1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருக்குறள்கள்?

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 31, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,573
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: திருக்குறள்கள்:hello:

    இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.
    உதாரணமாக,
    "தேர் ஓடுவது எதனால்?
    தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,
    "அச்சாணியால்" என்பது.
    தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது
    அச் - சாணியால்
    என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.
    "நீ வசிக்கும் ஊர் எது?
    உன் காலில் காயம் வந்தது எப்படி?"
    என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது.
    "சாம்பார் மணப்பதேன்?
    உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் "பெருங் காயத்தால்!" என்பது.
    இன்று *ஆங்கில* வழிக் கல்வி பெருகிவிட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர்

    தமிழ்வழிக் கல்வியில் பயின்றபோது இத்தகைய சொல் விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும், சிந்தனைத் திறனையும் ஒரு சேர வளர்த்தன...

    இடைக்காலத்தில் வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண்பார்வையற்றவர், ஒருவர் கால் ஊனமானவர்.
    கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எப்படிச் செல்ல வேண்டும் என வழி சொல்வார்.

    இவ்விரு புலவர்கள் எழுதிய வெண்பாக்கள் பலவும் இதேபோல் சொல் விளையாட்டு பாணியில் அமைந்தவை தான்.
    ஒருவர் வெண்பாவின் இரண்டடியில் கேள்வி கேட்க மற்றவர் அடுத்த இரண்டடிகளில் பொருத்தமான பதில் சொல்வார்.
    மதுரைத் தெப்பக் குளத்தில் கால் ஊனமானவர் படியில் அமர்ந்து பார்த்தவாறிருக்க, கண்பார்வை அற்றவர் தம் துணியை நீரில் அலசினார். அப்போது துணி குளத்தில் நழுவி எங்கோ சென்றுவிட்டது. அதைப் பார்த்த கால் ஊனமானவர்?
    "அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ?"
    - எனக் கேள்வி கேட்டார்.
    அதாவது, தண்ணீரில் துணியைப் போட்டு துவைக்கிற சாக்கில் அடிஅடியேன்று அடித்தால் அது (கோபித்துக் கொண்டு) நம்மை விட்டுப் போகாதா என்பது அவர் கேள்வியின் பொருள்.
    அதற்கு பார்வையற்றவர் சொன்ன பதில் இதுதான்!
    "எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதூரைச் சொக்கலிங்கம் உண்டே துணை"
    - என்று வெண்பாவை நிறைவு செய்தார்.
    அதாவது க லிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்று பொருள்.
    இந்தத் துணி போனால் என்ன? மதுரைச் சொக்கலிங்க மாகிய தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்பதே அவரது பதில்.
    பார்வையற்றிருந்தாலும் அவரது தெய்வ நம்பிக்கையின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
    இப்போது முழு வெண்பாவையும் பார்க்கலாம்..!
    "அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத்
    தப்பினால் நம்மையது தப்பாதோ? -
    எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதுரைச்
    சொக்கலிங்கம் உண்டே துணை!"

    தமிழின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு தந்தோம்.
    எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம், திருக்குறளைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார்.
    "திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா? திருக்குறளைத் *திருக்குறள்கள்* என்று தானே சொல்லவேண்டும்? அப்படியிருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்?" என்று கேள்வி கேட்டார்.

    அதற்கு சுஜாதா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
    "திருக்குறள் கள்ளை
    அனுமதிப்பதில்லை".
     
  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Quite an interesting take on the challenged poets and interesting
    lists from our dear Tamil.


    I am proud of my mother tongue.From 6th Std,we switched over
    to Sanskrit as second language though we had Common Tamil and medium
    of instruction was Tamil. Actually I had occasion to read more Tamil books from our Tamil library of our bank.I am more into Tamil after retirement.My husband was a Tamil scholar and used to write dramas and poems in typical literary style .
    திருவேங்கடத்துஅந்தாதி
    சிலேடைஎன்பது ‘ச்லேஷை’ எனும்வடமொழிக்கவிமரபைஒட்டியது. 15 ம்நூற்றாண்டுக்குப்பின்தமிழ்ப்புலவர்களும்இவ்வகையைப்பின்பற்றத்தொடங்கினர்.காளமேகப்புலவரும் பல சிலேடைப்பாக்கள் புனைந்துள்ளார்.

