1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

 1. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,835
  Likes Received:
  4,198
  Trophy Points:
  355
  Gender:
  Female
  உலகில் எந்த மொழி என்று பாராமல் எல்லா மொழிச் சொற்களையும் சற்று திரித்து ஆங்கில அகராதியில் நுழைத்துக் கொண்டார்கள்.இன்னும் நமக்குள் சில வார்த்தை வட மொழியா, தமிழ்ச் சொல்லா என்ற விவாதம் நீடிப்பதற்குள் ஆங்கிலச் சொல் தலை நீட்டி சண்டையைத் தவிர்த்துவிடும்.இந்த அனுசணை தான் ஆங்கிலத்தை வேரூன்றச் செய்து விட்டது.

  மேலும் நம் அரசியல் தலைவர்களுக்கு ஹிந்தி கற்கக்கூடாது என்கிற கொள்கை இருந்தது..............(அது ஏன் என்று எனக்கு இன்று வரை தெரியாது..............)...........அதனால் அதற்கு ஒரு கேடையமாக ஆங்கிலத்தை அப்போது பிரயோகித்தார்கள்.....அந்தோ பரிதாபம் இப்போ தவிக்க்றோம் நாம் அனைவருமே..........எரியும் கொள்ளி இல் எது உசத்தி என்பது போல ஹிந்தியால் தமிழ் அழிந்தால் என்ன ஆங்கிலத்தால் அழிந்தால் என்ன .....தமிழ் இப்போ மெல்ல குறைந்து வருகிறது .........அது தானே உண்மை?...........

  ஹிந்தியை எதிர்த்து சண்டை போட்டவர்கள் இப்போ ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் என்பது, மில்லியன் டாலர் கேள்வி.............


  நாள் பட்டுப் போன ரணம் ஆறுவது கடினம். அளவு கடந்த பொறுமையும் நீண்ட வருட மருத்துவமும் தேவை.எப்படி சில வியாதிகளுக்கு அல்லோபதி, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இறையுணர்வு ,மனோ மருத்துவம் என்று பல மருத்துவ முறை தேவைப் படுகிறதோ அதேபோல் பெற்றோர், குழந்தைகள், பாட திட்டம், கல்வி முறை, அரசாங்க திட்டங்கள், சமூக ஆய்வாளர்கள், மனோ தத்துவ நிபுணர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சி, அதனால் உருவாகும் தொலை நோக்குத் திட்டங்கள் மட்டுமே பயனளிக்கும் .தமிழ் ஒரு சனாதன மொழி. அது அழிந்து விடும் என்று கவலைப் படாமல் நம்பிக்கையுடன் பன்முனை போராட்டம் தொடங்க வேண்டும், அதுவும் சாத்வீக முறையில்.
  போராட்டம் வெற்றி பெரும்.

  போராடுவோம், போராடு வோம். வெற்றி பெறும் வரை போராடுவோம்.

  நீங்கள் சொல்வது 100 % சரி ஜெயா மா............நம்மால் முடிந்த வரை நாம் போராடிக்கொண்டே இருப்போம்.....,முடிந்த வரை தமிழில் உரையாடுவோம், எழுதுவோம், மற்றவர்களுக்கு பரப்புவோம் :)
   
  uma1966 and vaidehi71 like this.
 2. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,835
  Likes Received:
  4,198
  Trophy Points:
  355
  Gender:
  Female
  முழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu)


  நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
  சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
  தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
  அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
  எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

  பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
  சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
  - மனோன்மணியம் சுந்தரனார்


  மிக மிக அருமையாக பதில் அளித்துள்ளீர்கள் ..............நீகள் சொல்வது சரிதான், தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் மனோன்மணியம் சுந்தரனார் தான் இயற்றினார்.
   
  uma1966 and vaidehi71 like this.
 3. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,835
  Likes Received:
  4,198
  Trophy Points:
  355
  Gender:
  Female
  ம்ம்.. இவர்கள் கேட்பார்கள் , தமிழை புரிந்து கொள்வார்கள் வைதேஹி , அடுத்த தலைமுறை?......அது தான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது :) ..ஆனால் நாம் எல்லோருமே நம்மால் முடிந்ததை தொடர்ந்து செய்ய வேண்டியது தான்......அந்த முதல் வீடியோ பார்த்தீங்களா? ...நான் உங்களை பயப்படுத்துகிறேன் என்று என்ன வேண்டாம், முடிந்தால் அந்த வீடியோ வை குழந்தைகளுக்கு போட்டுகாட்டுங்கள் :)

