1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நாடு அதை நாடு..
    அதை நாடாவிட்டால் ஏது வீடு

    திரைப்படம்:நாடோடி
    இயற்றியவர்:கண்ணதாசன்,வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:பி.சுசீலா



    நாடு அதை நாடு..
    அதை நாடாவிட்டால் ஏது வீடு
    பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
    மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
    ( நாடு )


    பாலைவனம் என்றபோதும் நம் நாடு
    பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
    ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
    வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
    ( நாடு )


    வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
    வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
    வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
    வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
    ( நாடு )


    பசி என்று வந்தோர்க்கு விருந்தாக மாறும்
    பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
    நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
    எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
    ( நாடு )
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்து விட்டேன்

    திரைப்படம்:நாடோடி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:பி.சுசீலா


    கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்து விட்டேன் -
    என்காட்சியிலே ஒரு கடவுளில்லை
    மன சாட்சி என்றேன் நீயிருந்தாய்
    (கண்களினால்)


    முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்தாய்
    முத்து நகையை வாழ வைத்தாய்
    நெல்லில் மணி போல் பாலில் நெய் போல்
    நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய்
    வள்ளல் மனமே பிள்ளை குணமே
    அள்ளி அணைக்கும் தாயல்லவோ
    ஆஹா..ஆஹா..ஆஹா..ஆ...ஆ,,,
    (கண்களினால்)


    உன்னைத் தொடர்ந்தே நான் வந்தேன்
    ஒசை கேட்டே நான் சிரித்தேன்
    சொன்ன மொழியில் உள்ளம் அறிந்தேன்
    தன்னை மறந்தே தவழுகிறேன்
    இன்பமேனும் துன்பமேனும்பாதி பெறவே
    நான் வந்தேன்ஆஹா..ஆஹா..ஆஹா..ஆ...ஆ,,,
    (கண்களினால்)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் என் அருகே -


    திரைப்படம்:நாடோடி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:எல்.ஆர். ஈஸ்வரி ,பி.சுசீலா

    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் என் அருகே -
    நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
    நீ அறிவாயே வெண்ணிலவே

    அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்
    இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
    பாதி விழிகள் மூடிக் கிடந்தேன் பாவை மேனீயிலே..
    நீ பார்த்தாயே வெண்ணிலவே

    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவள் இருந்தால் என் அருகே -
    நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
    நீ அறிவாயே வெண்ணிலவே

    வானும் நதியும் மாறாமல் இருந்தால்
    நானும் அவளும் நீங்காமல் இருப்போம்
    சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம் காதல் மேடையிலே .
    . நீ சாட்சியடி வெண்ணிலவே

    அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் என் அருகே
    நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
    நீ அறிவாயே வெண்ணிலவே
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:நாடோடி மன்னன்

    சம்மதமா…..சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா



    திரைப்படம்:நாடோடி மன்னன்
    இயற்றியவர்:ந.மா.முத்துக்கூத்தன்
    இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்:பானுமதி

    சம்மதமா…..சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா
    சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
    சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா
    சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
    சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா

    வெகு தூரம் தனியே போவதபாயம்
    வெகு தூரம் தனியே போவதபாயம்
    தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம்
    தகுந்த துணை உங்களைபோல் ஒன்றுதான் அவசியம்
    சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா
    சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
    சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா

    கோழி குஞ்சு கூட இருந்தா பருந்தை எதிர்க்குமே
    நல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும் ஆட்டை தடுக்குமே
    பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
    நடந்தே போகலாம்
    பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
    நடந்தே போகலாம்
    மீறி பசி வந்தாலும் பறவைபோலே
    பகிர்ந்தே உண்ணலாம் பகிர்ந்தே உண்ணலாம்

    சம்மதமா
    இப்போ சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா
    சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
    சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா
    சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
    சம்மதமா
    நான் உங்கள் கூட வர சம்மதமா
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்


    திரைப்படம்:நாடோடி மன்னன்
    இயற்றியவர்:ந.மா.முத்துக்கூத்தன்
    இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்:


    உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
    உண்டாவதெங்கே சொல் என் தோழா
    உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
    உண்டாகும் என்றே சொல் என் தோழா

    கல்வி கற்றோம் என்ற கர்வதிலே இன்பம்
    உண்டாவதில்லை என் தோழா
    கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
    காண்பதில் தான் இன்பம் என் தோழா

    இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம்
    உண்டாவதில்லை என் தோழா
    அரிய பல் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
    அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா

    பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
    கிட்டுவதே இல்லை என் தோழா
    உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
    உண்டாகும் என்றே சொல் என் தோழா
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண்ணோட கண்ணு கலந்தாச்சு
    காணாத இன்பம் கண்டாச்சு


    திரைப்படம்:நாடோடி மன்னன்
    இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்:ஜிக்கி


    கண்ணோட கண்ணு கலந்தாச்சு
    காணாத இன்பம் கண்டாச்சு
    ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
    உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு (கண்ணோட)

    பொன்னான பொண்ணு தனியா நின்ன
    பொல்லாத காலம் கடந்தாச்சு
    கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
    பொன்னான நேரம் பொறாந்தாச்சு (கண்ணோட)

    சின்னஞ் சிறிசிலே அஞ்சு வயசிலே
    நெஞ்சிலே கொண்ட அன்பு-
    இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு-
    இப்போ என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
    பாராமலே வந்த வம்பு...
    எதிர் பாராமலே வந்த வம்பு (கண்ணோட)

    கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
    அன்னைக்கு வந்த அன்பு....
    அதில் என்னைக்கும் இல்லே வம்பு...
    அது என்னையும் உன்னையும் கேக்காமே
    இணைக்கப் போவுதே வம்பு...
    ஆஹா வேண்டாமே இந்த வம்பு (கண்ணோட)

    எங்கே என் இன்பம் எங்கே?
    என் இதயம் எங்கே?
    பகைவர் நடுங்கும் நடை எங்கே?-
    என் பக்கம் இருந்த பலம் எங்கே? (எங்கே)
    வீரமாமுகம் தெரியுதே-
    அது வெற்றிப் புன்னகை புரியுதே
    விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
    மேலும் மேலும் என் ஆசை பெருகுதே
    காதல் வளருதே! வாழ்வு மலருதே!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மானை தேடி மச்சான் வர போறான்
    ஹய் வர போறான்


    திரைப்படம்:நாடோடி மன்னன்
    இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்:ஜிக்கி குழுவினர்


    ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா...
    ஓஹோ ஹோ ஹோய்...
    ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா...
    ஓஹோ ஹோ ஹோய்... ஓ...ஓ.........
    ஹோ ஹோ ஹோ ஹோய்...
    ஜில் ஜில் ஜில் ஜோருக்க ஜம்ப்ப ஜொருக்க ஜம்ப்ப ...
    ஹோஹோய்..
    ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா.
    ஓஹ் ஹோஹோ ஹோஹோ ஓஓ...

    மானை தேடி மச்சான் வர போறான்
    ஹய் வர போறான்
    தாளத்தோட தாலி கட்ட போறான்
    ஹய் கட்ட போறான்
    மானை தேடி மச்சான் வர போறான்
    ஹய் வர போறான்

    தாலி கட்டும் வீரன் அவன் யாரு
    ஹய் எந்த ஊரு
    மாலை கட்ட வேணும் கொஞ்சம் கூறு
    ஹய் என்ன பேரு

    மானை தேடி மச்சான் வர போறான்
    ஹய் வர போறான்

    போதும் போதும் கேலி சும்மா போடீ....
    ஹேய் பொடி வச்சி பேசும் வம்புக்காரி
    போதும் போதும் கேலி சும்மா போடீ....
    ஹேய் பொடி வச்சி பேசும் வம்புக்காரி
    சின்னஞ்சிறு அன்னம்
    நீ எண்ணும் பல எண்ணம்
    முன்னும் பின்னுமாக வந்து மின்னும்
    பிறகு என்ன பண்ணும்..
    உறவு வந்து பின்னும்...
    அழகிலே நடையிலே சுகமெல்லாம் வளர்ந்து விடுமோ
    ஆசை பொங்கும் தோட்டம்
    அமுதூட்டும் பழ தோட்டம்


    என்னன்னமோ சொல்லி என் மனதை கிள்ளி
    என்னன்னமோ சொல்லி என் மனதை கிள்ளி
    இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி...ஹேய்...
    இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி
    பருவம் வந்து துள்ளி உருகுறாளே வள்ளி ...

