1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சுவை நகை

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Feb 6, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,573
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: சுவை நகை :hello:
    கொஞ்சம் சிரிங்க ! கொஞ்சி கொஞ்சி சிரிங்க !
    1) "என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.''
    "என் மகன் உங்க மகனைவிட அதிபுத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.''

    "உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?''
    "எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.''

    "காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?''
    "வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!''

    "ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?''
    "உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!''

    கேள்வி: Love marriage’கும் arranged marriage’கும் என்ன வித்தியாசம்???

    பதில்: நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage! அப்படியில்லாம பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!

    ஒருவர்: என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்."
    இன்னொருவர்: யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே?"
    ஒருவர்: நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

    ஒருவர்: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவிக் கொடுக்குறீங்க?
    இன்னொருவர்: டாக்டர் தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

    ஒருவர்: தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?
    இன்னொருவர்: ஏன்?
    ஒருவர்: டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.

    ஒருவர்: தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
    இன்னொருவர்: இருய்யா.. எனக்கு ஒரு செருப்புத் தான் கிடைச்சிருக்கு...!

    தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
    மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
     
    Loading...

Share This Page