1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks Iniya!
     
  2. Nithuashok2015

    Nithuashok2015 Bronze IL'ite

    Messages:
    74
    Likes Received:
    35
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Miga Arumai Shakthi:thumbsup: Enjoyed very much :cheer:
     
    Sivasakthigopi likes this.
  3. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Twist!!!
    :blush:
     
  4. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks Pa!
    :blush:
     
    Nithuashok2015 likes this.
  5. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Inniku innoru UD kudukka try pandren.
    editing pannikitu iruken!
    so freea irkkumpothu inga aru visit pannidunga!
    Marakkama comments kodunga!
     
    sreeram and Nithuashok2015 like this.
  6. Nithuashok2015

    Nithuashok2015 Bronze IL'ite

    Messages:
    74
    Likes Received:
    35
    Trophy Points:
    38
    Gender:
    Female

    Waiting ! :blush:
     
    Sivasakthigopi likes this.
  7. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Ayyo Sakthi..... chance illa....i was smiling throughout .... super update...... hide seek game kadaisiya..... ippadi ninuduche.... Sankar entry marubadiyum enna pirachanai kondu varumo.....
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    sakthi romance episode kudaththa thaan pillaigal mugathil sirippu varum .Rendum super .Aana poojai velaila karadi maathiri intha sankar ean vanthaan
     
  9. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 30

    சங்கர் வந்து இருப்பதை அறிந்ததும், பார்த்திபன் கீழே செல்ல, மதிக்கு செல்ல பிடிக்கவில்லை.

    அதைவிட முக்கியம், அது அந்த சங்கர் தானா என்பதும் அவளுக்கு தெரியவில்லை.

    அன்று அவனை எஸ்டேட்டில் அவள் பார்த்ததோடு சரி. அதன் பின் அவனைப் பற்றிய தகவல்களை அவளால் அறிய முடியவில்லை. சுரேஷ் வழியாக அவன் நலமாக இருப்பதை உறுதி செய்ததோடு முடிந்தது.

    அதன் பின் அவனைப் பற்றி அவள் அதிகம் கவலைப் படவில்லை. இப்போது கூட, அவள் அவனைச் சந்திக்க விரும்பவில்லை. ஆனாலும் தனக்குள்ளாக அவள் கேள்வி கேட்டுகொண்டாள்.

    "போவோமா? வேண்டாமா?"

    முதல் காதல் தான். உயிராக நேசித்தவன் தான். ஆனால் கால மாற்றத்தில் இதயத்தின் ஓரத்தில் கூட அவன் இல்லை. அவன் முன் நான் நிற்க வேண்டும். இது எனக்கான பரீட்சை. ஆனால் பார்த்திபன்? அவர் என்ன சொல்வார்?"

    "போய் நின்றால் கோபம் கொள்வார். சுரேஷ் வந்ததற்கே கோபம் கொண்டவர் ஆச்சே"

    பலவாறாக யோசித்தவள், மெல்ல சென்று இருவரும் கலைத்து போட்ட, உடைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

    கீழே சென்றவன் மேலே வரவே இல்லை. மணி ஆவதை உணர்ந்து, வெளியே வந்தவள், பள்ளிக்கு கிளம்ப தயாரானாள்.

    கிளம்பி கீழே செல்லவும், பார்த்திபன் மேலே வரவும் சரியாக இருந்தது.

    அவள் வருவதைப் பார்த்தவன், மீண்டும் கீழே இறங்கினான்.

    அவனைப் பின் தொடர்ந்தவள், "மீனா?" என்று இடையில் நின்று கொண்டாள்.

    "அபிக்கு டிபன் நான் வந்து செய்யறேன். நேத்தே பஜ்ஜி கேட்டான். நீ நம்ம வீட்டு பின்னாடி இருக்கற வாழக்காய் பறிச்சு வை."

    "சரிங்கம்மா"

    "காலைல அறுத்து வைச்ச மலைவாழை தார்ல, ஒரு சீப்பு இங்க வை, அங்க ராமசாமி அப்பா வீட்டுக்கு ஒன்னும், சுப்பையா அப்பா வீட்டுக்கு ஒன்னும் கொடுத்து விடு. மீதி நீங்க எல்லாரும் பறிச்சுக்கோங்க"

    "சரிங்கம்மா"

    பின் அவனைத் தேட, அவன் காரில் இருந்தான். அவனுடன் சென்று அமர்ந்தாள்.

