1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    கதாநாயகன் கதை சொன்னான்
    ....

    திரைப்படம்:வேட்டைக்காரன்
    இசை:கே.வி.மகாதேவன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்


    கதாநாயகன் கதை சொன்னான் -
    அந்தக் கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
    ஒரு (கதா)
    கதாநாயகி கதை சொன்னாள் -
    அந்தக்கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு
    (கதா)


    காவிரிக்கரைக்கு வரச்சொன்னான் -
    இளங்கன்னத்தில் ஒன்று தரச்சொன்னான்
    கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான் -
    என்னைக்கட்டிக்கொண்டான் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான்


    அங்கயற்கண்ணி தேசத்திலே
    அழகிய வைகை ஓரத்திலே
    பொங்கும் காதல் வேகத்திலே -
    எனைப்பூட்டிக்கொண்டான் கொடி நாட்டிக் கொண்டான்
    (கதா)


    குற்றால மலையின் சாரலிலே
    கொஞ்சும் கிளிமொழிச் சோலையிலே
    முற்றாத கனியென்னைத் தேடிக்கொண்டான் -
    மெல்லமூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்


    மாமல்லபுரத்துக் கடல் அருகே -
    இந்தமங்கை இருந்தாள் என்னருகே
    பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு -
    நாங்கள்படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு
    (கதா)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
    ..

    திரைப்படம்:வேட்டைக்காரன்
    இசை:கே.வி.மகாதேவன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்: பி. சுசீலா

    என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
    காவலில் எத்தனை தெய்வமோ
    மன்னனுக்கெத்தனை உள்ளமோ
    மனதில் எத்தனை வெள்ளமோ
    (கண்ணனுக்கு)


    அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
    தோள்களில் எத்தனை கிளிகளோ
    அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
    பார்வையில் எத்தனை பாவமோ
    (கண்ணனுக்கு)


    என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
    அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
    மங்கை எனக்கு கண்ணாகும்
    மறந்து விட்டால் என்னாகும்
    (கண்ணனுக்கு)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்...

    திரைப்படம்:வேட்டைக்காரன்
    இசை:கே.வி.மகாதேவன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்



    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்
    (உன்னை)

    மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
    மான் என்று சொல்வதில்லையா
    தன்னை தானும் அறிந்து கொண்டு
    ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
    (உன்னை)

    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா
    பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

    மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
    உனக்கு மாலைகள் விழவேண்டும் -
    ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்


    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்
     
  4. swarna1388

    swarna1388 Silver IL'ite

    Messages:
    615
    Likes Received:
    75
    Trophy Points:
    85
    Gender:
    Female
    மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
    மலரும் விழிவண்ணமே - வந்து
    விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விடிந்த கலையன்னமே
    நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
    நடந்த இளம் தென்றலே - வளர்
    பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
    பொலிந்த தமிழ் மன்றமே

    (மலர்ந்து)

    யானைப் படை கொண்டு சேனை பல வென்று
    வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா
    அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
    வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
    அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
    அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
    வாழப் பிறந்தாயடா

    தங்கக் கடியாரம் வைர மணியாரம்
    தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்

    சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் இடை வந்து
    பிரித்த கதை சொல்லவா...பிரித்த கதை சொல்லவா

    கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
    கலந்து பிறந்தோமடா - இந்த
    மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
    மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா

    ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
    அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
    அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
     
  5. swarna1388

    swarna1388 Silver IL'ite

    Messages:
    615
    Likes Received:
    75
    Trophy Points:
    85
    Gender:
    Female
    <code>விழியில் விழுந்து இதயம் நுழைந்து
    உயிரில் கலந்த உறவே இரவும் பகலும்
    உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்
    வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
    உயிரைத் திருப்பித் தந்து விடு
    (விழியில் விழுந்து...)

    உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில்
    கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
    நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை
    திசையும் உதிக்கும் நீ மல்லிகைப் பூவை
    சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
    நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல்
    பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

    (விழியில் விழுந்து...)

