1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

 1. vaidehi71

  vaidehi71 IL Hall of Fame

  Messages:
  2,421
  Likes Received:
  3,178
  Trophy Points:
  335
  Gender:
  Female
  மாமி,

  மிகவும் அருமையான பதிவு.
  நீங்க சொன்னதில் இருந்து தான் நான் தமிழில் எழுதுகிறேன்.
  சில விழயங்களை தமிழில் சொல்வது போல் ஆங்கிலத்தில் சொல்ல முடியாது.
  உதரனத்திற்க்கு அன்பு, பாசம், காதல் எல்லாம் ஒரு வார்த்தையில் ஆங்கிலத்தில் சொல்லி விடுவார்கள்.

  சரி, நீங்க சொன்ன விஷயம் எங்கள் வீட்டிலும் நடக்கிறது.
  நான் தமிழில் தான் பேசுகிறேன், ஆனால் என் பசங்க ஆங்கிலத்தில் பதில் சொல்லுவார்கள்.
  எப்போ தமிழில் முழுவதுமாக பேசுவார்களோ எனக்கே புரியவில்லை.

  காலம் பதில் சொல்லும், ஆனால் என்னால் முடிந்ததை செய்வேன்.
  என்ன ஒன்று, அவர்கள் நான் சொல்வதை கேட்கிறார்கள் .

  மிக்க நன்றி,
  வைதேஹி
   
  kaniths, krishnaamma and jskls like this.
 2. suryakala

  suryakala IL Hall of Fame

  Messages:
  8,464
  Likes Received:
  10,559
  Trophy Points:
  470
  Gender:
  Female
  Dear @krishnaamma,

  உங்கள் நூல் "தாய் மொழி" பற்பல கேள்விகளை என்னுள் எழுப்புகிறது.

  நாம் கவலைப்படுவது எதைப் பற்றி?

  -தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள்தமிழைச் சரியாகப் போற்றுகிரார்களா?
  -இலக்கியத் தமிழ் வளர்சசி கூடியுள்ளதா, குறைந்துள்ளதா?
  -தமிழ் உலகத்தின் தொழில் நுட்ப, ஊடக வளர்ச்சிக்குத்தகுந்தவாறு தன்னையும் புதுமை படுத்தியுள்ளதா?
  -தமிழ் பேசும் மக்கள் எண்ணிகை கூடியுள்ளதா, குறைந்துள்ளதா?
  -தமழில் தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருகின்றனவா?
  -இருக்கும் தமிழ்ச்சுவடிகளைப் பாதுகாக்கின்றோமா?
  - வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழைப் பயன் படுத்துகின்றனரா?
  - மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற தென்கிழக்காசிய நாட்டுத் தமிழர்கள்,தம் தாய் மொழியைப்
  பாதுகாக்க தமிழர்களாகிய நாம் எவ்விதத்தில் உதவுகிறோம்?
  - இலகங்கைகயிலிருக்கும் நால்வகைத் தமிழர்களை நாம் தமிழருடன் இணைக்க,தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்க என்னசெய்ய வேண்டும்?
  -இரண்டு நூற்றாண்டுகட்கு முன்பு ஆங்கிலேயரால் அடிமைக் கூலிகளாக கடத்தப்பட்டு மேற்கிந்திய தீவுகளிலும் தென்னாப்பிரிக்காவிலும்,பிஜித் தீவுகளிலும் வாழும் தமிழர்களை அவர்கள் தாய் மண்ணுடன் உணர்வு பூர்வமாகஇணைத்து ஊகுவிக்க முடியுமா?
  -புதிய தலைமுறையில் வெளிநாடு சென்றுவிட்ட தமிழரகளையும், அவர் தம்
  வழிவந்தோரையும் தாய் மண்ணுடன் உணார்வு பூர்வமாய் இணைக்கும் வழிகள் என்ன?
  -இன்றையத் தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர்களின் தரம் எவ்வாறு உள்ளது?
  -டாக்டர் உ.வே.சா, தெ.பொ.மீ, சிலம்புச் செல்வர்,மு.வ, திரு.வி.க, மறைமலையடிகளார், வ.சு.ப,பாரதியார்,பாரதி தாசனர், ந.மு.வே நாட்டார், நாமக்கல்லார் போன்றவர்கட்கு இணையாக
  இன்று ஒரு தமிழறிஞரும் இல்லையே, ஏன்?. .
  -ஊடகங்களில் தமிழைச் சரியாக பயன்படுத்தாமலும்தவறான உச்சரிப்புகளையும் (வெல்லிக் கிலமை!)
  செய்யும் தவறுகளை மக்கள் சுட்டிக் காட்டுகிறார்களா?
  -வள்ளுவர் விழா, கம்பன் விழா, பாரதி விழா, தமிழ் இலக்கியப்பட்டி மன்றங்கள் யாவும் எங்கே போய் விட்டன?
  பற்பலவிதமான துறைகளைக்கொண்டுள்ள தமிழக அரசு, தமிழ்த்துறை என்றும்தமிழ்துறை அமைச்சர் என்றும் நியமித்துகுறிக்கோளை வரையறுத்து, நிதி ஒதுப்புச செய்திருக்கின்றனரா?

