சின்னஞ் சிறுகதை [கல்கி இதழ் 21/12/2014 தேதியிட்டு &#

Discussion in 'Jokes' started by bharathymanian, Dec 17, 2014.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    சின்னஞ் சிறுகதை

    கம கம...

    கௌரி
    ஓவியம்: பிள்ளை

    என்னங்க இங்க வாங்களேன்... இந்த பீன்ஸை கொஞ்சம் நறுக்கிக் கொடுங்க. இன்னைக்கு ரொம்ப லேட்டாயிடுச்சு. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்" என்று ஸ்ருதி உச்சஸ்தாயியில் கத்தவும், வரேன் இரு..." என்று சத்தம் போட்டபடியே வந்த ரங்கநாதன் என்கிற ரகு, ‘டிசம்பர் சீஸன் வந்து விட்டாலே போதுமே இவளுக்கு. சபாவுக்குப் போய் விட்டு லேட்டாக வருவது, பிறகு, காலையில் ஆபீஸுக்கு வேறு போகணும். இந்த மாதம் முழுவதும் இவளுடைய தொல்லை தாங்க முடியாது’ என்று புலம்பிக் கொண்டே கிச்சனுக்கு வந்தான்.
    ரகு, ஸ்ருதி இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்கள். ஸ்ருதி இசை பயின்றவள். மறைந்த அவளுடைய அப்பாவுக்கு ஸ்ருதியைப் பாடகியாக்கிப் பார்க்க வேண்டும் என்று பெரும் கனவு இருந்தது. அதை நிறைவேற்றுவதே ஸ்ருதியின் லட்சியமானது.
    ரகு, பீன்ஸ் நறுக்கி முடிக்கவும், அவசர அவசரமாகச் சமைத்துக் கொண்டிருந்த ஸ்ருதி, திரும்பிப் பார்க்க, என்னங்க இப்படியா பீன்ஸை நறுக்குவது? பொரியலுக்குப் பொடியாக நறுக்கணும். இப்படி பெரிசா நறுக்கினால் எப்படி பொரியல் பண்ணுவது?" என்றதும், நீ நறுக்கும்போதே சொன்னியா? உன்னை யாரு மேடைக் கச்சேரிகள் எல்லாம் பண்ணச் சொன்னது? ஒழுங்கா வேலைக்குப் போனோமா, சமைச்சோமான்னு இல்லாமா?" எறிந்து விழுந்தான். அவனுக்கு இசையில் துளியும் ஈடுபாடு கிடையாது.
    அன்று மானேஜர் ரகுவின் இருக்கைக்கு வந்து, ரகு, ஸ்ருதி உங்க வொய்ப்பா? சொல்லவே இல்ல. அவங்க என்னம்மா பாடுனாங்க தெரியுமா?
    நல்ல எதிர்காலம் இருக்கு. நேத்து சாயங்காலம் கச்சேரி முடிந்து சபா வாசலில் வரும்போது சந்தித்துப் பேசினேன். அப்பத்தான் அவங்க உங்க வொய்ஃப்னு தெரிஞ்சது. இந்தப் பயிற்சிக்கும், பாட்டுக்கும் என் ஹஸ்பென்ட் ரகுவின் ஒத்துழைப்புதான் காரணம்னு சொன்னாங்க. யு ஆர் கிரேட் ரகு," என்று தோள் தட்டிப் பாராட்டியது ரகு மனத்தில் அப்படியே பதிஞ்சு போச்சு.
    என்னங்க, இன்னைக்கு பிரபல பாடகி சாந்தி ரகுநாதனோடு நானும் கச்சேரியில் சேர்ந்து பாடுறேன். நான் எதிர்பார்த்த முக்கிய வாய்ப்பு இது. வர நாழியாகும். ஹோட்டலில் நமக்குச் சாப்பாடு வாங்கி வைச்சிடுங்க," என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
    அன்று பிரமாதமாகப் பாடி அரங்கம் அதிரும்படி கைத்தட்டல் பெற்றாள். விழா முடிய இரவு 10.00 மணி ஆகிவிட்டது.
    கார் டிரைவர் வேறு அன்று பார்த்து உடம்பு சரி யில்லை என்று லீவு போட, அரக்கப் பரக்க ஆட்டோ பிடித்தாள். வரும் வழியிலேயே கணவனுக்கு ஃபோன் செய்து சாப்பாடு வாங்கிட்டீங்களா? என்று கேட்டபடியே இருந்தாள். ரகுவுக்கு ஓட்டல் சாப்பாடு என்றால் அலர்ஜி வேறு. என்ன செய்வது?
    நீ முதலில் வீட்டுக்கு வா" என்றான்.
    வீட்டுக்கு வந்து அவசர அவசரமாக உடை மாற்றி, முகம் கழுவி டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள்.
    கிச்சனில் இருந்து ரகு, மணக்க மணக்க ஃபிரைட் ரைஸும், கத்தரிக்காய்ப் பச்சடியும் கொண்டு வந்து வைத்தான்.

    என்னது இது?" என்று ஸ்ருதி வியப்பாக கேட்க, ரகு, நீ மானேஜர்கிட்ட சொன்ன சொல்லை நான் காப்பாத்தணுமில்ல?" என்று சொல்லிக் கண்ணடித்தான்.
    ஸ்ருதிக்குக் கச்சேரியில் கிடைத்த கைத்தட்டலை விட, கணவரின் இந்த அன்பான ‘கமகம’ சமையல் வீட்டின் அறையை மட்டுமல்ல... மனத்தின் மூலை முடுக்கெல்லாம் பாட்டைப் போலப் பரவசப்படுத்தத் தொடங்கியது.
    -------------------------------------------------------------------------------
    'Understanding life' comes quickly for some couples and it takes time for some others. It needs to be worked out sincerely.

    "BharathyManian"
     
    Loading...

Share This Page