1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தென்னை மரம்

Discussion in 'Regional Poetry' started by mccian, Mar 18, 2010.

  1. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    [​IMG]
    தென்னை மரம்

    அந்த மூன்று நாட்களில்
    அவள் உபயொகித்த நாப்கினை
    அதற்குக் கீழேதான்
    புதைத்துப் போனாள் - என் மனைவி

    எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகளில்
    மீன் கழுவிய நீரை
    அதன்மீது தான் ஊற்றினாள் - என் அம்மா

    இரவில் ஒன்றுக்கு போக
    வயிற்றை முட்டியபோது
    கொல்லைக்குப் பின்னல் போக பயந்து
    வீட்டின் ஓரத்தில் இருக்கும்
    அதன் மீதுதான் பெய்வான் - என் மகன்

    தனக்கு விழுந்த முதல் பல்லை
    அதற்குக் கீழேதான்
    பத்திரமாகப்
    புதைத்து வைத்திருக்கிறாள் - என் மகள்

    இதையெல்லாம் எப்படிச் சொல்வேன்
    இந்த வருடம் தத்த திவசத்தின் போது
    "இது அவரு நட்டது டா
    இதுல அவரு உசிரு இருக்கு "
    என்ற என் அப்பாவிடம்

    -முத்தாசென் கண்ணா
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Yeppadi solla mudiyum, naam dhan mattravar uyiraai madhippadhai siridhu kooda karunai illaamal, seerazhikkirome..

    sriniketan
     

Share This Page