1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீயில் தகித்த மலர்கள்!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, May 9, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much meenamohan keep reading
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    hi meenamohan thank you very much. second part new thread la
     
    Last edited: May 10, 2010
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    தீயில் தகித்த மலர்கள்- part 2

    Part 1

    தரகர் வீட்டிலிருந்து கங்காதரன் வீட்டை அடைந்திருந்தார்

    காட்சி 5

    (கங்காதரன் வெளியே சென்று வந்த களைப்புடன் வீட்டிற்குள் நுழைகிறார் வடிவுக்கரசி இட்லிக்கு மாவாட்டி கொண்டு இருக்கிறார். அன்று அம்மாவாசை ஆகையால் நெசவு நெய்ய மாட்டார்கள் அதனால் அருணாச்சலமும் வீட்டில் இருக்கிறார். நாற்காலி அருணாச்சலத்தின் அருகில் இருக்கிறது அருணாசலம் சுவற்றில் சாய்ந்த படி அமர்ந்து கொண்டு எதோ ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டு இருக்கிறார். கங்காதரன் தன பெண் குழந்தைகளை இரண்டாம் வகுப்பிற்கு மேலும் தன் மகன்களை ஐந்தாம் வகுப்பிற்கு மேலும் அனுப்பாததால் அவர்களும் வீட்டில் இருக்கின்றனர். எழிலரசியும் சசிரேகாவும் வடிவிற்கு ஒத்தாசை செய்து கொண்டு இருந்தனர். ராஜாவும் பாஸ்கரும் அண்ணன் அருகில் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர்)
    எழிலரசி : (வடிவு தலையை குனிந்த படி மாவாட்டி கொண்டு இருக்கிறாள் எழிலரசி அப்பா (கங்காதரன்) வருவதை பார்த்து விடுகிறாள் பார்த்தவுடன் ) அம்மா! அம்மா ! அப்பா வந்துட்டாருமா
    வடிவு : (எழிலரசி அப்பா வந்துவிட்டார் என்று சொன்னதும் சந்தோசத்துடன் மாவாட்டிய கையுடன் வடிவு சென்று) என்னங்க போன காரியம் என்ன ஆச்சுங்க?? தரகர பாத்தீங்களா?? அவரு என்ன சொன்னாரு??
    கங்காதரன்: சரி சரி சொல்றேன் மொதல்ல போயி குடிக்க தண்ணி கொண்டு வாமா (என்று கூறியவர் அப்பப்பா என்னா வெயிலு என்று முனங்கிய படியே அருணாச்சலம் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் . அப்பா வருவதை பார்த்ததும் அருணாச்சலம் எழுந்து நிற்கிறார் அருகில் இருந்த அருணாச்சலத்தின் தம்பிகளும் எழுந்துநிற்க . கங்காதரன் ராஜாவை பார்த்து ராஜ அந்த விசிறிய கொஞ்சம் எடுப்பா என்று சொல்லி முடிக்கும் போது வடிவு தண்ணீருடன் வந்து நிற்கிறார்
    வடிவு: இந்தாங்க தண்ணிய குடிங்க (கங்காதரன் தண்ணீரை வாங்கி குடித்து கொண்டு இருக்கையில்) போன காரியம் என்ன ஆச்சுங்க (என்று வடிவு கேட்கிறார் )
    கங்காதரன்: அப்பா என்ன சொல்ல போகிறார் என்று அருணாச்சலமும் அவரது தம்பி தங்கைகளும் கணவன் என்ன சொல்ல போகிறார் என்ற ஆவலுடன் வடிவும் ஆக மொத்தம் அனைவரும் கங்காதரனின் வாயில் இருந்து விழும் வார்த்தையை பிடிப்பதற்காக காத்திருந்தனர். கங்காதரன் பேச வாயை திறக்கும் போது இந்தாங்க அப்பா விசிறி என்று ராஜா நீட்ட அதை வாங்கி விசிறிக்கொண்டே ) ம்ம்ம்.... போன காரியம் நல்ல படியா முடிஞ்சுது தரகர் பொண்ணு வீட்டோட அட்ரஸ் அஹ குடுத்திருக்காரு வர்ற புதன் கிழமை பொண்ணு பாக்க போறோம் என்று சொன்னதும் தான் அருணாச்சலத்தின் தம்பி தங்கைகளுக்கு ஒரே சந்தோசம். சந்தோஷத்தில் குதித்தனர். ஆனால் அருநாச்சலதிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை காரணம் அவர் எதன் மீதும் அதிக ஆசை பட மாட்டார். ரொம்ப நாள் கிடைக்காத ஒன்று கிடைகின்றதே என்று அதிக சந்தோசப் பாடவும் மாட்டார். அப்பா பெண் பார்க்க செல்கின்றோம் என்றதும் சிறிது நாணம் சிறிது வெட்கத்துடன் சரிங்க அப்பா என்று சொல்லி விட்டு கொஞ்சம் நகர்ந்து நின்று கொண்டார் . என்னதான் ஆண்மகன் வீரனாக இருந்தாலும் கல்யாணம் என்றால் வெட்கம் வரத்தானே செய்யும் அதற்க்கு அருணாச்சலமும் விதிவிலக்கல்லவே )