  இவையும் இன்னும் பல வினாக்களும் என் இதயத்தில் எழுகின்றன...

  நாம் செய்ய வேண்டுபவை ஏராளம்.....நீண்ட பயணம்.....

  ஆனால்....

  "பல்லுயிரும் பலவுலகும்
  படைத்தளித்துத் துடைத்திடும் ஓர்
  எல்லையறு பரம் பொருள்
  முன்னிருந்தபடி இருப்பது போல்
  கன்னடமும் களிதெலுங்கும்
  கவின் மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தெழுந்துதித்து
  ஒன்று பல ஆயிடினும்
  ஆரியம் போல் உலகவழக்கு
  அழிந்து ஒழிந்து சிதையா உன்
  சீரிளமைத் திறம் வியந்து
  செயல் மறந்து வாழ்த்துதுமே!

  என்று கவிமணி கூறிய வாக்கால்
  அன்னைத்தமிழ் என்றும் வாழ்வாள் வளர்வாள்
  என்று நம்புவோம், அமைதி அடைவோம்,
  நம்மால் இயன்ற தமிழ்ப் பணி தொடர்வோம்.
   
 3. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  4,646
  Likes Received:
  9,344
  Trophy Points:
  408
  Gender:
  Female
  தமிழுக்கு ஏற்பட்ட மாசு இன்று நேற்று ஏறபட்டதல்ல .என்று ஆங்கிலேயன் நம் மண்ணில் கால் அடி எடுத்து வைத்தானோ அன்றே துவங்கி விட்டது.200 வருடங்களுக்கு முன்னால் பெண்களில் அநேகர் எழுத்து வாசனை அற்றவர்கள். ஆண்களில் மிகுந்த படிப்பே .S S.L .C .தான்.அனைவரையும் சுமார் ஆங்கிலம் கற்க வைத்து குமாஸ்தாக்களாக ஆக்குவது ஒன்றே அவர்களது நோக்கம்.அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம் என்ற ஆசை நம்முள் ஆழ
  விதை க்கப்பட்டது. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே அலுவலக நியமனம், நிரந்தர பணி என்ற சூழலில் கண்னி வைத்துப் பிடிக்கப் பட்டவர் நாம்.முதலில் உயர் தட்டு மக்களிடையே ஏற்பட்ட மோஹம் எல்லாத் தட்டு மக்களையும் தாக்கத் தொடங்கியது.
  காந்தி ராஜாஜி போன்றோர் இந்த அபாயத்தை உணராமல் இல்லை.உண்மையில் என் அப்பா 1900ல் matriculation படிக்கும்போது இங்கிலீஷ் மீடியம் மட்டும் தான் இருந்ததாம்.second language தான் தமிழ்.உ.வே. சாமிநாத ஐயர்,மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை முதலானோர் அரும்பாடு பட்டு வீடு வீடாகச் சென்று ஓலைச் சுவடிகளைக் கொண்டு வந்து ஆராய்ந்து பல நூல்களைத் தொகுத்து தமிழ் உலகுக்கு அளித்தனர்..ஆனால் ஆங்கிலேயர் நம் நாட்டை வீட்டு நீங்கின பிறகும் ,ஆங்கில மோகம் நம்மை விட்ட பாடில்லை. அதற்குள் எல்லா மருத்துவ, பொறியியல் பாட புத்தகங்களும் ஆங்கிலேயரால் இந்தியாவினுள் நுழைந்து விட்டன.
