1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
    அருள் புரிந்ததும் கதையா



    திரைப்படம்:மதுரை வீரன்
    இசை:ஜி. ராமநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:பி. பானுமதி

    அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
    அருள் புரிந்ததும் கதையா
    அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
    அருள் புரிந்ததும் கதையா

    நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
    நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
    நேசம் கொண்டதுவும் கனவா
    அவர்க்கும் எனக்கும்...

    இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
    இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
    பிரிப்பதே உந்தன் செயலா
    இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
    பிரிப்பதே உந்தன் செயலா
    மணக்க மணக்க மலர்ந்த மலரை
    மணக்க மணக்க மலர்ந்த மலரை
    சிதைப்பதே உந்தன் தொழிலா
    அவர்க்கும் எனக்கும் ....

    அணைக்கும் அன்னை நீயே என்று
    அணைக்கும் அன்னை நீயே என்று
    அகிலம் சொல்வதும் தவறா
    அணைக்கும் அன்னை நீயே என்று
    அகிலம் சொல்வதும் தவறா
    துடிக்க துடிக்க எங்கள் அன்பை
    துடிக்க துடிக்க எங்கள் அன்பை
    பிரிப்பதே உந்தன் சதியா
    துடிக்க துடிக்க எங்கள் அன்பை
    பிரிப்பதே உந்தன் சதியா
    பிரிப்பதே உந்தன் சதியா

    அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
    அருள் புரிந்ததும் கதையா....
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:மதுரை வீரன்
    இசை:ஜி. ராமநாதன்
    இயற்றியவர்:உடுமலை நாராயண கவி
    பாடகர்கள் எம்.எல். வசந்தகுமாரி

    ஆடல் காணீரோ ஆடல் காணீரோ
    விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ
    ஆடல் காணீரோ

    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ ஓ...

    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    ஏற்று வினை முடிக்கவே
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
    பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
    வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..

    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நக்கீரார்க் குபதேசித்து
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வலை வீசி மீன் பிடித்து
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வைரவளை முத்து வளை ரத்ன வளை
    விற்ற விளையாடல் காணீரோ
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ ஓ...
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
    எண்ணிப் பாருங்க



    திரைப்படம்:மதுரை வீரன்
    இசை:ஜி. ராமநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி


    ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
    எண்ணிப் பாருங்க
    ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
    எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
    ஐயா எண்ணிப் பாருங்க

    நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
    பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
    நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
    பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
    மூட்டையடிச்சா உனையே விடுவானா
    நெனச்சிப் பாருங்க
    மூட்டையடிச்சா உனையே விடுவானா
    நெனச்சிப் பாருங்க நலலா
    நெனச்சிப் பாருங்க நல்லா
    நெனச்சிப் பாருங்க

    தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்
    கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
    சிறையில் கம்பி எண்ணணும்
    தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்
    கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
    பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க
    புரிஞ்சு கொள்ளுங்க பூட்டை உடைக்கும்
    பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்
    பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க
    புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிநு கொள்ளுங்க
    நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

    காலமெல்லாம் வ்ழிப்பறிக் கொள்ளை
    கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
    காலமெல்லாம் வ்ழிப்பறிக் கொள்ளை
    கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
    கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க
    கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க
    ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க

    ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
    ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
    யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
    ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
    யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
    ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய்
    வாழ வேணுங்க
    ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய்
    வாழ வேணுங்க நாமே
    வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க

    ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
    எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
    ஐயா எண்ணிப் பாருங்க
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நாடகம் எல்லாம் கண்டேன்
    உந்தன் ஆடும் விழியிலே


    திரைப்படம்:மதுரை வீரன்
    இசை:ஜி. ராமநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி

    நாடகம் எல்லாம் கண்டேன்
    உந்தன் ஆடும் விழியிலே
    ஆடும் விழியிலே .....
    கீதம் பாடும் மொழியிலே ...... (நாடகம் )

    தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
    கண்ணா வாழ்விலே .....
    உங்கள் அன்பால் நேரிலே ...... (நாடகம் )

    கன்னி பருவம் எனும் கட்டழகு தேரினிலே
    எனையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா
    அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே
    உன்னழகை பார்த்திருக்கும் ....
    சுவாமி ..... கண்ணே .....
    உன்னழகை பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே

    அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சுதே
    கலை மாதை கண்டதாலே நிலை மாறி கெஞ்சுதே
    வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
    மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா

    ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே
    காண்போம் வாழ்விலே ....
    பேரன்பால் நேரிலே .... (ஈருடல் )
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாங்க மச்சான் வாங்க
    வந்த வழிய பாத்து போங்க



    திரைப்படம்:மதுரை வீரன்
    இசை:ஜி. ராமநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம். சௌந்தரராஜன்,ஜிக்கி

