1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: வல்லவன் ஒருவன்
    இசை: வேதா
    பாடியவர்: Lr ஈஸ்வரி
    வரிகள்: கண்ணதாசன்


    பளிங்குனால் ஒரு மாளிகை
    பருவத்தால் மணி மண்டபம்
    உயரத்தில் ஒரு கோபுரம்
    உன்னை அழைக்குது வா...
    (பளிங்குனால்..)

    இருப்பதோ ஒரு நாடக மேடை
    இரவு நேரத்து மல்லிகை வாடை
    (இருப்பதோ..)
    திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
    தேடி எடுத்தால் ஆனந்த உறவு
    உறவு.. உறவு..
    உறவு.. உறவு..
    (பளிங்குனால்..)

    நாளை வருவது யாருக்கு தெரியும்
    நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
    (நாளை..)
    காலை பொழுது ஊருக்கு விடியும்
    கன்னி நினைக்கும் காரியம் முடியும்
    முடியும்.. முடியும்..
    முடியும்.. முடியும்..
    (பளிங்குனால்..)
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: திருவிளையாடல்
    இசை: Kv மகாதேவன்
    பாடியவர்: Tm சௌந்தர்ராஜன்
    வரிகள்: கண்ணதாசன்

    ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

    பாட்டும் நானே பாவமும் நானே...

    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனை நான் பாடவைத்தேனே
    பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

    கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
    காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
    கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
    காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
    (பாட்டும் நானே..)

    அசையும்..பொருளில்..இசையும் நானே
    அசையும் பொருளில் இசையும் நானே
    ஆடும் கலையின் நாயகன் நானே
    அசையும் பொருளில் இசையும் நானே
    ஆடும் கலையின் நாயகன் நானே
    எதிலும் இயங்கும் இயக்கம் நானே
    என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
    அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
    அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
    ஆலவாயனொடு பாடவந்தவனின்
    பாடும்வாயை இனி மூடவந்ததொரு
    (பாட்டும் நானே..)
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பாடலைப்பாடியவர்.. பி சுசீலா ..பி ஸ்ரீநிவாஸ்
    திரைப்படம், : காதலிக்க நேரமில்லை.
    இசையமைப்பாளர்: எம்.எஸ்.வி.

    பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்
    நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்

    ஆண்: இளைய கன்னிகை மேகங்களென்னும்
    இந்திரன் தேரில் வருவாளாம் ( நாளாம் நாளாம் )

    பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்ஆஆ.... ஆஆ..ஆஆ

    பெண்:மணமகன் இன்ப ஊஞ்சலில்
    ஆண்:மணமகள் மன்னன் மார்பினில்
    பெண்:அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்
    ஆண்:அது காதல் தேவனின் காவியம்
    பெண்:அதில் ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம்
    ஆண்:இருவர் ஊடலே பாடலாம்.
    இருவரும் :ஓ ஹோ ஓ ஹோ ஆ ஆ
    பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்

    ஆண்: இளமையின் இன்ப ரகசியம்
    பெண்:இயற்கையில் வந்த அதிசயம்
    ஆண்:இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்
    பெண்:அதில் நாமும் இன்றொரு காவியம்
    ஆண்:இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம்
    இருவர் காதலும் மாறுமோ?
    ஆ ஆ ஆஆஆ

    இருவரும் : நாளாம் நாளாம் திருநாளாம்
    நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
    இளைய காதலர் மேகங்களென்னும்
    இந்திரன் தேரில் வருவாராம்
    நாளாம் நாளாம் திருநாளாம்..ஆஆஆஆ
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒரே பாடல் உன்னை அழைக்கும்........

    திரைப்படம்: எங்கிருந்தோ வந்தாள்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1970


    ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    ஒரே பாடல்

    காதல் கிளிகள் பறந்த காலம்
    கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
    காதல் கிளிகள் பறந்த காலம்
    கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
    கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
    கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
    நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
    நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    ஒரே பாடல்

    உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
    உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
    உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
    உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
    உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
    உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
    உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
    உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்

    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    ஒரே பாடல்
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்......