    பள்ளியில் மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்ப, வழியெங்கிலும் அவன் அமைதியாக இருந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் சகஜமாக, அன்றைய மாலை நன்றாக சென்றது.

    இரவு மகன் உறங்கியதும், அவனறைக்குச் செல்ல, அவன் வழக்கம் போல லேப்பில் வேலை செய்ய, சோகமாக அவனருகில் அமர்ந்தாள்.

    "இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரில"

    அவன் பதில் பேசாது அவளையே பார்க்க,

    "எப்ப பார்த்தாலும் இப்படியே இருந்தா, எனக்குன்னு எப்ப தான் டைம் ஒதுக்குவீங்க?" என்ற குரலில் கோபமும் விரக்தியும் கலந்து இருந்தது.

    லேப்பை மூடி வைத்தவன், "சொல்லு" என்றான்.

    அவள் அவனிடம் நெருங்கி அமர்ந்து, அவன் தோளில் தலை சாய்த்துக்கொண்டாள்.

    "எனக்கு தூக்கம் வருது"

    "சரி தூங்கு"

    "நீங்க படுத்தாதான நான் படுக்க"

    "ம்ம். படுக்கலாம்." என்றவன் திரும்ப,

    "மாமா."

    "ம்ம்"

    "எனக்கு உங்ககிட்ட நிறையா பேசணும்"

    "நாளைக்கு பேசலாம்"

    "இல்ல இப்பவே"

    "சரி சொல்லு"

    நிமிர்ந்தவள், "நான் சொல்வேன். ஆனா நீங்க எனக்கு என்மேல ஒரு சத்தியம் பண்ணி தரனும்"

    "என்ன சத்தியம்?"

    "நான் சொல்றத கேட்டு யார்மேலையும் கோப பட கூடாது"

    "வேண்டாம் வதனி. நீ போய் தூங்கு"

    "அதெல்லாம் முடியாது"

    அவன் மவுனம் காக்க, "பிளீஸ் மாமா"

    "சரி உன் மேல சத்தியம், எனக்கு கோபம் வந்தா நான் கன்ட்ரோல் பண்ணிப்பேன். சரியா? ஆனா அது அவங்க கைல இருக்கு. மறுபடியும் என்ன சின்ன விசயத்துக்கு கோபப்படுத்துனாலும் சரி, அதுக்கு பல மடங்கா என் பதில் இருக்கும்." என்று அவள் தலையில் கை வைத்து சத்தியம் செய்தான்.

    "அன்னிக்கு நீங்களும் சங்கரும் பேசினத நான் கேட்டேன் மாமா. அந்த நிமிஷம், என்ன உயிருக்குயிரா வளர்த்த என் அப்பா அம்மா செத்தது கூட எனக்கு தெரில. அவங்கள கடைசியா பார்க்க விடாம பண்ணிடீங்க அப்படிங்கற கோபம் எனக்கு இருந்தது."

    "அதும் இல்லாம, அத்தை மாமா இறந்த விஷயம் கூட எனக்கு தெரில. எனக்கு என்ன பண்ணறது அப்படினே தெரில. அந்த கோபம் உங்களுக்கு ஏதாவது ஒரு தண்டனைய தர முடிவு செஞ்சது"

    "யோசிச்சேன். உடனே கிளம்ப முடிவு பண்ணி, நான் செயல்பட்டேன். நம்ம கல்யாணம் ஆன போட்டோவ எடுத்து என் டிரஸ்ல ஒளிச்சு வைச்சுக்கிட்டேன், அது அபிக்கு மட்டும் இல்ல. எனக்காகவும் தான். அப்ப எனக்கு தெரில"

    "உங்கள விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறம் தான் உங்க பிரிவு எனக்கு மகிழ்ச்சி தராது, வருத்தம் தரும் அப்படின்னு தெரிஞ்சது"

    "ஆனா அது ஏன் அப்படின்னு தெரில"

