1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தூங்காதே தம்பி தூங்காதே -
    நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே


    திரைப்படம்:நாடோடி மன்னன்
    இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

    தூங்காதே தம்பி தூங்காதே -
    நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
    (தூங்காதே)

    நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
    பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
    சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
    சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
    (தூங்காதே)

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
    நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
    சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
    அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
    விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
    உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
    (தூங்காதே)

    போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
    உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
    கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
    கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -

    சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
    பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
    (தூங்காதே)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:நான் ஆணையிட்டால்



    பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
    பெருமையுடன் வருக*


    திரைப்படம்:நான் ஆணையிட்டால்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

    பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
    பெருமையுடன் வருக*
    உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
    தேசம் நன்மை பெருக !

    ஆலமரம் போல நீ வாழ
    அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
    காலமகள் உன்னைத் தாலாட்ட*
    உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட*
    காலமகள் உன்னைத் தாலாட்ட*
    உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட*

    பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
    பெருமையுடன் வருக*
    உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
    தேசம் நன்மை பெருக

    புதிய சூரியன் உன் வரவு
    இந்த உலகம் யாவுமே உன் உறவு
    புதிய சூரியன் உன் வரவு
    இந்த உலகம் யாவுமே உன் உறவு
    எதையும் தாங்கிடும் நிலை பெறவே
    எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

    பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
    பெருமையுடன் வருக*
    உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
    தேசம் நன்மை பெருக !
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
    என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்


    திரைப்படம்:நான் ஆணையிட்டால்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்


    நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
    என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
    நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
    அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
    (நல்ல வேளை )

    நானே எழுதி நானே நடித்த
    நாடகத்தில் ஒரு திருப்பம்
    என்னை நம்பியிருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
    என்றும் அது தானே என் விருப்பம்
    எதிர் காலம் ஒன்று புது கோலம் கொண்டு
    மனவாசல் தேடி வருமே
    (நல்ல வேளை )

    கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
    கதையில் என்ன தயக்கம்
    மலர் கட்டில் அறையில் அன்று கிட்டும் வரையில்
    சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்
    ஒரு பாதி அங்கும் மறு பாதி இங்கும்
    சரி பாதி இங்கு வருமே
    (நல்ல வேளை )

    மடி மேல் துயிலும் கொடி போல் துவளும்
    பேரழகை படம் பிடித்தேன்
    அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால்
    தொட்டு பார்க்கையிலே உயிர் துடித்தேன்
    காதல் போன்ற உள்ளம் கரை மீறி துள்ளும்
    உடல் சேரும் எண்ணம் வருமே
    (நல்ல வேளை )
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தாய் மேல் ஆணை...
    தமிழ் மேல் ஆணை...



    திரைப்படம்:நான் ஆணையிட்டால்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்


    தாய் மேல் ஆணை...
    தமிழ் மேல் ஆணை...
    தாய் மேல் ஆணை
    தமிழ் மேல் ஆணை
    குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
    தனியானாலும் தலை போனாலும்
    தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் (தாய் மேல்)

    இருட்டினில் வாழும் இதயங்களே
    கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
    நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
    என்பதை பாருங்கள்
    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
    என்பது கேள்வி இல்லை -
    அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
    வாழ்க்கையில் தோல்வியில்லை...
    வாழ்க்கையில் தோல்வியில்லை... (தாய் மேல்)

    தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
    சிறைச்சாலைகள் தேவை இல்லை
    இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே
    எடுப்பவர் யாரும் இல்லை
    பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
    வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
    அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
    வார்த்தையில் அடங்கவில்லை...
    வார்த்தையில் அடங்கவில்லை... (தாய் மேல்)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஓடி வந்து மீட்பதற்கு
    உன்னை போல் கால்கள் இல்லை


    திரைப்படம்:நான் ஆணையிட்டால்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

    ஓடி வந்து மீட்பதற்கு ...
    உன்னை போல் கால்கள் இல்லை ...
    ஓய்ந்திருந்து கேட்பதற்கு ...
    நீதிக்கோ நேரம் இல்லை ...
    பார்த்த நிலை சொல்வதற்கு ...
    பரமனுக்கோ உருவம் இல்லை ...
    பழி சுமந்து செல்வதன்றி ...
    இவனுக்கோ பாதை இல்லை ...

    மேகங்கள் இருண்டு வந்தால்
    அதை மழை என சொல்வதுண்டு
    மனிதர்கள் திருந்தி வந்தால்
    அதை பிழை என கொள்வதுண்டோ

    நெஞ்சத்தில் நேர்மை வந்தால்
    அதில் நீதிக்கு பெருமை உண்டு ... ஹோ ...
    வஞ்சகம் தேரில் வந்தால்
    அதை வணங்கிட முறையும் உண்டோ ...

