1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி.....

    SONG: nadiganin kaadhali
    FILM : thaayillaamal naanillai
    SINGER : SPB
    MD : Shankar Ganesh
    LYRICS : Kannadasan


    கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும்
    காதல் இளவரசன் கலைத்திறனை நீ அறியாய்
    உன்னை பாட்டாலே உருக வைக்கும் இளைஞனடி
    என்னிடம் நாடகமா...நானே நடிகனடி

    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
    சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
    நடிகனின் காதலின் நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி

    ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
    கொழு கொம்பை கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
    ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
    கொழு கொம்பைக் கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
    ஹேஹே...மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
    சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ
    மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
    சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ
    ஒரு மயக்கம் வரவழைக்கும் இளம் குமரன் நானம்மா

    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
    சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி

    பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
    நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள்
    பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
    நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள்
    பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
    அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ
    பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
    அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ
    உடல் முழுக்க சுகம் பிறக்க இது வேளைதானம்மா

    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
    சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நாதமெனும் கோவிலிலே.....

    film : manmadha leelai
    singer : nAdhamenum kOvililae
    music : MSV
    lyric :

    நாதமெனும் கோவிலிலே
    ஞான விளக்கேற்றி வைத்தேன்
    ஏற்றி வைத்த விளக்கினிலே
    எண்ணெய் விட நீ கிடைத்தாய்
    நாதமெனும் கோவிலிலே

    மதநிதஸா ஸநிதம தமகரி மகரிஸா
    மகரிஸா தமகரி நிதமக மதநிஸா

    இசையும் எனக்கிசையும்
    தினம் என் மனம்தான் அதில் அசையும்
    கரமும் உந்தன் சிரமும் நீ அசைத்தாய்
    நான் இசைத்தேன்...நாதமெனும் கோவிலிலே

    விலையே எனக்கிலையே
    தினம் வெறும் கதையானது கலையே
    நிலையே சொல்லி உனையே நான் அழைத்தேன்
    உயிர் பிழைத்தேன்...நாதமெனும் கோவிலிலே

    மதநிதஸா ஸநிதம தமகரி மகரிஸா
    மகரிஸா தமகரி நிதமக மதநிஸா

    இறைவன் என ஒருவன்
    எனதிசையில் மயங்கிட வருவான்
    ரசிகன் என்ற பெயரில் இன்று அவன்தான்
    உன்னைக் கொடுத்தான்

    நாதமெனும் கோவிலிலே
    ஞான விளக்கேற்றி வைத்தேன்
    ஏற்றி வைத்த விளக்கினிலே
    எண்ணெய் விட நீ கிடைத்தாய்
    நாதமெனும் கோவிலிலே
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்

    Film : EngirundhO VandhAL
    Singer : TMS
    Lyrics : Kannadasan
    Music : MSV
    Song : Naan unnai azaikavillai


    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
    வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
    அம்மா....விவரம் புரியாதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
    உன்னை அனுப்பி வைத்தார் ஆனால் உனக்கும் கருணை இல்லை
    இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா
    இரக்கம் பிறக்காதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்....

    படம்
    : எங்கவீட்டுப்பிள்ளை
    இசை:மெல்லிசை மன்னர்.
    பாடல்:வாலி
    குரல்கள்: டி.எம்.எஸ்,சுசிலா.

    அவள் :
    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் – அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான் – அதை
    கொடுத்தாலும் வாங்கவில்லை – இந்தக்
    கன்னம் வேண்டுமென்றான்

    அவன் :
    நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன் – அவன்
    தாகம் என்று சொன்னான் – நான்
    தன்னந்தனியாய் நின்றிருந்தேன் – அவன்
    மோகம் என்று சொன்னாள் !

