1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...

    திரைப்படம்:தேடி வந்த மாப்பிள்ளை
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்,பி.சுசீலா
    இயற்றியவர்:கண்ணதாசன்


    மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
    மன்னன் முகம் கனவில் வந்தது
    மஞ்சள் நதி உடலில் வந்தது


    ராணி உந்தன் மேனி என்னராஜவீதி தோற்றம்தானோ
    கேள்வி கேட்ட மன்னன் மேனி
    தேவன் கோவில் தோற்றம்தானோ
    (மாணிக்க)


    வெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில்
    மூடுது மேலாடை
    கண்படும் வேளையில் கைபடுமோ என
    கலங்குது நூலாடை
    இடை படும் பாடோ சதிராட்டம்
    இலைகளில் ஆடும் கனியாட்டம்
    கண்ணோட்டம்..... என் தோட்டம்
    (மாணிக்க)


    தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன
    கூந்தலில் நீராட
    மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும்
    மிதப்பது யாராட ?
    புது மழை போலே நீரோட
    அதிசய நதியில் நானாட
    நீ ஆட.... ஆஹா..தேனோட
    (மாணிக்க)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அட ஆறு முகம், இது யாரு முகம்?
    அட ஆறு முகம், இது யாரு முகம்?


    திரைப்படம்:தேடி வந்த மாப்பிள்ளை
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்,பி.சுசீலா
    இயற்றியவர்:கண்ணதாசன்

    அட ஆறு முகம், இது யாரு முகம்?
    அட ஆறு முகம், இது யாரு முகம்?
    அட ஆறு முகம், இது யாரு முகம்?

    தாடியை வச்சா வேறு முகம்
    தாடி எடுத்தா தங்க முகம்
    ஊடலுக் கொண்ணு காதலுக்கொண்ணு
    ஒன்பது பாவம் காட்டும் முகம் ,
    ஊடலுக்கொண்ணு காதலுக்கொண்ணு
    ஒன்பது பாவம் காட்டும் முகம்
    அட ஆறு முகம், இது யாரு முகம்?

    இருட்டில் ஓடி வந்தாளாம்
    விளக்கைக் கொண்டு வந்தாளாம்
    முகத்தைக் கண்டு கொண்டாளாம்
    குதித்து ஆடுகின்றாலாம்
    இருட்டில் ஓடி வந்தாளாம்
    விளக்கைக் கொண்டு வந்தாளாம்
    முகத்தைக் கண்டு கொண்டாளாம்
    குதித்து ஆடுகின்றாளாம்


    நடக்கட்டும் உடற்கட்டு துடிக்கட்டும்
    மனத்தில் ஆசை வைத்தாராம்
    மறைத்து மூடி வைத்தாராம்
    பறித்துப் போக வந்தாராம்
    சுவைத்துப் பார்க்க வந்தாராம்
    மனத்தில் ஆசை வைத்தாராம்
    மறைத்தது மூடி வைத்தாராம்
    பறித்துப் போக வந்தாராம்
    சுவைத்துப் பார்க்க வந்தாராம்
    நடக்கட்டும் பழத் தத்து சுவைக்கட்டும்


    நாடகம் நடிப்பு
    காதலில் துடிப்பு
    ஏனிந்த சிரிப்பு?
    ஆனந்தக் களிப்பு

    அட ஆறு முகம்,
    இது யாரு முகம்?
    தாடியை வச்சா வேறு முகம்
    தாடி எடுத்தா தங்க முகம்
    ஊடலுக்கொண்ணு, காதலுக்கொண்ணு
    ஒன்பது பாவம் காட்டும் முகம்

    அழைத்தால் தேடுது நெஞ்சம்
    நினைத்தால் எங்குது மஞ்சம்
    இணைந்தால் ஆயிரம் கொஞ்சும்
    பிரிந்தால் வாவெனக் கெஞ்சும்
    இடம் கண்டு சுகம் கண்டு மயங்கட்டும்

    மாப்பிள்ளை முறுக்கு
    பார்வையில் இருக்கு
    நாளைய கணக்கு
    பூமாலையில் இருக்கு

