1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - கேள்வி

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, Feb 5, 2012.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பொருட்பால் - கேள்வி 42 ஆவது அதிகாரம்

    முன்னுரை

    இவ்வதிகாரத்தின் தலைப்பு கேள்வி. அதாவது இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை, கேல்வியறிவால் உண்டாகும் பயன்கள், பெருமைகள், சிறப்பு பற்றியும் அத்தகையது இல்லாதார் பெரும் இழிவு, இழப்பு பற்றியும் விளக்குகிறார். அது மட்டும் அல்லாது, அத்தகைய கேள்வி அறிவினை யாரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், தெளிவான கேல்வியறிவு இல்லாதார் எப்படி செயல்படுவார்கள் என்றும், கேல்வியறிவு இல்லாத மனிதனின் செவி எதற்குச் சமமாகும் என்பது பற்றியும் தான் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார் வள்ளுவப் பெருந்தகை.

    இனி ஒவ்வொரு குறளுக்கும் கவிதை வழி விளக்கத்தைக் காண்போம்

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை. (411)


    பலதொழில் செய்தான் வணிகன் ஒருவன்
    அதனால் அவனும் அடைந்தான் செல்வம்
    அடைந்த செல்வம் அனைத்தையும் ஒருநாள்
    வண்டியில் ஏற்றிப் பறந்தான் தன்னூர்நோக்கி
    வழிப்பறி கும்பல் இடைமறிக்க அவனோ
    மறைத்திட இயலா செல்வத்தை இழந்தான்
    அவன்வணிகம் செய்கையில் செவிவழி நுழைந்து
    யாரும் காணவியலா ஓரிடம்தேடி, அவ்விடம்தங்கி

    தன்னைத்தானே மறைத்துக் காத்திடும், வேண்டின்
    வெளிவந்து அகிலத்தை ஆட்டிப் படைக்குமறிவை
    வழிப்பறி செய்து தினம்பிழைத்திடும் கூட்டம்
    காணவுமில்லை கண்டுபறிக்கவும் இல்லை, இப்படி
    செவிவழி புகும்நல்லதோர் கருத்து, உலகிலுள்ள
    பிறசெல்வம் அனைத்திலும் மேலாய் நிற்கும்
    இதுபோல் சிறப்பினைச் சிறப்பாய்க் கொண்ட
    செவிவழி அறிவை பெறமுயல்வதும் சிறப்பே
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
    நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

    நாம் யாரையேனும் தொடர்புகொள்ள தொலைபேசி எண் இல்லாதபோது
    411ஐதான் நாடுகிறோம். குறளின் எண்ணும் மிகப்பொருத்தம்.

    செல்வத்தில் சிறந்தது செவிச்செல்வமென அருமையாக கூறிவிட்டீர் நண்பரே.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக அருமையான பின்னூட்டம் ஐயா.
    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றிகள்.

    பச்சை வர்ணத்தில் உள்ளவற்றை, கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள், 411 என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள். ஒன்று இந்த குறளின் எண், மற்றொன்று எதைப் பற்றியது. கூறுங்கள் ஐயா...
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    411 என்பது தொலைபேசி எண். இந்த தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்து தொடர்புகொள்ள வேண்டியவரின் பெயரைக் கூறினால், அவர்கள் தொலைபேசி எண்ணை தருவார்கள். வினாவிற்கு விடை தருவார்கள்.
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக அருமையாக இந்த விஷயத்தை இங்கு பொருத்தியமைக்கு நன்றிகள் ஐயா....

    தங்கள் விளக்கத்திற்கும் என் நன்றிகள் :):thumbsup
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    செவிக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும். (412)

    பணியினை, விரைவாய்சென்று நிறைவாய் முடிக்க
    எதற்கெடுத்தாலும் எவ்விடம் சென்றிட வேண்டினும்
    இயந்திரம் பொருந்திய எரியெண்ணையில் இயங்கும்
    வாகனமதனை தினம்தினம் ஒருவர் பயன்படுத்தினாரே
    எரியெண்ணையின் விலையது உயர்ந்தே சென்றிட
    எண்ணெய்கான, தட்டுப்பாடதும் வெகுவாய் உயர்ந்திட
    எரிசக்திவாகனம் அதற்கவர் அளித்த ஆர்வமதனை
    இரண்டு சக்கரத்தின் பக்கமாய் திருப்பினார்மெல்ல
    எரிசக்தி வாகனத்தினை சக்தியுடனவர் செலுத்திடவுதவும்
    ஆரோக்கியமதனை உடலிற்கு இருசக்கரம் நல்கும்

