1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : மிஸ்ஸியம்மா(1955)
    பாடியவர் : ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
    இசை : ராஜேஸ்வர ராவ்
    வரிகள் : டி.என்.ராமையா தாஸ்


    பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
    பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

    ஏனோ ராதா இந்த பொறாமை?
    யார்தான் அழகால் மயங்காதவரோ?
    ஏனோ ராதா இந்த பொறாமை?
    யார்தான் அழகால் மயங்காதவரோ?

    பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

    புல்லாங்குழலிசை இனிமையினாலே
    உள்ளமே ஜில்லென துள்ளாதா?
    புல்லாங்குழல் இசை இனிமையினாலே
    உள்ளமே ஜில்லென துள்ளாதா?

    ராகத்திலே அனுராக மேவினால்
    ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா?
    ராகத்திலே அனுராக மேவினால்
    ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா?

    பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
    யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

    கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
    தன்னையே மறந்திடச் செய்யாதா?
    கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
    தன்னையே மறந்திடச் செய்யாதா?

    ஏனோ ராதா இந்த பொறாமை
    யார்தான் அழகால் மயங்காதவரோ?

    பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
    யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
    யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: அனுபவி ராஜா அனுபவி
    இசை: Ms விஸ்வநாதன்
    பாடியவர்கள்: Tm சௌந்தர்ராஜன், lr ஈஸ்வரி
    வரிகள்: கண்ணதாசன்


    முத்து குளிக்க வாரீகளா?
    மூச்சை அடக்க வாரீகளா?

    முத்து குளிக்க வாரீகளா?
    மூச்சை அடக்க வாரீகளா?
    சிப்பி எடுப்போமா மாமா மாமா
    அம்மாளுக்கும் சொந்தமில்லையோ?
    சிப்பி எடுப்போமா மாமா மாமா
    அம்மாளுக்கும் சொந்தமில்லையோ?
    (முத்து..)

    ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
    என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
    மாமா..
    ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
    என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
    நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க
    நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா?
    நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க
    நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா?

    முத்து குடுக்க வாரீகளா?
    கத்து கொடுக்க வாரீகளா?
    சங்கு பறிப்போமா ஏழா ஏழா
    அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
    முத்து குடுக்க வாரீயளா?

    ஆளான பொண்ணுக
    பாக்கு வைக்கும் முன்னமே
    என்னவென்னு சொல்லுவாக
    ஆளான பொண்ணுக
    பாக்கு வைக்கும் முன்னமே
    என்னவென்னு சொல்லுவாக

    ஹக்.. கோளாறு பண்ணாம
    கிட்ட வந்து கொஞ்சுங்கோ
    சினிமாவில் கொஞ்சுரப்பால

    காத்தவராயனை ஆரியாமாலா
    காதலிச்ச மாதிரியிலா
    காத்தவராயனை ஆரியாமாலா
    காதலிச்ச மாதிரியிலா
    ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
    பாத்திகல்ல நீங்களும்
    அந்த சரசம் பண்ணி பாருங்க
    ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
    பாத்திகல்ல நீங்களும்
    அந்த சரசம் பண்ணி பாருங்க
    ஓஹோ..

    முத்து குடுக்க வாரீயளா?
    கத்து குடுக்க வாரீயளா?
    முத்து குடுக்க வாரீயளா?
    கத்து குடுக்க வாரீயளா?
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: புதையல்
    இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர்கள்: Cs ஜெயராமன், p சுசீலா

    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடும் கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
    இசை அமுதே..
    (விண்ணோடும்..)
    அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
    அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
    விளையாடி இசை பாடி
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    (விண்ணோடும்..)

    தேடாத செல்வ சுகம் தானாக வந்ததுப்போல்
    ஓடோடி வந்த சொர்க போகமே
    ஓடோடி வந்த சொர்க போகமே
    காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே
    ஆனந்த போதை ஊற்றும் யோகமே வாழ்விலே
    விளையாடி இசை பாடி
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    (விண்ணோடும்..)

    சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    மங்காத தங்கமிது மாறாத வைரமிது
    ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
    விளையாடி இசை பாடி
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    (விண்ணோடும்..)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: சொர்க்கம்
    இசை: Ms விஸ்வநாதன்
    பாடியவர்: P சுசீலா
    வரிகள்: கண்ணதாசன்


    ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன்
    அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
    என் கண்கள் அதன் காவல்
    என் நெஞ்சம் அதன் மஞ்சம்
    (ஒரு முத்தாரத்தில்..)

    அந்த மாலை இந்தப் பெண்ணின் சொந்தமானதே
    அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
    பொன்னரங்கம் தன்னில் வந்து
    என்னை மட்டும் பாடச் சொன்னதென்ன
    கண்ணரங்கம் மின்ன மின்ன காதல் கொண்டதோ
    அந்தரங்கம் கண்டு கொள்ள அழைப்பு வந்ததோ
    அந்தக் கிண்ணம் சொந்தம் இல்லை
    என்று இன்று கண்டு கொண்டதென்ன
    (ஒரு முத்தாரத்தில்..)

    நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
    காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
    (நீல வானம்..)
    பாடல் ஒன்று.. ராகம் ஒன்று
    தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன
    காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்
    கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்
    இன்று மட்டும் நாளை இல்லை
    என்ற சொல்லில் உண்மை இனி இல்லை
    (ஒரு முத்தாரத்தில்..)
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: தங்கப்பதக்கம்
    இசை: Ms விஸ்வநாதன்
    பாடியவர்கள்: P சுசீலா, tm சவுந்தர்ராஜன்
    வரிகள்: கண்ணதாசன்


    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
    அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

    எங்கள் வீடு கோகுலம்
    என் மகன் தான் கண்ணனாம்
    தந்தை வாழுதேவனோ
    தங்கமானா மன்னனாம்
    (எங்கள் வீடு..)
    (நல்லதொரு..)

