1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தம்பி அவன் தங்க கம்பி- இறுதி பாகம்

Discussion in 'Stories in Regional Languages' started by Ilamuriyan, Sep 14, 2012.

  1. Ilamuriyan

    Ilamuriyan Silver IL'ite

    Messages:
    102
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Male


    மாணிக்கம் தொடர்ந்தார் " வருடங்கள் உருண்டோடின. குமரேசனுக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரகமாக நடை பெற்று மற்ற இளைஞ்ர்களைப் போல கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று தன்னுடன் வேலை பார்த்த தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு உடனேயே இந்தியாவுக்கு வந்தான்".

    கதிரேசன் இடை மறித்து " இந்த முறை உங்களை அடையாளம் கண்டு கொண்டானா? எங்களை வந்து பார்க்கும் எண்ணம் தோன்றியது எப்படி?" என்று கேட்டார்.

    " அமெரிக்காவில் குமரேசன் பூரண குணம் அடைந்த பிறகு ஒரு நாள் சேகர் அவனிடம் அவனுடைய பிறப்பு வளர்ப்பு விவரங்களோடு என்னைப் பற்றியும், குருவம்மா, செட்டியார் இவர்களைப் பற்றி கூறவும் குமரேசனுக்கு எங்களை பார்க்கும் ஆவல் அதிகரித்திரிக்கிறது. மதுரை வந்தவுடன் முதலில் என்னை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார். அமெரிக்காவில் உள்ள ஒரு ஐடி கம்பெனி இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் ஒரு கிளையை துவக்கி குமரேசனை அதன் மானேஜராக நியமித்திருந்தார்கள். அந்த கம்பெனியின் அலுவலகம் மற்றும் தொழிற்சாலை இவற்றிற்காக நிலம் வாங்க வேண்டி இங்கு அவனியாபுரம் அருகில் உள்ள கிராமத்திற்கு என்னையும் அழைத்து சென்றார் குமரேசன். அங்கு அந்த நிலத்தை கண்காணிப்பவர் வீட்டிற்கு சென்றோம். அது உங்களுடைய மாமா வீடு. அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப் படத்தில் நீங்களும் குமரேசனும் சின்ன வயசில் இருந்த படத்தை பார்த்தோம். குமரேசன் குணமாகி வளர்ந்து பெரிய மானேஜராக வந்ததைப் பார்த்து உங்க மாமா ஆனந்த கண்ணீர் விட்டார். அவரிடமிருந்து தான் உங்களுடைய ஆரப்பாளையம் வீட்டு விலாசத்தை அறிந்தோம். மீதி நடந்தவை உங்களுக்கு தெரியுமே" என்று சொல்லி முடித்தார்.

    கதிரேசன் " என் தம்பியை காப்பாற்றி அவன் குணமடந்து நல் வாழ்க்கை வாழ காரணமாக இருந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை" என்றார். தெய்வனாயகி சிரித்துக் கொண்டே " மதுரையில் இன்று ஒரு பெரிய திருவிழா. அதில் நாம் எல்லோரும் கலந்துகொள்வோமா?".

    " என்ன திருவிழா அண்ணி?" என்று கேட்ட குமரேசனிடம் " புட்டுத் திருவிழா" என்று அவர் பதிலளிக்க அனைவரும் சிரித்தனர்.

    முடிவுற்றது

    முடிவுரை:​


    இந்த கதை எனது உறவினரின் பையன் பற்றிய உண்மைக் கதை. மூளை வளர்ச்சி குன்றிய அவன் காணாமல் போனது அவ்ர்களது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி. காவல் நிலையத்தில் பதிந்து வைத்தும் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுத்தும் பையன் இன்று வரை கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் குறிப்பாக கோவில் வாசல்களில் பிச்சை எடுப்பவர்களின் தாடிகளுக்குள் தனது காணாமல் போன பையன் ஒளிந்திருக்கிறானா என்று தேடி சோகக் கடலில் மூழ்கும் அவர்களை நினைத்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். அவர்கள் அந்த பையனை கைவிட்டு விடவில்லை. பெரிய குடும்பத்தில் பெண்களின் திருமணங்கள் பிள்ளைகளின் படிப்பு என்று அன்றாடக் கவலைகளில் அடித்துச் செல்லப்பட்டவர்களுக்கு இந்த பையனுக்கு வேண்டியிருந்த விசேட கவனிப்புக்களை செய்ய முடியாமல் போனது கொடுமை. அந்த பையனுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாத கையாலாக தனத்தை எண்ணி வெட்கி தலை குனிகிறேன்.

    அந்த பையன் குணமாகி இன்று அவர்கள் முன் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். இந்த கதை உதித்தது. கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே. இன்று உலகில் எந்த மூலையிலாவது அவன் நலமாக இருப்பான் என்று நம்புகிறேன்.

    இந்த கதையை பாராட்டி பின்னுட்டங்கள் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்​

     
    1 person likes this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ilamuriyan..
    nice story..

    unga relative oda paiyan engavadhu aarokyama irupparu..
     
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Ilamuriyan, very nice story. good narration. see all the parts of madurai through your story.
     
  4. Ilamuriyan

    Ilamuriyan Silver IL'ite

    Messages:
    102
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ungaludaiya aatharavukku mikka nanRi sakothari!
     
    1 person likes this.
  5. Ilamuriyan

    Ilamuriyan Silver IL'ite

    Messages:
    102
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ungaludaiya aatharavukku mikka nanRi sakothari!
     

Share This Page