1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே

    திரைப்படம்:பாக்தாத் திருடன்
    இசை:ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா


    உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே
    உனை நினைந்து மனம் மயங்க செய்தாயே
    ஊரை எல்லாம் கொள்ளை கொள்ளும் என்னையே
    பார்வையாலே கொள்ளை கொண்டாய் கன்னியே
    உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே
    உனை நினைந்து மனம் மயங்க செய்தாயே

    கள்ளம் இல்லா காதல் இன்பம் தன்னையே
    கள்வா நீயும் காண செய்வாய் என்னையே
    சொல்ல சொல்ல எல்லை மீறி உள்ளுக்குள்ளே பாயுதே
    பள்ளம் நாடும் வெள்ளம் போலே
    உன்னை கண்டு தாவுதே
    சொல்ல சொல்ல எல்லை மீறி உள்ளுக்குள்ளே பாயுதே
    பள்ளம் நாடும் வெள்ளம் போலே
    உன்னை கண்டு தாவுதே

    ஆதாம் ஏவாள் தன்னை சேர்த்த அணையா ஜோதியே
    ஆதாம் ஏவாள் தன்னை சேர்த்த அணையா ஜோதியே
    உந்தன் மின்னல் ரூபம் எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே
    இன்பம் கொள்வாய் மன்னா
    என்று சொல்லி என்னை கெஞ்சுதே
    உந்தன் மின்னல் ரூபம் எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே
    இன்பம் கொள்வாய் மன்னா
    என்று சொல்லி என்னை கெஞ்சுதே
    விந்தை காதல் பெண் புறாவே அருகே வாராய்
    விந்தை காதல் பெண் புறாவே அருகே வாராய்
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அழகு லைலா என்னைக் கண்டே
    ஆசை கொண்ட மஜ்னுவே


    திரைப்படம்:பாக்தாத் திருடன்
    இசை:ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:ஏ.பி.கோமளா

    அழகு லைலா என்னைக் கண்டே
    ஆசை கொண்ட மஜ்னுவே
    ஆளைக் கொல்லும் பார்வையே
    அம்பாய் எனையே தாக்குதே
    நழுவுதே என் உள்ளம் தன்னாலே
    நாடிடுதே உன்னையே
    பழகிடாமல் கூச்சம் வந்தே
    எனை தடுக்குதே மேரே ப்யாரே

    பல்லவி

    அறியா வயசு அறியா வயசு அதுவும் புதுசு
    அதனால் தயங்குது என் மனசு
    ஆனால் அதையும் அந்தர் பல்டி
    அடிக்கவும் செய்யுது உன் சொகுசு
    அடிக்கவும் செய்யுது உன் சொகுசு
    அடிக்கவும் செய்யுது உன் சொகுசு

    (இசை)

    அ ஆ ஆ ஆ...காதல் ஜுரத்தினால் சதையெல்லாம்
    கரைந்தே எலும்புக் கூடாகவே
    கண்கள் ரெண்டும் பஞ்சடைந்தே
    காட்சி தரும் கடை பொம்மையே
    பாரில் இது போல் உன்னையே
    படைத்த அல்லாவுக்கே என் சலாம்
    பார்க்கவே என் கண்கள் கூசும்
    உன் அழகுக்கு நானே குலாம்

    சரணம்

    எனக்கும் இருக்கு உனக்கும் இருக்கு
    எவருக்கும் இல்லாத பேராசை
    இங்கே இப்போ இடமில்லை அதுக்கு
    எதுக்குங்க எதுக்குங்க வீணாசை
    எதுக்குங்க எதுக்குங்க வீணாசை
    எதுக்குங்க எதுக்குங்க வீணாசை

    அறியா வயசு அறியா வயசு அதுவும் புதுசு
    அதனால் தயங்குது என் மனசு
    ஆனால் அதையும் அந்தர் பல்டி
    அடிக்கவும் செய்யுது உன் சொகுசு
    அடிக்கவும் செய்யுது உன் சொகுசு
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அடிமை நான் எழுத முனைந்தேன் காதல் கதையே


    திரைப்படம்:பாக்தாத் திருடன்
    இசை:ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:பி.சுசீலா


    அடிமை நான் எழுத முனைந்தேன் காதல் கதையே
    ஆசையும் மீறி என் வாழ்க்கை ஏட்டிலே
    தொடங்கிய போதே முடிந்ததே அதுவே