    ஏராளமான siலேடைகளைத்தன்னகத்தேகொண்டநூல்களின்வரிசையில்மிகமுக்கியமானஇடத்தைப்பிடிப்பது ‘பிள்ளைப்பெருமாள்ஐயங்கார்’ எழுதிய ‘திருவேங்கடத்துஅந்தாதி’. இதுபடிப்பவர்களைபிரமிக்கச்செய்யும்அபாரமானசாதனை.

    வகையாலும் ,இலக்கணத்தாலும்இரண்டுகட்டுப்பாடுகளைக்கொண்டதுஇந்நூல். அந்தாதிஎன்பதால்ஒருசெய்யுளின்கடைசிச்சீர்அடுத்தசெய்யுளின்முதல்சீராகவரவேண்டும்; இதுஒருகட்டுப்பாடு.

    இலக்கணவகைப்படிகட்டளைக்கலித்துறைசார்ந்தபுனைவுஎன்பதால், ஓர்அடிநேரசையில்தொடங்கினால்பதினாறு, நிரையசையில்தொடங்கினால்பதினேழுஎனஒற்றெழுத்துநீங்கலானஎழுத்துகளின்எண்ணிக்கைமாறுபடாமல்அமையவேண்டும். இந்தஇருகட்டுப்பாடுகளைத்தவிரமூன்றாவதுகட்டுப்பாட்டைத்தாமேவிதித்துக்கொள்கிறார், அந்தமாபெரும்புலவர்.

    ஒவ்வொருசெய்யுளிலும்ஒவ்வோர்அடியிலும்இரண்டாம்சீர்மீண்டும்மீண்டும்ஒரேவார்த்தையாகவருமாறுஅமைக்கிறார். ஆனால்அந்தவார்த்தை, சிலேடைநயத்தால்இரண்டுபொருள்களைஅல்ல, நான்குபொருள்களைத்தரவல்லநுட்பத்தோடுஅமைந்துள்ளது. இதுவேஐயங்காரின்அபாரஆற்றல்.

    இப்படிநூற்றுக்கணக்கானசொற்களைநான்குபொருள்தரும்வகையில்அவர்கையாள்கிறார். படிக்கப்படிக்கமலைக்கவைக்கும்அவரதுமொழித்திறனுக்குச்சான்றாகஒரேஒருபாடல் -

    .."
    துன்பங்களையும்சனனங்களையும்தொலைவறுபேர்இன்பங்களையும்கதிகளையுந்தருமெங்களப்பன்தன்பங்களையும்படிமூவரைவைத்துத்தாரணியும்பின்பங்களையும்இழுதுமுண்டானடிப்பேர்பலவே !
    .."


    பதம்பிரித்துப்பார்த்தால் –

    துன்பம்களையும்சனனம்களையும்தொலைவறுபேர்இன்பங்களையும்கதிகளையும்தரும்எங்கள்அப்பன்தன்பங்குஅளையும்படிமூவரைவைத்துத்தாரணியும்பின்புஅங்குஅளையும்இழுதும்உண்டான்அடிப்பேர்பலவே!

    மூவரை - பிரமன்,ஈசன்,திருமகள்ஆகியோர்மூவரையும்தன்பங்குஅளையும்படி - தன்திருமேனியில்இருக்கும்படிவைத்து - செய்துகொண்டுஅங்கு - திருஆய்ப்பாடியில்தாரணியும் - மண்ணையும்அளையும், இழுதும் - தயிரையும் , வெண்ணெயையும்உண்டான் - உண்டஎங்களப்பன் - திருவேங்கடமுடையானுடையபேர்பலவும் - ஆயிரம்நாமங்களும்துன்பம்களையும் ; ஜனனம்களையும் ; தொலைவறுபேரின்பங்களையும், கதிகளையும்தரும்.
    Jayasala 42
     
    Thyagarajan likes this.

Share This Page