    அவள் :
    ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன
    மறந்தா போய் என்றான்

    அவன் :
    கொஞ்சம் பார்த்தால் என்ன எடுத்தால் என்ன
    குறைந்தா போய்விடும் என்றான்

    அவள் :
    அவன் தாலிகட்டும் முன்னாலே தொட்டாலே போதும்
    என்றே துடிதுடித்தாள்

    அவன் :
    அவள் வேலிகட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது
    என்றே கதை படிச்சான்

    அவள் :
    அவன் காதலுக்குப் பின்னாலே கல்யாணம் ஆகும்
    என்றே கையடிச்சான்

    அவன் :
    அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே
    அத்தானின் காதை கடிச்சா

    அவள் :
    அவன் பூவிருக்கும் தேனெடுக்கப் பின்னாலே வந்து
    வண்டாச் சிறகடிச்சான்

    அவள் :
    அவன் ஜோடிக்குயில் பாடுவதைச் சொல்லாமல் சொல்லி
    மெதுவா அணைச்சுக்கிட்டான் !

    அவன் :
    அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்திலே
    அழகாத் தெரிஞ்சுக்கிட்டாள் !
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாரேன் வழி பார்த்திருப்பேன்.....
    திரைப்படம்: உழைக்கும் கரங்கள்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & டி.கே.கலா

    வாரேன்...வழி பார்த்திருப்பேன்
    வந்தா...இன்னும் தந்திடுவேன்
    என்ன தருவே...என்னைத் தருவேன்
    வாரேன் வழி பார்த்திருப்பேன்
    வந்தா இன்னும் தந்திடுவேன்
    அந்தி மயங்கிடும் நேரத்திலே
    ஆத்தங்கரை ஓரத்திலே
    அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
    அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
    போகவே மனசில்ல...அப்ப இரேன்
    இருக்கவும் முடியலையே
    வாரேன் நான் வாரேன்
    போய் வாரேன் நான் வாரேன்

    வரும் தை மாதம் பார்த்து கையோடு சேர்த்து
    ஊர்கோலம் போனால் என்ன
    வரும் தை மாதம் பார்த்து கையோடு சேர்த்து
    ஊர்கோலம் போனால் என்ன
    இடை தாங்காது பாரம் நான் கொஞ்சம் தாங்கி
    உன்னோடு வந்தால் என்ன உன்னோடு வந்தால் என்ன
    செவ்வானம் பூ தூவ தென்பாங்குதான் வாழ்த்த
    கல்யாண நாள் காணும் அன்று
    பொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று
    ஊரெங்கும் பாராட்டும் இன்று

    அந்தி மயங்கிடும் நேரத்திலே
    ஆத்தங்கரை ஓரத்திலே
    அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
    அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
    வாரேன் நான் வாரேன்
    போய் வாரேன் நான் வாரேன்

    அடி இந்நேரம் உன்னைக்காணாத கண்கள்
    பூவாகி நின்றேனடி
    அடி இந்நேரம் உன்னைக்காணாத கண்கள்
    பூவாகி நின்றேனடி
    இந்த கட்டாத மாலை உன் மார்பில் சாய்ந்து
    தேனூற வந்தேனுங்க தேனூற வந்தேனுங்க
    சித்தாடை காத்தாட செவ்வாழை கூத்தாட
    கண்டாலும் என் பார்வை கொஞ்சும்
    மச்சானின் நெஞ்சோடு மை ஏந்தும் கண்ணோடு
    போராடும் என் மேனி கொஞ்சம்

    அந்தி மயங்கிடும் நேரத்திலே
    ஆத்தங்கரை ஓரத்திலே
    அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
    அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
    வாரேன்...வழி பார்த்திருப்பேன்
    வந்தா...இன்னும் தந்திடுவேன்
    வாரேன் நான் வாரேன்
    போய் வாரேன் நான் வாரேன்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு.....
    படம்: தெய்வப் பிறவி
    இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

    தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
    சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
    சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
    தானே நம்பாதது சந்தேகம்

    மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
    மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித
    மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
    மாண்புடைய மக்களை மடையராக்கும்
    வீணான யோசனைக்கே இடமாக்கும்
    வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
    விபரீத செயல்களை விளைவாக்கும்

    தன்னைத் தானே தன்னைத் தானே
    தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

    ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
    ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
    உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
    சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
    திசை மாறச் செய்து விடும்
    ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
    உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் -காதில்
    ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
    உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் - மனம்
    மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
    மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
    மனிதனை விலங்காக்கிடும்

    தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

    ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
    நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
    ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
    நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
    ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்
    ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
    ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
    ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்

    தானே தன்னைத் தானே
    தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்.......