    உண்டிடவுண்டிட நிறைந்திடும் என்றும் தீராதவொன்று
    உண்டிடவுண்டிட இனிக்கும் என்றும் தெவிட்டாதொன்று
    செவிவழியேறி அகத்தினில் நிறையும் கேள்வியறிவாம்
    கிடைக்காத பொழுதும் அதைப்பெற இயலாதபொழுதும்
    செவிவழியென்றும் நாம்கேட்டிட, சக்தியை அளித்திடும்
    வாயின்வழியிறங்கி வயிற்றில்சேர்ந்து உடலிற் கலந்து
    சக்திதரும் உணவினை செவிக்குணவற்ற பொழுதினில்
    வயிற்றிற் கிட்டுவளர்த்திடும் நிலையது ஏற்படும்நன்றாய்
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)


    கல்வியறிவைப் பெறவியலா மக்களுள்ளே சிலபேர்கள்
    கேள்விஞானம் மிகப்பெற்று கேட்பதற்கு பதிலளிப்பர்
    காற்றோர்கள் முன்சென்று கேட்டிடவே கேள்வியினை
    அவரளிக்கும் பதில்கொண்டு கேள்விஞானம் பெற்றிடலாம்

    கற்கத்தான் வழியில்லை அதைப்பறித்திடலாம் எனவெண்ணி
    சென்றிடும் இடமெல்லாம் தம்கேள்வியாலே நல்லறிவுபெற்று
    அனைத்தையும் கற்றவற்போல் முழுவடிவம் பெறுமவர்கள்
    நிலவுலகில் விளைவித்து அதையுண்டு தினம்வாழ்ந்தாலும்

    வேள்வித்தீயினிலே மக்கள், அருள்பெறத் தாமிடுமுணவை
    நன்றாகவுண்டிட்டு எத்தகைய துன்பமின்றி நல்லறிவுபெற்று
    தேவலோகத்திலே வீற்றிருக்கும் தேவர்களுடன், செவிவழியே
    கேள்விமூலம் கற்றுயர்ந்த மக்களவர் ஒத்துநிற்பர்

    கற்றிலன் ஆயினும் கேட்க வஃதொருவன்
    ஓற்கத்துக் கூற்றாந் துணை. (414)



    கல்விக் கூடமொன்றே அறிவுபெறும் இடமென்று
    மக்கள் தம்மனதினிலே தவறாக நினைக்காது
    நல்லவற்றை நாளுங்கற்று நடந்திடும் பெரியோர்கள்
    வழிபற்றி தொடர்ந்துசென்று அவர்மூலம் கற்றிடனும்
    அப்படிநாம் கற்றிட்டால் தக்கசமயமதில் உதவிடுமே

    வயதெல்லாம் உழைத்திட்டு வயதுமீறிப் போனதனால்
    நடைதளர்ந்த மனிதருக்கு ஊன்றுகோல் உதவுதல்போல்
    இன்பமுடன் அறிஞரிடம் கேட்டுபெற்ற அறிவுனக்கு
    வாய்ப்பில்லை எனவெண்ணி சோர்ந்திட்ட நிலையினிலே
    வாய்ப்பினைத் தந்துனக்கு உற்றதுணையாக நின்றிடுமே
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
    ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (415)


    குடும்பத்தில் முக்கிய பொறுப்பி லுள்ளவொருவனும்
    பத்துபனிரெண்டு தேர்வினை நோக்கி இருப்போனும்
    மக்களைக் காத்திடும் நல்லதிகாரம் பெற்றோனும்
    நம்பகத் தன்மையை பிறர்க்களித்த வொருவனும்
    தானென்றும் நல்லவழிதனில் செல்லுதல் நலமே
    நலவழியத்தை மாறிச்சென்றிட யாவர்க்கும் கேடே

