1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாகம் எடுத்தது

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Apr 15, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,771
    Likes Received:
    12,604
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: தாகம் எடுத்தது :hello:

    ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!

    சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!

    காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...
    கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்.....

    அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!

    உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!

    உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
    ஒருவர் சந்திரன் !
    ஒருவர் சூரியன் !
    இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!

    சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!

    உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்!
    ஒன்று செல்வம்!
    இரண்டு இளமை!
    இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!

    சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....

    உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...!
    ஒன்று பூமி !
    எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
    மற்றொன்று மரம் !
    யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!

    சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்!

    அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்...
    ஒன்று முடி!
    மற்றொன்று நகம் !
    இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
    பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....

    தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்!

    உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்!

    ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன்
    மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன்! என்றாள்! ...

    காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்!

    உடனே அந்த பெண் மகனே... எழுந்திரு... என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்!

    சாட்சாத் சரஸ்வதி தேவி யே அவர் முன் நின்றாள்!
    காளிதாசர் கைகூப்பி வணங்கியதும்,
    தேவி தாசரைப் பார்த்து... காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!

    "நீ மனிதனாகவே இரு" என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்...!

    இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத் தரவேண்டும்!

    பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், கைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையென வாழ்க்கையை இயந்திர மயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!

    நீ நீயாகவே "மனிதனாகவே இரு" , வாழ்க வளமுடன் மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்.......

    படித்ததில் பிடித்தது
     
    Tubinbataye likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,771
    Likes Received:
    12,604
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:@Tubinbataye
    “Without telling me” why you like it - thanks for awarding a LIKE.
     
    Last edited: May 10, 2021

Share This Page