    திரைப்படம்
    : இரும்புத் திரை
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: எஸ்.வி. வெங்கடராமன்
    பாடியோர்: பி. லீலா, டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1960

    ஓஓஓஓ ஓஓ ஆஆஆஆ ஆஆஆஆஆ

    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
    நிலைமை என்னவென்று தெரியுமா?
    நிலைமை என்னவென்று தெரியுமா?
    நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
    நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

    கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
    கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
    கவனம் என்னவென்று தெரியுமா?
    கவனம் என்னவென்று தெரியுமா?
    கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
    கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

    என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
    ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
    என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
    இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

    ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
    ஆஆஆஆ ஆஆஆஆஆ
    ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
    ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

    மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
    மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
    கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
    கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
    இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
    இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
    ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
    ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
    நிலைமை என்னவென்று தெரியுமா?
    நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
    நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

    கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
    கவனம் என்னவென்று தெரியுமா?
    கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
    கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

    படம்
    : தெய்வத்தின் தெய்வம்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: ஜி. ராமநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1962


    கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
    கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
    பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி? - கொஞ்சம்
    பேசி விட்டால் என்ன மோசமடி? - கொஞ்சம்
    பேசி விட்டால் என்ன மோசமடி?

    கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

    முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
    மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
    முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
    மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
    சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
    சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து - வாசல்
    சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு - வாசல்
    சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு

    கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

    ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
    ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
    ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
    ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
    பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன்
    பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன் - எந்த
    பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்? - எந்த
    பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்?

    கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
    கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
    பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி - கொஞ்சம்
    பேசி விட்டால் என்ன மோசமடி?
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முகத்தில் முகம் பார்க்கலாம்
    படம்: தங்கப் பதுமை
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ், விஸ்வநாதன், டி.கே. இராமமூர்த்தி
    பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
    ஆண்டு: 1959


    முகத்தில் முகம் பார்க்கலாம்
    முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
    நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
    முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
    நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
    முகத்தில் முகம் பார்க்கலாம்

    வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால் ஆ...
    வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால்
    மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என் முன்
    வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
    வளையலின் இசை கேட்கலாம்
    வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
    வளையலின் இசை கேட்கலாம் - மானே உன்

    முகத்தில் முகம் பார்க்கலாம்

    இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
    இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
    இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
    இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன்
    எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
    அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
    அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
    ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
    ஆயிரம் உருவாக்கலாம்

    இளமை பொங்கும் அங்கம் சிந்தும் - அழகில்
    தங்கம் மங்கும் நிலையில் - நின்று
    தன்னை மறந்து எண்ணம் கலந்து
    வண்ணத் தோகை மயிலென்னச் சோலைதனில்
    பொழுதெலாம் மகிழலாம்
    கலையெலாம் பழகலாம் சதங்கையது
    குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்

    முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
    நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
    முகத்தில் முகம் பார்க்கலாம்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
    படம்: உத்தரவின்றி உள்ளே வா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை. எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

    ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹாஹ ஹா ஆஹாஹா ஆ...

    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
    காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?
    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
    காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?

    கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
    ம்ம்ம் ஆஹாஹா ஆஆஆ
    கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
    நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி
    மங்கல மங்கையின் மேனியும் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ?
    ஆ..ஆ.. ஆஆஆ ஆஆஆ

    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
    காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

    ஆஹாஹா ஆஹாஹா ஹா ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆஆஆ

    காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
    வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது
    வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக
    ஆஆ.ஆஆ. ஆஆஆ ஆஆஆ

    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
    காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

    பூமாலை நீ தந்து சீராட்டினாய் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
    பாமாலை பல கோடி பாராட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன்
    பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்
    ஆஆஆ ஆ... ஆஆஆ ஆஆஆ

    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
    காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
     

Share This Page