ்சம்

    இப்படி எத்தனை எத்தனையோ..
    உன்னில் என்னை இடறி விழ செய்தது....

    பாரதி,நீ இருக்கையில் நான் பிறக்கவில்லை
    பிறந்திருப்பேனா தெரியவுமில்லை....

    மறுபிறவிகளில் நம்பிக்கையற்ற பெண் நான்....
    அப்படி ஏதேனும் உண்டெனில்,
    உன்னருகே அமர்ந்து,
    நீ எழுதிய காதல் தமிழை
    உன் கணீர் குரலில்,நீ பாட,
    கண் சொருகி
    என் மெய்,சுற்றம்,சூழல்
    அனைத்தும் மறந்து,
    உன் கண்ணமாவாய் நான் அதை ரசிக்க வேண்டும்...

    எனக்கந்த வரம் தருவாயா.....
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,611
    Likes Received:
    28,797
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Unakku andha varam thara Iraivanidham vendi kolgiren. all the best. arpudamana kavidhai
     
  3. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Prana,

    ஒரு சிறு திருத்தும் கண்ணம்மா,

    கண்ணம்மா உன்னை போல் எந்தனை கண்ணம்மாக்கள் உள்ளனரோ !!!!

    இருக்கும் கவிதைகளை பிழறு இல்லாமல் நம் சாந்ததியினருக்கு எடுத்து சொல்ல வழி வகுதலே போதும் நீ பாரதியின் கனவை செயலாக்க

    என்ன நான் சொன்னதில் சம்மதம் தானே
    kantha
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    wow, wonderful prana, barathi kooda kannanai pola dhan, ethanai kaadhali avaruku (hihee, nanum oruthi)
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Prana,

    Thavaraaga enna vaendaam..Naan veru vidhamaaga ennugiraen..

    Enakku Mahakavi yin kavithaigal rombaaaaaa pidikkum..Aana avarin thanipatta vaazhkai il, avar thanadhu veetai ozhunga gavanithaaraa enru enakku sariyaaga theriyaadhu..Wifey kku three meals per day kuduthaara?

    Kavithai il mayangi ponaalum, basic necessities fulfill aaga vaendaama?
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பாரதியினதை போல அவரைக் குறித்த உங்கள் கவிதையும் நன்று பிரனா!!!!:thumbsup
     
  7. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    பாரதிக் கவிதை மிகவும் நன்று பிரணா. நல்ல வேண்டுதல்...பலிக்கட்டும் :):)
     
  8. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    முறுக்கு மீசை தடவிட - முன் கோபம் ரசித்திட
    சுருக்காய் எழுதும் கவிதையை சொல்லிச் சொல்லி ரசித்திட

    (கை)இருப்புக் குறைந்த போதிலும்
    (தமிழ்)செருக்கு நிறைந்த நடையினை

    பின்னிருந்து பார்த்து மகிழ்ந்திட
    அவன் பாட்டில் மனதை முகிழ்த்திட

    தமிழன்னை செய்த தவத்தினில்
    தரணியாண்ட தமிழ் தேவனை

    வைத்துக் கொள்வோமடி தோழி
    உனக்கு ஃபிஃப்டி எனக்கு ஃபிஃப்டி..எப்புடி?
     
    Last edited: Dec 16, 2010
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Viji mam,ungal vaazhththukalukku nanri!!!
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Kantha,neenga solradhum unmai dhan...enna panradhu indha chinna manasukku aasaya adakka therialaye...
     

Share This Page