1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    விரல்களின் கதை உங்கள் கற்பனையில் நன்றாக உள்ளது . ரசித்தேன் :thumbsup:
     
  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    விரல்களின் கதை உங்கள் கற்பனையில் நன்றாக உள்ளது . ரசித்தேன் :thumbsup:
     
    krishnaamma likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Uma :)
     
    uma1966 likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அடுத்தது ஆள்காட்டி விரல் சொல்ல ஆரம்பித்தது....அது தன்னுடைய அருமை பெருமைகளைப் பட்டியல் இட்டதாம் [​IMG]

    1. எதிரில் இருப்பவர்களை அல்லது பொருட்களை சுட்டிக் காட்டுவதால் எனக்கு இந்த பெயர் வந்தது. அதாவது சுட்டு விரல் அல்லது ஆள் காட்டி விரல் என்று.

    2. எதையாவது ருசித்து பார்ப்பதானாலும் என்னுடைய உதவி தான் மனிதனுக்குத்தேவை.

    3. பலவிதங்களில் ஜாடையாக பேசவும் என்னை உபயோகிக்கிறார்கள்.......அதாவது .............[​IMG][​IMG][​IMG]வேண்டாம் என்று சொல்வதற்கும், அருகே வா தூரப் போ என்று சொவதற்கும், உதைவிழும் என்று சொல்வதற்கும் இதுபோல பல சைகைகள் செய்வதற்கு நானே பயன் படுகிறேன்.

    4. ஒன்று என்கிற எண்ணிக்கையையும் நானே காட்டுவேன் .

    5. நான், என்னை, எனக்கு என்று சொல்லுவதற்கு கூட நான் தான் பயன்படுவேன் என்றதாம்.

    எனவே, நான் தான் பெரியவன் என்று சொன்னதாம்.
     
    uma1966 likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அடுத்தது நடுவிரல் ஆரம்பித்ததாம்..............

    "நான்தான் நடு நாயகமாய் இருக்கிறேன், இதிலிருந்தே தெரியவில்லையா நான் தான் பெரியவன் என்று. உயரத்திலும் சரி, இரண்டு பக்கமும் இரண்டு இரண்டு விரல்கள் புடைசூழ்ந்து இருப்பதிலும் சரி எப்படிப் பார்த்தாலும் நானே பெரியவன் " என்று சொல்லியதாம்.

    இதைக்கேட்டதும் எல்லா விரல்களும் , உயரம் ஒன்று மட்டும் போறுமா பெரியவன் என்று சொல்ல? என்று கேட்டு சிரித்ததாம்.

    அடுத்து மோதிரவிரல் ஒய்யாரமாய் வந்ததாம்.

    "நீங்க யார் வேணா என்ன வேணா சொல்லுங்கள், மனிதன் எனக்கு மட்டுமே ஆபரணம் போட்டு அழகு பார்க்கிறான்......எனவே இது ஒன்றே போரும் நான் தான் பெரியவன் , பெருமை உடையவன் என்று புரிய என்றதாம்.

    கல்யாணம் என்றாலே என் விரலில் தானே மோதிரம் அணிவித்து அதை பிரகடனப் படுத்துகிறார்கள் ?......

    மேலும், பெரியவர்கள் என் விரலில் மோதிரம் அணிந்து, அந்தக் கையால் குட்டு வாங்கினாலும் பெருமை என்று பேசுகிறார்களே , நீங்கள் கேட்டது இல்லையா? " என்றதாம்.

    இப்படி 4 விரல்களும் பேசி முடித்தும் கூட ஒன்றும் பேசாமல் இருந்த சின்ன சுண்டுவிரலைப் பார்த்து ,

    ' இவன் பாவம்டா, இவன் உபயோகம் தான் எல்லோருக்கும் தெரியுமே...........[​IMG] [​IMG] [​IMG].என்று கூறி சிரித்ததுகளாம் .

    இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கேளுங்கள் சுண்டிவிரல் எதற்கு பயன் படுகிறது என்று?......கண்டிப்பாக அவர்கள் சிரித்துக்கொண்டே சொல்வார்கள் [​IMG]

    தொடரும்............
     
    uma1966 likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என்ன , உங்களுக்கு புரிந்ததா இல்லையா? [​IMG]

    குழந்தைகள் எல்லோருமே 'one பாத்ரூம்' போகணும் என்றல் குட்டி விரலைத்தானே காட்டுவார்கள்?.அதை குறித்துத்தான் மற்றவிரல்கள் அதை கலாட்டா செய்தன......... வேறு என்ன உபயோகம் இருக்கு இவனுக்கு என்று பாவம் அதை கலாட்டா செய்ததுகள்.

    ஆனால், சுண்டுவிரல் கொஞ்சமும் கவலைப் படாமல் பேச ஆரம்பித்ததாம். 'நீங்க எல்லாம் அவங்க அவங்க பெருமையை சொல்லிவிட்டீங்க இப்போ நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க. எப்பவுமே நான் தான் பெரியவன் என்று நாமே நம்மை சொல்லக் கூடாது , மத்தவங்க தான் நம்மைத் தலைவனாய் எற்றுக் கொல்லனும். அதுக்கு தகுந்தற்போல நாம் நடக்கணும். '

    'என்றாலும், நீங்க எல்லோரும் சொன்னது போல நான் ஒன்றும் அந்த ஒரே உபயோகத்துக்கு மட்டுமே இல்லை, உங்கள் எல்லோரையும் விட ஒரு உயர்ந்த இடத்தில் நான் இருக்கேன்'.............என்று கொஞ்சம் நிறுத்தியதாம்............எல்லா விரல்களுக்கும் இதன் பேச்சு ஆச்சர்யத்தை தந்ததாம். 'இது இருக்கும் இடமே தெரியாது, இது எப்படி பேசறது பாரேன் ' என்று ஆச்சரியப்பட்டதுகளாம்.