    "அன்னிக்கு என் கை கட் ஆகல. கட் பண்ணிகிட்டேன். இங்க இருக்கறது ஜென்ட் டாக்டர் அப்டின்னு தெரியும். அதான், கண்டிப்பா நீங்க எனக்கு பிடிக்காதுன்னு கீழே கூட்டி போவிங்கன்னு முடிவு பண்ணேன்"

    "அப்ப எனக்கு தெரிஞ்சது, இங்க இருந்து போகணும். அவ்ளோதான்"

    "ஹாஸ்பிட்டல்ல நர்ஸ் உதவியோட தப்பிச்சு, சுரேஷ் கிட்ட போனேன். அவன் ஐடியா படி இங்கிருந்து அமெரிக்கா போனேன்" என்று நடந்த அனைத்தையும் விளக்கமாக சொன்னாள்.

    "இங்க இருந்து, உங்கள விட்டு போற வரைக்கும் எனக்கு எதுவுமே தெரில மாமா. அங்க அமெரிக்கால போய் இறங்கியதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. அமெரிக்கால இறங்கியதுக்கு அப்புறம் தான் என் பயம் அதிகமாச்சு."

    "அப்பா, அம்மா பாதுகாப்பு போய், உங்க பாதுகாப்புல இருந்த நான், இப்ப எதுவும் இல்லாம இருக்கறேன்னு கவலை வந்தது."

    "அபி என் வயிற்றில் வளரும்போது எனக்கு அவ்ளோ ஏக்கமா இருக்கும். மத்த லேடீஸ் அவங்க ஹஸ்பன்ட் கூட வந்து இருப்பாங்க. அவங்க பேசும் போது, அவங்க ஆசைகள் கனவுகள் எல்லாம் உங்களோட அருகாமை எனக்கு வேணும் அப்படின்னு தோன வைச்சுது"

    "வலி அதிகமாகி, ஹாஸ்பிட்டல்ல சேர்ந்தப்ப உங்கள நான் ரொம்ப தேடுனேன். உங்கள பார்க்காமலேயே செத்து போய்டுவனோ அப்படின்னு யோசிச்சேன்"

    "அபிய கைல வாங்குறப்ப, என் வாய் தானாகவே அவன் பேர் சொன்னது. அபிமன்யு பார்த்திபன் சக்ரவர்த்தி அப்படின்னு. காரணம் அவன் உங்கள உரிச்சு வைச்சு இருந்தான்"

    "அவனுக்கு உங்க போட்டோவ காட்டி காட்டி தான் வளர்த்தேன். அதான் வீட்ல நம்ம கல்யாண போட்டோ ஹால்லையும் ரூம்லையும் இருந்தது. அவன பொறுத்த வரை, அப்பா பாரின் போய் இருக்காங்க. அவ்ளோதான்."

    "உங்க மேல இருந்த கோபம் காணாம போக ஆரம்பிச்சது. என் அப்பா மேல அது திரும்புச்சு. அவர் பண்ண தப்புக்கு நான் ஏன் இப்படி பண்ணேன் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன்"

    "உங்க கோபம் தெரிஞ்சதால, உங்க கிட்ட வர பயம். அதே சமயம், மறுபடியும் நீங்க என்ன ஹவுஸ் அரெஸ்ட் பண்ணுவீங்களோ அப்படின்னு ஒரு பயம். சோ வர விரும்பல. அதும் இல்லாம நான் மிஸ் பண்ணேன். ஆனா அப்ப உங்கள லவ் பண்ணானா அப்டின்னு தெரியாது."

