1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Kudiyiruntha kovil
    music : Msv
    singers : Tms & p susheela

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
    ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..
    ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..

    கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
    தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
    ஏ..ஏ..ஹேய்….ஏ..ஏ..ஹேய்….ஹேய்…..
    கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
    தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
    செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக…
    ஆ..ஹா..ஹோய்……ஆ..ஹா…ஹோய்…ஆ..ஹா..ஹோய்….
    செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக…
    மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே..

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..

    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
    ம்ம்..ம்ம்…….ம்ம்..ம்ம்…….ம்ம்…ம்ம்……ஹோய்…
    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
    ம்ம்..ம்ம்…….ம்ம்..ம்ம்…….ம்ம்…ம்ம்……ஹோய்…
    விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு
    வேண்டியதை பெறலாம் துணிவோடு..
    ஆஹா..ஹோய்…ஆஹா..ஹோய்….ஆஹா..ஹோய்…
    விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு
    வேண்டியதை பெறலாம் துணிவோடு..
    ஆஹா..ஹோய்…ஆஹா..ஹோய்….ஆஹா..ஹோய்…
    உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு…

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
    ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..
    ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…
     
  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Maalai itta mangai
    music : Viswanathan – ramamurthy
    singer : T r magalingam


    சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
    நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
    நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
    மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..

    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

    காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
    கற்பனை வடித்தவளோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ

    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

    கண்களில் நீலம் விளைத்தவளோ
    அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ…

    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Manaalane mangayin bhagyam
    music : Adi narayana rao
    singer : Susheela p


    அழைக்காதே நினைக்காதே
    அவைதனிலே என்னையே ராஜா
    ஆருயிரே மறவேன்
    அழைக்காதே நினைக்காதே
    அவைதனிலே என்னையே ராஜா
    ஆருயிரே மறவேன்
    அழைக்காதே….

    எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
    இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
    என்னை ? சமயமிதானா (2)
    கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
    கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
    அழைக்காதே…..

    காதலினாலே கானத்தினாலே
    காவலனே என்னை அவையின் முன்னாலே
    சோதனையாகவே நீ அழைக்காதே
    சோதனையாகவே நீ அழைக்காதே
    கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
    கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
    அழைக்காதே…
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Makkalai petra maharasi
    music : Kvm
    singer : Tms


    மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
    வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
    பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
    மணப்பாற மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி….
    மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
    வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
    பசுந்தழைய போட்டு பாடு படு சின்னக்கண்ணு

    ஆத்தூரு கிச்சிலி சம்பா…
    ஆத்தூரு கிச்சலி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
    ஆத்தூரு கிச்சலி சம்பா
    நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
    தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு
    நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
    தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு
    கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
    கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
    அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
    நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு
    ( என்றா.. பல்லக்காட்ட்ற… அட தண்ணிய சேந்து…)
    கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
    கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
    அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
    நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு
    பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே.ஆ..ஆ..ஆ..ஆ….
    பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
    விருதுனகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
    நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு
    விருதுனகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
    நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு

    சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
    அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
    உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
    அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
    சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
    அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
    உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
    அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு

    மணப்பாற மாடுகட்டி…
    மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
    வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
    பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Nalla neram
    music : Kvm
    singer : Tms


    ஓடி ஓடி உழைக்கணும்
    ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும்
    ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடி பாடி நடக்கணும்
    அன்பை நாளும் வளர்க்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும்
    ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடி பாடி நடக்கணும்
    அன்பை நாளும் வளர்க்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

    வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
    ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
    வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
    ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
    அங்கொண்ணு சொல்லுறதை கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு
    இந்த அம்மாவை பாரு ஐயாவை கேளு
    ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

    ஓடி ஓடி உழைக்கணும்
    ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடி பாடி நடக்கணும்
    அன்பை நாளும் வளர்க்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

    சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
    சுருசுருப்பில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி
    சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
    சுருசுருப்பில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி
    இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
    கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
    இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
    அத்தனையும் சொல்லிப்ப் போடு.

    ஓடி ஓடி உழைக்கணும்.. ஓ..ஓ..ஓ..

    வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
    வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
    நல்ல சமத்துவம் வந்தாகணும்
    அதிலே மகத்துவம் உண்டாகணும்
    நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
    படிப்பினை தந்தாகணும் .. நாட்டுக்கு
    படிப்பினை தந்தாகணும்.

    ஓடி ஓடி உழைக்கணும்
    ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    ஆடி பாடி நடக்கணும்
    அன்பை நாளும் வளர்க்கணும்
    ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படு ஜோரா போகுது இந்த புதிய பாட்டுக் களம்.நன்றி சஞ்சனா தேவா
    :cheers
    :rotfl
    :drowning
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [font=verdana, arial, helvetica, sans-serif]பாடல் : அடிக்கிற கை தான் அணைக்கும்
    திரைப் படம் : வண்ணக்கிளி
    பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் , பி .சுசிலா
    இசை : கே .வி .மகாதேவன்
    நடிப்பு : மனோகர்

    தி .லோ : அடிக்கிற கை தான் அணைக்கும் ..ஏய் . .பாட்ரி ..
    சுசிலா : அடிக்கிற கை தான் அணைக்கும்

    தி .லோ : அணைக்கிற கை தான் அடிக்கும்
    சுசிலா : அணைக்கிற கை தான் அடிக்கும்
    தி .லோ : இனிக்கிற வாழ்வே கசக்கும்
    சுசிலா : இனிக்கிற வாழ்வே கசக்கும்
    தி .லோ : கசக்கிற வாழ்வே இனிக்கும் .. ம்ம் ..பாட்ரி ..
    சுசிலா : கசக்கிற வாழ்வே இனிக்கும்

