1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Dec 12, 2013.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் .இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை .

    நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை [​IMG]

    ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான். [​IMG]

    ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ? நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே

    View attachment 201282

    நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.

    பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் எனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள்

    இதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....

    ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.

    இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்...... ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன்.

    போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன்


    இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன் இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம்.)

    எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் ) இது உங்களுக்கு தெரியாதா என் நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது

    இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... [​IMG][​IMG]ஆமாம் நான் சதா 'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த பதிவு ..............பொறுத்திருந்து படியுங்கோ
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நாங்கள் ஒருமுறை உடுப்பி போனோம் வழி இல் ரோட் சைடு ஹோட்டலில் சாப்பிடும்படி ஆனது .அந்த ஹோட்டலில் வெறும் இட்லி + வடை & தோசை மட்டும் தான் கிடைத்தது. நாங்கள் முதலில் இட்லி கேட்டோம் பார்த்தால் நிஜமாகவே மல்லிப்பூ தான் அது. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்மாகி விட்டது. வெள்ளைவெளீர் தும்பைப்பூ இட்லி வித் அருமையான சட்னி + சாம்பாருடன் சாப்பிட்டோம். பிறகு தோசை கேட்டோம் அது வந்ததும் முதல் வாய் எடுத்துப்போட்டேன்..................ஹேய் கிர்ஷ........... தோசை சாப்பிட்டு பாரேன்.......... என்றேன்.

    ஏன் மா ... என்றான்.
    சாப்பிடேன் என்றேன்................ சாப்பிட்டு விட்டு .......
    ஒண்ணும் தெரியலையே ..... நல்லாதான் இருக்கு என்றான்.
    சரியா சாப்பிட்டுப்பார்............. இட்லி தோசை இரண்டும் ஒன்றுதான்............. அவல் தோசை போல அவல் இட்லி என்றே நினைக்கிறேன்.. அதுதான் அவ்வளவு வெள்ளை மற்றும் soft. என்றேன்.
    அட ஆமாம் என்றார் 'இவர்'
    கண்டிப்பாக போகும்போது அந்த ஆளை கேட்கணும் என்றேன்.

    இவ்வளவு நாளாய் அவல் தோசை வார்க்கிறோம் அதில் இட்லி பண்ணிப்பார்க்கலாம் என்று தொணலையே என்று நினைத்துக்கொண்டேன் நான். எனக்கு எப்பவும் ஒரு பழக்கம் கல்யாண விடோ, ஹோட்லோ சாப்பிட்டதும் நான் எழுந்து போயி
    சமைப்பவரிடம் உங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது என்று சொல்லிவிட்டு வருவேன். atleast ஹோட்டல் மேனேஜர் இடமாவது சொல்வேன்.

    அப்படியே இந்த தோசை வார்ப்பவரிடமும் சொல்ல போனேன். கொஞ்சமாக எட்டிப்பார்த்தல் ......வாவ். சந்தேகம் நிஜமானது ... அங்கு ஒரே ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு இருந்தது..................
    [​IMG]

    அவரிடம் "உங்கள் தோசை மற்றும் இட்லி இரண்டுமே சூப்பர்.... நன்றி" என்று ஹிந்தி இல் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
    அவருக்கும் அவரி அஸ்ஸிடெண்டுக்கும் ரொம்ப சந்தோஷம். அவர்களும் பதிலுக்கு நன்றி சொன்னார்கள் ஒரு பெரிய புன்னகையுடன். கிருஷ்ணாவுக்கு கண் காட்டினேன். அவன் போயி அவரிடம் நீங்க எப்படி இவ்வளவு மெத் என்று இட்லி வார்க்கிறீர்கள் என்று கேட்டான். அதுக்கு அவர்கள் தோசை மற்றும் இட்லிக்கு ஒரே மாவு அவ்வளவுதான் எனக்குத்தெரியும், நீங்க superviser ஐ கேளுங்கோ என்று சொல்லிட்டார்கள்.

    கிருஷ்ணாவும் superviserரிடம் கேட்டான் அதுக்கு அவர் அவல், அரிசி, உளுந்து போடுவோம் என்று சொல்லி அனுப்பினார் .இதை கிருஷ் என்னிடம் சொன்னான் .............. அவ்வளவுத்தான் எனக்கு ஆடவேண்டும் பாடவேண்டும் என்று தோன்றியது......................ஆத்துக்கு போயி முதல்வேலை இது தான் என்றேன்.

    உடனே இவர் இப்பொத்தான் ஊருக்கு போய்க்கொண்டிருக்கோம் வந்து பார்க்கலாம் என்றார்.