    தொடரும்..............
     
    uma1966 likes this.
  7. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அப்படி சுண்டு விரல் என்ன சொன்னுச்சு Aunty. Suspense வெச்சுட்டேளே இப்படி.
    என்ன சொல்லி இருக்கும் :thinking:
     
    krishnaamma and uma1966 like this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சுண்டுவிரல் ஒரு பிரசங்கமே பண்ணிவிட்டதாம்............ பெருமாளை சேவிக்கும் போது , அதாவது கைகளை குவித்து கும்பிடும்போது, நான் தானே ஸ்வாமிக்கு வெகு அருகில் இருக்கேன், பெருமாளை நல்லா தரிசனம் செய்கிறேன், அதுவும் குட்டியாக யாருக்கும் மறைக்காமல்............ தன் பின்னே இருக்கும் மத்த இரண்டு விரல்களுக்கு தரிசனம் தராமல் மறைத்துக்கொண்டு நான் நடு விரல் போல இல்லையே?....... சுட்டு விரல் மற்றும் கட்டை விரல்களுக்கு பெருமாளை சேவிக்கும் அந்த பாக்கியமே இல்லையே............,இதை வைத்து பார்க்கும்போது என்று இழுத்ததாம்..........போச்சுடா இது தான் தான் பெரியவன் என்று சொல்லப்போகிறது என்று மத்த விரல்கள் நினைக்கும் நேரத்தில்.........அது அப்படி சொல்லாமல் இவர்கள் நால்வரும் ஆச்சர்யப் படும் அளவுக்கு மேலும் பேசியதாம்.

    கைவிரல்களை உள்ளங்கையை நோக்கி மடக்கிப் பாருங்கள், நாம் நால்வரும் கட்டை விரலைத் தவிர்த்து, [​IMG] சமமாய் இருப்பதை பார்க்கலாம்............. அப்போ நாம் நால்வரும் சமம் என்றால் , மீதி இருப்பது கட்டைவிரல் தானே.அப்போ அது தான் நமக்குத்தலைவன் இல்லையா?.என்று கேட்டு கொஞ்சம் நிறுத்தியதாம்...........

    மேலும் நாம் நால்வரும் மடங்கி இருக்கும் போது உயர்ந்துநிற்கும் கட்டைவிரலைப் பாருங்கள், அது தானே நம் வெற்றிக்கு அறிகுறி? ...........என்றதாம்

    கட்டைவிரலே தன்னைப் பற்றி சொன்னதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்......."நீங்க நாலுபேரும் சேர்ந்து ஒரு வேலை செய்யும்போது நான் ஒரே ஆளாய் எதிர்புறம் நின்று அதே வேலையை செய்ய ஒத்துழைப்பு கொடுக்கிறேன்... இது ஒன்றே போராதா நான் தான் பெரியவன், பலசாலி , திறமையானவன் என்று ஒப்புக்கொள்ள ?" என்று கேட்டது சரிதானே? என்று கேட்டு புன்னகை செய்தது.

    அடாடா, இத்துனூண்டு ஒரு ஓரமாய் இருக்கு என்று நாம நினைத்தோமே எவ்வளவு சரியாக சொல்கிறது என்று மத்த 3 விரல்களும் யோசிக்கும் வேளை இல், "என்ன இன்னும் அவரைத் தலைவராய் ஏற்க்க மனம் இல்லையா உங்களுக்கு ?......சரி போகட்டும், அவரே அவரை முன் மொழிந்து கொண்டார், இப்போ நான் அவரை வழி மொழிகிறேன்.எனவே, அவருக்கு 2 ஒட்டு கிடைத்து விட்டது...........உங்கள் எல்லோருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு ஒட்டுதானே.அதனால் கட்டைவிரல் தான் ஜெயித்தது ".என்றதாம் சுண்டுவிரல்.............

    அப்போதுதான் 'சட்' என்று சுதாதரித்துக் கொண்ட மற்ற விரல்கள், "இல்லை இல்லை, சந்தேகமே இல்லை, கட்டைவிரல் தான் நமக்கு ராஜா"........என்று சந்தோஷமாய் ஒப்புக்கொண்டனவாம்................ [​IMG][​IMG]

    அதற்கு அப்புறம் அவைகள் சண்டையே போடலையாம் :)

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா ;)

    @Rith , @uma1966 ,@sreeram
     
    Last edited: Apr 12, 2016
    uma1966 and rgsrinivasan like this.
  9. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    .மா.. இப்பொழுது தான் படித்தேன். விரல்களை பற்றி ஆராய்ந்து உங்கள் கற்பனையில் அழகான பூக்களை மாலையாக தொடுத்தது போல் சொல்லி உள்ளீர்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் இந்த கதையை .... நானும் ரசித்தேன் ..... அருமை :clap2::thumbup:
     
    krishnaamma likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அது சொன்னதை போட்டுவிட்டேன் :) @Rith
     

Share This Page