    திரைப்படம்: மன்மத லீலை
    பாடியவர்: K j யேசுதாஸ்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
    மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
    மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

    இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
    இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
    மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
    மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்

    பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
    பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
    கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

    கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
    கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
    அழகினை புரியாத பாவம் அருகினில் இருந்தென்ன லாபம்
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
    மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு.....
    திரைப்படம்: ராமன் தேடிய சீதை
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்,பி சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


    ஆஅ ஆஅ அஹா ஹா அஹஹா ஹா ஹா
    ஒஹோ ஒஹோ ஹொ ஹொ ஹொ
    ஆஹாஅ ஆஹா ஹா ஹா
    ஒஹோ ஒஹோ ஹொ ஹொ ஹொ

    நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
    உறவில் எழுந்தது அன்பு விளக்கு
    எனது மடியினில் வா சீத்தா.. சீத்தா... சீதா...

    நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு
    உறவில் எழுந்தது அன்பு விளக்கு
    ராமா ராமா ஸ்ரீராமா

    நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு
    உறவில் எழுந்தது அன்பு விளக்கு
    எனது மடியினில் வா ராமா ராமா ஸ்ரீராமா

    காலோடு கால்கள் பின்ன ஊர்கோலம் போகும் மேஹம்
    காலோடு கால்கள் பின்ன ஊர்கோலம் போகும் மேஹம்
    மாப்பிள்ளை பெண்ணோடு... மாப்பிள்ளை பெண்ணோடு
    பன்னீரில் நீராடச் செல்கின்றதோ

    நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
    உறவில் எழுந்தது அன்பு விளக்கு
    எனது மடியினில் வா சீத்தா.. சீதா... சீதா

    தேடும் உறவுகள் இரவை நினைந்து வாடும் நிலை கண்டேன்
    தேடும் உறவுகள் இரவை நினைந்து வாடும் நிலை கண்டேன்
    பாடும் பறவைகள் பனியில் விழுந்து கூடும் சுவை கண்டேன்
    பாடும் பறவைகள் பனியில் விழுந்து கூடும் சுவை கண்டேன்
    தேவைகள் ஆயிரம்.... பார்வையில் தீருமோ
    தேவைகள் ஆயிரம்..... பார்வையில் தீருமோ

    நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு
    உறவில் எழுந்தது அன்பு விளக்கு
    எனது மடியினில் வா ராமா ராமா ஸ்ரீராமா

    மாலைப்பொழுதில் மன்னனின் மார்பில் மஞ்சள் பதியாதோ
    காலைப்பொழுதில் கட்டி அணைத்து கண்கள் சிவக்காதோ
    நீண்ட நாள் வாழ்வினை..... வேண்டினேன் வந்தது
    நீண்ட நாள் வாழ்வினை........... வேண்டினேன் வந்தது

    நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
    உறவில் எழுந்தது அன்பு விளக்கு
    எனது மடியினில் வா சீத்தா.. சீத்தா... சீதா...

    ஆஹாஅ ஆஹா ஹா ஹா
    ஒஹோ ஒஹோ ஹொ ஹொ ஹொ
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க.....
    குரல்: கே ஜே ஏசுதாஸ்
    வரிகள்: வாலி


    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல் வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க

    (நல்ல)

    பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாடும் (2)
    தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய் கூடும்
    பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி (2)
    நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி

    (நல்ல)

    மண வாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்க வேண்டும் (2)
    குலமகளாய்க் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்
    அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம் (2)
    நீ அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க

    (நல்ல)
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல் வாழ்த்து நான் சொல்லுவேன்.....

    Movie : Pattikkada pattanama
    music : Msv
    singer : Tms

    நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
    நல்லபடி வாழ்கவென்று
    கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா (2)
    நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
    நல்ல படி வாழ்கவென்று ...
    நல்லபடி வாழ்கவென்று.