    மேகங்கள் இருண்டு வந்தால்
    அதை மழை என சொல்வதுண்டு
    மனிதர்கள் திருந்தி வந்தால்
    அதை பிழை என கொள்வதுண்டோ


    த்யாகத்தின் தலை நிமிர்ந்தால்
    இந்த தரணிக்கு லாபம் உண்டு ... ஹோ ...
    தீமையின் கை உயர்ந்தால்
    இங்கு தருமங்கள் வாழ்வதுனோ ...
    அரும்புகள் மலர்ந்து வந்தால்
    அந்த அழகினை ரசிப்பதுண்டு
    பருந்துகள் திருட வந்தால்
    அந்த பண்பினை பொருப்பதுண்டோ
    உண்மைக்கு காலம் வந்தால்
    சிலர் உயர் குணம் புரிவதுண்டு

    ஊருக்கு நன்மை வந்தால்
    நல்ல உள்ளங்கள் மகிழ்வதுண்டு
    மேகங்கள் இருண்டு வந்தால்
    அதை மழை என சொல்வதுண்டு
    மனிதர்கள் திருந்தி வந்தால்
    அதை பிழை என கொள்வதுண்டோ
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
    அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்



    திரைப்படம்:நான் ஆணையிட்டால்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்,,p.சுசீலா

    உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
    அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
    அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
    அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

    இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
    அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
    எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
    எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -
    (உன்னை )

    காதல் என்றொரு சிலை வடித்தேன்
    அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
    சிறை எடுத்தாலும் காவலன் நீயே
    காவலன் வாழ்வில் காவியம் நானே -
    (உன்னை )
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா ..வா

    திரைப்படம்:நான் ஆணையிட்டால்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்,p.சுசீலா

    நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா ..வா
    நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா ..தா
    நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
    நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா


    உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா
    உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா
    நான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேட வா
    நான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேட வா
    என்னை நீ தேட வா
    நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
    நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா


    நீ பக்கத்தில் வர வேண்டும்
    நான் பழரசம் தர வேண்டும்
    நீ வெட்கத்தை விட வேண்டும்
    நான் சொர்க்கத்தைத் தொட வேண்டும்
    தாய் தந்தாள் பால் மயக்கம்
    தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
    தாய் தந்தாள் பால் மயக்கம்
    தமிழ் தந்தாள் நூல் மயக்கம்
    நீ தந்தாய் பெண் மயக்கம்
    நான் தந்தேன் கண் மயக்கம்

    காலம் நேரம் ஜாடையில் சொல்ல
    நான் செல்ல ... வா மெல்ல ..
    காதல் போகும் பாதையில் நின்று ...
    யார் என்று ... பார் இன்று


    நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
    நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா
    நான் மேலே பறக்கின்றேன்
    இந்த உலகத்தை மறக்கின்றேன்
    நீ எங்கே இருக்கின்றாய்
    நான் அங்கே வருகின்றேன்


    மான் என்னும் பேர் அடைந்தேன்
    மனம் என்னும் ஊர் அடைந்தேன்
    மான் என்னும் பேர் அடைந்தேன்
    மனம் என்னும் ஊர் அடைந்தேன்
    நீ தந்த நிழல் அடைந்தேன்
    நீங்காத நிலை அடைந்தேன்


    ஆடை மூடும் பாவையின் கன்னம்
    மலர் வண்ணம் மதுக் கிண்ணம்
    ஆசை வாழும் காதலர் உள்ளம்
    அது கொள்ளும் புது வெள்ளம்
    நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
    நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
    என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே


    திரைப்படம்:நான் ஆணையிட்டால்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:p.சுசீலா,எம்.எஸ்.விஸ்வநாதன்

    கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
    என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
    நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
    உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
    கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
    என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
    நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
    உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே


    நினைத்தேன் உடன் பார்த்தேன்
    மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
    நினைத்தேன் உடன் பார்த்தேன்
    மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
    களித்தேன் சுகம் குளித்தேன்
    கதை படித்தேன்என்னை மறந்தேன்..
    என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்


    பாலும் புது தேனும் பனி போல்
    என் மேலே படர்ந்தோட இடம் தேட
    அமுதாகவே பாய்ந்தாய்
    என்னைக் கொடுத்தேன்..
    என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்


    கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
    என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
    நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
    உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:நான் ஏன் பிறந்தேன்


    தம்பிக்கு ஒரு பாட்டு
    அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு



    திரைப்படம்:நான் ஏன் பிறந்தேன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:சங்கர் கணேஷ்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்


    பட்டுக் கண்ணே ,செல்ல பாப்பா
    நல்ல தம்பி, வெல்லக் கட்டி ,சுட்டி பையா

    தம்பிக்கு ஒரு பாட்டு
    அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
    வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும்
    நான் சொல்லும் கதை பாட்டு