    பல்லவி

    எந்தன் கதை இதானா இருள் சூழ்ந்த வாழ்வு தானா
    இருள் சூழ்ந்த வாழ்வு தானா
    எந்தன் கதை இதானா இருள் சூழ்ந்த வாழ்வு தானா
    இருள் சூழ்ந்த வாழ்வு தானா

    (இசை)

    காதல் நிலை இதானா கலையும் மண் வீடு தானா
    கலையும் மண் வீடு தானா
    காதல் நிலை இதானா கலையும் மண் வீடு தானா
    கலையும் மண் வீடு தானா
    கனவோ என் ஆசை எல்லாம் உனையே நான் காணுவேனா
    இருள் சூழ்ந்த வாழ்வு தானா

    எந்தன் கதை இதானா இருள் சூழ்ந்த வாழ்வு தானா
    இருள் சூழ்ந்த வாழ்வு தானா

    (இசை)

    கொடியோடு மரமும் இணைந்தே
    குலவும் நாளே வராதா குலவும் நாளே வராதோ
    கொடியோடு மரமும் இணைந்தே
    குலவும் நாளே வராதா குலவும் நாளே வராதோ
    விடியாத இதய வானில் விடி வெள்ளி தோன்றிடாதோ
    இருள் சூழ்ந்த வாழ்வுதானா

    எந்தன் கதை இதானா இருள் சூழ்ந்த வாழ்வு தானா
    இருள் சூழ்ந்த வாழ்வு தானா....
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதைய்யா...ஓ

    திரைப்படம்:பாக்தாத் திருடன்
    இசை:ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:பி.சுசீலா

    ஓ...ஓ...ஓ... ஓ...ஒ ஒ ஒ ஒ...ஓ ஓ...ஓ...ஓ...ஓ (இசை)
    கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதைய்யா...ஓ
    கரைபோடும் ஆளைக் காணத் தேடுதைய்யா
    கருணையுள்ளோரும் இல்லையா...ஐயா
    கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதைய்யா...ஓ
    கரைபோடும் ஆளைக் காணத் தேடுதைய்யா

    (இசை)

    பெண்ணாக நானே பிறந்தும் வீணே (இசை)
    மண்ணுக்கு பாரமாய் உயிர் வாழுறேனே
    பொன்னுக்கு விலை கூறும்
    பொருளாகினேனே பொருளாகினேனே (இசை)
    கண்ணாலே என்னைக் கொஞ்சம் பாருமைய்யா...ஓ
    கனிவோடு ஏழை துன்பம் தீருமைய்யா
    கருணையுள்ளோரும் இல்லையா...ஐயா

    கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதைய்யா...ஓ
    கரைபோடும் ஆளைக் காணத் தேடுதைய்யா

    (இசை)

    அசைந்தாடும் கால்கள் தள்ளாடுதைய்யா (இசை)
    அதனாலே தாளம் தடுமாறுதைய்யா
    அதனாலே தாளம் தடுமாறுதைய்யா
    ஆறுதல் காணாமல் துயர் மீறுதைய்யா (இசை)
    அலை மோதி எந்தன் உள்ளம் வாடுதைய்யா ஓ
    நிலை மாறி சோக கீதம் பாடுதைய்யா
    கருணையுள்ளோரும் இல்லையா...ஐயா

    கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதைய்யா...ஓ
    கரைபோடும் ஆளைக் காணத் தேடுதைய்யா
    கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதைய்யா
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு

    திரைப்படம்:பாக்தாத் திருடன்
    இசை:ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:ஜிக்கி/சரஸ்வதி/கலா/ஜெயகுமாரி


    பெண் : சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
    திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு
    குழு : சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
    குழு : திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு


    பெண் : ஓ...ஓ செந்தாழை மேனி சிங்கார மூட்டும் (இசை)
    செந்தாழை மேனி சிங்கார மூட்டும்
    மண் மீது மாயா ஜாலங்கள் காட்டும்
    மண் மீது மாயா ஜாலங்கள் காட்டும்
    ஜாலங்கள் காட்டும்
    கண்டோரை எல்லாம் தொண்டாகச் செய்யும்
    கண் பார்வை அமுதெனும் தேன் மாரி பெய்யும்