    மானை தேடி மச்சான் வர போறான்
    ஹய் வர போறான்
    தாளத்தோட தாலி கட்ட போறான்
    ஹய் கட்ட போறான்
    மானை தேடி மச்சான் வர போறான்
    ஹய் வர போறான்
    ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா...
    ஓஹோ ஹோ ஹோய்...
    ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா...
    ஓஹோ ஹோ ஹோய்... ஓ...ஓ.........
    ஹோ ஹோ ஹோ ஹோய்...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தடுக்காதே என்னை தடுக்காதே
    தடுக்காதே என்னை தடுக்காதே



    திரைப்படம்:நாடோடி மன்னன்
    இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்:சந்திரபாபு

    தடுக்காதே என்னை தடுக்காதே
    தடுக்காதே என்னை தடுக்காதே
    தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே
    தடுக்காதே என்னை தடுக்காதே
    தடுக்காதே என்னை தடுக்காதே

    முறுக்காதே சும்மா முறுக்காதே
    முறுக்காதே சும்மா முறுக்காதே
    முனிவரை போலவே வேசம் போடாதே
    முறுக்காதே சும்மா முறுக்காதே
    முறுக்காதே சும்மா முறுக்காதே

    உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா
    ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா
    சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
    வேற வழி ஏதம்மா
    சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
    வேற வழி ஏதம்மா

    தடுக்காதே என்னை தடுக்காதே
    தடுக்காதே என்னை தடுக்காதே

    சோறு கண்ட இடம் சொர்க்கமா
    ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
    சோறு கண்ட இடம் சொர்க்கமா
    ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
    தோழனை காக்க மறக்கலாகுமா
    கோழையே உனக்கு மீச வேணுமா
    தோழனை காக்க மறக்கலாகுமா
    கோழையே உனக்கு மீச வேணுமா

    முறுக்காதே சும்மா முறுக்காதே
    முறுக்காதே சும்மா முறுக்காதே

    ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன்
    மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
    வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
    வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
    வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
    வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்

    தடுக்காதே என்னை தடுக்காதே......ஹே..
    தடுக்காதே என்னை தடுக்காதே
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
    இன்ப காவிய கலையே ஓவியமே


    திரைப்படம்:நாடோடி மன்னன்
    இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்:ஜிக்கி,டி.எம். சௌந்தர்ராஜன்

    கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
    இன்ப காவிய கலையே ஓவியமே
    கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
    இன்ப காவிய கலையே ஓவியமே
    செழும் கனி போல சுவை தரும் மாமணி
    என் பாடிடும் பூங்குயிலே
    செழும் கனி போல சுவை தரும் மாமணி
    என் பாடிடும் பூங்குயிலே -
    இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

    சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
    உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
    சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
    உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
    நீல வானம் இல்லாத ஊரே இல்லை
    உலகினில் மழை இன்றி யேதும் இல்லை
    அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
    அன்பே இது உண்மையே -
    இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

    அங்கும் இங்கும் விளையாடி
    அலை போல உறவாடி
    அங்கும் இங்கும் விளையாடி
    அலை போல உறவாடி
    ஆனந்தம் காணும் நேரம் தானே
    உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே
    உன்னை உன்னை தேடுதே ....
    கொஞ்சி பேசும் கிழியே
    நல் இன்பம் தரும் ஜோதியே
    மானே மலரினும் மெல்லியது காதலே
    கொஞ்சி பேசும் கிழியே
    நல் இன்பம் தரும் ஜோதியே
    மானே மலரினும் மெல்லியது காதலே
    மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
    மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே -
    இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)
     
    Last edited: Jan 23, 2011
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
    சோம்பல் இல்லாம ஏர் நடத்தி


    திரைப்படம்:நாடோடி மன்னன்
    இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர்:

    சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
    சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
    கம்மா கரையை ஒசத்தி கட்டி
    கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
    சம்பா பயிரை பறிச்சு நட்டு
    தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
    நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு -
    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
    கையும் காலும் தானே மிச்சம்
    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
    கையும் காலுந்தானே மிச்சம்
    இப்போ காடு விளையட்டும் பொண்ணே
    நமக்கு காலமிருக்குது பின்னே
    காலமிருக்குது பின்னே

    மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
    பொண்ணை எடுக்க கனிகள் வெட்டி
    மதிலு வச்சு மாளிகை கட்டி
    கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
    வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
    பட்ட துயரினி மாறும் -
    ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்

    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
    கையும் காலுந்தானே மிச்சம்
    இப்போ காடு விளயட்டும் பொண்ணே
    நமக்கு காலம் இருக்குது பின்னே
    நமக்கு காலம் இருக்குது பின்னே

    மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
    பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
    அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
    சேர்வதினால் வரும் தொல்லையடி
    பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
    பண்ண வேண்டியது என்ன மச்சான்
    தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
    சிந்திச்சு முன்னேற வேணுமடி
    வாடிக்கையாய் வரும் துன்பங்களை
    இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
    இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
    சேகரித்தால் இன்பம் திரும்புமடி
    நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
    மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
    நாளை வருவதை எண்ணி எண்ணி
    அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி


    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
    கையும் காலுந்தானே மிச்சம்
    நானே போடப்போறேன் சட்டம்
    பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்
    நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்
     

Share This Page