1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
    இது மனசுக்குத் தாளம்
    ....

    திரைப்படம்: நல்ல நேரம்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்,p.சுசீலா


    டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
    இது மனசுக்குத் தாளம்
    டக் டக் டக் டக் டக் டக் டக்
    இது உறவுக்குத் தாளம்
    காதல் உலகத்தின் தாளம்
    கெட்டி மேளம் மணக்கோலம்


    ஓடும் நதியினில் சலசல என்றொரு
    ராகம் ராகம் ராகம்
    தேடும் பெண்ணுக்கு குளுகுளு என்றொரு
    மோகம் மோகம் மோகம்
    ஆடும் இலைகள் அசைகின்ற ஓசை
    வாவா..வாவா..வாவா..
    ஆசை நடுவில் நாணத்தின் ஓசை
    ஊஹ¥ம்..ஊஹ¥ம்..உஹ¥ம்..
    ஆசை உண்டானதால்ஓசை உண்டானது
    (டிக்)


    தனிமையில் இருந்து அனல் விடும் மூச்சு
    ஹா.. ஹா.. ஹா....
    தழுவிடும் இருவர் குளிர் விடும் மூச்சும்
    ஹ்ஹா,,, ம்ஹ்ஹா...ம்ஹ்ஹா..
    அன்புடன் மனைவி கணவனை அழைப்பாள்
    அம்மா அம்மா அம்மா
    ஆசையில் கணவன் மனைவியை அழைப்பான்
    அய்யா அய்யா அய்யா
    ஆசை உண்டானதால் ஓசை உண்டானது
    (டிக்)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா

    திரைப்படம்: நல்ல நேரம்
    இயற்றியவர்:அவினாசிமணி
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்


    ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
    மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
    ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
    மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
    ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா

    காருக்குள்ள பொண்ணிருக்கு பாத்துக்கோ
    கண்ணுரெண்டும் பொண்ணு மேல போட்டுக்கோ
    தேருபோல போகவேணும் கேட்டுக்கோ
    தேவை என்ன கேட்டு நீயும் வாங்கிக்கோ
    காருக்குள்ள பொண்ணிருக்கு பாத்துக்கோ
    கண்ணுரெண்டும் பொண்ணு மேல போட்டுக்கோ
    தேருபோல போகவேணும் கேட்டுக்கோ தேவை
    என்ன கேட்டு நீயும் வாங்கிக்கோ
    காட்டுக்குள்ளே கன்னிப்பொண்ணு
    தன்னந்தனியா வந்து மாட்டிக்கிட்டா (ஆகட்டும்டா தம்பி.............


    பள்ளம் மேடு பார்த்து போகணும்
    பத்திரமா பொண்ணை கொண்டு சேர்க்கணும்
    அள்ளித்தரும் பரிசை வாங்கணும்
    அப்புறம் தான் வேற ஒண்ணு கேட்கணும்
    பள்ளம் மேடு பார்த்து போகணும்
    பத்திரமா பொண்ணை கொண்டு சேர்க்கணும்
    அள்ளித்தரும் பரிசை வாங்கணும்
    அப்புறம் தான் வேற ஒண்ணு கேட்கணும்
    எது புரியுதா?... உனக்கு தெரியும் அதுக்கு புரியும்
    உள்ளுக்குள்ளே நினைச்சி சிரிக்குது...
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்: நல்லவன் வாழ்வான்

    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


    திரைப்படம்: நல்லவன் வாழ்வான்
    இயற்றியவர்:அவினாசிமணி
    இசை:டி.ஆர்.பாப்பா
    பாடியவர்:

    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
    மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
    மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


    ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
    ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
    கொட்டும் பனி கடலுக்குள்ளே
    குதிச்சதுப் போல் இருக்குது
    கொட்டும் பனி கடலுக்குள்ளே
    குதிச்சதுப் போல் இருக்குது


    பட்டுப்போல் ரோஜாப்பூவு பனித்துளியில் குளிக்குது
    பறக்கும் வண்டுகள் எல்லாம் தேனில் குளிக்குது
    கட்டறுந்த இளம் மனசு காதலிலே குளிக்குது
    காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
    காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