    ஹரே ராம் .. ஹரெ ராம் (2)
    ஷ்ரி ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண ஹரே ராம்..

    போடுவது பொன் தாலி
    தாலி ஒரு பொன்வேலி
    வேலியினை தாண்டாதே
    வேதனையை வாங்காதே
    மாட புறாவில் ஜோடி புறா உண்டு
    ஜோடியை ? பின் வாழும் புறா இல்லை ஏன்? .. ஏன்?
    (அது தான் மானம்..)
    ஆ..ஆ..ஆ...
    1 2 3 4 5 6 7 8 ...... பதில்

    ......... நல்வாழ்த்து நான் சொல்லுவேன்...........

    மாப்பிள்ளையை வெருத்தாலும்
    வாசல் படி தாண்டாதே
    கோபம் கொண்டு உதைத்தாலும்
    கொண்டவனை வதைக்காதே
    யாரிடம் குறை இல்லை
    யாரிடம் தவறில்லை
    வாழ்வது ஒரு முறை
    வாழ்த்தட்டும் தலைமுறை வா...வா
    வா வா.... 1 2 3 4 5 6 7 8 பதில்

    ......... நல்வாழ்த்து நான் சொல்லுவேன்............
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்ல கணவனுக்கு மனைவியானவள்.....

    படம்
    : இளையராணி ராஜலக்ஷ்மி
    பாடியவர் : வாணி ஜெயராம்

    நல்ல கணவனுக்கு மனைவியானவள்
    அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
    நல்ல கணவனுக்கு மனைவியானவள்
    அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
    அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
    அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
    அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
    அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
    நல்ல கணவனுக்கு மனைவியானவள்
    அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

    ஸ்ரீராமன் மிதிலை நகர் மீதினில் வந்தான்
    அங்கு சீதையவள் அவன் தோள் கண்டாள் தோளே கண்டாள்
    ஸ்ரீராமன் மிதிலை நகர் மீதினில் வந்தான்
    அங்கு சீதையவள் அவன் தோள் கண்டாள் தோளே கண்டாள்
    காதல் கொண்ட ஜானகியை கம்பன் கண்டான்
    அந்த காதலுக்கு வீரமே காரணம் என்றான்
    காதலுக்கு வீரமே காரணம் என்றான்

    நல்ல கணவனுக்கு மனைவியானவள்
    அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

    திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான்
    அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள்
    திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான்
    அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள்
    காலமெல்லாம் காளையர்கு வலிமை வேண்டுமே
    நல்ல காரியங்கள் சாதிக்கும் திறமை வேண்டுமே

    நல்ல கணவனுக்கு மனைவியானவள்
    அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

    தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா
    தைரியமே இல்லாமல் வாழ முடியுமா
    தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா
    தைரியமே இல்லாமல் வாழ முடியுமா
    தன்னை நம்பும் மனிதனையே உலகம் நம்பும்
    இந்த தத்துவமே இல்லறத்தில் நல்லது செய்யும்

    நல்ல கணவனுக்கு மனைவியானவள்
    அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
    அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
    அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்
    நல்ல கணவனுக்கு மனைவியானவள்
    அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே...

    திரைப்படம்
    : பானை பிடித்தவள் பாக்கியசாலி
    இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்.
    இசை. எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வரராவ்
    பாடியவர்: திருச்சி லோகநாதன்
    ஆண்டு: 1958


    புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
    புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி கண்ணே - சில
    புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

    அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
    அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்

    புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
    புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

    மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
    மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
    சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் - குளிச்சு
    சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்

    புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
    புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

    கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
    காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
    கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
    காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
    அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
    அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே

    புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
    புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

    புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
    பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
    அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
    ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
    ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்

    புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
    புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே

    புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
    கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
    குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
    கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
    மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
    பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
    நூறு வயசு வாழப்போற தங்கச்சி - நமக்கு
    சாமி துணை இருக்கு தங்கச்சி - நமக்கு
    சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி
     

Share This Page