1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - கல்வி

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Jan 11, 2012.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பொருட்பால் - கல்வி 40 ஆம் அதிகாரம்

    முன்னுரை

    இந்த அதிகாரத்தில் வள்ளுவர், கல்வியைப் பற்றி கூறுகிறார், அதாவது ஒருவன் எதைக் கற்கவேண்டும், எப்படிக் கற்கவேண்டும், எங்ஙனம் கற்கவேண்டும், கற்றதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தன் பத்து குறள்களின் மூலம் கல்வியின் சிறப்பையும், கல்லாமையால் வரும் இழிவையும் கூறுகிறார், இனி ஒவ்வொரு குறளுக்கும், விளக்கத்தை கவிதை மூலம் காண்போம்.

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக. (391)



    உடலது சோர்வின்றி வலிமைபெற்று இருக்க
    உடற்பயிற்சிக் கல்வியை நல்லபடிக் கற்பதும்
    பயிற்சி நுணுக்கத்தை விளக்கமாய் கேட்பதும்
    அதுகூறும் வழிமுறைப்படி தினமும் நடப்பதும்
    உடற்பயிற்சி கல்வியுடன் செய்ய வேண்டியன

    தனக்குகந்த கல்வியை சிறப்பாகக் கற்றிட
    தெரிந்தோர் கற்றோர் எனப்பலரிடம் கேட்டு
    எழுந்திடும் ஐயங்களை முழுதாய்க் களைந்து
    கற்றக் கல்வியை நடைமுறையில் பின்பற்றி
    ஒழுகுதல் தொழிற்கல்வி கற்றலுடன் வேண்டியன
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    The knowledge we received becomes a finished product only when we have successfully used it and experienced. We can learn every possible strokes by reading a great swimming book, but unless we get in the water and try to use all those strokes, we won't know the differences between them.

    Viswa
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிகவும் அருமையாக உதாரணப் படுத்தி கூறிவிட்டீர்கள் ஐயா........

    மிக்க நன்றிகள் :)
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)

    பேருந்து நிறுத்தத்திலே நாம்பலரை பார்த்திருப்போம்
    பேருந்து எண்யாதென்று கேட்டுகேட்டு நின்றிருப்பர்
    எண்ணினைக் கூறியபின், பேருந்து சென்றிடும்ஊர்
    யாதென்றும் கேட்பரே, எண்ணறிவும், எழுத்தறிவும்
    கடுகளவும் இல்லாத கொடுமையான மக்களே

    கணக்கையும் கணிதத்தையும் கருத்தாக நாம்கற்று
    இலக்கண இலக்கியம் இவற்றையும் தினங்கற்று
    எண்ணிலும் எழுத்திலும் சிறப்புடன் விளங்குவதே
    உயிருள்ள நமைப்போன்ற மனிதரின் வாழ்விற்கு
    இருகண்ணாக இருந்துநற் பொருளறிய உதவும்
     
  5. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    அருமையான குறளும் அதற்கேற்ற உதாரணமும் தந்தமைக்கு நன்றி.

    எண்ணும் எழுத்தும் கணிப்பொறியும் கைபேசியும் போன்றது.

    எம்பெருமான் இணையம் போன்றவர்

    உள்ளும் வெளியும் இப்பூவுலகை நமக்கு உணர்த்துபவர்

    அன்புடன்

    விசுவாமித்ரா
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எவ்வளவு அருமையான உதாரணம் ஐயா தாங்கள் கூறியது, மிகவும் அருமை. தாங்கள் இது போன்று தரும் பின்னூட்டங்கள் எனை வேறு கோணத்தில் சிந்திக்க தூண்டுகின்றது. மிக்க நன்றிகள் :):hatsoff
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கண்ணுடையர் என்பவர் கற்றார் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர். (393)


    கண்ணால் பொருளைக் நாம்காண்பது பெரிதில்லை
    நம்கண்ணங்கு கண்டது எப்பொருளென அறிவதும்
    அப்பொருளின் குணத்தினை புரிவதும் அறிவாகும்
    இப்படிப் பொருளினை பிரித்தறியத்தேவை அகக்கண்
    அகக்கண் வேண்டுமெனில் கற்பதுவே நல்வழியாகும்

    அகக்கண் கொண்டவர்கள் புறக்கண்ணை இழந்தாலும்
    தெளிந்தநற் கண்ணோடு இருப்பதாக, கருதப்படுவாரே
    அகக்கண் இல்லாதார் புறக்கண்ணை கொண்டாலும்
    புறத்தில் கண்ணிடத்தில் புண்கொண்டு போவார்போல்,
    காற்றோராலும் மற்றொராலும் இகழ்ந்து ஒதுக்கப்படுவர்

    கண்ணுடன் நடந்தாலே நமை மதியாவுலகில்
    முகத்தில் இருபுண்ணுடன் நடந்தால் மதிப்பாரோ
     
  8. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    நீங்கள் படைக்கும் அருமையான கவிதைகள்
    என் பின்னூட்டங்களைவிட மிக உயர்வானவையாகும்

    என் பின்னூட்டத்தில் எம்பெருமான் பற்றிய எழுத்துக்களில்
    'எங்கும் எதிலும் நிறைந்தவர்'
    என்ற வார்த்தைகள் சேர்க்கபடவேண்டியவை

    விச்வா

    எங்கும் எதிலும் இருப்பதாலேயே அவர் கடவுள் ஆகிறார். அருமை ஐயா
     
  9. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    புறக்கண்ணால் காணும் பொருள்தன்னை
    அகக்கண்ணால் காணும் திறன் கொண்டு
    புறக்கண்ணால் காணும் ஆண்டவனை
    அகக்கண்ணால் கண்டு களித்திடுவோம்

    என்றும் அன்புடன்
    விச்வா
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அகக்கண்ணால் காணும் பொருள் ஒன்றே
    மனதுள்ளே சென்று தங்கிடுமாம் - புறம்மட்டும்
    பார்த்து சென்றிருந்தால் பொருள் அருமை
    பார்த்து தெளிவது இயலாதே

    மிக்க நன்றிகள் ஐயா, தங்களின் கடவுள் பற்று மிகவும் நன்று. முதல் அதிகாரத்தில், அதாவது கடவுள் வாழ்த்தில், கடவுளை பற்றி கூறியிருப்பார் வள்ளுவர் அவரை வணங்குபவன் யார் வணகாதவன் யார் என்றெல்லாம், அந்த பகுதி வரும் பொழுது உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்

    மிக்க நன்றிகள்
     

Share This Page