    ஒரு மேதை பகல் வேளை
    கையில் விளக்குடன் சென்றாராம்
    மனிதன் எங்கே காணவில்லை
    தேடுகிறேன் நான் என்றாராம்
    பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம்
    மனிதர்கள் அல்ல என்றாராம்
    இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்
    வாழ்பவன் மனிதன் என்றாராம்

    (தம்பிக்கு ஒரு பாட்டு )


    கையிரண்டு காலிரண்டு
    கடவுள் கொடுத்தான் மனிதருக்கு
    இதயம் மட்டும் ஒன்று வைத்தான்
    சிந்தனை ஒரு வழி செல்வதற்கு
    உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால்
    தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே
    உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும்
    உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே


    **********************************
    தம்பிக்கு ஒரு பாட்டு
    அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு



    திரைப்படம்:நான் ஏன் பிறந்தேன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:சங்கர் கணேஷ்
    பாடியவர்:ராஜேஸ்வரி/கௌசல்யா/அஞ்சலி

    அனைவர் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்புத்
    தங்கைக்கு ஒரு பாட்டு எங்கள்
    நம்பிக்கு வளர்வதற்கு உதவும்
    நீ சொன்ன கதைப் பாட்டு இன்று நீ வா இதைக் கேட்டு

    (இசை)

    பெண் 1 : கூடில்லாத குருவிகள் போலே வீடில்லாமல் அலைகின்றோம்
    பெண் 2 : கூரையில்லாத தெருவோரம் ஏழைகளாகி வாழ்கின்றோம்
    பெண் 3 : போட்டுக்க சட்டை யார் கொடுப்பா
    புதுப் புதுப் பாட்டா யார் படிப்பா
    பெண் 1 : கேட்டதை வாங்கி யார் தருவா
    கொஞ்சிப் பேச யார் வருவா
    கொஞ்சிப் பேச யார் வருவா

    அனைவர் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்புத்
    தங்கைக்கு ஒரு பாட்டு எங்கள்
    நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
    நீ சொன்ன கதைப் பாட்டு
    இன்று நீ வா இதைக் கேட்டு

    (இசை)

    பெண் 1 : எத்தனை தூரம் உன்வீடு எங்கே இருக்குது நீ கூறு
    பெண் 2 : ஓர் வழியின்றிக் கிடக்கின்றோம்
    பெண் 3 : உன்னைத் தேடி நடக்கின்றோம்
    தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை
    திரும்பிப் போகவும் வழியுமில்லை
    பெண் 1 : நாங்கள் உன்னை மறக்கவில்லை
    நீ ஏன் எங்களை நினைக்க வில்லை
    அனைவர் : நீ ஏன் எங்களை நினைக்க வில்லை


    பெண் 3 : அம்மா முகத்தில் சிரிப்பில்லே
    அண்ணியின் கண்ணில் ஒளியில்லே
    பெண் 2 : அக்கா உடம்பு சரியில்லே யாரிடம்
    சொல்வது புரியல்லே
    பெண் 1 : தாயிருந்தாலும் எங்களுக்கு தைரியம்
    சொல்ல முடியல்லே
    அனைவர் : நீயிருந்தால் தான் எல்லாமே
    நீ ஏன் இன்னும் வரவில்லே
    பெண் 3 : நீ ஏன் இன்னும் வரவில்லே

    அனைவர் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்புத்
    தங்கைக்கு ஒரு பாட்டு எங்கள்
    நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
    நீ சொன்ன கதைப்பாட்டு
    இன்று நீ வா இதைக் கேட்டு
    இன்று நீ வா இதைக் கேட்டு
    இன்று நீ வா இதைக் கேட்டு
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்


    திரைப்படம்:நான் ஏன் பிறந்தேன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:சங்கர் கணேஷ்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

    நாடென்ன செய்தது ந*ம*க்கு
    என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு
    என நினைத்தால் நன்மை உனக்கு
    நாடென்ன செய்தது ந*ம*க்கு
    என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு
    என நினைத்தால் நன்மை உனக்கு

    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

    மலையில் பிறந்த நதியால்
    மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால்
    அவர் பசியும் தணிந்தது
    மலையில் பிறந்த நதியால்
    மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால்
    அவர் பசியும் தணிந்தது
    கொடியில் பிறந்த மலரால்
    எங்கும் வாசம் தவழ்ந்தது
    அன்னை மடியில் பிறந்த உன்னால்
    என்ன பயன் தான் விளைந்தது

    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா

    பத்துத் திங்கள் சுமந்தாளே
    அவள் பெருமைப் படவேண்டும்
    உன்னைப் பெற்றதனால் அவள்
    மற்றவராலே போற்றப்பட வேண்டும்
    க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக*
    த*னி இட*மும் த*ர* வேண்டும்
    உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
    உல*க*ம் அழ* வேண்டும்

    நான் ஏன் பிறந்தேன்
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா
    நினைத்து செயல்படு என் தோழா
    உடனே செயல்படு என் தோழா
     

Share This Page