    காட்சி 6 ​


    (அருணாச்சலத்திற்கு பெண் பார்க்க அனைவரும் கிளம்பி கொண்டு இருக்கின்றனர் முக்கியமான உறவினர்கள் மட்டும் பெண் பார்க்க அழைக்கப்பட்டு இருந்தனர் அவர்களும் கங்காதரன் வீட்டை அடைந்திருந்தனர். அனைவரும் kizhambiyathum நல்ல நேரம் பார்த்து பெண் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் . பெண் எப்படி இருப்பாள் என்ன செய்கிறாள் என்பது பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது தரகரும் இதை பற்றி ஒன்றும் கூற வில்லை இவர்களும் அதை பற்றி விசாரிக்க வில்லை. ஒரு வழியாக பெண் வீட்டை அடைந்தனர்)

    பெண்ணின் தந்தை: வாங்க வாங்க எல்லாரும் உள்ள போயி உட்காருங்க (என்று வந்தவர்களுக்கு வரவேற்பு அளித்தனர் இவர்களும் அதனை ஏற்றுக்கொண்டதை போல தலை அசைத்து விட்டு உள்ளே சென்று அமர்ந்தனர் . தரகர் பெண் வீட்டிற்கு நேரடியாக வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு வரவில்லை . அனைவரும் தரகர் வருகைக்காக காத்து இருந்த சமயத்தில்)

    பெண் வீட்டில் இருந்து ஒருத்தர் : சரி சரி தரகர் வர்ற மாத்ரி தெரியில நம்மாலே பேசி முடிச்சிருவோம் என்று சொல்ல (மாப்பிள்ளை வீட்டிலும் சரி என்று பேச ஆரம்பித்தனர் )

    பெண் வீட்டில் ஒருவர்: சரி சரி யாரவாது போயி பொண்ண அழைச்சுட்டு வாங்க என்று கூறவும் (மாப்பிள்ளை வீட்டில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது . ஆனால் மாப்பிள்ளை இடத்தில் அப்படி ஒன்றும் தெரியவில்லை . அவர் எப்பவும் போல சாதாரணமாக இருந்தார். பெண் பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு தான் பயம் பதற்றம் எல்லாம் இருக்கும் ஆனால் அருணாச்சலம் பெண் எப்படி இருந்தாலும் சம்மதம் சொல்லும் குணம் உடையவர். பெண் கையில் காப்பியுடன் வந்து நின்ற தோரணையிலேயே மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் நிலை பற்றி புரிந்து கொண்டனர். ஆம் பெண் சிறிது சித்த சுவாதீனம் இல்லாதவள் . இருந்தாலும் மூஞ்சியில் அடித்த மாதிரி பதில் கூற முடியாது என்பதற்காக மாப்பிள்ளையிடம் (அருணாச்சலத்திடம்) பெண்ணை பிடித்திருக்கா என்று மனமில்லாமல் கேட்க அவர் அளித்த பதில் உறவினர்களை ஆச்சர்ய பட வைத்தது . ஆம் மாப்பிள்ளை பெண்ணை பிடித்திருக்கு என்று சொல்லி விட்டார். அவருக்கும் தேய்கிறது பெண்ணிற்கு சித்த சுவாதினம் இல்லாதது இருந்தாலும் பெண் பார்க்க வந்து விட்டோம் ஒரு பெண்ணை பெண் பார்த்து விட்டு அவளை வேண்டாம் பிடிக்க வில்லை என்று சொன்ன பாவம் தமக்கு வேண்டாம் என்ற ஒரே காரணத்திற்க்காக அப்பெண்ணை மணக்க சம்மதித்தார். ஆனால் அருணாச்சலத்தின் வீட்டிலும் அவர் உறவினருக்கும் இது சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்கள் பெண் வீட்டாரிடம் நாங்கள் வீட்டிற்கு சென்று தரகரிடம் தகவலை சொல்லி அனுப்புகிறோம் என்று கூறி விட்டு சென்று விட்டனர்)