    எனக்கு இருப்பு கொள்ளவே இல்லை ..... எப்படா வீடு வருவோம் 'சூப்பர் மெத் மெத் இட்லி' வார்ப்போம் என்று இருந்தது [​IMG]
     
  3. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    312
    Likes Received:
    511
    Trophy Points:
    180
    Gender:
    Female
    Is that the photo of the Idli you prepared with Aval?
    Nice and humorous narration.
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Ya, I prepared very very soft idly:)

    Thanks for your compliment :)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அப்புறம் என்ன... வந்ததும் இங்கு பயணக்கட்டுரை..... அவல் வாங்கிந்து வரணும் என்று 4 நாள் தள்ளிப்போனது... பிறகு எனக்கு கை வலி..............ஒரு வழியாக போன வியாழககிழமை அன்று 'அவல் தோசைக்கு நனைப்பது போல நனைத்து அரைத்து வைத்து விட்டேன்.

    அளவு :

    4 கப் பச்சரிசி
    1 கப் உளுந்து
    2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
    ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)

    மறுநாள் சாயங்க்காலாம் இட்லி வர்க்கலாம் என்று எண்ணம். ஏன் என்றால் இங்கு ரொம்ப 'சில்' என்று இருக்கு வெதர். எனவே போங்க நேரம் எடுக்கும் என்று நினைத்தேன். பிறகு ஒரு சிட்டிகை சோடாஉப்பு போட்டு கரைத்து வைத்து விட்டேன். கிருஷ்ணா மற்றும் இவரிடம் சொல்லிவிட்டேன்.... நாளை சாயங்காலம் இட்லி....நல்லா வந்தால் ( வரவேண்டுமே என்று வேண்டுதல் செய்தேன் [​IMG] ) ஓகே இல்லாவிட்டால் சூப்பர் தோசை.... ஒக்வா? என்று கேட்டு வைத்துக்கொண்டேன்..............


     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இரவு தூக்கம் இல்லை.... சின்ன பசங்க தீபாவளி சமயத்தில் முழிச்சுந்தே இருக்குமே அப்படி இருந்தது எனக்கு............... பாதி இரவில் ஒரு முறை எழுந்து வந்து மாவை திறந்து பார்த்தேன்.........( அப்படி திறக்கக்கூடாது என்று அம்மா சொல்வா ) என்றாலும் பார்த்தேன்............ காலை இல் எழுந்து பார்த்தால்...............ஆஹா............. ஸுப்பராக பொங்கி இருந்தது.....................எனக்கு ரொம்ப சந்தோஷம்.

    உடனே................கிருஷ்ணாப்பா மாவு ரொம்ப நல்லா பொங்கி இருக்கு..பேசாமல் இப்பவே இட்லி வார்க்கவா? என்றேன்.
    நீ டென்ஷன் ஆக மாட்டாய் என்றால் வார்த்துக்கொள் எனக்கு ஒன்றும் இல்லை என்றார்.
    உடனே நான் ஆர்த்தி இடம் " ஆர்த்தி இன்று காலை டிபன் இட்லி' என்றேன். ஓகே என்றால் அவளும்.
    பிறகென்ன................ இட்லி பானை இல் மாவி விட்டு வைத்தகிவிட்டது................... 10 நிமிஷத்தில் திறந்து பார்த்தால்.......................[​IMG] மேலே போட்டுள்ள தலைப்புத்தான்................ எனக்கு எப்படி இருந்தது என்று வார்த்தை இல் போட முடியவில்லை.

    சாதிக்க முடியாதாத்தாய் சாதித்த பெருமை எனக்கு................ கொண்டு வந்து டைனிங் டேபிள் இல் வைத்தேன். மூவருக்கும் அவர்கள் கண்களையே நம்ப முடியலை................ சூப்பர் மா... சுபைர் மா என்று கிருஷ்ணாவும் ஆர்த்தியும் குதித்தார்கள்

    இவர் சூப்பர் ... என்று சிரித்துவிட்டு.............. ஒருவழியாக இட்லி யையும் பணிய வெச்சுட்டியா என்றபடியே ஒரு வில்லை இட்லி யை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

    பாவம் டி நீ எந்த நாயும் ஒரு கை சாதம் அல்லது aval போட்டு செய்து பார் என்று உனக்கு சொன்னதில்லை.... இல்லாவிட்டால் idhu என்ன பிரமாதம் என்று சிரித்தார். அவ்வளவுதான் எங்கள் வீட்டில் இன்று காலை இட்லி மதியம் இட்லி... இரவு தயீர் சாதம் என்றானது.. .....................மீந்த இட்லி யை சனிக்கிழமை இரவு MW சுடவைத்தோம் என்ன ஆச்சர்யம்......அதுவும் அப்போது தான் செய்த இட்லி போல அவ்வளவு சாஃப்ட்..................நீங்களும் வேண்டுமானால் செய்து பாருங்களேன்

    இது தான் அந்த இட்லி எனக்கு பணிந்த கதை [​IMG] [​IMG]
     
  7. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai Ma,

    VEry nicely narrated with good sense of humour. Atlast
    you won by preparing soft idlies. All the best. Your write up made me tasted more than your idlies. Tks for sharing nice soft idly story
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you so much for your nice comment :)
     

Share This Page