    அட ஆறு முகம், இது யாரு முகம்?
    தாடியை வச்சா வேறு முகம்
    தாடி எடுத்தா தங்க முகம்
    ஊடலுக்கொண்ணு காதலுக்கொண்ணு
    ஒன்பது பாவம் காட்டும் முகம்
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு
    அச்சாரம் தந்தால் என்ன


    திரைப்படம்:தேடி வந்த மாப்பிள்ளை
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடகர்கள்:எல்.ஆர்.ஈஸ்வரி
    இயற்றியவர்:கண்ணதாசன்


    ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
    ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு
    அச்சாரம் தந்தால் என்ன
    ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
    ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன
    ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
    இதோப் பல்லாக்குப் பெண்ணாக வந்தாடுது
    இதன் பண்ணோடுத் தென்பாங்கு பந்தாடுது (இசை)
    இதன் பண்ணோடுத் தென்பாங்கு பந்தாடுது
    ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு
    அச்சாரம் தந்தால் என்ன
    ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

    முத்துக்கள் ஒளிசிந்தும் மணிமண்டபம் அதன்
    முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே
    முத்துக்கள் ஒளிசிந்தும் மணிமண்டபம் அதன்
    முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே
    இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு
    இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு
    இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு
    இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு
    எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு
    எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு
    ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

    ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு
    அச்சாரம் தந்தால் என்ன
    ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

    தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம்
    தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம்
    தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம்
    தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம்
    இவள் ஆடை தையிலிட்ட வண்ணப் பட்டு
    இவள் ஆசை இன்னும் ஒரு சின்ன மொட்டு
    பணம் போட்டால் போடு இல்லை நடையைக் கட்டு
    ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

    ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு
    அச்சாரம் தந்தால் என்ன
    ஹலோ சார் கமான் சார் சலாம் சார் (இசை)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சொர்க்கத்தைத் தேடுவோம்
    எப்பப்பா எம்மம்மா எப்பப்பா எம்மம்மா எப்பா...


    திரைப்படம்:தேடி வந்த மாப்பிள்ளை
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
    இயற்றியவர்:வாலி

    சொர்க்கத்தைத் தேடுவோம் (இசை)
    எப்பப்பா எம்மம்மா எப்பப்பா எம்மம்மா எப்பா...
    சொர்க்கத்தைத் தேடுவோம் சுந்தரி
    மதுக்கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
    அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
    மயக்கத்தைத் திரும்பத்தா நிறுத்தாதே..ஏ..ஏ..ஏ..ஹே...ஹே...ஹே...
    தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா
    தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா


    வந்தாளொருப் பெண் தேவதை
    வண்டாடிடும் செந்தாமரை
    கண்பார்வையில் கள்ளூறுமோ
    கள்ளூறினால் தள்ளாடுமோ...ஹே...ஹே...ஹே...

    சொர்க்கத்தைத் தேடுவோம் சுந்தரி
    மதுக்கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
    அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
    மயக்கத்தைத் திரும்பத்தா நிறுத்தாதே
    தபலா மாமி டோலக்கு பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி
    தபலா மாமி டோலக்கு பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி


    கையோடு நீ செம்மாங்கனி
    கண்ணோடு நீ சிந்தாமணி
    நெஞ்சோடு நீ ஒன்றாயினி
    நின்றாடு நீ என் மோகினி (இசை)
    அவன் யாரடி தடைப் போடுவான்
    தலைவாசலில் திரைப் போடுவான்
    எவனோடும் நான் போராடுவேன்
    கிளியோடு தான் வெளியேறுவேன்...ஹே...ஹே...ஹே...