    "வேலை செய்யற இடத்துல இருந்த சில, வக்கிரம் பிடிச்ச ஆண்கள் கிட்ட இருந்து தப்பிக்க, நான் திருமணம் ஆகாதவள் அப்படின்னு வேஷம் போட்டு நடக்க ஆரம்பிச்சேன்"

    "நான் இருந்த அப்பார்ட்மெண்ட்ல அபி எல்லாருக்கும் பெட். அதான் வீட்ல உங்க போட்டோ பாத்து எல்லாரும் உங்கள அன்னிக்கு அடையாளம் கண்டு பிடிச்சாங்க"

    "நான் அப்ப கூட உங்க லவ் பத்தி புரிஞ்சுக்க டிரை பண்ணல. பட் இங்க வந்து தான் தெரிஞ்சுக்கிட்டேன், புரிஞ்சுக்கிட்டேன்"

    "அன்னிக்கு நான் விவரம் தெரியாத பொண்ணா இருந்தேன், இன்னிக்கு ஓரளவுக்கு பக்குவம் வந்துடுச்சு"

    "ஆனா, அந்த சங்கர பத்தி இத்தனை நாள்ல நான் நினைச்சே பார்க்ல. என் நினைவுகள் உங்கள சுத்தியே தான் இருந்தது. ஆனா ஒரு தடவை சுரேஷ் கிட்ட அவன் எப்படி இருக்கான்னு கேட்டதோட சரி."

    "இப்ப என்ன பொறுத்த வரை, நான் உங்கள விட்டு போனது தப்பு. அதுக்கு தண்டனைய நான் அனுபவிசுட்டேன். இதை நான் உணர்ந்து தான் சொல்லறேன்"

    "இப்ப என்னால உங்கள விட்டு இருக்க முடியாது மாமா. நீங்க வேணும். எப்பையுமே, என் கூட, என் கண் முன்னாடி." என்று கண்கள் கண்கள் கலங்க பேசியவள், மீண்டும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

    "வதனி"

    "வதனி என்ன பாரேன்"

    மெல்ல நிமிர்ந்து பார்த்தவளை, "உன்ன மொத மொதல்ல பார்த்ததுல இருந்து உன்ன ஒரு நாள் கூட பார்க்காம நான் இருந்ததே இல்ல. உன் கிட்ட அப்ப சொல்லாம இருந்ததுக்கு காரணம், உன் படிப்பு. அதுதான் நான் பண்ண பெரிய தப்பு. அதும் இல்லாம நீ படிக்க வேண்டிய அவசியம் இல்ல. நம்ம காலேஜ்ல கூட உனக்கு சீட் ஏற்பாடு பண்ணி இருப்பேன். கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்ஞ்சு இருப்பேன்."

    "உன்ன பக்கத்துல வைச்சுக்கிட்டு, என்னால சும்மா இருக்க முடியாது. அந்தளவுக்கு நீ என் மனசுல இருந்த. ஆனா உன் வயசு அப்ப மேரேஜ்க்கு ஒத்து வராது."

    "அதான்.நான் டிலே பண்ணேன். உனக்கு 24 மணி நேரமும் நான் செக்யூரிட்டி ஏற்பாடு செஞ்சு இருந்தேன். உன்ன ஒரு தடவ டிரெஸ் ஷாப்ல பார்த்தப்ப, நீ ரசிச்சு பார்த்த டிரெஸ் எல்லாமே வாங்குனேன். மழைல நீ ஒதுங்கி நீ நின்னப்ப உன்ன அன்னிக்கே தூக்கிட்டு வரணும் அப்படிங்கற எண்ணம் வந்தது."

    "நீ போனப்ப எனக்கு வருத்தம் தான். ஆனா நான் உன்ன தேடறத நிறுத்தவே இல்ல. ராமசாமி அங்கிள் அப்பா அம்மா காரியத்துக்கு வந்தப்ப தான் நம்ம திருமண விஷயம் தெரிஞ்சு கிளம்பினார். உன் கூட இங்க வர்றதா தான் என் பிளான். அத சர்பிரைசா வைக்க அவர்கிட்ட சொன்னேன்"

    "கடைசில, நீ கிளம்பி போனப்ப, அவர் வந்தார். அவர் வந்து தான் என்ன இங்க கூட்டி வந்தார். உன்ன இன்னமும் என் ஆளுங்க தேடிக்கிட்டு தான் இருந்தாங்க"

    "நீயே வந்துட்ட. சங்கர் என் கண்ட்ரோல்ல தான் இருந்தான். அவனுக்கு கல்யாணம் கூட ஆய்டுச்சு. இன்னிக்கு வந்ததும் அவன் தான். அதுக்கு காரணம் நம்ம எஸ்டேட்ல ஆஸ்பிட்டல் வைச்சு இருக்கோம், அதுல அவன் வேலை செய்யறான். அந்த விஷயமா தான் வந்தான்"

    "எனக்கு ஆரம்பத்துலையே தெரியும். அவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. நீ இருக்கற இடம் கூட தெரியாதுன்னு. பட் சுரேஷ் உனக்கு நல்ல பிரெண்ட் தான். உன் கண்ணசைவை வைச்சே அன்னிக்கு கிளம்பிட்டான். இவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்கான். ஆனா அதுதான் அவன் கிட்ட எனக்கு பிடிக்கல."

