1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தலைக்கு மேல் பாரம்

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Oct 5, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நான் இருப்பது நங்கநல்லூர். நங்க நல்லுருக்கும் திரிசூலம் மலைகளுக்கும் இடையே சில மலைகள் மீனம்பாக்கம் பின்னால் பல்லாவரம் வரை தொடர்ந்து நிறைய அப்போதெல்லாம் காணப்பட்டது.


    ராவும் பகலும் வெடி வைத்து உடைத்து நிறைய மலைகள் பெரும் பாதாலங்கலாக போய் விட்டது. அப்போதெல்லாம் தினமும் வெடி சத்தம் பீரங்கி போல் சப்தம் செய்யும். லாரிகள் பேய்த்தனமாக கருங்கல் பாறை உடைத்த ஜல்லிகளை சுமந்து குறுக்கும் நெடுக்கும் ஓடும். மோசமான தெருக்களில் அவை போகும்போது கல் சிதறி மண்டையில் விழும்.
    நம் கதையில் வரும் ஒரு ஊர் அது போலவே என்று கொள்ளலாம். அந்த ஊரின் பெயரே கல்லுடைச்சான் பட்டி கத்திரி வெய்யில் பட்டையை களப்பிகொண்டிருக்கும் வேளை. குப்பனுக்கு கைவந்த கலை கல் தூக்கும் வேலை!!!.


    அதில் வரும் கூலியில் அவன் குடும்பம் வயிறு கழுவியது. இதே வேலை தான்என்றும்என்றபோதும் அன்று என்னவோ அவன் சுமையை தூக்கியபோது ரொம்ப களைத்து விட்டான்.ஒருகட்டிடத்தின் நிழலில் தூக்கி வந்த கல்லை கீழே வைத்து இளைப்பாறினான்.


    "கடவுளே, என்னால் தூக்கவே முடியவில்லையே. ரொம்ப கனமான
    சுமையாக இருக்கிறதே" என்று பிரார்த்தித்தான்.
    "கடவுளின் குரல் கேட்டது --
    "அப்பனே, இந்த சுமை ரொம்ப கனமாக இருந்தால் நீ இந்த கட்டிடத்தின் உள்ளே சென்று உன் சுமையை இறக்கிவிட்டு அதோ எதிரில்
    தெரியும் கதவை திறந்து பார். அங்கு இதே போன்று நிறைய கல் இருக்கிறது சிறியதாக ஏதாவதொன்றை எடுத்து கொண்டு போ. "


    அவ்வாறே செய்தான் குப்பன். முதல் அறையில் தன்னுடைய கல்லை இறக்கி வைத்து விட்டு அடுத்த அறையின் உள்ளே சென்று அங்கு
    நிறைய கற்கள் அடுக்கி வைத்திருந்ததை பார்த்தான். அங்கு இங்கு
    எல்லாம் தேடி கடைசியில் கனம் கொஞ்சமாக இருப்பதாக தோன்றிய
    ஒரு கல்லை எடுத்துகொண்டான்.


    "கடவுளே!! உனக்கு நன்றி, இதோ இந்த கல் கொஞ்சம் சிறியதாகவும்
    வெயிட் குறைந்ததாகவும் உள்ளது இதை எடுத்து செல்கிறேன்''
    கடவுள் சிரிக்கும் சப்தம் கேட்டது குப்பனுக்கு.
    “கடவுளே! நீ ஏன் சிரிக்கிறாய்?”
    "அப்பா, குப்பா, நீ செலக்ட் பண்ணிய கல் நீ கொண்டு வந்ததே தான்" என்று கடவுள் குரல் கேட்டது.


    நீதி:
    நமக்கு நம்முடைய கஷ்டங்கள் மலையாக தோன்றும்போது மற்றவர்கள் படும் அவஸ்தைகளையும் எண்ணற்ற துன்பங்களையும் நோக்கினால் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பது புரியும்.
    நம்முடைய துன்பம் கொசுவாகிவிடும்.
    (படித்ததில் பிடித்தது )
     
    Loading...

  2. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    yes, any line becomes smaller, when a bigger line is drawn parallel to it!

    pranams.

    (i write pranams to all the elderly people, because my mother habituated me in doing so.
    it is a "koduppinai" to be blessed by elders
    and to bless the youngsters)
     
    1 person likes this.

Share This Page