1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

செம்மொழி!!!!! தித்திக்கும் என் மொழி ....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 17, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இருக்கும் எட்டு திக்கும்
    எட்டு எடுத்து வைத்திருக்கும்
    என் தீஞ்சுவை தேன்தமிழ்
    திக்கெட்டும் பரவட்டும்.
    எட்டுத் திக்கும் தித்திக்கும் என் தமிழ்.[​IMG]

    வந்தாரை வாழவைக்கும்
    என் தமிழ் அன்னை
    என்னையும் வாழவைத்து
    வாழ்த்திக் கொண்டிருக்கிறாள்
    திகட்டாதத் தன் செந்தமிழால் .:bowdown

    அந்த
    வண்டமிழின் வனத்தினிலே
    திக்கித் திணறி
    முதல்
    எட்டு எடுத்து வைத்திருக்கும்
    நான்
    பொங்கும் தமிழிலே
    என்னை புரையோடச் செய்திடவே
    புனைகின்றேன் ஒரு வரி.

    எரிகின்ற இன்பத் தீயினிலே
    ஒளிர்கின்றேன் தீக்குருவி.

    ஒப்பற்ற உன்னதமே
    என் உயிர் மூச்சு உன் வசமே

    சாதல் இல்லா உன் சாகித்தியமே
    வாழ்கி
    ன்றேன்
    உன் சித்தத்துள் சிரஞ்சீவியாய் !!!!

    வாழிய நீ வாழியவே
    வையகமே வாழ்துதுவே.
    பார் புகழும் உனை ஏற்றிடவே
    பாடித் துதித்திடுவேன் பாங்குடனே
    என் தித்திக்கும் தேமதுரத் தமிழோசை
    நீ
    வாழியவே நீ வாழியவே !!!!!!
     
    Last edited: Jun 17, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: எட்டுத் திக்கும் தித்திக்கும் என் தமிழ&a

    தமிழுக்கு வாழ்த்துப்பா பாடிய வஞ்சியே... என் அஞ்சுகமே... அன்னை தமிழுக்கு வாழ்த்துப்பா, அவள் கீர்த்தி அவனியில் திக்கெட்டும் பரவிட விழையும் உன் தமிழுக்கு நன்றி. வாழ்த்த வந்த உன் மதிக்கும் நன்றி. உன் மதியால் என் மதியை உருவேற்றிய உன் அன்புக்கு நன்றி.

    உன்னுடன் கரம் சேர்த்துக் கொள்கிறேன். அன்னையை வாழ்த்துவதில்....

    வாழியவே... வாழியவே.... அன்னை தமிழே, வற்றாத ஊற்றே, தென்றல் காற்றே, இனிமை தரும் கன்னலே, தேனே, தீங்கனியே நீ வாழியவே....
     
    Last edited: Jun 17, 2010
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: எட்டுத் திக்கும் தித்திக்கும் என் தமிழ&#

    ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல shakehead அருமை என்பதை தவிர..........:)
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Arumaiyaana varigal....Nandri:)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: எட்டுத் திக்கும் தித்திக்கும் என் தமிழ&a

    ஒரு கரம் ஓசை தராது இருகரம் இன்ப ஓசை தரும்
    என் தமிழ் ஓசை ஒலித்திடும் ஆசைக்கு
    இன்னொரு கரம் கொடுக்கும் என் காரியையே
    நம் தமிழ் வாழ நாம் வாழ்ந்திருப்போம்
    அவளின் வற்றாத இன்பப் பெருக்கில் ...அலைகடலின் மேல் அசைந்தாடும் ஓடம் போல்
    அவளோடு நாமும்அசைந்தாடிடுவோம் காலம் முழுதும்.நாம் வாழ்ந்திடும் காலம் முழுதும்.
    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது நம் தமிழா இருக்கட்டும். :thumbsup
     
    Last edited: Jun 17, 2010
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    என்றும் திகட்டாத நம் தமிழ் மொழியை ....வாழ்த்தி அழகாய்...தமிழ் அன்னை மனம் மகிழும் படி ஒரு கவிதை....

    மிக அருமை தங்களின் கவிதை ..சரோஜ் ...
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: எட்டுத் திக்கும் தித்திக்கும் என் தமிழ&a

    நீ அருமை என்று சொன்னதும் இன்பத் தேன் வந்து பாய்ந்தது என் காதினில் ........:)
    நன்றி
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என் தமிழ் வரிகள் உங்களுக்கு இன்பத்தை வாரிக் கொடுத்ததில் எனக்கு மகிழ்ச்சியே.
    நன்றி.
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Saroj...... ippa thaan NASA la irunthu information vanthathu ithu unga 8000th post nu......:)
     
    Last edited: Jun 19, 2010
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எல்லாம் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் செம்மொழி மாநாடு தந்த வேகம் தான்.அங்கு போய் கலந்து கொள்ள முடியாது போனாலும் தமிழோடு கலந்து கொள்கிறேன் இங்கிருந்து உங்கள் அனைவரோடும்.
    வந்து படித்து ரசித்தமையால் தமிழ் தாய் உங்களை வாழ்த்துகிறாள்.வாழ்க தமிழ். :):):)
     

Share This Page