    சொர்க்கத்தைத் தேடுவோம் சுந்தரி
    மதுக்கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
    அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
    மயக்கத்தைத் திரும்பத்தா நிறுத்தாதே
    தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா
    தபலா மாமி டோலக்கு பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி (இசை)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நாலுப் பக்கம் சுவரு... நடுவிலேப் பார் இவரு

    திரைப்படம்:தேடி வந்த மாப்பிள்ளை
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
    இயற்றியவர்:கண்ணதாசன்

    ஆண் : நாலுப் பக்கம் சுவரு... நடுவிலேப் பார் இவரு
    நடந்து போச்சுத் தவறு
    நாலு வார்த்தை உளறு

    (இசை) பல்லவி

    ஆண் : இடமோ சுகமானது
    இந்த இடமோ சுகமானது
    பெண் : அஹ் ஹா
    ஆண் : ஜோடியோப் பதமானது
    பெண் : அஹ் ஹா
    ஆண் : நேரமோ இதமானது
    பெண் : அஹ் ஹா
    ஆண் : நெருங்கவோ இன்றாவது
    இடமோ சுகமானது
    பெண் : அஹ் ஹா
    ஆண் : ஜோடியோப் பதமானது
    பெண் : அஹ் ஹா
    ஆண் : நேரமோ இதமானது
    பெண் : அஹ் ஹா
    ஆண் : நெருங்கவோ இன்றாவது


    பெண் : மழையில் உருவானது
    அறையில் விளையாடுது
    மழையில் உருவானது
    அறையில் விளையாடுது
    எவளோ முடி போட்டது
    இளமை விருந்தானது
    எவளோ முடி போட்டது ஆஹ
    இளமை விருந்தானது
    ஆண் : மாடியிலேக் காலெடுத்து
    மடியிலே விழுந்தேன்
    மாளிகைக்கு நன்றி சொல்வதா
    மாடியிலேக் காலெடுத்து
    மடியிலே விழுந்தேன்
    மாளிகைக்கு நன்றி சொல்வதா இல்லை
    ஜாடியிலேத் தேனெடுத்து தந்தாளே அந்த
    தங்கத்துக்கு நன்றி சொல்வதா
    பெண் : அம்மம்மா போதுமே சரசம் இதை
    அக்கம் பக்கம் பார்த்தாலே விரசம்
    ஆண் : கொஞ்சமா ஏங்குது இதயம் அட
    கொஞ்சினால் என்னதான் குறையும்
    என்னதான் குறையும்

    ஆண் : இடமோ சுகமானது
    ஜோடியோப் பதமானது
    நேரமோ இதமானது
    நெருங்கவோ இன்றாவது


    பெண் : பருவம் பழகாதது
    பல நாள் தனியானது
    பருவம் பழகாதது
    பலநாள் தனியானது
    எல்லாம் புதிதானது
    எதையும் அறியாதது
    எல்லாம் புதிதானது ஆஹ
    எதையும் அறியாதது
    ஆண் : ஆசையிலே நூலெடுத்துத்
    தாலியிட்டப் பின்னே
    அந்தப்புரம் சொர்க்கமல்லவோ
    பெண் : அம்மம்மாக் கன்னங்கள் வலிக்கும்
    ஆண் : இன்னும் கொஞ்ச நாள்
    போனதும் இனிக்கும்
    பெண் : அச்சமும் நாணமும் தடுக்கும்
    ஆண் : அதில் ஆசையும்
    தேவையும் இருக்கும்
    தேவையும் இருக்கும்

    ஆண் : இடமோ சுகமானது
    பெண் : அஹ் ஹா
    ஜோடியோப் பதமானது
    பெண் : அஹ் ஹா
    நேரமோ இதமானது
    பெண் : அஹ் ஹா
    நெருங்கவோ இன்றாவது
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:தேர்த் திருவிழா

    சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
    சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு

    திரைப்படம்:தேர்த் திருவிழா
    இசை:கே.வி. மஹாதேவன்
    பாடகர்கள்:
    இயற்றியவர்:

    சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
    சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
    சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
    சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
    சிங்கார கையால் என்னை கட்டு
    என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
    சிங்கார கையால் என்னை கட்டு
    என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
    சிங்கார கையால் என்னை கட்டு


    இது காதல் நாடக மேடை
    விழி காட்டுது ஆயிரம் ஜாடை
    இது காதல் நாடக மேடை
    விழி காட்டுது ஆயிரம் ஜாடை
    இங்கு ஆடலுண்டு இன்ப பாடலுண்டு
    சின்ன ஊடலுண்டு பின்னர் கூடலுண்டு
    சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு

    மது உண்டால் போதையை கொடுக்கும்
    அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
    மது உண்டால் போதையை கொடுக்கும்
    அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
    தன்னை தான் மறக்கும்
    அது போர் தொடுக்கும்
    இன்ப நோய் கொடுக்கும்
    பின்பு ஓய்வெடுக்கும்
    சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
    சிங்கார கையால் என்னை கட்டு

    இங்கு தரவா நான் ஒரு பரிசு
    அதை பெறவே தூண்டுது மனசு
    இங்கு தரவா நான் ஒரு பரிசு
    அதை பெறவே தூண்டுது மனசு
    ஒண்ணு நான் கொடுத்தால்
    என்ன நீ கொடுப்பாய்
    உண்ண தேன் கொடுப்பேன்
    என்னை நான் கொடுப்பேன்
    சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
    சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
    சிங்கார கையால் என்னை கட்டு
    என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
    தந்தான தான
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மழை முத்து முத்துப் பந்தலிட்டு
    கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..


    திரைப்படம்:தேர்த் திருவிழா
    இசை:கே.வி. மஹாதேவன்
    பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்,பி.சுசீலா
    இயற்றியவர்:

    மழை முத்து முத்துப் பந்தலிட்டு
    கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
    நெஞ்சைத் தொட்டு தொட்டு
    ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..
    என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு
    என்னமோ பண்ணுது என்னத்தை சொல்ல ..


    மழை முத்து முத்துப் பந்தலிட்டு
    கிட்டக் கிட்டத் தள்ளுது
    நெஞ்சைத் தொட்டு தொட்டு
    ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது


    கட்டுக் குலையாத அரும்பைத் தொட்டு விளையாட
    நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
    மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
    அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
    கட்டுக் குலையாத அரும்பைத் தொட்டு விளையாட
    நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
    மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
    அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
    பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சி
    அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சி


    மழை முத்து முத்துப் பந்தலிட்டு
    கிட்டக் கிட்டத் தள்ளுது
    நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளைப்
    புட்டு புட்டு சொல்லுது


    வெத்திலை பாக்கு வச்சி
    விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
    தாலி கட்டியே கை புடிச்சி
    கலந்திட வேண்டும்
    குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில்
    பூ விரிச்சிஇனிக்கும் வித்தை எல்லாம்
    படிச்சி சுகம் பெற வேண்டும்
    வெத்திலை பாக்கு வச்சி
    விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
    தாலி கட்டியே கை புடிச்சி
    கலந்திட வேண்டும்
    குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில்
    பூ விரிச்சிஇனிக்கும் வித்தை எல்லாம்
    படிச்சி சுகம் பெற வேண்டும்
    காலாட மேலாட கையாட முகம் சிவக்கும்
    என் கைகளில் உன் பூ உடல் மிதக்கும்


    மழை முத்து முத்துப் பந்தலிட்டு
    கிட்டக் கிட்டத் தள்ளுது
    நெஞ்சைத் தொட்டு தொட்டு
    ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அல்லி மலராடும் ஆணழகன்
    கலைகள் தவழும் கண்ணழகன்


    திரைப்படம்:தொழிலாளி
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடகர்கள்:பி.சுசீலா eS.jaanaki
    இயற்றியவர்:


    அல்லி மலராடும் ஆணழகன்
    கலைகள் தவழும் கண்ணழகன்
    கன்னி மயிலாடும் மார்பழகன்
    அணைத்திட நினைத்தே துடிக்க வைத்தான்
    அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

    தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான்
    தோளை அணையாக தலைக்கு வைத்தான்
    அணைத்திட நினைத்தே துடிக்க வைத்தான்
    அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

    தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான்
    தோளை அணையாக தலைக்கு வைத்தான்
    பாலிலும் தேனிலும் குளிக்க வைத்தான்
    பார்வையிலே மயக்கம் வைத்தான்

