1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிந்திப்போமா மனதை நிந்திப்போமா

Discussion in 'Regional Poetry' started by natpudan, Nov 25, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சிந்திப்போமா மனதை நிந்திப்போமா

    தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமாமே?
    முக்காலும் உணர்ந்தன்றோ முன்னோர்கள் சொன்ன வாக்கிது,
    இக்கால அவசர வாழ்க்கையில் இயற்கை உணவை புறக்கணித்து,
    மேல்நாட்டு கலாசாரத்தின் வழி வந்த அவசர உணவை அரக்கப் பறக்க உட்கொண்டு,
    கண்டபடி சதை போட்டு.... வதை பட்டு - என்னவோ ஒபேசாமே - அதுபோல் குண்டாகி,
    ரசித்து எதையும் உட்கொள்ளமுடியா - வாய்பேசா நிலையை அன்றோ அடைந்திட்டோம்,
    நாம் ஆட நினைத்தாலும் முடியாது..... அந்தோ நினைக்காமலே நம் சதை மட்டும் ஆடுதே,
    இந்நிலை பரிதாபமன்றோ? சிந்திப்போமே மனதை நிந்திப்போமே இயற்கைக்கு மாறான உணவை தவிர்ப்போமே...

    தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் எனும் பழஞ்சொல் - பாசத்திற்காக சொல்லப்பட்டது,
    ஆனால் மேற்கூறிய இக்கால அவல நிலைக்கும் பொருந்தும் அல்லவா?
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீங்க எழுதுனா எந்த காலத்துக்கும் எதுவும் பொருந்தும் நட்ஸ்.....[​IMG]

    நீங்க சாப்பிடாம ஒல்லியா இருந்தா அந்த வருத்தத்தை போக்க ஏன் நல்லா என்ன மாதிரி சாப்ட்றவங்கள வம்புக்கு இழுக்குறீங்க? நாங்க எல்லாம் கை அசைச்சாலே அது பரதநாட்டியம் தான்... தெரிஞ்சுக்கோங்க...[​IMG][​IMG]

    ரொம்ப நல்லா இருந்தது நட்ஸ் கவிதை.
     
    Last edited: Nov 25, 2010
  3. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Ungal kavidhai ennai sindhikkavaithadhu

    viji
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    ????????????????????:hide:
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba sari nats..neenga sonnathu........ippa neraya fast food vanthu namakku kedu thaan athigam vilaikkuthu...

    good poem nats....(saappadu neram aayuducha nats...:rotfl)
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Nice poem Nats.
    Ithaye thaan naan en DD kitta adikkadi solven.
    Solli solli konjam konjamaa kurainthu kondu varugirathu
    Athan vilaivu thaan aval katru kondu irukkum samayal process !

    Ithaye thaan vaaye valikkamal Dietician Dharini Krishnan daily 7.30 a.m. Jaya TVyil solgirargal.
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீங்க வேற இப்படி சொல்லிட்டிங்களா? இனி அவரு...

    வாயே வலிக்காமல் வாழைப்பழம் தின்போம்
    வயிறு வலிக்காமல் வத்தக்குழம்பு உண்போம்

    ன்னு அடுத்த தலைப்பு ரெடி பண்ணிருவாரு....:rotfl:rotfl
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    நகைச்சுவையாக நல்ல கருத்துள்ள கவிதை தர உங்களுக்கு நிகர் நீங்களே நட்ஸ்
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    கட்டுக்கு மீறிய கட்டுடலை கட்டுக்குள் வைக்க படும் பாட்டை விடுத்து.. உன்கையிலே கட்டுப் பாட்டை நாவுக்கு விடுப்போம். நன்மை அடைவோம். அருமையான கருத்து.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நாவடக்கம் பேசறதோட மட்டும் இல்ல, சாப்டும் போதும் வேணும்-ன்னு சொல்றீங்க. நல்ல விஷயம்.

    ஆனா பாவம்... பிரியா உங்களை இதுக்காக மனசுல திட்டுவாளே...
     

Share This Page