1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வருக வருக திருமகளின் முதல் மகளே
    நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே



    திரைப்படம்:தொழிலாளி
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
    இயற்றியவர்:

    வருக வருக திருமகளின் முதல் மகளே
    நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே
    வருக வருக தேடி வந்த செல்வமே
    நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
    வருக வருக திருமகளின் முதல் மகளே
    நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே
    வருக வருக தேடி வந்த செல்வமே
    நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே


    தென்றல் தனை துணைக்கழைத்து
    மெல்ல மெல்ல அடி எடுத்து
    இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்
    தென்றல் தனை துணைக்கழைத்து
    மெல்ல மெல்ல அடி எடுத்து
    இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்
    தமிழ் மண்ணில் பிறந்து வந்த
    மங்கை என்ற காரணத்தால்
    என்னை வந்து தடுக்குதம்மா நாணம்
    தமிழ் மண்ணில் பிறந்து வந்த
    மங்கை என்ற காரணத்தால்
    என்னை வந்து தடுக்குதம்மா நாணம்


    வருக வருக திருமகளின் முதல் மகளே


    கையிரண்டில் உனை அணைத்து
    கண்ணிரண்டில் விருந்து வைத்து
    கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகு தான்
    கையிரண்டில் உனை அணைத்து
    கண்ணிரண்டில் விருந்து வைத்து
    கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகு தான்
    செம்பவழ இதழ் எடுத்து
    மின்னுகின்ற மலர் எடுத்து
    சேர்த்து வைத்து கொடுப்பதுவும் அழகு தான்


    வருக வருக திருமகளின் முதல் மகளே
    நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே
    டி.எம்.எஸ்: வருக வருக தேடி வந்த செல்வமே
    நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
    கொடி வளருது


    திரைப்படம்:தொழிலாளி
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
    இயற்றியவர்:

    வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
    கொடி வளருது
    மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
    காதல் மலருது
    வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
    கொடி வளருது
    மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
    காதல் மலருது


    மலையில் நதிகள் பிறக்கும்
    அது கடலில் சென்றே கலக்கும்
    மனதில் ஆசைகள் பிறக்கும்
    அந்த மயக்கம் உறவை வளர்க்கும்
    ஆஹாஹாஹா....


    வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
    கொடி வளருது
    மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
    காதல் மலருது


    பறவைக்கு வீதி வானம்
    இந்தப் பாவைக்கு வீதி நாணம்
    உறவுக்கு வீதி உள்ளம்
    அதன் உயர்வுக்கு வீதி எண்ணம்
    ஆஹாஹாஹா....

    வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
    கொடி வளருது
    மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
    காதல் மலருது


    இதழோ மதுத் தேன் கிண்ணம்
    அதன் எழிலைக் கூட்டுது கன்னம்
    இளமை தீட்டிய வண்ணம்
    அது உமக்கே கிடைப்பது திண்ணம்


    வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
    கொடி வளருது
    மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
    காதல் மலருது
    வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
    கொடி வளருது
    மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
    காதல் மலருது
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கலை வந்த விதம் கேளு கண்ணே
    உடல்கட்டோடு அழகாகக் கூத்தாடும் பெண்ணே


    திரைப்படம்:தொழிலாளி
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடகர்கள்:
    இயற்றியவர்:

    கலை வந்த விதம் கேளு கண்ணே -
    உடல்கட்டோடு அழகாகக் கூத்தாடும் பெண்ணே
    (கலை)


    காற்றினிலே பிறந்து ஒலியானது -
    அதுகாட்டுப் புல்லில் நுழைந்து இசையானது
    மாட்டிடையன் கையில் குழலானது -
    குழந்தைவாயினிலே நுழைந்து மொழியானது
    (கலை)


    உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது -
    உயிரின்உணர்ச்சியிலே சுருதி லயமானது
    தெள்ளு தமிழ் குழந்தை எழிலானது -
    அதன்தித்தித்தை... தித்தித்தை...
    தித்தித்தை என்ற நடை சதிரானது
    (கலை)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
    அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்


    திரைப்படம்:தொழிலாளி
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
    இயற்றியவர்:

    என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
    அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்
    மின்னலது பின்னி விழும்
    உன்னழகு கண் மலரில்என் மனது இன்பமுற ..
    என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்