    வீட்டிற்கு செல்லும் வழியில்

    அருணாச்சலத்தின் சித்தி: ஏப்பா! அருணாச்சலம் உனக்கு பைத்தியம் கீது புடிச்சிருக்கா அந்த புள்ளைய போயி புடிச்சிருக்குன்னு சொல்றே

    வடிவு : நல்லா கேளு டி (என்று சொல்லி முகத்தில் கோவத்துடன் நடந்கின்றார்)
    அருணாச்சலம்: இல்ல சித்தி இப்ப நம்ம வீட்டுலயும் பொண்ணுங்க இருக்காங்க அவங்கள பொண்ணு பாக்க வந்தவங்க புடிகலைன்னு சொல்லிட்டு போனா நம்ம மனசு என்ன வேதனை படும். அதே மாதிரி தான அவங்களுக்கும் இருக்கும். நா புடிகலைன்னு சொல்லிட்ட அந்த பொண்ணோட வாழ்கை என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சி பாருங்க என்று கூறி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உறுதியாக இருந்தார். இருந்தாலும் அருணாச்சலத்தின் வீட்டிலும் யாருக்கும் அவர் எடுத்த முடிவு பிடிக்கவில்லை. உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. இப்படி அனைவரையும் பகைத்து கொண்டு திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணை ஒதுக்கியே விடுவார்கள் என்று யோசித்த அருணாசலம் அந்த பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறினார். தரகர் பெண்ணை பற்றி சொல்லாததால் தானே இவ்வளவு பிரச்சினை இனி நாமே பெண் தேடுவோம் என்று தேடி கங்காதரனின் நெருங்கிய சொந்தமான ஆனால் வசதியில் கங்காதரனை விடவும் குறைவான வீட்டில் பிறந்த அஞ்சுகத்தை நிச்சயம் செய்து கல்யாண தேதியையும் குறித்தன.
    அஞ்சுகத்தை நிச்சயம் செய்யும் முன் வீட்டில் நடந்த ஒரு விஷயம்
    கதா பாத்திரங்கள் : அருணாசலம் அவரது தாய் வடிவும்
    அருணாச்சலம்: (அம்மா அப்பாவை அழைத்து ) எனக்கு வரதட்சணை வாங்குறது புடிக்காது அதுனால நீங்க பெண் வீட்ல வரதட்சணையை பத்தி பேசவே கூடாது (என்று கூற வடிவின் முகம் வெளுத்தது ஆம் அவள் இந்த கல்யாணத்தை இவ்வளவு ஆவலுடன் ஏற்பாடு செய்ய காரணம் வரதட்சனையும் ஒத்தாசைக்கு ஆள் கிடைக்கும் என்ற காரணங்களே அதாவது கூலியும் கொடுத்து வேலையும் செய்யும் வேலைகாரிக்காக தான் இந்த ஏற்பாடெல்லாம் அருணாச்சலம் இப்படி கூறியதும் நம் திட்டம் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் அதை வெளிகாட்டிகொள்ளாமல் மகனிடம் பேசுகிறார் )
    வடிவு: சரிப்பா வரதட்சணை வாங்க வேணாம் ஆனா அவங்க புள்ளைக்கு அவங்க ஏதாவது செஞ்சு தான அனுப்புவாங்க அதையும் வேணான்னு சொல்றய . வரதட்சணை வாங்கி நாங்களா வச்சுக்க போறோம் ellaam உனக்கும் அந்த பொன்னுக்காகவும் தான (என்று அக்கறையுடன் கேட்பதை போல முகத்தை வைத்து கொண்டு இருந்தால் )
    அருணாசலம்: அவங்க பொண்ணுக்கு செய்ய ஆச பட்டாங்கனா செய்யட்டும் ஆனா நீங்க வாய தொறந்து வரதட்சணைன்னு பேச கூடாது என்று கூறி விட்டார்
    பெண் வீட்டில் வரதட்சணை வேண்டாம் என்று கூறியதும் அவர்களுக்கு சிறிது மகிழ்ச்சி காரணம் ஏழை குடும்பம் எங்கே அதிக வரதட்சணை கேட்டு விடுவார்களோ என்ற பயத்திலேயே இருந்தனர் . இருந்தாலும் பெண் வீட்டில் 4 சவரன் நகை போடுகிறோம் இதை மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் இது எங்கள் விருப்பத்திற்காக என்று கூறியதால் அருணாசலம் ஒப்பு கொண்டார். அந்த நான்கு சவரன் நகைக்காகவும் வீட்டிற்கு ஒரு வேலை காரி வர போகிறாள் என்ற காரணத்திற்காகவும் இந்த திருமணத்தில் சந்தோசமாக கலந்து கொள்ள முடிவெடுத்தால் . திருமண நாள் நெருங்கி கொண்டு இருந்தது )