  ஆங்கிலம் இயல் பாகவே adaptive language .உலகில் எந்த மொழி என்று பாராமல் எல்லா மொழிச் சொற்களையும் சற்று திரித்து ஆங்கில அகராதியில் நுழைத்துக் கொண்டார்கள்.இன்னும் நமக்குள் சில வார்த்தை வட மொழியா, தமிழ்ச் சொல்லா என்ற விவாதம் நீடிப்பதற்குள் ஆங்கிலச் சொல் தலை நீட்டி சண்டையைத் தவிர்த்துவிடும்.இந்த அனுசணை தான் ஆங்கிலத்தை வேரூன்றச் செய்து விட்டது.
  மகாத்மா காந்தியின் தாய் மொழி பிரச்சாரம், பல அறிஞர்களின் தொழில் கல்வி, ஆதாரக் கல்வித் திட்டம் முதலியன செவிடன் காதில் ஊதின சங்காகின ..
  ஆங்கிலேயரின் இரட்டை வேடம் , அவர்களது பிரித்தாளும் கொள்கைக்கு அடிமையானோம்.
  மனிதன் இது மாதிரி சூழ் நிலைக்கு ஆளாகும்போது வயிற்றுப் ப்பாடு தான் பெரிதாகத் தோன்றும்.இது மனித இயல்பு.
  சுதந்திரம் அடைந்த பிறகும் கொள்கையே இல்லாத அரசியல் வாதிகளிடம் அகப்பட்டு விழிக்கிறோம். .70 வருடங்களில் விஷக் கிருமி வேரூன்றி புற்று நோயாகப் பரிணமித்து விட்டது.Awareness எனும் radiation ம், பெற்றோர்கள் தமிழில் பேசக் கற்றுக் கொடுக்கும் நிலை எனும் chemotherapy யும் தேவைப்படும் பரிதாப நிலை.தானே கனிய வேண்டிய பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்க முயற்சிக்கும் கோரக் காட்சி.
  தாய்ப் பாலும், தாய் மொழியும் இயல்பாக கிடைத்த வரமல்லவா?நம் வீட்டு சொத்துக்களைத் தொலைத்து வீட்டு ஊரான் வீ ட்டை அண்டிப் பிழைக்கும் நிலை/இதற்குக் காரணம் இந்நாளைய பெற்றோர் மட்டும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் மை அறியாமல் புரையோடிப் போன ரணம்.
  நாள் பட்டுப் போன ரணம் ஆறுவது கடினம். அளவு கடந்த பொறுமையும் நீண்ட வருட மருத்துவமும் தேவை.எப்படி சில வியாதிகளுக்கு அல்லோபதி, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இறையுணர்வு ,மனோ மருத்துவம் என்று பல மருத்துவ முறை தேவைப் படுகிறதோ அதேபோல் பெற்றோர், குழந்தைகள், பாட திட்டம், கல்வி முறை, அரசாங்க திட்டங்கள், சமூக ஆய்வாளர்கள், மனோ தத்துவ நிபுணர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சி, அதனால் உருவாகும் தொலை நோக்குத் திட்டங்கள் மட்டுமே பயனளிக்கும் .தமிழ் ஒரு சனாதன மொழி. அது அழிந்து விடும் என்று கவலைப் படாமல் நம்பிக்கையுடன் பன்முனை போராட்டம் தொடங்க வேண்டும், அதுவும் சாத்வீக முறையில்.
  போராட்டம் வெற்றி பெரும்.
  போராடுவோம், போராடு வோம். வெற்றி பெறும் வரை போராடுவோம்.

