1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    மாசிலா உண்மைக் காதலே
    பாடல் : மாசிலா உண்மைக் காதலே
    திரைப்படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்
    பாடியவர் : A.m.ராஜா & p.பானுமதி
    இயற்றியவர் : மருதகாசி
    திரையிசை : S.தக்ஷிணாமூர்த்தி

    மாசிலா உண்மைக் காதலே!

    ஆண்: மாசிலா உண்மைக் காதலே
    மாறுமோ செல்வம் வந்த போதிலே
    பெண்: பேசும் வார்த்தை உண்மைதானா
    பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?
    ஆண்: கண்ணிலே மின்னும் காதலே
    கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே

    பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
    பேசும் வார்த்தை உண்மை தானா
    பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா? (மாசிலா)

    ஆண்: உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
    பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
    இருவரும் :அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம்
    இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்


    ஓராயிரம் பார்வையிலே
    ......
    படம்: வல்லவனுக்கு வல்லவன்
    இசை: வேதா
    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்



    நூறுமுறை பிறந்தாலும்
    நூறுமுறை இறந்தாலும்
    உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
    ஒருநாளும் போவதில்லை
    உலகத்தின் கண்களிலே
    உருவங்கள் மறைந்தாலும்
    ஒன்றான உள்ளங்கள்
    ஒருநாளும் மறைவதில்லை!

    ஓராயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்
    உன் காலடி ஓசையிலே
    உன் காதலை நான் அறிவேன்

    (ஓராயிரம் பார்வையிலே)

    இந்த மானிடக் காதலெல்லாம்
    ஒரு மரணத்தில் மாறி விடும்
    அந்த மலர்களின் வாசமெல்லாம்
    ஒரு மாலைக்குள் வாடி விடும்
    நம் காதலின் தீபம் மட்டும்
    எந்த நாளிலும் கூட வரும்

    (ஓராயிரம் பார்வையிலே)

    இந்த காற்றினில் நான் கலந்தேன்
    உன் கண்களை தழுவுகின்றேன்
    இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
    உன் ஆடையில் ஆடுகின்றேன்
    நான் போகின்ற பாதையெல்லாம்
    உன் பூமுகம் காணுகின்றேன்

    (ஓராயிரம் பார்வையிலே)
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    உங்களின் முயற்சி அருமை...... நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழப்பதில்லை பாடல் வரிகளும் இதில் இடம் பெற வேண்டும் என்று எனக்கு ஆசை சரோஜ்......
     
  4. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    Dear Saroj
    entha varigalukagave naan entha padalai nesikiren

    இனிமை நினைவும் இளமை வளமும்
    இனிமை நினைவும் இளமை வளமும்
    கனவாய் கதையாய் முடியும் முன்னே
    அருகில் வராததேனோ
    அருகில் வராததேனோ ????????????????

    kantha
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    உங்களுக்கு மட்டும்அல்ல நம் எல்லோர் நெஞ்சமும் மறக்காத பாடல் அது.இதோ....

    நெஞ்சம் மறப்பதில்லை
    திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை
    பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
    இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
    வரிகள்: கண்ணதாசன்

    பெண்:ஆஆ..............

    நெஞ்சம் மறப்பதில்லை
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

    பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
    உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)

    பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
    உனக்கா புரியவில்லை
    இது சோதனையா நெஞ்சின் வேதனையா
    உன் துணையேன் கிடைக்கவில்லை
    உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)

    ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
    உயிரால் இணைந்திருப்பேன்
    அதை இறப்பினிலும்
    மறு பிறப்பினிலும் நான்
    என்றும் நினைத்திருப்பேன்
    நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    தெவிட்டாத தேன் அந்த பாடல் வரிகள்
    இனிமை, இளமை என்ற அந்த வார்தைகளுக்காகவா என் காந்தா :crazy:crazy:crazy
     
  7. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    Dear Saroj

    Superb. Pazhaya thiraipada padalgal evvalavu kettalum inbamaga irukkum. Nee ingu kuduthirukkira ella padalgalum enakku pidithavai.
    Pasa Malar padathin ella paadalgalum ketka ketka inbamaga irukkum

    love
    viji
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்


    Amma neegal ingu vanthu ungal manam virubiya paadalkali pagirnthu kondatharkku enakku miguntha magilchi.

    மலர்ந்தும் மலராத பாதி மலர்
    படம்: பாசமலர்
    இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
    வரிகள்: கண்ணதாசன்

    மலர்ந்தும் மலராத பாதி மலர்
    போல வளரும் விழி வண்ணமே
    வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே
    நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
    இளம்தென்றலே
    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
    கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

    மலர்ந்தும் மலராத பாதி மலர்
    போல வளரும் விழி வண்ணமே
    வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே
    நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
    இளம்தென்றலே
    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
    கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

    யானைப் படை கொண்டு சேனை பல வென்று
    ஆளப் பிறந்தாயடா
    புவி ஆளப் பிறந்தாயடா
    அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
    வாழப் பிறந்தாயடா
    அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
    வாழப் பிறந்தாயடா

    தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
    தந்து மணம் பேசுவார்
    பொருள் தந்து மணம் பேசுவார்
    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்

    நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
    நடந்த இளம்தென்றலே
    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
    பொலிந்த தமிழ் மன்றமே

    சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
    கதை சொல்லவா..
    பிரித்த கதை சொல்லவா

    கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
    கலந்து பிறந்தோமடா
    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
    முடிந்தாலும் மறக்க முடியாதடா
    உறவைப் பிரிக்க முடியாதடா
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    அன்பே ஆரிராரோ ஆரிராரோ
    ஆரிராராரிரோ
    அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    இதோ எனது துவக்கம்

    மௌனமே பார்வையாய்
    படம் : கொடி மலர்
    இசை : M s விஸ்வநாதன்
    பாடல் : கவியரசு கண்ணதாசன்
    பாடியவர் : P b ஸ்ரீநிவாஸ்
    வருடம் : 1966

    மௌனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும்
    நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும் (மௌனமே)

    அல்லிக்கொடியே உன் முல்லை இதழும்
    தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்
    அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் - என்னை
    அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும் (மௌனமே)

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
    முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் - பல
    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் (மௌனமே)
     
    Last edited: Jun 21, 2010
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    அச்சோ
    என்ன அழகு பாடல்
    நான் என்ன செய்வேன் ...நான் பாடுகின்ற இந்த பாடல் கேட்க இங்கு யாருமே இல்லையே.....:spin:spin:spin
    அருமை .:thumbsup
     

Share This Page