    சுட்டெடுக்கும் வேர்வையிலே ஒரு மனசு குளிக்குது
    காற்றை புடிச்சிக்கிட்டு தண்ணீரில் மிதக்குது
    உல்லாச கோட்டைகட்டி உச்சியில கொடியும் கட்டி
    பல்லாண்டு பாடி ஒண்ணு களிக்குது
    உல்லாச கோட்டைகட்டி உச்சியில கொடியும் கட்டி
    பல்லாண்டு பாடி ஒண்ணு களிக்குது
    பன்னீர ஊத்தி ஊத்தி குளிக்குது
    த்சோ ..த்சோ ..த்சோ ..
    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


    தங்கம் போல் உடம்பை தொட்டா
    தனி மயக்கம் பிறக்குது
    தங்கம் போல் உடம்பை தொட்டா
    தனி மயக்கம் பிறக்குது
    சிங்கார கை பட்டா சிலுசிலுப்பாக இருக்குது
    சிங்கார கை பட்டா சிலுசிலுப்பாக இருக்குது


    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குது
    மனசும் மயங்குது சுகமும் கிடைக்குது
    குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குது
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
    சிந்திய கண்ணீர் மாறியதாலே


    திரைப்படம்: நல்லவன் வாழ்வான்
    பாடல் :வாலி
    இசை :டி.ஆர்.பாப்பா
    பாடியவர்கள் :சீர்காழி கோவிந்தராஜன்,சுசீலா


    சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
    சிந்திய கண்ணீர் மாறியதாலே
    (சிரிக்கின்றாள்)


    அன்புத் திருமுகம் காணாமல் -
    நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
    காலப் புயலில் அணையாமல் -
    நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
    உதய சூரியன் எதிரில் இருக்கையில்
    உள்ளத்தாமரை மலராதோ ?
    உள்ளத்தாமரை மலராதோ ?
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இருண்ட பொழுதும் புலராதோ ?
    இருண்ட பொழுதும் புலராதோ ?
    (சிரிக்கின்றாள்)


    தேன் மலராடும் மீன் விளையாடும்
    அருவியின் அழகைப் பாரீரோ
    நான் வரவில்லை என்பதனால்
    உன்மீன் விழி சிந்திய கண்ணீரோ
    மலர் மழை போலே மேனியின் மேலே
    குளிர் நீரலைகள் கொஞ்சிடுதே
    தளிர்ப் பூங்கொடியைத் தழுவி இருந்தே
    குளிர் காய்ந்திடவே கெஞ்சிடுதே
    குளிர் காய்ந்திடவே கெஞ்சிடுதே


    சிரிக்கின்றோம் இன்று சிரிக்கின்றோம்
    சிந்திய கண்ணீர் மாறியதாலே
    சிரிக்கின்றோம் இன்று சிரிக்கின்றோம்
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
    அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....


    திரைப்படம்: நல்லவன் வாழ்வான்
    இயற்றியவர்:ஆத்மநாதன்
    இசை:டி.ஆர்.பாப்பா
    பாடியவர்:சீர்காழி கோவிந்தராஜன்


    ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
    அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

    வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
    வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
    விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
    விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

    நல்லவர்போல் வெளி வேஷங்கள்
    அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
    நாணயத்தோடு நல்லறம்
    காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    தன்மானம் காப்பதிலே
    அன்னை தந்தையை பணிவதிலே
    பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
    காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    சத்தியத்தின் எல்லையிலே
    உயர் சமரச நெறிகளிலே ஆஆ....
    சத்தியத்தின் எல்லையிலே
    உயர் சமரச நெறிகளிலே
    அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
    உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:நவரத்தினம்
    திரைப்படம்: நவரத்தினம்
    இயற்றியவர்:
    இசை:குன்னக்குடி வைத்தியநாதன்
    பாடியவர்:

    உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
    அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
    உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
    அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
    உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்


    கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
    பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
    கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
    பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
    சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
    பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
    சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
    பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
    ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
    அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
    ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
    அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
    செல்வம் இன்று வந்து நாளை போவது
    செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
    செல்வம் இன்று வந்து நாளை போவது
    செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது


    ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
    அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
    ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
    அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
    யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
    அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
    யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
    அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