    கல்வி கற்க காலை செல்ல அண்ணன்
    ஆணையிட்டான் காதல் மீன்கள் இரண்டில்
    ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்
    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில்
    கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
    அந்திப் பொழுதின் போது அலையின் கரையில்
    காத்திருப்பேன் அழுத விழிகளோடு எனக்கு
    மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும்
    முத்தம் எனக்கு மட்டும் கேட்கும்
    எனது உயிர் உருகும் சத்தம்



    படம்: அலைகள் ஓய்வதில்லை.
    உயிர்: இளையராஜா.
    உடல்: வைரமுத்து.
    குரல்: இளையராஜா, சசிரேகா.</code>
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஸ்வர்ணா
    உங்களின் இதம் தரும் இனிய வரிகளின் பகிர்வுக்கு மிக்க நன்றி
     
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

    இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
    இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
    காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

    (உன்னைக்)

    ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
    ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
    நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
    தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

    என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
    வாரியணைத்தேன் ஆசையினாலே
    நீ தருவயோ நான் தருவேனோ
    யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல


    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஸ்வீட்டி
    உங்களது மனம் கவர்ந்த பாடல் எல்லோரது விருப்பப் பாடலும் கூட.
    உங்கள் வருகைக்கும்,பகிர்வுக்கும் மிக்க நன்றி
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்.....


    திரைப் படம்: கண்ணா நலமா
    பாடியவர்கள்: டி.எம். சௌந்திர ராஜன், பி.சுசீலா
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி

    பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
    பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்

    அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
    ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்

    அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
    அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

    அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
    ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
    ஒரு பிள்ளை ... இரண்டு தாய்மார்கள்
    இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என் கிறார்கள்
    பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று சொல்லத் தெரியவில்லை
    மன்னன் சாலமன் யோசித்தான்

    ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
    இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
    அசல் யாரோ ... நகல் யாரோ
    அசல் யாரோ நகல் யாரோ
    அறியேனென்று அதிசயித்த மன்னன் சொன்னான் முடிவில் ஒன்று
    முடிவில் ஒன்று

    இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
    யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
    ஆகவே ... காவலா, இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
    பாதியாகக் கொடு என்றான்..
    காவலன் சென்றான் ..இடை வாளை எடுத்தான்
    அந்த மகனை இழுத்தான்
    வாளை ஓங்கினான்
    வாளை ஓங்கினான் .....

    மன்னா ...மன்னா ஆஆ

    அம்மா என்றொரு குரலில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
    இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும் புன்னகை புரிகின்றாள்
    புன்னகை புரிகின்றாள்

    பாதி கொடுங்கள் என்றே அவளோ மன்னனைக் கேட்கின்றாள்
    மன்னா வேண்டாம் என்றே இவளோ மன்னனைத் தடுக்கின்றாள்

    இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம் மகனைத் தருகின்றான்
    இவள் தான் உண்மைத் தாயென மன்னன் சாலமன் முடிக்கின்றான்
    சாலமன் முடிக்கின்றான்

    பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
    அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்

    சக்தி வடிவானவளே அன்னை அன்னை
    சக்தி வடிவானவளே அன்னை அன்னை
    அவள் தானறிவாள் தான் வளர்த்த கண்ணை கண்ணை

    சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

    பக்தியிலும் அன்னை தான் முதலில் தெய்வம்
    இந்தப் பார் முழுதும் அவள் வளத்த செல்வம் செல்வம்

    சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

    பதியம் வைத்த மரம் புதிய தோட்டம் தனில் நின்று வாழ்வதுண்டு
    புதியதாக வரும் உறவு யாவும் அதன் சொந்தமாவ்தில்லை

    சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

    உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை
    உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை

    சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

    பூவும் மஞ்சளுடன் பொங்கும் தேவி அவள் புவனேச்வரி

    சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

    பூஜை செய்து வரும் மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி

    சக்தி ஓம் .. சக்தி ஓம் ...

    பாசம் பொக்கி வரும் தேவி சக்தி அவள் ஜெகதீஸ்வரி

    சக்தி ஓம் .. சக்தி ஓம் .
    .
    பார்வை தன்னில் உயர் நீதி சொல்ல வரும் பரமேஸ்வரி

    சக்தி ஓம் .. சக்தி ஓம் .
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காகித ஓடம் கடலலை மீது
    போவது போலே மூவரும் போவோம்


    பாடியவர் : பி.சுசீலா
    திரைப்படம் : மறக்க முடியுமா?
    இசை : ராமமூர்த்தி

    காகித ஓடம் கடலலை மீது
    போவது போலே மூவரும் போவோம்
    ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
    அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
    கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
    தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
    காலமும் பார்த்து நேரமும் பார்த்து
    வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
    ( காகித)

    அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
    ஆறுதல் வழங்க யாருமே இல்லை
    ஏழைகள் வாழ இடமே இல்லை
    ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
    ( காகித)

    தாயின் மடியும் நிலைத்திடவில்லை
    தந்தையின் நிழலும் காத்திடவில்லை
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    அம்மா எங்களை அழைத்திடு தாயே

    (காகித)
     

Share This Page