    அன்னை என்னும் கடல் தந்தது
    தந்தை என்னும் நிழல் தந்த்து
    (அன்னை..)
    பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
    நன்றி என்னும் குணம் கொண்டது
    நன்மை செய்யும் மனம் கொண்டது
    எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
    (நல்லதொரு..)

    வெள்ளம் போல ஓடுவான்
    வெண்மணல் மேல் ஆடுவான்
    கானம் கோடி பாடுவான்
    கண்ணன் என்னைத் தேடுவான்
    (கானம் கோடி..)

    மாயம் செய்யும் மகன் வந்தது
    ஆயர்பாடி பயம் கொண்டது
    அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
    இந்த பிள்ளை நலம் கொள்ளவும்
    என்னைப் பார்த்து எனை வெல்லவும்
    கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
    நான் வளர்த்தேன்
    (நல்லதொரு...)

    கோலம் கொண்ட பாலனே
    கோவில் கொண்ட தெய்வமாம்
    தாயில் பிள்ளை பாசமே
    தட்டில் வைத்த தீபமாம்

    பாசம் என்று எதை சொல்வது
    பக்தி என்று எதை சொல்வது
    அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?
    பிள்ளை என்னும் துணை வந்தது
    உள்ளம் என்றும் இடம் கொண்டது
    இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?
    (நல்லதொரு..)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: மணமகன் தேவை
    இசை: ஜி. ராமநாதன்
    பாடியவர்: சந்திரபாபு
    பாடல்: கே.டி. சந்தானம்

    பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (2)
    தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே(2)

    கட்டான முத்தழகி காணாத கட்டழகி
    தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
    கட்டான முத்தழகி காணாத கட்டழகி
    தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
    தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
    கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை (2)
    தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

    (பம்பரக் கண்ணாலே)

    கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
    பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
    கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
    பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
    பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
    திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிக்கிறேன்
    தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: மரகதம்
    இசை: சுப்பையா நாயுடு
    பாடியவர்: சந்திரபாபு, ஜமுனா ராணி


    குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
    தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
    பொங்குது தன்னாலே

    போக்கிரி ராஜா போதுமே தாஜா
    பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
    வம்புகள் பண்ணாதே

    சந்துல தானா சிந்துகள் பாடி
    தந்திரம் பண்ணாதே
    நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
    பறிக்க எண்ணாதே


    போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
    போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
    குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
    கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

    ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
    சலசலக்கையிலே
    என் மனம் தொட்டு ஏக்கமும்பட்டு
    என்னமோ பண்ணுதே

    சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
    உனக்கு பிரியமா
    நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
    எனக்குப் புரியுமா

    போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
    போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
    குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
    கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே


    செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
    சம்மதப்பட்டுக்கனும்
    தாளமும் தட்டி மேளமும் கொட்டி
    தாலியைக் கட்டிக்கனும்

    (குங்குமப் பூவே)
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: சகோதரி
    இசை: ஆர்.சுதர்சனம்
    பாடியவர்: சந்திரபாபு


    நான் ஒரு முட்டாளுங்க
    ரொம்ப நல்லா படிச்சவங்க
    நாலு பேரு சொன்னாங்க
    நான் ஒரு முட்டாளுங்க

    ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
    எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
    நான் ஒரு முட்டாளுங்க

    கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க
    ஏ..ஏ...ஏ.. கயிதே ...டேய்..
    கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க
    முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேலே அடிச்சாங்க
    பேசாதயின்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
    பீஸ் பீஸா கியிச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க..
    நான் ஒரு முட்டாளுங்க

    கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
    பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது
    மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது
    ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
    நான் ஒரு முட்டாளுங்க

    நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
    நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
    ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க
    அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன்னாங்க.
    நான் ஒரு முட்டாளுங்க
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: இதயக்கமலம்
    பாடல்வரிகள் :கண்ணதாசன்
    இசை: கேவி.மகாதேவன்
    பாடியவர்கள்: பி.சுசீலா ,pb.ஸ்ரீநிவாஸ்

    ஆண்:போ போ போ..ஓஓ ஓ..
    பெண்: வாவா வா ஆஆஆ
    ஆண்: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
    பெண்: நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா

    ஆண்: பச்சைக்கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம்
    நான் இச்சைக்கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் -நீ (பச்சைக்கிளியாய்)
    போபோ போ
    பெண்: உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
    இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம்
    வா வா வா
    ஆண் : போ போ போ
    ஆண்: காலம் உன்னிடம் ஆடலாம் கவிஞர் உன்னைப்பாடலாம்
    மாதர் உன்னைப் போற்றலாம் மனதில் என்னைக்காணலாம் (காலம்)
    போ போ போ
    பெண்: பொங்கும் மஞ்சள் குங்குமம் பூவும் உன்னிடம் சங்கமம்
    எதுவும் இல்லை என்னிடம் என்னைத்தந்தேன் உன்னிடம்
    வா வா வா
    ஆண்: நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ
    பெண் : நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்

    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

    வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
    கருணை...கருணை...கருணை...கருணை...
    வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
    வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

    துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
    வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
    விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
    விணை வென்ற மனம் கொண்ட
    இனம் கண்டு துணை சென்று வென்றதை மலர்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்

    துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ...

    துதி பாடும் ...துதி பாடும் ...துதி பாடும் ... பாடும் பாடும் டும் டும்..

    துதி பாடும் ...
     

Share This Page