    **********************************

    **********************************

    **********************************

    குருவிக்கார மச்சானே யே யே யே யே யோவ்…
    குருவிக்கார மச்சானே யே யே யே யே
    நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே
    குருவிக்கார மச்சானே
    நம்ம கடவுள் சேத்து வச்சானே

    கோழி கூவும் வரயிலே
    கொண்டாட்டம்தான் அறையிலே
    கோழி கூவும் வரயிலே
    நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே
    குருவிக்கார மச்சானே யே யே யே யே
    நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே


    குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
    நான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ யீ
    குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
    நான் குறவன் தாண்டி உஞ்சாதி


    ஊசி கண்ணை சுத்தாதே
    ஒடம்பு பூரா குத்தாதே
    உன் ஊசி கண்ணை சுத்தாதே
    என் ஒடம்பு பூரா குத்தாதே


    குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
    நான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ ஈ ஈயீ

    திருடனாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச
    நீ திருடானாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச
    புருஷனாட்டம் மனசுக்குள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச
    இப்போ புருஷனாட்டம் மனசுகுள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச
    ஒஃ சாமீஈஈ.. ஓ சாமீ
    சும்மா கிடந்த ஒடம்புகுள்ளே சூடு பொறந்ததென்ன
    செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
    சின்ன இடையை பின்ன
    இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
    சின்ன இடையை பின்ன

    குருவிக்கார மச்சானே
    நம்ம கடவுள் சேத்து வச்சானே

    இன்னாத்த தான் கேக்குரேன்னு சொன்னாத்தான தெரியும்
    எல்லாத்தயும் கொடுத்துப்புட்டு சொல்லாமலே புரியும்
    காவி பல்லை காட்டி காட்டி காவியத்தை சொல்லு
    உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு

    குருவிக்கார மச்சானே யே யே யே யே
    நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே

    **********************************

    **********************************

    **********************************

    மானும் ஓடி வரலாம்
    மாநதியும் ஓடி வரலாம்
    மங்கை தனியே வரலாமா
    தன் மானம் மறந்து ஓடி வரலாமா
    தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !

    பாதையில் எங்குமே போய் வரலாம்
    போதையின் நடுவே வரலாமா
    நல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்
    குடி போதையின் நடுவே வரலாமா
    பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
    பெண்மையின் தன்மையை விடலாமா
    பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
    உயர் பெண்மையின் தன்மையை விடலாமா

    மானும் ஓடி வரலாம்
    மாநதியும் ஓடி வரலாம்
    மங்கை தனியே வரலாமா
    தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா

    நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
    நாணத்தை மற*ந்தால் தீமையுண்டு
    நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
    யாரும் நாணத்தை மற*ந்தால் தீமையுண்டு
    மண்ணையே வெறுத்த மன்னருண்டு
    இந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு
    பெண்ணையே வெறுத்த முனிவருண்டு
    குமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு !

    மானும் ஓடி வரலாம்
    மாநதியும் ஓடி வரலாம்
    மங்கை தனியே வரலாமா
    தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:நாடோடி

    கடவுள் செய்த பாவம்
    இங்கு காணும் துன்பம்

    திரைப்படம்:நாடோடி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:டி.எம். சௌந்தர்ராஜன்

    கடவுள் செய்த பாவம்
    இங்கு காணும் துன்பம்
    யாவும் என்ன மனமோ என்ன குணமோ
    இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
    மனிதன் கொண்ட கோலம்
    பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
    அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
    இடம் மாற்றி வைத்து விட்டான்
    பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
    அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
    இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
    கடவுள் செய்த ................

    நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
    நல்லவர் கெட்டவர் யாரென்றும்
    நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
    நல்லவர் கெட்டவர் யாரென்றும்
    பழகும் போதும் தெரிவதில்லை
    பாழாய் போன இந்த பூமியிலே (2)

    முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
    முதுகுக்கு பின்னால் சீரும்
    முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
    காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
    கடவுள் செய்த ................

