1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சினேகிதியின் பேரன்புப்பரிசு

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 7, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,576
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: சினேகிதியின் பேரன்புப்பரிசு :hello:

    மீனா தன் பால்ய சினேகிதி மாலாவுக்கு ஃபோன் செய்து, "ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்! வீட்டுக்கு வரலாமா" என கேட்டதும் பொறுக்கவில்லை மாலாவுக்கு "என்னடி பெர்மிஷன் கேட்கிறே...? டயத்தை மட்டும் சொல்லு உனக்காக காத்திருக்கிறேன்"என்றாள் மிக ஆவலுடன்.

    பேசியபடி சொன்ன நேரத்துக்கு மாலா வீட்டிற்கு வந்து விட்டாள் மீனா. நீண்ட இடைவேளைக்குப் பின் ஆனந்தமான உரையாடல். மனங்கள் குதித்தன.

    ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அப்புறம் டிபன் காபி நொறுக்குத்தீனி உபசரிப்பில் தனி விசேஷம்.

    "ஏதோ முக்கியமான விஷயம்'ன்னு சொன்னியே அது என்ன?"என்று மீனாவுக்கு நினைவூட்டினாள் மாலா.

    "அட...! நம் பேச்சு சுவாரஸ்யத்தில் சொல்ல வந்ததையே மறந்து போய்விட்டேன் பாரேன்!"

    சிரித்துக்கொண்டாள் மீனா. "இன்னும் ரமா,தேவிகா, ராணி வீடெல்லாம் வேற பாக்கியிருக்கிறது.
    இதோ, முதல்ல உன்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு சட்டு புட்டுன்னு நான் அவங்களை பாக்குறதுக்கு கிளம்பணும் " என்றபடி மேலே தொடர்ந்தாள்

    "டாக்டர் கொரோனா என்பதை கன்ஃபார்ம் பண்ணிட்டார்.
    14 நாள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்."

    "யாருக்கு....?"
    "யாருக்கா? நேக்குதான்! அதனால்தானே ஃபிரண்ட்ஸ் உங்களை எல்லாரையும் பார்த்துப் பேசிட்டு போகணும்'னு வந்திருக்கேன்"
     

Share This Page