  அன்புடன்,
  கிருஷ்ணாம்மா :)
   
  uma1966 and vaidehi71 like this.
 4. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,835
  Likes Received:
  4,198
  Trophy Points:
  355
  Gender:
  Female
  நான் என் கட்டுரையை தொடர்கிறேன் தோழிகளே :)

  போனவாரம் ஒரு தெலுங்கு படம் பார்த்தேன், SPB யும் லக்ஷ்மியும் மட்டுமே முழு படத்திலும் வருவார்கள்............5 பிள்ளைகளும் பெண்களும் அவர்களுக்கு. எல்லோரும் வெளிநாட்டில் வாசம், யாருடைய குழந்தைக்கும் தெலுங்கு தெரியாது.........இவள் தான் அவங்க பேசுவதை கேட்க ஆவலாய் இருப்பாள் பாவம்:(.......


  இது, இந்த மோகம் ஆங்கிலேயர் நமக்கு விட்டுச்சென்ற பரிசு.......60 வருடங்களுக்கு மேல் ஓடியும், நாம் இன்னும் விடுதலை பெறவில்லை அவர்கள் மொழி இல் இருந்து :(.அதாவது அது தான் உசத்தி என்கிற நினைவில் இருந்துநாம் இன்னும் விடுதலை பெறவில்லை)............  சரி நாம் தொடங்கிய பிரச்னைக்கு வருவோம் :)..............இப்போது YOU TUBE இல் அழகாய் தமிழ் சொல்லித்தர நிறைய வீடியோ க்கள் இருக்கு. அதன் முலம் அவர்களுக்கு தமிழ் சொல்லித்தரலாம். நாம் கூட இருந்தால் போறும் , அல்லது அவர்களுக்கு புரியாததை நாம் சொல்லித்தரலாம்.


  இதே YOU TUBE இல் பாட்டி வடை சுட்ட கதை முதல், பஞ்சதந்திரக் கதைகள், சிறுவர் பாடல்கள் என்று ஏகத்துக்கும் இருக்கு. தரமானதாக நீங்கள் செலக்ட் செய்து குழந்தைகளுக்கு காட்டுங்கள். தினம் ஒரு அரைமணி நேரமாவது தமிழில் கதைகள், பாட்டுகள் அல்லது செய்திகள் கேட்க சொல்லுங்கள். நீங்கள் காட்டும் வீடியோ க்களில் தமிழ் உச்சரிப்புகள் சரியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.


  சில வீடியோ க்களில் நம் புராணக் கதைகளை ஏகத்துக்கும் மத்தி எடுத்திருக்கிறார்கள், அதையும் நாம் தான் கவனிக்கணும் :)...என்ன செய்வது , தப்பான வழியை நாமே நம் குழந்தைகளுக்குக் காட்டக் கூடாது தானே? :)
   
  uma1966 and vaidehi71 like this.
 5. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,835
  Likes Received:
  4,198
  Trophy Points:
  355
  Gender:
  Female
  நான் சொல்வதை நீங்கள் டிவி பார்த்தாலே புரிந்து கொள்ளுவீர்கள். முன்பெல்லாம் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் மட்டுமே தமிழைக் கொல்வார்கள்............இப்போ செய்தி வாசிப்பவர்கள் கூட ல, ள, ழ, ச, ஸ, ந, ன, ண...........என எந்த வித்தியாசமும் இல்லாமல் செய்தி வாசிக்கிறார்கள்........ டிவி இல் கிழே ஓடும் செய்திகளில் கூட , எத்தனை எத்தனை எழுத்துப் பிழைகள்?...........அவைகள், அவர்கள், அது .......இவற்றைக் கூட பிழையாக வாக்கியத்தில் சேர்க்கிறார்கள்..........

  செய்தித்தாள்களும் இதற்கு விதி விலக்கு இல்லை.....ஒழுங்காய் தமிழை படித்தால் தானே பிழை இல்லாமல் எழுதவரும்?

  எனவே கொஞ்சம் உஷாராய்த்தான் நாம் இருக்கணும் !
   
  uma1966 and jskls like this.
 6. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,835
  Likes Received:
  4,198
  Trophy Points:
  355
  Gender:
  Female
  அதேபோல வெளி இல் செல்லும்போது வழி நெடுக வார்த்தை விளையாட்டு விளையாடலாம். ஒரே எழுத்தில் வரும் பல வார்த்தைகளை சொல்ல சொல்லலாம், அல்லது வார்த்தை இன் கடைசி எழுத்தில் புது வார்த்தையை சொல்ல சொல்லலாம். ( முன்பெல்லாம் இதை ஆங்கிலத்தில் விளையாடுவோம் , இப்போ நிலைமை தலை கீழாகிவிட்டது :) ) இல்லையா?

