1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீண்டல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 7, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன் சுவாசம் தீண்டிய
    பொருட்களின் தீண்டலில்
    உன் நேசம் உணர்ந்தேன்

    உன் விரல் தீண்டிய
    பொருட்களின் தீண்டலில்
    உன் இதயம் உணர்ந்தேன்

    அதை நான் தீண்டுகையில்
    என்னுளே வந்த சிலிர்ப்பு
    உன் தீண்டலாலா?? இல்லை
    நீ தீண்டியதை, தீண்டிய
    என் தீண்டலாலா??
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana kelvi..... irandume badil thaano....
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    கேள்வி மட்டும் தான் அழகா??? :)

    இரண்டுமே பதில்தான், ஒருவர் இருவராய் இருக்கையில். :)
     
  4. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    kavithai superma!! after lonnnng time i am posting reply :rotfl
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள வினு,

    கவிதை ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றி.

    நீங்களே ஒத்துகறீங்க. என் பக்கம் திரும்பறதே இல்லைன்னு:rant
    ஹே பரணி-யோட கிராப்ட்ஸ் பாத்தேன், கலக்கறாங்க :thumbsup
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வார்த்தைகாளால் எங்களையும் இப்படி தீண்டும் ஜாலம் என்ன அக்கா ........

    அற்புதமான கவிதை:)
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஜாலம் அல்ல தோழி
    நான் உணர்ந்த மாயம்
    தீர்ந்தது என் காயம்
    தகர்ந்தது என் கோபம்

    நன்றி ஜெயா..
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நேசம் தீண்டிய சுவாசம் என் விரல் வழி உன் இதயம் நுழைய ,
    "நீ" "நான்" என பங்கு போட்டு
    "நாம்" ஆன நம் தீண்டலின் தாண்டலின்
    சிலிர்ப்பில் சிறிய உன் இதயம்
    இப்போது சில்லறையாய் சிதறலில்.
    தீண்டல் ...........மெய். :):thumbsup
     
    Last edited: Jul 7, 2010
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அவன் தீண்டல் சுகமா???
    தீண்டியதை தீண்டல் சுகமா??
    அக்கா நீங்கள் சுகமா???
    உங்கள் தீண்டலை (கவிதையை)
    தீண்டியது எனக்கு சுகமே....
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி உங்கள் கவிதை எனைத் தாக்கி, நான் தமிழைத் தாக்கி, தமிழுக்கு
    உண்டான காயமே இந்த கவிதை. தமிழும், வாசகர்களும்,
    எனைத் தாக்க வர வேண்டாம் தயவுசெய்து.

    உயிரின் உயிரே உயிர்த்தெழுவேனா?

    என் விரல் தீண்டிய அந்தச் சிறு,
    அஃறிணைப் பொருட்கள் உனைச் சேர,
    உன் விரல் தீண்டி அவை உயிர் பெற்றன,
    உனை உயிராய் நினைக்கும் எனை நீ தீண்டி,
    உயிர்பெற உன்னருகே வருவேனா என் உயிரே?
    உன்னருகே வரும் காலம், கனிய காத்திருப்பேன்.....
     

Share This Page