    சுசிலா : அடிக்கிற கை தான் அணைக்கும்
    அணைக்கிற கை தான் அடிக்கும்
    இனிக்கிற வாழ்வே கசக்கும்
    கசக்கிற வாழ்வே இனிக்கும்
    அடிக்கிற கை தான் அணைக்கும்

    தி .லோ : புயலுக்குப் பின்னே அமைதி
    வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
    சுசிலா : புயலுக்குப் பின்னே அமைதி
    வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
    புயலுக்குப் பின்னே அமைதி
    வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
    தி .லோ : இருளுக்குப் பின் வரும் ஜோதி
    இது தான் இயற்கையின் நியதி
    சுசிலா : இருளுக்குப் பின் வரும் ஜோதி
    இது தான் இயற்கையின் நியதி

    அடிக்கிற கை தான் அணைக்கும்
    தி .லோ : பலே
    சுசிலா : அணைக்கிற கை தான் அடிக்கும்
    இனிக்கிற வாழ்வே கசக்கும்
    கசக்கிற வாழ்வே இனிக்கும்
    அடிக்கிற கை தான் அணைக்கும்

    தி .லோ : இறைக்கிற
    [/font][font=verdana, arial, helvetica, sans-serif]ஊற்றே [/font]
    [font=verdana, arial, helvetica, sans-serif]சுரக்கும்
    இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
    சுசிலா : இறைக்கிற உற்றே சுரக்கும்
    இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
    இறைக்கிற ஊற்றே சுரக்கும்
    இடி இடிக்கிற வானம் கொடுக்கும்

    தி .லோ : விதைக்கிற விதை தான் முளைக்கும்
    இது தான் இயற்கையின் நியதி
    சுசிலா : விதைக்கிற விதை தான் முளைக்கும்
    இது தான் இயற்கையின் நியதி
    இது தான் இயற்கையின் நியதி

    சுசிலா : அடிக்கிற கை தான் அணைக்கும்
    தி .லோ : சபாஷ்
    சுசிலா : அணைக்கிற கை தான் அடிக்கும்
    இனிக்கிற வாழ்வே கசக்கும்
    கசக்கிற வாழ்வே இனிக்கும்
    அடிக்கிற கை தான் அணைக்கும்

    சுசிலா : அடிக்கிற கை தான் அணைக்கும்
    அணைக்கிற கை தான் அடிக்கும்
    இனிக்கிற வாழ்வே கசக்கும்
    கசக்கிற வாழ்வே இனிக்கும்
    அடிக்கிற கை தான் அணைக்கும்

    [/font]
     
    Last edited: Jun 22, 2010
  8. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    MOVIE: MANDHIRIKUMAARI
    MUSIC : RAAMANAADHAN
    SINGER : THIRUCHY LOGANATHAN

    vaaraai nee vaaraai(2)
    pOgumidam vegu thooramillai nee vaaraai(2)
    aahaa maarudham veesuvadhaalE aanandham pongudhE manadhilE(2)
    idhanilum aanandham adaindhE iyarkaiyil
    kalanthuyir peNNilai kaaNNbaai (2)ankE

    amaidhi nilavudhE saandham thavazhudhE..oh..
    amaidhi nilavudhE saandham thavazhudhE
    mudivilla mOna nilai soozhudhE
    mudivilla mOna nilayai nee(2)
    malai mudiyil kaaNuvaai vaaraaai..vaaraai
    iidilla azhagai sigarameedhilE kaNNdu inbame koLvOm (2)
    inbamum adaindhE igamarandhEnE vErulagam kaaNuvaai angE vaaraai
    vaaraai nee vaaraai
    puliyena thodarnthEn pudhumaan neeyE vaaraai ..vaaraai..
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது....
    உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்....
    இதோ...காதோடு பாடும் பாடல்...


    song: காதோடுதான் நான் பாடுவேன்
    voice: L R ஈஸ்வரி
    lyrics: கண்ணதாசன்
    movie: வெள்ளி விழா

    காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்
    விழியோடுதான் விளையாடுவேன் உன்
    மடிமீதுதான் கண் மூடுவேன்
    காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்
    விழியோடுதான் விளையாடுவேன் உன்
    மடிமீதுதான் கண் மூடுவேன்


    வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் நான்
    அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
    உனக்கேற்ற துணையாக எனை மாற்ற வா குல
    விளக்காக நான் வாழ வழி காட்ட வா

    (காதோடுதான்)

    பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
    நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
    எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
    யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது
    (காதோடுதான்)
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Motor sundaram pillai
    singers : P b srinivas


    காத்திருந்த கண்களே
    கதையளந்த நெஞ்சமே
    ஆசை என்னும் வெள்ளமே
    பொங்கி பெருகும் உள்ளமே
    காத்திருந்த கண்களே
    கதையளந்த நெஞ்சமே
    ஆசை என்னும் வெள்ளமே
    பொங்கி பெருகும் உள்ளமே

    கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
    நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
    கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
    நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

    மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
    அவன் வருவதினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
    பொழுதது? கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
    ஒரு தலைவனை அழைத்து ? தருகின்ற மனதல்லவோ.. தருகின்ற மனதல்லவோ

    காத்திருந்த கண்களே
    கதையளந்த நெஞ்சமே
    ஆசை என்னும் வெள்ளமே
    பொங்கி பெருகும் உள்ளமே

    கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
    இரு கைகளினால் நீ முகம் மறைத்தால் இந்த வையகம் இருண்டதென்ன
    செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
    என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன
    … மயக்கத்தை கொடுப்பதென்ன

    காத்திருந்த கண்களே
    கதையளந்த நெஞ்சமே
    ஆசை என்னும் வெள்ளமே
    பொங்கி பெருகும் உள்ளமே
    லா.. ல..லால்லா..லால்லல்லா……..
     

Share This Page