    பெண் : ஓ...ஓ கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும் (இசை)
    கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும்
    கொல்லாமல் கொல்லும் காயம் உண்டாக்கும்
    கொல்லாமல் கொல்லும் காயம் உண்டாக்கும்
    காயம் உண்டாக்கும்
    வல்லாண்மைக்காரர் செல்வாக்கைப் போக்கும் மன்னாதி மன்னரை மண் பொம்மையாக்கும்

    குழு : சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
    திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு



    பெண் : ஓ...ஓ ஆடாமல் ஆடும் பாடாமல் பாடும் (இசை)
    ஆடாமல் ஆடும் பாடாமல் பாடும்
    அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும்
    அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும்
    அறிவே தள்ளாடும்
    கூடாத செல்வம் எல்லாமேக் கூடும்
    குறையுள்ள போதிலும் பின்னாலே ஓடும்

    அனைவர்:சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
    திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு
    சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
    திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பூத்துக் குலுங்குதே புது உணர்வு காணுதே

    திரைப்படம்:பாக்தாத் திருடன்
    இசை:ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:பி.சுசீலா

    ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
    பூத்துக் குலுங்குதே புது உணர்வு காணுதே
    காத்திருந்த என் பருவ காலமிதே...அ
    எதிர்பார்த்திருந்த இன்ப நாள் வந்ததே தன்னாலே
    பார்வையிலே காதல் அலை பொங்குதே உன்னாலே



    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்


    கொலைகார வேடன் வலை கண்டதாலே
    நிலைமாறி வந்த இளமானும் நானே
    என்னாசைத் தங்கமே அஞ்சாதே சிங்கமே
    என்னாசைத் தங்கமே அஞ்சாதே சிங்கமே நீ தஞ்சமே

    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்



    கருவண்டின் முன்னே களிப்போடு ரோஜா
    கண்ணாலேப் பேசி செய்யுதே தமாஷா
    எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
    எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா ஏன் தாமதம்

    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்


    அழகின் கஜானா உந்தன் ஜனானா
    அதற்கேற்ற மைனா வந்ததே தானா
    மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
    மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா ஆலம் பனா

    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    புல் புல் பார்வையிலே ஒரு
    புல் புல் பார்வையிலே உண்டாகும்


    திரைப்படம்:பாக்தாத் திருடன்
    இசை:ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:ஜமுனாராணி


    புல் புல் பார்வையிலே ஒரு
    புல் புல் பார்வையிலே உண்டாகும்
    போதையின் கார்வையிலே ஐயா மனம்
    ஜில் ஜில் ஆகுதே ஐயா மனம்
    ஜில் ஜில் ஆகுதே ஓ...ஓ...ஓ...
    ஐயா மனம் ஜில் ஜில் ஆகுதே


    கல்லான மனமும் ஒரு காதல் கனியும்
    பெண்ணாலே
    கல்லான மனமும் ஒரு காதல் கனியும்
    பெண்ணாலே
    உல்லாச நிலையில் இந்த
    உலகை மறக்கும் தன்னாலே ஓ...ஓ...ஓ...

    ஒரு புல் புல் பார்வையாலே உண்டாகும்
    போதையின் கார்வையிலே ஐயா மனம்
    ஜில் ஜில் ஆகுதே ஐயாமனம்
    ஜில் ஜில் ஆகுதே ஓ...ஓ...ஓ...
    ஐயா மனம் ஜில் ஜில் ஆகுதே


    பொன்னான காலம் நில்லாதே அது
    போனால் வராதே பொன்னான
    காலம் நில்லாதே அது போனால் வராதே
    இந்நாளில் வந்து சேரும் சுகம்
    எதையும் தள்ளாதே ஓ...ஓ...ஓ...