    வாங்க மச்சான் வாங்க
    வந்த வழிய பாத்து போங்க
    வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்
    கிட்ட வாங்க மச்சான் வாங்க
    வந்த வழிய பாத்து போங்க
    ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பாக்கறீங்க ?
    ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பாக்கறீங்க ?
    வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்
    கிட்ட வாங்க மச்சான் வாங்க
    வந்த வழிய பாத்து போங்க

    மானை தேடி தாங்க தான் வலையை பொடுறீங்க
    தம்பி - அக்கா
    மானை தேடி தாங்க தான் வலையை பொடுறீங்க மந்திரத்தால் நாங்க இங்க மசிய மாட்டோம் போங்க போங்க

    வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்
    கிட்ட வாங்க மச்சான் வாங்க
    வந்த வழிய பாத்து போங்க

    உப்பிலாத பத்திய காரன் ஊறுகாய பார்த்தானாம்
    உப்பிலாத பத்திய காரன் ஊறுகாய பார்த்தானாம்
    உதட்டாலே சப்பு கொட்டி ஊசி போல நின்னானாம்

    கற்பனையா பேசி பேசி கஞ்சி தொட்டியில் விழுந்தானாம்
    கற்பனையா பேசி பேசி கஞ்சி தொட்டியில் விழுந்தானாம்
    அதை போல ஆளை மிரட்டி
    காளை போல துள்ளாதீங்க
    வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்
    கிட்ட வாங்க மச்சான் வாங்க
    வந்த வழிய பாத்து போங்க
    ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பாக்கறீங்க ?
    ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பாக்கறீங்க ?
    வாங்க மச்சான் வாங்க
    வந்த வழிய பாத்து போங்க --

    முத்து போல் பல்லழகி
    முன்கோப சொல் அழகி
    கத்தி போல் கண்ணழகி..
    கனிவான பெண் அழகி

    தேடி வந்தேனே புள்ளி மானே
    தேடி வந்தேனே புள்ளி மானே
    ஓடி வந்ததால் இங்கு தானே நானே
    தேடி வந்தேனே புள்ளி மானே
    ஓடி வந்ததால் இங்கு தானே நானே - நானே
    தேடி வந்தேனே புள்ளி மானே
    தேன் உலாவும் பூங்காவணம்
    அதில் காருலாவும் கலை மானை நானே
    தேடி வந்தேனே புள்ளி மானே
    தேன் உலாவும் பூங்காவணம்
    அதில் காருலாவும் கலை மானை நானே
    தேடி வந்தேனே புள்ளி மானே

    கோடி நமஸ்காரமே.... கூறினேன் இந்நேரமே
    கோடி நமஸ்காரமே கூறினேன் இந்நேரமே
    jaadaiyaay என் கனைத்தனை தவறிய
    ஜாதி மானை மறைப்பது முறை அல்ல
    thedi vanthene புள்ளி மானே
    jaadaiyaay என் கனைத்தனை தவறிய
    ஜாதி மானை மறைப்பது முறை அல்ல
    thedi vanthene புள்ளி மானே --

    வாங்க மச்சான் வாங்க சொந்த வழிய பாத்துட்டீங்க வாங்க மச்சான் வாங்க சொந்த வழிய பாத்துட்டீங்க
    வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான் வாங்க சொந்த வழிய பாத்துட்டீங்க வலைய வீசி நீங்க தங்க சிலய புடிச்சிடீங்க வலைய வீசி நீங்க தங்க சிலய புடிச்சிடீங்க
    வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான் வாங்க சொந்த வழிய பாத்துட்டீங்க

    வஞ்சிமார்கள் நாங்க கண் பார்த்திருக்க நீங்க வஞ்சிமார்கள் நாங்க கண் பார்த்திருக்க நீங்க
    உங்க பவுச காட்டி ஆளை மயக்கி சிறையில் பிடிச்சிட்டீங்க
    உங்க பவுச காட்டி ஆளை மயக்கி சிறையில் பிடிச்சிட்டீங்க
    வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் ஜோரா
    வாங்க மச்சான் வாங்க சொந்த வழிய பாத்துட்டீங்க
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

    திரைப்படம்:மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:கவிஞர் முத்துலிங்கம்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தர்ராஜன்


    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


    ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
    ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
    பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
    பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

    கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
    களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
    நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
    நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
    வீரமுண்டு வெற்றி உண்டு
    விளையாடும் களமிங்கே உண்டு
    வா வா என் தோழா
    வீரமுண்டு வெற்றி உண்டு
    விளையாடும் களமிங்கே உண்டு
    வா வா என் தோழா

    பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
    புலி இனம் நீ எனில் வாராய்
    வீரமுண்டு வெற்றி உண்டு
    விளையாடும் களமிங்கே உண்டு
    வா வா என் தோழா

    தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
    தீராத புயல் வந்ததேனோ
    தென்பாங்கு தென்றல் பண்பாடும்
    நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
    நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
    நெஞ்சங்கள் துடித்திடலாமோ
    வா வா என் தோழா
    வீரமுண்டு வெற்றி உண்டு
    விளையாடும் களமிங்கே உண்டு
    வா வா என் தோழா ....
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அமுத தமிழில் எழுதும் கவிதை
    புதுமை புலவன் நீ


    திரைப்படம்:மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:புலமைபித்தன்
    பாடகர்கள்:வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன்

    அமுத தமிழில் எழுதும் கவிதை
    புதுமை புலவன் நீ
    புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
    புரட்சி தலைவன் நீ (2)

    இதழில் எழுதி விழியில் படிக்கும்
    கவிதை நயமும் நீ
    சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
    விளக்க உரையும் நீ (2)

    ஞானம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும்
    நெஞ்சில் மிதப்பதென்ன
    உன்னை ஒரு கணமும்
    என்னை மறு கணமும்
    உள்ளம் நினைப்பதென்ன (2)
    நாதம் இசைத்துவரும் பாத மணிச்சிலம்பு
    என்னை அழைப்பதென்ன
    ஊஞ்சல் அசைந்துவரும் நீல விழி இரண்டின்
    வண்ணம் சிவப்பதென்ன

    எதுகை அது உனது இருக்கை
    அதில் எனது பெண்மை ஆடட்டுமே
    ஒரு கை குழல் தழுவ
    மறுகை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே (2)
    வைகை என்னை நெருங்கி
    வைகை அணை மதுரை
    வைகை அணை போலவே
    மங்கை எனும் அமுத கங்கை
    பெருகுவது நீந்தி கரை காணவே
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு

    திரைப்படம்:மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:முத்துலிங்கம்
    பாடகர்கள்:வாணி ஜெயராம்.

    மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு
    புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு
    சங்கமம் கண்ட கவித்திற நாடு
    எங்கள் சந்தன தமிழுக்கு வேறெது ஈடு
    இன்னிசை தென்றல் காவியம் பாட
    புது எழிலொடு மலர் பூத்து சோலையிலாட
    பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க
    உயர் பெண்மையின் கற்பெனும் தீக்கனல் பறக்க
    அன்பு மலர்ந்திட பண்பு வளர்ந்திட
    அறமே வாழ்க
    தென்னை செழித்திட கன்னல் தழைத்திட
    திருவே வாழ்க
    தண்டை குலுங்கிட தாளம் முழங்கிட
    கலையே வாழ்க
    நெஞ்சு மகிழ்ந்திட கொஞ்சும் பசுங்கிளி
    தமிழே வாழ்க செந்தமிழே வாழ்க
    பரத கலையே வாழ்க...
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

    திரைப்படம்:மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:கவிஞர் வாலி
    பாடகர்கள்:வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன்

    தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
    தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
    தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் - என்
    தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்?

    மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்?
    மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்? அந்தி
    மாலையில் இந்த மாறனின் கணையில் ஏனிந்த வேகம் ஏனிந்த வேகம்?

    தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

    பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
    பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
    பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ?

    மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
    மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
    வழியெங்கும் விழி வைத்துப் பார்த்த விழி பூத்திருந்தேன்

    தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

    ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
    ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
    இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோ?

    கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
    கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
    இதழ் சிந்தும் கவி வண்ணம் காலை வரை கேட்பதுண்டோ?
    காலை வரை கேட்பதுண்டோ?

    தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

    கறபகத்துச் சொலையிலே பூத்த மலர் நீயல்லவோ?
    விழியென்னும் கருவண்டு பாட வந்த பாட்டென்னவோ?
    காவியத்து நாயகினின் கட்டழகின் மார்பினிலே
    சுகமென்ன சுகமென்று மோகனப் பண் பாடியதோ?
    மோகனப் பண் பாடியதோ?

    தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
    தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:மந்திரி குமாரி

    மனம் போல் வாழ்வு பெறுவோமே


    திரைப்படம்:மந்திரி குமாரி
    இசை:ஜி. ராமநாதன்
    இயற்றியவர்:அ.மருதகாசி & க.மு.ஷெரீப்
    பாடகர்கள்:


    மனம் போல் வாழ்வு பெறுவோமே
    இணைந்தே நேசமுடன் எந்நாளும்
    நாம் மகிழ்வோம்
    மெய் அன்பாலே
    (மனம் போல் )


    என்னுயிர் நாதன் குணமே
    பாரில் நேர்மையாகினார் புவிமேல்
    இந்த நாளும் வாழ்வில் சுபதினமே
    இன்பமே கொள்ளுவோம்
    (மனம் போல் )


    பெண்மனம் ஒன்றை நினைத்தால்
    அதை திண்ணமாக செய்து முடிப்பாள்
    உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள்
    உண்மையே அன்பினால்
    (மனம் போல் )
     

Share This Page