    (அன்று காலை கதிரவன் தன் செந்நிற கதிர்களால் உண்டாக்கிய வெளிச்சம் இருளிற்கும் வெளிச்சத்திற்கும் நடுவில் ஒரு நிலையில் இருந்தது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கோலம் போடப்பட்டு வாசல் தெளித்த ஈரமும் அதில் தெளிக்கப்பட்டு இருந்த சாணியின் நாற்றமும் அந்த வீதி முழுவதிலும் வீசி கொண்டு இருந்தது)

    காட்சி 7 ​


    (அஞ்சுகமும் அவளது தோழிகளும் அடி குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த வழியாக அருணாச்சலம் ஒரு பக்கம் மாட்டும் மாட்டப்பட்ட சட்டையுடன் பட்டன்கள் எதுவும் அணியாமல் வந்து கொண்டிருந்தார் . எப்பொழுதுமே அவர் ஒரு பக்கம் மாட்டிய சட்டையுடன் செல்வது தான் வழக்கம் இதை பார்த்து விடுகிறார் அஞ்சுகத்தின் தோழி)

    அஞ்சுகத்தின் தோழி:ஏய் அஞ்சுகம் உனக்கு நிச்சயம் பண்ணுன மாப்பிள்ளை அங்க போறாரு டி
    அஞ்சுகம்: (தன் தோழி அப்படி சொல்ல கேட்டதும் மனதில் இனம் புரியாத பயத்துடன் அந்த பக்கm திரும்பி பார்க்காமல் ) எங்க டி போறாரு என்று கேட்க
    அஞ்சுகத்தின் தோழி: உன்னோட வழத்து கை பக்கம் போறாரு டி என்று சொல்லி பேச்சை மேலும் தொடர்ந்தாள் அஞ்சுகத்தின் தோழி ஆமா அவர ஊருக்குள்ள பெரிய ரௌடின்னு பேசிகிட்டு இருக்காங்க டி நீ வேற அப்பாவி எப்படி தான் அந்த ஆள கட்டிக்கிட்டு வாழ போறியோ என்று அஞ்சுகத்தின் தோழி கூற கேட்டதும் அஞ்சுகத்திர்க்கு பயம் பீறிட்டது. இருந்தாலும் வேறு வழி இல்லை திருமணதிற்கு சம்மதித்து தான் ஆக வேண்டும் என்பதும் அஞ்சுகதிர்க்கு தெரியும். அஞ்சுகம் மனதில் தெரிந்தே இப்படி சிங்கத்தின் kukaikkul நுழைய போகிறோமே என்ன நடக்குமோ கடவுள் தான் காப்ற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டால். ஆனால் பிரச்சினை சிங்கத்தால் இல்லை மாமியார் வடிவில் இருக்கும் ராக்ட்சசியால் வரும் என்பதை அவள் எதிர் பார்கவில்லை)

    பிரச்சினை ஆரம்பம்
     
    1 person likes this.
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    ammavasai na nesavu neiya maatangala?
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    romba neat-a sollirukeenga ram anna........ super narration....
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    yes priyaa ammavaasai annaikku neyya maattaanga. and thank you very much dear
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    கதிரவன் தன் செந்நிற கதிர்களால் உண்டாக்கிய வெளிச்சம் இருளிற்கும் வெளிச்சத்திற்கும் நடுவில் ஒரு நிலையில் இருந்தது.

    அதாவது கூலியும் கொடுத்து வேலையும் செய்யும் வேலைகாரிக்காக தான் இந்த ஏற்பாடெல்லாம்

    கங்காதரனின் வாயில் இருந்து விழும் வார்த்தையை பிடிப்பதற்காக காத்திருந்தனர்.



    keep it up....
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    thank you very much dear
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    nalla irukku da! keep going dear!:thumbsup
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    thank you very much yams
     

Share This Page