    ஒரு புல் புல் பார்வையிலே உண்டாகும்
    போதையின் கார்வையிலே ஐயாமனம்
    ஜில் ஜில் ஆகுதே ஐயாமனம்
    ஜில் ஜில் ஆகுதே ஓ...ஓ...ஓ...
    ஐயா மனம் ஜில் ஜில் ஆகுதே
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இரு கையைப்
    பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி

    திரைப்படம்:பாக்தாத் திருடன்
    இசை:ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:பி.சுசீலா
    அஅஅஅஆ அஅஅஆ அஅஆ அஅஆஆஆ அஅஆ
    அஅஆஆஆஅஆ அஅஆஆஆ...
    வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இரு கையைப்
    பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
    வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த
    ஜெகமே என் கையிலே
    வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப்
    பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
    வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த
    ஜெகமே என் கையிலே



    தாவென்று கேட்கு முன் இந்தாவென்றே அள்ளி
    ஓய்வின்றித் தரும் கை என் கையிலே ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ
    தாவென்று கேட்கு முன் இந்தாவென்றே அள்ளி
    ஓய்வின்றித் தரும் கை என் கையிலே இனி
    சீருண்டு பேருண்டு வாழ்விலே இனி
    சீருண்டு பேருண்டு வாழ்விலே இந்த
    ஜெகமே என் கையிலே

    வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப்
    பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
    வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த
    ஜெகமே என் கையிலே



    கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற
    காலத்தின் நினைவும் எனக்கில்லையே ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ
    கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற
    காலத்தின் நினைவும் எனக்கில்லையே என்
    கண் முன்னே நான் காணும் வாழ்விலே என்
    கண் முன்னே நான் காணும் வாழ்வினிலே இந்த
    ஜெகமே என் கையிலே

    வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப்
    பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
    வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த
    ஜெகமே என் கையிலே



    எந்நாளுமே என்னைக் கண்போலவே காக்கும்
    பண்பாளர் துணையும் உண்டானதே ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ
    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒஓ ஒஓ ஒஓ ஒஓ
    எந்நாளுமே என்னைக் கண்போலவே காக்கும்
    பண்பாளர் துணையும் உண்டானதே இனி
    தன்மானப் பெருவீரர் அன்பிலே இந்த
    ஜெகமே என் கையிலே

    வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப்
    பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
    வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த
    ஜெகமே என் கையிலே
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:பாசம்

    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சல வென சாலையிலே


    திரைப்படம்:பாசம்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:எஸ்.ஜானகி


    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சல வென சாலையிலே
    செல் செல் செல்லுங்கள் காளைகளே
    சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே


    காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
    கையில் உள்ளதை கொடு என்றான்
    கையில் எதுவும் இல்லை என்றே
    கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்
    (ஜல் ஜல் )


    அவனே திருடன் என வந்தான்
    அவனை நானும் திருடிவிட்டேன்
    முதல் முதல் திருடும் காரணத்தால்
    முழுதாய் திருட மறந்துவிட்டேன்
    (ஜல் ஜல் )


    இன்றே அவனை கைதி செய்வேன்
    என்றும் சிறையில் வைத்திருப்பேன்
    விளக்கம் சொல்லவும் முடியாது
    விடுதலை என்பதும் கிடையாது
    (ஜல் ஜல் )திரைப்படம்:பாசம்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி
    இயற்றியவர்:மருதகாசி
    பாடகர்கள்:எஸ்.ஜானகி


    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சல வென சாலையிலே
    செல் செல் செல்லுங்கள் காளைகளே
    சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே


    காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
    கையில் உள்ளதை கொடு என்றான்
    கையில் எதுவும் இல்லை என்றே
    கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்
    (ஜல் ஜல் )


    அவனே திருடன் என வந்தான்
    அவனை நானும் திருடிவிட்டேன்
    முதல் முதல் திருடும் காரணத்தால்
    முழுதாய் திருட மறந்துவிட்டேன்
    (ஜல் ஜல் )


    இன்றே அவனை கைதி செய்வேன்
    என்றும் சிறையில் வைத்திருப்பேன்
    விளக்கம் சொல்லவும் முடியாது
    விடுதலை என்பதும் கிடையாது
    (ஜல் ஜல் )
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக


    திரைப்படம்:பாசம்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி
    இயற்றியவர்:வாலி
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்


    உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக

    மலர்கள் மலர்வது எனக்காக
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
    கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நான் அறிவேன்
    என்னை அவனே தான் அறிவான்

    தவழும் நிலவாம் தங்கரதம்
    தாரகை பதித்த மணிமகுடம்
    குயில்கள் பாடும் கலைக்கூடம்
    கொண்டது எனது அரசாங்கம்

    எல்லாம் எனக்குள் இருந்தாலும்
    என்னை தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோயில்
    அவளே என்றும் என் தெய்வம்
     

Share This Page