1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் இப்போது ஒரு தனி மரம்

Discussion in 'Regional Poetry' started by rvishalam, Feb 6, 2009.

  1. rvishalam

    rvishalam New IL'ite

    Messages:
    57
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    தனிமையில் இருக்கும் பொழுதினிலே.
    என் தாயின் ஞாபகம் வருகிறதே,
    காக்கைக் காட்டிச் சாதம் ஊட்டிய
    அன்னலட்சுமி அவள்தானே,
    என் தாத்தா நட்ட மரம் இதுவல்லவா ,
    இதன் நிழலில் நான் ம்ட்டும் ஏன் தனித்திருக்கிறேன்?
    என் தந்தை வந்து பந்தடித்தது இங்கல்லவா?
    நானும் ரன்கள் பல அடித்து குவித்தேனே ,
    எங்கள் ஸ்ட்ம்பாக நின்றமரம் இது அல்லவா?
    நாங்கள் கும்மாளம் போட்ட இடம் இதுவல்லவா?
    வையகம் இருளும் பொழுதினிலே எனை,
    வா என்று அழைத்தாள் என் காதலி.
    மல்லிகையும் வாங்கிப் போனேன்,
    காவியம் நூறு படைத்து விட்டோம்,
    எங்கள் காதலுக்கு சாட்சியாக
    நின்றமரம் இதுவல்லவா?
    காகம் ஏன் கறைகிறாய்?
    என் கண்களின் கண்ணீரைக் கூறவா,
    வண்ணச்சேலைக்கட்டி அழகுடன்
    அன்ன நடை நடந்த அவள் எங்கே?
    என் செல்லக் குழந்தைக்குப் பிடித்த இடம் இதுதானே ,
    கண்ணமூச்சி ஆடி உன்னைப்பிடித்தேனே,
    ஆ.என்னச் சொல்வேன் ,எப்படி சொல்வேன் ?
    பூகம்பத்தில் எல்லாம் இழந்தேனே,
    நான் மட்டும் இப்போது ஒரு தனி மரம்
    இந்த மரத்தடியில் நானே மௌனமரம்
    விசாலம்
     
    Loading...

  2. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Visalam

    Excellent kavidhai.


    Andal
     
  3. rvishalam

    rvishalam New IL'ite

    Messages:
    57
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    அன்பு ஆண்டாள் {மிக நல்ல பெயர் }எனக்கு மிகவும் பிடித்த பெயர் .... மிக்க நன்றி
     

Share This Page