    தென்னவர்கள் காவியத்தில் தேடுகின்ற காதலினை
    என்னழகுப் பூ விழியால் பின்னிக் கொடுப்பேன்
    ம்ம்ம்.. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
    அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்


    தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் புவிதழை
    நான் உரிமை கொள்ள வந்தால் ...
    நான் உரிமை கொள்ள வந்தால்
    என்ன கொடுப்பாய்

    சேர்த்தவைகள் அத்தனையும் கேட்டதனால்
    நான் எடுத்து சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்
    ஆஹா .. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
    அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்


    காவலில்லா மாளிகைக்கு காவலுக்கு வந்தவனே
    கன்னமிட வந்து நின்றால் ...கன்னமிட வந்து நின்றால்
    என்ன கொடுப்பாய்
    தேவை எனும் காரணத்தால்
    திருடனையும் நான் மதித்து
    திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்
    என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
    அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்


    ஓ.. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
    அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்
    ஓஹோ.. ம்ஹ¤ம்
    என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
    அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்: நம் நாடு
    இளநீ இளநீ இளநீ
    நான் ஏழு வயசுலே எளனி வித்தவ


    திரைப்படம்: நம் நாடு
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: p.சுசீலா


    இளநீ இளநீ இளநீ
    நான் ஏழு வயசுலே எளனி வித்தவ
    பதினேழு வயசிலே நிலைச்சு நின்னவ
    ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டிக்காரனுக்கும்
    இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
    வந்த தாகத்தை தீர்த்தவ
    வாடிக்கை பிடிச்சவ
    (இளநீ .....)

    தேங்காயிலே பாலிருக்கும்
    அத வாயார குடிச்சா சூடு தணிக்கும்
    ஓடு மட்டும் தான் மேலிருக்கும்
    அது கைத்தொழில் வேலைக்கு கைகொடுக்கும்
    இளசானா தண்ணி இருக்கும்
    முத்திப் போனா என்ன இருக்கும்
    உப்பு கரிக்கும்
    மக்கு பயலே
    சப்புன்னு இருக்கும்
    (நான் ஏழு வயசிலே ...)

    இளனியிலே பலனிருக்கு
    அது இருக்கிற எடத்த பொறுத்திருக்கு
    இது தானே புது சரக்கு இங்கு
    மத்தது எல்லாம் கடை சரக்கு
    வெயில் நேரம் வேலை ஏறும்
    வெலை ஏற சுவை ஏறும்
    சூப்பி குடிச்சா
    உள்ள தவிப்பும் மெல்ல குறையும்
    இளநீ இளநீ இளநீ ...

    தென்னை மரமும் பொண்ணு போல தான்
    சுவை தருவதில் இரண்டும் ஒண்ணு போல
    தென்னம் பாளையும் பொண்ண போல தான்
    அது வெடிச்சா சிரிப்பது என்னைப் போல தான்
    நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா
    பல்லை இளிச்சா ஒண்ணு குடுப்பா
    தப்பு கணக்கு போட நெனச்சா
    கன்னம் செவக்கும்
    (நான் ஏழு வயசிலே )

    இளநீ இளநீ இளநீ
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே

    திரைப்படம்: நம் நாடு
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே
    நாளை மலரும் முல்லைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே
    நாளை மலரும் முல்லைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
    துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
    துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
    உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
    உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே
    நாளை மலரும் முல்லைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

    கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
    மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
    மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
    மெய்யான தெய்வீகமாகும்

    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
    தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே
    நாளை மலரும் முல்லைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    லாலல லாலல லாலல லாலல
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நினைத்ததை நடத்தியே
    முடிப்பவன் நான் ! நான் ! நான்


    திரைப்படம்: நம் நாடு
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:டி.எம். சௌந்தர்ராஜன்


    நினைத்ததை நடத்தியே --
    முடிப்பவன் நான் ! நான் ! நான் !
    துணிச்சலை மனத்திலே
    வளர்த்தவன் நான் ! நான் !
    என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
    இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

    தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும் ! பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும் !
    விளையாட்டு (ப்) பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள்
    வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம் !
    பட்டாடை தொட்டாட (க்) கட்டாயம் வா !! ((நினைத்ததை))

    பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் !
    கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம் !
    படைத்தான் ஒரு உலகம்
    பணம் தான் அதன் உருவம் !
    எதுவும் இதில் அடக்கம் -
    இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! ((நினைத்ததை))

    செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் -
    அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழி(க்) கிண்ணம்
    முதல் நாள் - மெல்ல தொடலாம்
    மறு நாள் - மிச்சம் பெறலாம்
    அவன்தான் நல்ல ரசிகன்
    இதை அறியாத நீ யாரோ புது(ப்) பாடகன் ((நினைத்ததை))

    சொல்லாமல் நடப்பது நாடக மொன்று
    அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு !
    இதழ்மேல் ஒரு பாடல்
    மடிமேல் விளையாடல்
    இடையில் சிறு ஊடல்
    இதை நான் சொல்லத் தானிந்த விழி ஜாடைகள் ((நினைத்ததை))
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆடை முழுதும் நனைய நனைய
    மழை அடிக்குதடி


    திரைப்படம்: நம் நாடு
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்:p.சுசீலா,டி.எம். சௌந்தர்ராஜன்

    ஆடை முழுதும் நனைய நனைய
    மழை அடிக்குதடி -
    நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய
    அலை அடிக்குதடி

    நீல விழிகள் மயங்கி மயங்கி
    கதை படிக்குதடி -
    புது நினைவு வந்து மனதில் நின்று
    குரல் கொடுக்குதடி
    அம்மம்மம்மம்மா... அம்மம்மம்மம்மா... (ஆடை)

    கன்னம் கண்ணாடி காதலன் பார்க்க
    கைகள் பூமாலை தோளினில் சேர்க்க
    கண்கள் பொன்ணூஞ்சல் மன்னவன் அட
    நெஞ்சம் பூமஞ்சம் தேன் வழிந்தோட
    பொங்குது பொங்குது எண்ணக் கனவுகள்
    சொல்லுது சொல்லுது அன்புக்கவிதைகள்
    ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..


    புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
    தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
    ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..

    மல்லிகை மலராடும் மங்கல மேடை
    மங்கை மணமாலை சூடிடும் வேளை
    இல்லறம் உருவாகும் நாள் வரும்போது
    இன்பத்தை எடுத்துரைக்க வார்த்தைகளேது சந்தனம் குங்குமம் நெஞ்சு நிறைந்திடும் கண்களும் நெஞ்சமும் ஒன்று கலந்திடும் ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்: நல்ல நேரம்

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்


    திரைப்படம்: நல்ல நேரம்
    இயற்றியவர்:புலமை பித்தன்
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும்

    வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
    ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
    வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
    ஆடி முடிச்சு இறந்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
    நான் அன்போட சொல்லுறத கேட்டு
    நீ அத்தனை திறமையும் காட்டு
    இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு
    ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும்

    சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
    சுறுசுருப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
    துணியும் கிடைக்காது தம்பி
    சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
    சுறுசுருப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
    துணியும் கிடைக்காது தம்பி
    இத அடுத்தவன் சொன்னா கசக்கும்
    கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
    இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு
    அத்தனையும் சொல்லி போடு

    ஓடி ஓடி உழைக்கணும்

    வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
    சட்டம் ஆகணும் தம்பி
    வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
    சட்டம் ஆகணும் தம்பி
    நல்ல சமத்துவம் உண்டாகணும்
    அதிலே மகத்துவம் உண்டாகணும்
    நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
    படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
    படிப்பினை தந்தாகணும்

    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..

    திரைப்படம்: நல்ல நேரம்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்,p.சுசீலா


    தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
    ஒன்று , பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. (தொட்டால் )

    நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா ?
    இன்று தாலாட்டு பள்ளியில் பாராட்டு
    யாவும் நீ காட்டும் சுகமல்லவா
    என்னை பெண்ணாக்கி நீ தந்த
    இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா ..
    அன்று கண்ணாடி முன்னாலே
    நான் கண்ட கோலங்கள் இன்று வேரல்லவோ .. (தொட்டால் )

    கட்டில் இருக்கின்றதே தொட்டில் எப்போதம்மா
    கட்டில் கொண்டாட காவியம் பண்பாட
    தொட்டில் உறவாட பிள்ளை வரும்
    இன்று நான் கொண்ட முத்தங்கள்
    அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ ..
    இந்த பிள்ளைக்கு மிச்சம் மீதி இல்லாமல் போய் விடுமோ .. (தொட்டால் )
     

Share This Page