1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - உழவு

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Sep 17, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நல்ல வரிகள் ராம்! வருடக்கணக்கில் இருக்கும் தவம் போலவே பயிர் வளர்ப்பு!
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம் ப்ரியா.........மிக்க நன்றி....:thumbsup
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    தில்லாளின் ஊடி விடும்

    பொட்டிட்டு மூன்று முடியிட்டு கட்டிட்ட
    மனைவியினை, நாள்தோறும் காணாது
    வெற்றாக வெளியிடத்தில் வீற்றிருக்கும்
    கணவனை, வெறுப்புடனே நோக்கிடுவாள்
    இறுதியில் வெளிப்படையாய்நொந்துகொள்வாள்

    வாளாது வீட்டினில் வெட்டியாக நீகிடந்தால்

    விளைநிலத்தினை யார் காப்பார் - அதனால்
    உண்டு உயிர் வாழ்ந்திடும் உலகிற்கு
    அண்ணமதை யார் இடுவார்

    உழைப்பற்று உழைத்திடும் நினைப்பற்று - உழு
    நிலத்தின்பால் செல்லாது, அதனை பேணாது
    வீட்டின் மூலையில் சோம்பியே நீயிருந்தால்
    விளைநிலமது வறண்டு விளைச்சலற்று போயிடுமே
    வெறுப்புற்று விலகியிரும் மனைவியை போலவே


    செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
    தில்லாளின் ஊடி விடும். (1039)
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மனைவி மட்டுமா மற்றவரும் அல்லவா ஒதுக்கி விடுவார்கள்! நன்று ராம்
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம் ப்ரியா.......வீட்டில் வாளாவிருந்தால் வீதியில் தான் இருக்க வேண்டும்.......மிக்க நன்றிகள்.....:thumbsup
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நிலமென்னும் நல்லாள் நகும்

    வறுமையென்ற சாக்கினை உறுதியாக கைகொண்டு
    உடலை வளைத்து, உறுப்பை ஆட்படுத்தி - உழைத்
    துண்ண எண்ணாமல் இரந்துண்டு வாழ்ந்திடும் நிலை
    இழி நிலையிலும் இழி நிலையாம்

    கேட்பதை கொடுத்திடும்; நீ கேட்காமலும் கொடுத்திடும்
    உன் உழைப்பின் வியர்வையை அள்ளித் தெளித்தால்
    வயிற்றை அரித்திடும் அமிலத்தினை; தன் கைகொண்டு
    தடுத்து அமிலமரிக்க உணவினை இட்டிடுவாள்

    வாழ்ந்திட வழியில்லை பிழைத்திட பிழைப்புமில்லை யென
    புலம்பி, வறுமையெனை பாடாக படுத்துதுவே எனநினைந்து
    சோம்பியே திருந்திட்டு, வீட்டினில் முடங்கியே கிடந்திட்டால்
    கேட்டதை கொடுத்திடும், உன் வறுமையையும் போக்கிடும்
    நிலத்தாய், எள்ளினகையாடிடுவாள் நீ சோம்பியேயிருந்திட்டால்

    இலமென் றசைஇ இருப்பாரைக் கானின்
    நிலமென்னும் நல்லாள் நகும். (1040)

     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நாம் உழைக்க உழைக்க தான் நிலம் பொன்னாகும்...சோம்பியே கிடந்தால் வெறும் மண்ணே அது என்ற வரிகள் நன்று
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக்க நன்றிகள் ப்ரியா.....:thumbsup
     

Share This Page