    கலைகள் யாவும் படிக்க வைத்தான்
    கதையில் பாதி நடத்தி வைத்தான்
    அழகன் அழகன் பேரழகன்
    அல்லி மலராடும் ஆணழகன்

    கலைகள் தவழும் கண்ணழகன்
    கன்னி மயிலாடும் மார்பழகன்
    இருவர் மனதிலும் ஒரு உறவு
    இதய வானத்தில் புது நிலவு
    இருவர் மனதிலும் ஒரு உறவு
    இதய வானத்தில் புது நிலவு

    காதல் வழியில் புதுத் திருப்பம் ..புதுத் திருப்பம்
    என்ன வருமோ பொறுத்திருப்போம்பொறுத்திருப்போம்
    இருவர் மனதிலும் ஒரு உறவு
    இதய வானத்தில் புது நிலவு
    காதல் வழியில் புதுத் திருப்பம் ..
    என்ன வருமோ பொறுத்திருப்போம்


    அழகன் அழகன் பேரழகன்
    அல்லி மலராடும் ஆணழகன்
    கலைகள் தவழும் கண்ணழகன்
    கன்னி மயிலாடும் மார்பழகன்
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி


    திரைப்படம்:தொழிலாளி
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடகர்கள்: டி.எம்.சௌந்தராஜன்
    இயற்றியவர்:ஆலங்குடி சோமு

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
    இலக்கணம் படித்தவன் தொழிலாளி
    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
    இலக்கணம் படித்தவன் தொழிலாளி
    உருகு போன்ற தான் கருத்தை நம்பி
    ஓங்கி நிற்பவன் தொழிலாளி


    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
    கவனம் ஒரு நாள் திரும்பும்
    கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
    கவனம் ஒரு நாள் திரும்பும்
    அதில் நல்லவர் வாழும் சமுதாயம்
    நிச்சயம் ஒரு நாள் மலரும்

    வாழ்க்கை என்றொரு பயணத்திலே
    பலர் வருவார் போவார் பூமியிலே
    வாழ்க்கை என்றொரு பயணத்திலே
    பலர் வருவார் போவார் பூமியிலே
    வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
    அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வட்ட வட்டப் பாத்தி கட்டி
    வண்ண வண்ண சேலை கட்டி



    திரைப்படம்:தொழிலாளி
    இசை:கே.வி.மகாதேவன்
    பாடகர்கள்: டி.எம்.சௌந்தராஜன்
    இயற்றியவர்:

    வட்ட வட்டப் பாத்தி கட்டி
    வண்ண வண்ண சேலை கட்டி
    கட்டழகி நடப்பது நாட்டியமா
    அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா
    வட்ட வட்டப் பாத்தி கட்டி
    வண்ண வண்ண சேலை கட்டி
    கட்டழகி நடப்பது நாட்டியமா
    அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா


    பந்தோடு பந்தடித்துக் குலுங்க
    பாவை அவள் கண்ணடித்து மயங்க
    பந்தோடு பந்தடித்துக் குலுங்க
    பாவை அவள் கண்ணடித்து மயங்க
    மயங்க..
    முந்தி முந்தி ஓடுறாள் ராதை ..ராதை
    அவள் முந்தானை பட்டாலே போதை
    அவள் முந்தானை பட்டாலே போதை
    (வட்ட வட்டப் பாத்தி )


    ஒய்யாரப் பெண்ணே ஓடி வா ஓடி வா ஓடி வா
    உல்லாச மயிலே ஆடி வா ஆடி வா ஆடி வா
    ஒய்யாரப் பெண்ணே
    ஓடி வா ஓடி வா ஓடி வா
    உல்லாச மயிலே
    ஆடி வா ஆடி வா ஆடி வா

    மை தீட்டி விழியைச் சிமிட்டி வா
    மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா
    மை தீட்டி விழியைச் சிமிட்டி வா
    மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா

    (வட்ட வட்டப் பாத்தி)


    செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ
    செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ
    செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ
    செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ
    பம்பரமா சுத்துறா மீனா .. ஆ.. மீனா...
    ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா
    ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா

    (வட்ட வட்டப் பாத்தி )
     

Share This Page