  ஜயசாலா 42
   
  Harini73, krishnaamma and vaidehi71 like this.
 4. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,752
  Likes Received:
  4,173
  Trophy Points:
  355
  Gender:
  Female
  ம்ம், வருத்தமான நிஜம் ஹரிணி :(
   
 5. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,752
  Likes Received:
  4,173
  Trophy Points:
  355
  Gender:
  Female
  ரொம்ப சந்தோஷம் பாக்யா, ஊர்கூடித்தான் தேரை இழுக்கணும் :) .ம்ம்.. முதலில் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும், பிறகு பழகிவிடும் :)
   
 6. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,752
  Likes Received:
  4,173
  Trophy Points:
  355
  Gender:
  Female
  நீங்கள் கொடுத்துள்ள லிங்க் ஐ பார்க்கிறேன் ஜெயா மா :)........லிங்க் க்கு மிக்க நன்றி.பார்த்து விட்டு பதில் போடுகிறேன் !
   
 7. PavithraS

  PavithraS Platinum IL'ite

  Messages:
  2,045
  Likes Received:
  4,122
  Trophy Points:
  290
  Gender:
  Female
  @suryakala
  அம்மையீர்,

  அருமையான வினாக்களை எழுப்பியுள்ளீர்கள் ! என் மனத்திருக்கும் ஐயங்களைத் தாங்கள் எழுத்துருவில் பதிந்து விட்டீர்கள். மிக்க நன்றி. உங்களின் வினாக்கள் எழுப்பிய என் மனத்தாங்கலையே இங்கு நான் பதிவிடுகிறேன். பதிலைத் தேடுகிறேன் , எல்லோரையும் போலவே .

  " டாக்டர் உ.வே.சா, தெ.பொ.மீ, சிலம்புச் செல்வர்,மு.வ, திரு.வி.க, மறைமலையடிகளார், வ.சு.ப,பாரதியார்,பாரதி தாசனர், ந.மு.வே நாட்டார், நாமக்கல்லார் போன்றவர்கட்கு இணையாக
  இன்று ஒரு தமிழறிஞரும் இல்லையே, ஏன்?. "
  அடுக்குத்தொடர் வசனம் பேசும் அரசியல்வாதிகளெல்லாம் தன்னைத் தமிழறிஞர் என்றும், முத்தமிழ் வித்தகர் என்றும் அடிவருடிகளை விட்டுப் புகழச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் போலியான பகட்டுச் சூழலில் தான் இன்றைய தமிழகம் உள்ளது இதில் எங்கிருந்து உண்மையான தமிழறிஞர்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளப் போகிறார்கள் ? ஆயாசமாய் உள்ளது..

  " தமழில் தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருகின்றனவா?
  -இருக்கும் தமிழ்ச்சுவடிகளைப் பாதுகாக்கின்றோமா?"
  தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தால் மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அறிவார்ந்த நோக்குடன், பிள்ளைகளை வேற்று மொழித் தேர்வெழுதத் தூண்டும் பெற்றோரும், பள்ளிகளும் பெருகிவிட்டக் காலத்தில்,ஆராய்ச்சியாவது , கட்டுரையாவது ? கொலைவெறியைத் தூண்டும், திரைப்படப் பாடல்களே இன்றைய தலைமுறையினரின் இலக்கிய ரசனையின் அளவுகோல். அப்படியிருக்கையில், நல்ல தமிழ் இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பைப் பற்றி யாருக்குக் கவலை ?


  " இன்றையத் தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர்களின் தரம் எவ்வாறு உள்ளது?
  " கேள்விக்குறியாக உள்ளது. காரணம் நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா ??!!

  "இலங்கையிலிருக்கும் நால்வகைத் தமிழர்களை நாம் தமிழருடன் இணைக்க,தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்க என்னசெய்ய வேண்டும்?" -- முதலில் அவர்களின் உயிரைக் காப்பாற்ற நாம் என்ன செய்தோம், அரசுதான் என்ன செய்தது ? இதைப் பற்றி நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.

