1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - உழவு

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Sep 17, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கைசெய்தூண் மாலை யவர்

    வேண்டுவன வேண்டினதை விருப்பப்படி பெற்றிட
    விதையினை நிலத்தில் வேண்டிய நீரூற்றி
    விதைத்துப் பின் காலந்தவறாது சென்றதனை
    கண்விழித்து காத்துப் பெற்றிடுவர் உழவர்

    விதையது முளைதனை விடும் வரையில் - மனதினில்
    நிம்மதி அற்றிருப்பார்; முளையது கதிர்தனை விட்டவுடன் கண்ணுறக்கம் மறந்திருப்பார் விளையிடத்தினில் வீற்றிருப்பார்

    பிறரிடம் இரந்திடும் குணமற்றா ருழவர் உழைத்திடும்
    குணம்பெற்றார்; தனக்கு வேண்டிய பொருளினையேப்
    பெற்றிட உழவைக் கைப்பொருளெனக் கொண்டிடுவார்
    தன்னிடம் வேண்டி வந்தவர்க்கும் எதனையும்
    ஒளிக்காது கொடுத்திடும் ஈகை குணம் பெற்றார்

    இரவார் இரப்பார்க்கொன் றிவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர். (1035)

     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பயிரையும் தன் குழந்தையாகவே வளர்ப்பார் உழவர் என்று சொல்ல விழையும் வரிகள் அருமை
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கருத்தை மிக கச்சிதமாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் பிரியா மிக்க நன்றிகள்........:thumbsup
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    விட்டோமென் பார்க்கும் நிலை

    தன்னுடைய நிலத்தினில் ஒவ்வொரு கணத்தினில்
    தன்னுடைய கைகொண்டு ஒவ்வொரு இடத்தினில்
    தன்னுடைய ஆவினை ஒவ்வொரு ஏரினில் -நன்றாய்
    மாட்டியே உழுதிடுவர் நிலத்தினை தினமும் பேணிடுவர்

    நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
    அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
    தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
    விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
    என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்

    இப்படி, தினமும் உழுதிட உழைத்திடும் உழவரின்
    கை தான் உழவது செய்யாது மடக்கி எதுவுஞ்
    செய்யாது இருந்திடுவாரெனின், உலகினில் யாம்
    அனைத்தையும் துறந்தொமென்று கூறிக்கொள்ளும்
    துறவிகளின் வாழ்வும் கடினமாகிதான் போகும்

    உழவினார் கைம்மடங்கின் இல்லை விளைவதூஉம்
    விட்டோமென் பார்க்கும் நிலை. (1036
    )
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உழவனின் உழைப்பில் தான் மற்ற எல்லாமே இருக்கிறது என்பதை சொன்ன விதம் நன்று.
    தினம் உதிக்கும் சூரியன் ஒருநாள் தவறினால் கூட உலகம் இருண்டு போகும்... அதே போல தான் உழவனின் கை மடங்கினால் மற்றவையும் நின்று போகும்!
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அருமையாக சொல்லிட்ட ப்ரியா.....நன்றிகள்...:thumbsup
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வேண்டாது சாலப் படும்

    உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
    ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
    திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
    உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு

    சரியாய் சராசரியாய் இட்டிட சந்தர்பம் பார்த்திடனும்
    காலந்தவறாது அளவுகளில் குறையாது இட்டிடனும்
    தடுப்பு மருந்திடுதல் குழந்தை நோயின்றி வளர்ந்திட
    சிறந்த உரமிடுதல் பயிறு செழிப்பாக வளர்ந்திட

    புழுதி நிறைந்த விளை நிலமதுவே - உழவர்தன்
    ஏந்திய ஏர்கொண்டு ஒருபலம் புழுதி காற்பலமாய்
    ஆகும் வரை உறுதிகொண்டு உழுதிட்டு - மனதில்
    பொறுமை கொண்டு காத்திட்டால் விளைநிலமது
    செளிதிடுமே, பயிரும் எருவின்றி வளர்ந்திடுமே

    தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும். (1037)

     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வளர்ப்பதில் அவசரம் கொள்ளாது பொறுமையோடு வளர்த்திடுதல் பயிரின் செழிப்புக்கு அவசியம்...அதிலும் மழையில்லாமல் வாடும் பயிர்களைக் கண்டு தானும் வாடி போகும் உழவர்களின் உள்ளம் எத்தகை உயர்வானது!!
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நீ முன்னாடி சொன்ன மாதிரி பயிர் வளர்ப்பும் குழந்தை வளர்ப்பும் ஒன்றே....இரண்டையும் பொறுத்து தான் வளர்க்க வேண்டும்.....

    மழையின்றி வாடுதல் கொடுமையிலும் கொடுமை தான்......நன்றிகள் ப்ரியா
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நீரினும் நன்றதன் காப்பு

    அடித்து உதைத்தலும் ஏர்கொண்டு உழுதலும்
    குழந்தைக்கும் விளைநிலத்திற்கும் வேண்டாது
    போகும், நற்பண்பிட்டு வளர்ந்த குழந்தையின்பாலும்
    நல்லெருவிட்டு காத்திட்ட விளைநிலத்தின்பாலும்

    படிப்படியாய் செய்திடனும் பாங்காக செய்திடணும்
    எந்த படி செய்தாலும் அதை எப்படிநீ செய்கின்றாய்
    அப்படியே பலனும் வரும்; ஒவ்வொரு படியினிலும்
    கவனமுடன் இருந்திடனும், தவறு எப்படியினில்
    நிகழ்ந்தாலும் அது மற்ற படி குழைக்குமன்றோ

    ஏரிடுதல் உழவிற்கு நன்றாகும் அதைவிட - அந்
    நிலத்திற்கு எருவிடுதல் மிகநன்றாம் - எருவிட்ட
    மறுகணத்தில் களைஎடுத்துப்பின் நீர் பாய்ச்சுதல்
    மிக நன்றே; இவைகாட்டிலும் பயிரினை கண்ணாக
    காத்திடுதல் மேலுள்ள அனைத்தோடு பயிரினையும்
    காப்பதால் உழவிற்கு இன்றியமையாததாகும்

    ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு. (1038)

     

Share This Page