  இப்போ லேட்டஸ்ட் whatsup . அதில் ஒரு புது குழு ஆரம்பித்து, அதில் உங்கள் குழந்தைகள், அருகில் இருக்கும் தமிழ் குழந்தைகளை உறுப்பினராக்கி, கேள்வி நீங்கள் போடுங்கள். அதாவது "க வில் ஆரம்பிக்கும் 3 எழுத்து வார்த்தைகள் 10 எழுதவும் என்று. குழந்தைகள் ஆர்வமாய் எழுத துவங்குவார்கள். நெட் இல் தேடி எழுதினாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. அத்தனைக்கு அத்தனை அவர்களுக்கு புதுப் புது வார்த்தைகள் தெரியும். நாங்க இன்னும் இதை விளையாடுகிறோம் ..கொஞ்சம் கஷ்டமாக கேள்விகளுடன் :)


  நம் ஊரைப்பற்றியும், தாத்தா பாட்டி, நம் சொந்தங்கள், நம் சின்ன வயது குறும்புகள் என பலவற்றை பற்றியும் தமிழில் விளக்குங்கள். நிறைய பேசுங்கள் . அது அவர்கள் ஊருக்கு வரும்போது உதவும். "எங்க அப்பா உங்களைப் பற்றி சொல்லி இருக்காங்க, எங்க அம்மா எப்பவும் உங்களைப் பத்தித்தான் பேசுவாங்க" என்று அவர்கள் சொல்லும்போது, இங்கிருப்பவர்களுக்கு விண்ணில் பறப்பது போல இருக்கும் :) நாம் என் அந்த சந்தோஷத்தை நம் சொந்தங்களுக்குத் தரக்கூடாது?


  என்னத்தை கொண்டு வந்தோம் அல்லது என்னத்தை அள்ளிக்கொண்டு போகபோறோம்?
   
 7. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,835
  Likes Received:
  4,198
  Trophy Points:
  355
  Gender:
  Female
  இங்கு நான் " தாத்தாபாட்டி சொன்ன கதை" என்று ஒரு திரி ஆரம்பித்ததன் நோக்கமே அது தான். குழந்தைகளுக்கு சொல்லும்போது நாமும் நம்முடைய அந்த காலத்துக்கு போய்விடுவோம், Time Travel போல........கதை சொன்னதும் நீங்கள் எவ்வளவு உற்சாகமாய் மாறி விடுவீர்கள் தெரியுமா?............


  ஒருமுறை சொல்லிப் பாருங்கள் அருமை புரியும். இல்லாவிட்டால், நான் இங்கு போடும் கதை யாருக்கும் தெரியாதா என்ன ? ஏதோ ஒன்று இரண்டு கேட்காத கதையாக இருக்கும், ஆனால் பலதும் கேட்டது தான்..........ஆனால் அதை மீண்டும் மீண்டும் கேட்கும்போது அல்லது சொல்லும்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் வருவதை நான், இந்தக் கதைகளை அடிக்கும்போது உணர்கிறேன். அதனால் தான் சொல்கிறேன், நீங்களும் ஒருமுறை முயன்று பாருங்கள்.:hearteyes:


  இதனால் நமக்கும் டென்ஷன் என்கிற மன அழுத்தம் குறையும், குழந்தைகளுக்கும் நல்ல நல்ல கதைகள் அதுவும் அவர்களின் தாய் மொழி இல் கிடைக்கும்....மேலும் முக்கியமான ஒன்று அவங்களுக்கு கார் பங்களாவை விட அப்பா அம்மா தான் ரொம்ப பிடிக்கும், எனவே நீங்கள் அருகில் அமர்ந்து கதை சொன்னால் அவர்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் , நெருக்கம் அதிகமாகும்:grinning:


  இன்று வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை கேட்ட போது அவர் சொன்னார். ரசிப்புத்தன்மை இல்லை என்றல் ரொம்ப கஷ்டம் என்று. அதாவது ஒரு கவிஞன் தன்னை படைக்கும்போது பிரும்மாவிடம் கேட்டானாம், " என்னை எப்படி வேண்டுமானாலும் படைத்துக்கொள், ஏழையாக, அழகில்லாதவனாக என்று....ஆனால் என்னைச்சுற்றி ஒரு நாலு பேராவது என் கவிதைகளை ரசிப்பவர்களை படை" என்றானாம்.......