    நாமிருக்கு மிடமெல்லாம் இருக்குமே கெட்டவையும்
    காலைவழுக்கிடும் இடங்கள் நிறைந்த இவ்வுலகில்
    காலதுயென்றும் வழுக்காது நாம்சிறப்புடன் நடந்திட
    ஒழுக்கம் நிறையபெற்ற கல்வியிற் சிறந்தோர்மூலம்
    நாம்கேட்டுப் பெற்றிடும் நல்லறிவது என்றும்நமக்கு
    ஊன்றுகோல் போலேவழுக்குந் தருணத்தில் காத்திடும்
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும். (416)


    குழாயில் சிறுசிறு துளியாய் நன்னீரதுவிழுந்திட
    சிறுதுளிதானே என்றுநாம் விட்டுச் செல்லாது
    அக்கறையாய்ச் சென்றதை அடைக்கணும் மெல்ல
    இப்படி நாம்தினம் அடைத்துச் சென்றால்
    நீர்வறட்சியில் திண்டாடும் நிலைவரும் போழ்து
    நாம்காத்திட்ட நீர்நமக் குதவியாய் நிற்கும்

    பெரியோர் வாய்வழி வழிந்திடும் சிறுகருத்தைநாம்
    அறிவிலி போல்திகழ்ந்து அதைக் கேட்காதிருக்காது
    நல்லோர்வாய் சொல்கேட்க வாய்ப்புகிட்டும் போதே
    எவ்வளவு நம்மால் கேட்டுப்பெற்றிட இயலுமோ
    அவ்வளவை தினம்கேட்டு அறிவைப் பெருகிட்டால்
    எவ்வளவோ சிறப்பினை நாமதன்வழி பெறலாம்
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
    ஈண்டிய கேள்வி யவர். (417)


    ஏனோதானோ வென்று நுட்பங்கள் எதுவுமின்றி
    தரமற்ற பொருளாலே கட்டப்பட்ட கட்டிடமோ
    சிறுஅதிர்வை கண்டாலே தன்னுரு குழைந்திடுமே
    நிகழ்கால நுட்பங்களை நுண்ணியமாய் பின்பற்றி
    சக்திவாய்ந்த நிலஅதிர்வு நித்தம் வந்தாலும்
    உருவும் குழையாது தன்னுருதியையும் விடாது

    வெளியோட்டமாய் அரியபல நூற்களை கற்காது
    செவிவழியும் பலசெய்தி அறிந்திடும் கற்றோர்கள்
    அந்நூலின் ஆணிவேர் பிடித்து அடிவரைசென்று
    பலதிசையில் சிந்தித்து உள்ளர்த்தம் காண்பாரே
    இவ்விரண்டு நல்லறிவை நிறைந்து பெற்றோர்கள்
    தவறாக ஒன்றிரண்டு கருத்தைப் புரிந்திருந்தாலும்
    அதிலிருந்து கேள்வியவர்முன் எழுந்தாலுங் கூட
    யோசித்துபின் சபையிடம் சொல்வாரே யொழிய
    புத்தியற்ற பதிலையவர் சபைமுன் வைக்கார்


    கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
    தோட்கப் படாத செவி. (418)


    மேடையிலே பேசினாரே கற்றறிந்த பெரியார்
    அதனருகே நிகழ்ந்ததுவே நடனஇசை நிகழ்ச்சி
    இருநண்பர் பேசியபடி சென்றனர் அவ்வழியில்
    ஒருநண்பர் அவருரையை கேட்கலாம் எனக்கூற
    இருவரும் சென்றனரே அமர்ந்தனரே நன்றாய்
    ஒருநண்பன் அறிஞரவர் உறையினிலே மூழ்க

    மறுநண்பன் நடன யிசையை கேட்டிருந்தான்
    இயற்கையாய் கேட்கும் சக்தியதைப் பெறினும்
    நல்லவை கூறிடவதற்கு செவிசாய்க்க மறுத்து
    வியக்கும் வகைபேசும் வித்தகர் சொல்கேளாது
    மயக்கம் கொண்டுநாம் மற்றதை கேட்டிருந்தால்
    கேட்கும் திறம்பெற்றும் செவிடெனவே ஏற்கப்படும்
     

Share This Page