    கொடுப்பவன் தானே மேல் ஜாதி
    கொடுக்காதவனே கீழ் ஜாதி (2)
    படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
    பாழாய்ப்போன இந்த பூமியிலே (2)
    நடப்பது யாவும் விதிப்படி என்றால்
    வேதனை எப்படி தீரும் (2)
    உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
    உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
    கடவுள் செய்த ................
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உலகமெங்கும் ஒரே மொழி
    உள்ளம் பேசும் காதல் மொழி


    திரைப்படம்:நாடோடி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:பி.சுசீலா,டி.எம். சௌந்தர்ராஜன்


    உலகமெங்கும் ஒரே மொழி
    உள்ளம் பேசும் காதல் மொழி
    ஓசையின்றிப் பேசும் மொழி
    உருவமில்லா தேவன் மொழி
    (உலகம்)


    பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
    பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
    இரவு ஒன்று பருவங்கள் வேறு
    இன்பம் ஒன்று உருவங்கள் வேறு
    கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
    காதல் வேகம் காற்றிலும் இல்லை
    உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
    ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
    (உலகம்)


    ஒன்றே வானம் ஒன்றே நிலவு
    ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
    காதல் பேசி கவிதையில் ஆடி
    கலைகள் தேடி கலந்தவர் கோடி
    கோடி மனிதர் தேடிய பின்னும்
    குறைவில்லாமல் வளர்வது காதல்
    நாடு விட்டு நாடு சென்றாலும்
    தேடிச் சென்று சேர்வது காதல்
    தேடிச் சென்று சேர்வது காதல்
    (உலகம்)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரும்பி வா ஒளியே திரும்பி வா
    விரும்பி வா என்னை விரும்பி வா


    திரைப்படம்:நாடோடி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:பி.சுசீலா,டி.எம். சௌந்தர்ராஜன்


    திரும்பி வா ஒளியே திரும்பி வா
    விரும்பி வா என்னை விரும்பி வா
    இட்ட அடி கனிந்திருக்க்க
    எடுத்த அடி சிவந்திருக்க
    பட்ட இடம் குளிர்ந்திருக்க
    பருவ மழை பொழிந்திருக்க
    திரும்ப வா அறிவே திரும்ப வா
    திரும்பி வா ஒளியே திரும்பி வா
    கன்னி விழி திறந்திருக்க
    காதல் வழி புரிந்திருக்க
    நல்ல மனம் அழைத்திருக்க
    நாலு குணம் தடுத்திருக்க
    (திரும்ப)


    கண் படுவதில் பட்டுத் தேறும்
    கை தொடுவதைத் தொட்டுத் தீரும்
    இதை வெளியிட மனமில்லாமல்
    உன் மைவிழி பொய்மொழி கூறும்
    இது முதல் முதல் சந்திப்பாகும்
    இதில் எப்படி வெட்கம் போகும்
    பனித்துளி விழும் மலர் என்றாகும்
    என் குளிர் முகம் குங்குமமாகும்
    (திரும்பி)


    ஒரு கிளியென தத்திப் போகும்
    உன் கனிமொழி தித்திப்பாகும்
    சிறு குழி விழும் அழகிய கன்னம்
    அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
    பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
    அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
    இள மயக்கத்தில் இருவரைச் சேர்க்கும்
    மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்கும்
    (திரும்பி)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ரசிக்கத்தானே இந்த அழகு
    கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு


    திரைப்படம்:நாடோடி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:பி.சுசீலா


    ரசிக்கத்தானே இந்த அழகு -
    கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
    பசிக்குத்தானே இந்த உணவு -
    கொஞ்சம்பழகிப் பார்த்த பின்னே விலகு
    (ரசிக்க)


    தங்க முல்லை.. தடைகள் இல்லை
    தளதளக்கும் மலருக்கு துணை இல்லை
    பள்ளியறையில் இன்று வரையில்
    பளபளக்கும் மேனிக்கு சுகமில்லை
    கலகலக்கும் இரவுக்கு உறவில்லை
    (ரசிக்க)


    ஓடம் இன்னும் ஓடவில்லை
    ஒருவருக்கும் இடமும் தரவில்லை
    அலையில் ஆடும் மீனைத் தேடியாரும்
    இங்கு வேட்டைக்கு வரவில்லை
    ஆசையுடன் தூண்டிலும் இடவில்லை
    (ரசிக்க)
     

Share This Page