  ஒரு படைப்பாளிக்கு அவன் ரசிகனே முக்கியம் இல்லையா? . நாம் ஒன்று செய்கிறோம் என்றால் அதை 4 பேராவது ரசித்தால் தானே நமக்கு நிம்மதி?....இங்கு பதிவுகள் போடும்போது கூட நாம் எல்லோருமே பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறோம் இல்லையா? அது போலத்தான் குழந்தைகளும், எனவே அதுகள் செய்யும் சின்ன சின்ன முயற்சியக்கூட பாராட்டுங்கள்.


  கொச்சையாக தமிழ் பேசினாலும் மகிழுங்கள், அது அவர்களை ஊக்குவிக்கும்.
  தொடரும்..............
   
 8. jskls

  jskls IL Hall of Fame

  Messages:
  6,808
  Likes Received:
  24,673
  Trophy Points:
  490
  Gender:
  Female
  என் தாய்மொழி தமிழ் இல்லாவிட்டாலும் என் குழந்தைகளுக்கு அது தான் தாய்மொழி. எப்படியோ பெரியவள் நன்றாக பேச படிக்க, எழுத கற்று கொண்டாள். சின்னவளுக்கு ஏனோ தமிழ் பேசுவதில் தன்னம்பிக்கை குறைவென்பதால் பேசுவது மட்டும் இல்லை. ஆனால் எழுத படிக்க தெரியும். இலக்கணம் கூட ஓரளவுக்கு தெரியும். முதலில் ஆங்கிலத்தில் பேசினாலும் அதை தமிழில் திரும்ப சொல்ல சொல்வோம். பல முறை, தமிழில் பேசினால் தான் நாங்கள பதில் அளிப்போம். தாத்தா பாட்டியிடம் மட்டும் தமிழில் பேசுவாள். இவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுப்பதற்காகவே மற்ற நண்பர்களின் குழந்தைகளுக்கும் சேர்த்து தமிழ் கற்று தருகிறோம் ... நீங்கள் சொல்வது போல் youtube ல் தெனாலிராமன், அக்பர் பீர்பால் கதைகள் எல்லாம் போட்டு காட்டுவோம். நிறைய தமிழ் பாடல்கள் கேட்பார்கள். இப்பொழுது பெரியவர்கள் என்பதால் மிகவும் வற்புறுத்த முடியவில்லை. நாங்களும் போராடி கொண்டு தான் இருக்கிறோம். இதற்கு மேல் என்ன செய்வது என்றும் புரியவில்லை.
   
  uma1966, vaidehi71 and kaniths like this.
 9. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,835
  Likes Received:
  4,198
  Trophy Points:
  355
  Gender:
  Female
  இதற்காக மன வருத்தப்படாதீர்கள் லக்ஷ்மி..... .நீங்கள் உங்களால் ஆனதை செய்துகொண்டு தானே இருக்கீங்க.அது போதும், நாம் நம் குழந்தைகளின் விருப்பங்கள், நம் சுற்றுப்புற சுழல் என்று பலதால் ஆக்கரமிக்கப் படுகிறோம்....என்றாலும், நாம் , நம்மால் முடிந்ததையும் செய்து கொண்டு தானே இருக்கோம் :)...........இன்னும் கொஞ்சம் பெரியவர்கள் ஆனால் புரியும் என்று நம்புவோம் :)
   
  uma1966, vaidehi71 and jskls like this.
 10. vaidehi71

  vaidehi71 IL Hall of Fame

  Messages:
  2,421
  Likes Received:
  3,178
  Trophy Points:
  335
  Gender:
  Female
  மாமி,

  நேற்று முதல் வேலையே அந்த வீடியோ நான் பாத்து விட்டு வீட்டில் எல்லோரையும் பார்க்க சொன்னேன்.
  மிகவும் நன்றாக எடுத்து உள்ளார்கள். நான் என்ன நினைகிறேனோ அதுவே அதில் உள்ளது.

  தங்களுக்கும் பவித்ராவிற்கும் (@PavithraS )என் நன்றிகள்.
  வைதேஹி
   
  uma1966, kaniths and krishnaamma like this.

Share This Page