  -"தமிழ் உலகத்தின் தொழில் நுட்ப, ஊடக வளர்ச்சிக்குத்தகுந்தவாறு தன்னையும் புதுமை படுத்தியுள்ளதா?" "வள்ளுவர் விழா, கம்பன் விழா, பாரதி விழா, தமிழ் இலக்கியப்பட்டி மன்றங்கள் யாவும் எங்கே போய் விட்டன?" - இந்தத் தமிழறிஞர்களைப் பற்றி நன்றாக ஆராய்ந்து அறிந்து, அவர்களின் இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் ஒன்று மறைந்து விட்டார்கள், இல்லையேல் மறக்கடிக்கப் பட்டார்கள் . முன்பெல்லாம் மக்கள் தொலைகாட்சி முன் தங்கள் நேரத்தை வீணடிக்காமல் அறிவார்ந்த முறைகளில் தங்கள் நேரத்தைச் செலவிடுவார்கள், மகிழ்ச்சியும் பெறுவார்கள். அவ்வாறான ஒரு பொழுதுபோக்காய் உள்ளூர் தமிழ் மன்றங்கள் ஏற்பாடு செய்யும் தமிழ்மொழி வளர்ச்சி நிகழ்சிகளில் குடும்பமாகப் பங்கெடுப்பார்கள்.

  காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அப்படியிருக்கையில் , அவற்றுக்கும் மொழித்தொண்டாற்றவேண்டிய கடமையும், வாய்ப்பும் இருக்கின்றது. அதை அவை சரிவரச் செய்கின்றனவா என்றால் அதுவும் கேள்விக்குறியே !


  அரசுத் தொலைக்காட்சி மட்டும் இயங்கிக் கொண்டிருக்கையில் கூட அவ்வகை அறிவுக்குத் தீனி போடும் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், இலக்கியக் கூட்டங்களின் நேரடி அல்லது, தொகுக்கப்பட்டக் காட்சிகளை ஒளிபரப்பி ஓரளவுக்குத் தமிழ்த்தொண்டாற்றினார்கள்.

  ஆனால் இந்தத் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் அதிகரித்தப்பின், எல்லாமே கவர்ச்சி ,விளம்பரமயமாகி விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. அவற்றின் மேலாண்மையாளர்களின் முக்கியக் குறிக்கோளே, தாங்கள் எதை ஒளிபரப்பினாலும் மக்கள் பார்க்கவேண்டுமென்ற நிலைக்குத் தள்ளுவதே போலும். காண்பவர் உள்ளங்களில் விரசங்களை அதிகரிக்கும் , பண்பாடற்ற நிகழ்சிகளையேத் திரும்பத் திரும்ப வெவ்வேறு பெயர்களில், வடிவங்களில் ஒளிபரப்புகிறார்கள்.

  தேசிய விடுமுறை நாட்களோ, அல்லது பண்டிகை நாட்களோ, விழாக் காலங்களோ, எந்தக் கட்சியின் தொலைக்காட்சி அலைவரிசையிலும், நாட்டிற்கும் வீட்டிற்கும் மிக முக்கியமான நடிப்புத் துறையினர் ,( இங்கே நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. அவர்கள் வெறும் விளம்பரப் பொருட்களே) தமது அசாதாரண சாதனைகளைப் பற்றி "அலகுத் தமிளில்" பேசும் அதிமேதாவி தொகுப்பாளர்களுடன் கலந்துரையாடும் காட்சிகள் தான் அதிகம். அவற்றோடு, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாகத் திரையிடப்படும் அதி அற்புதமான மாபெரும் திரைக்காவியங்களின் அணிவகுப்பு. இதைவிட அழகு, யதார்த்தமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு " உங்கள் வீட்டில் அதிகாரம் செய்பவர் மனைவியா ? மாமியாரா ? " என்ற ரீதியில் ஏற்கனவே ஒத்திகை செய்யப்பட்ட சலிப்பூட்டும் பட்டிமன்றங்கள் என்று எந்தத் தரமுமில்லாத நிகழ்சிகளையே வழங்கி மக்களை சிந்திக்க முடியாத நிலையிலேயே வைத்திருப்பதில் வெற்றியும் காண்கிறார்கள்.அச்சு ஊடகங்களும், சில விதிவிலக்குகள் நீங்கலாக, இத்தகு விளம்பரக் கவர்ச்சி மூலம் தங்கள் வியாபார நோக்கத்துடனே செயலாற்றுகின்றன . இதில் எங்கிருந்து மொழித் தொண்டாற்றுவது ?

  சிந்தனைத் திறமிழந்த மக்களால் எப்படித் தங்கள் மொழியையும், அது கற்றுக்கொடுத்தப் பண்பாட்டையும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும் ? மீண்டும் ஒரு கேள்விக்குறி .

  "பற்பலவிதமான துறைகளைக்கொண்டுள்ள தமிழக அரசு, தமிழ்த்துறை என்றும்தமிழ்துறை அமைச்சர் என்றும் நியமித்துகுறிக்கோளை வரையறுத்து, நிதி ஒதுப்புச செய்திருக்கின்றனரா? " --நியாயமான கேள்வி. குடிகாரர்களை ஊக்குவித்து, பல குடும்பங்களை அழித்து, இலவசங்கள் அளிக்கவே மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் அரசு, அல்லது செம்மொழி மாநாடென்ற பெயரில், தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டு, அதிலும் காசு பார்க்கும் அரசு இப்படிப்பட்ட அரசாட்சியினரிடமிருந்து நாம் எவ்வாறு இவற்றை எதிர்பார்க்கவியலும் ?

  என்னால் முடிந்தது என் மகனுக்கு நம் தாய்மொழியைக் கற்றுத் தருவதே. அவன் வளர்ந்த பிறகு மேலும் ஆர்வத்தைத் தானாக வளர்த்துக் கொண்டு , நம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுப்பானேயானால், அவனைப் பெற்றவளாகவும், தமிழைத் தாய்மொழியாகப் பெற்றவளாகவும் மிக்க மகிழ்வுறுவேன் .

  தங்களது தமிழாற்றல் அனைவரும் அறிந்ததே ,தவறாக என்ன வேண்டாம் , சரியான தகவல் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரிய வேண்டும் என்கின்ற எண்ணத்தினால் கேட்கத் தோன்றியது , தமிழ்த் தாய் வாழ்த்து இயற்றியவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அல்லவோ ?

  என் சிந்தனையைத் தூண்டியமைக்கு மிக்க நன்றி !

  என்றும் அன்புடன்,

  பவித்ரா
   
  bhagya85, coolmum, kaniths and 3 others like this.
 8. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,752
  Likes Received:
  4,173
  Trophy Points:
  355
  Gender:
  Female
  ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்கள் பதிவைப் படிக்க...........இதத்தான் நான் எதிர் பார்த்தேன், நான் எழுதிய கட்டுரையால் ஒருவர் ..........., ஒரே ஒருவர் தன்னுடைய இப்போதைய நிலை இல் இருந்து கொஞ்சம் மாறி , நம் தாய்மொழியாம் இனிய தமிழில் இல் தங்களின் செயல் பாட்டை அதிகரித்தாலும், அது எனக்கு வெற்றி என்றே நினைத்தேன்..............இப்போ பார்த்தால், உங்களுடையதும் சேர்த்து நிறைய பேர் அழகாய் தமிழில் பதிவுகள் போடுகிறார்கள்..............நீங்கள் கண்டிப்பாக தமிழில் எழுதப்போவதாக சொல்கிறீகள்.......எனக்கு...... .என்னசொல்வது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு இனியா:)............ flower-basket-smiley-emoticon.gif
   
  coolmum, Harini73 and IniyaaSri like this.
 9. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,752
  Likes Received:
  4,173
  Trophy Points:
  355
  Gender:
  Female
  நிஜம் ஹரிணி, நான் எங்காத்திலேயே பார்க்கிறேனே, மேலே என் பதிவை படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...........பெங்களூரில் எங்களுடன் இருக்கும் நிறைய தமிழ் குடும்பங்களிலும், குழந்தைகள் தமிழில் பேசுவது இல்லை.....பார்க்கும்போது வருத்தம் மேலிடுகிறது :(
   
  Harini73 likes this.
 10. krishnaamma

  krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  9,752
  Likes Received:
  4,173
  Trophy Points:
  355
  Gender:
  Female
  நீங்கள் எழுப்பிய வினாக்களில் சிலது எனக்குள்ளும் எழுத்தால் விளைந்த கட்டுரை தான் இது கலா :).........என்னுடைய ஆற்றாமையும் , குறைந்த பட்சம் என்னால் முடிந்ததை நான் செய்யவேண்டும் என்றும் தோன்றியதால் தான் எழுதினேன்.....உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி...நீங்கள் போட்ட கவிதையை படித்ததும் எனக்கு கொஞ்சம் மனம் நிம்மதி அடைந்தது............:) [​IMG][​IMG]
   

Share This Page