    "சரி விடு. இனி பேச எதுவும் இல்ல. எதுவா இருந்தாலும் மறப்போம். இப்போ தூங்குவோம்."

    அவள் புன்னகைத்தவாறே அவன் தோளில் சாய்ந்து கைகளை இறுக்கிக் கொண்டாள்.

    "வதனி."

    "ம்ம்."

    "இனி நமக்கு நாமே. நமக்கு யாருமே வேண்டாமே"

    "உங்க இஷ்டம் மாமா"

    "சரி அதென்ன அபி அப்படியே அப்பாவோட பிடிவாதம் கொண்டு பிறந்து இருக்கான். உனக்கும் தான் பிடிவாதம் பிடிக்கும் குணம் இருக்குல்ல"

    "ஆனா என் அளவ விட உங்க அளவு தான் இருக்கு. எனக்கு தெரியும் அன்னிக்கு கேட்டு இருப்பீங்கன்னு"

    "என்ன கேட்டு இருப்பேன்?"

    "உங்கள" என்றவள், அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க, சில அடிகள் வாங்கியவன், அவளை தடுத்து தன்னோடு இழுத்து அணைத்து, கட்டிலில் தள்ளி அவள் மேலேயே ஏறி படுத்தான்.

    "இப்ப எப்படி அடிப்ப?"

    "இப்படி" என்று கைகளில் அடிக்கத் துவங்க, அதையும் தடுத்தவன், "ஏய், என்ன அடிச்சா என்ன பனிஷ்மெண்ட்ன்னு தெரியுமுள்ள"

    "பிடிச்ச பனிஷ்மெண்ட் தான" என்று சொன்னவள், சொன்னதன் அர்த்தம் உணர்ந்து அவள் நாக்கை கடித்துக்கொள்ள,

    "என்ன சொன்ன?"

    பதில் பேசாமல் முகம் சிவந்து எழ முயற்சித்தவளை, தடுத்தவன், "வதனி" என்று தாபம் நிறைந்த குரலில் அழைத்தான்.

    அவள் முகம் மேலும் சிவக்க, அவள் இதயம் தாறுமாறாக துடிக்க, "என்ன மாதிரி ஒரு பையன் ஓகே. உன்ன மாதிரி ஒரு பொண்ணு வேணுமே?" என்று கேக்க, அவனை பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தில் தன முகத்தை தன் கரங்கள் கொண்டு மூடினாள்.

    மெல்ல அவள் கரங்களை எடுத்தவன் அவள் ஒவ்வொரு விரல்களிலும் தன் முத்திரையை பதித்தான்.

    அவள் அவனை தள்ளி விட்டு எழுந்தவள், "இன்னிக்கு சார் என் கூட பேசாம ஈவ்னிங் வந்தீங்க. இப்ப மட்டும் என்ன. இவ்ளோ நாளா நான் கண்ணுக்கே தெரில, இப்பத்தான் தெரிஞ்சுருக்கேன். உன் விருப்பம் கண்ல தெரியும் அப்படின்னு டயலாக் விட்டீங்கள்ள, அப்புறம் என்ன கேள்வி, நான் தொட்டா வெறுப்பா இருக்கான்னு. அதுக்கு ஒரு சண்டை வேற. அப்புறம்.."

    அவளை முடிக்க விடாமல் அவள் இதழ்களை சிறை செய்து இருந்தான். "ஈவ்னிங் வர்றப்ப ஏன் பேசலைனா கேட்ட, மதியம் பாதில மீனாவால விட்டத தொடற மேல வந்தா நீ கீழே வந்த. அந்த கோபம். அப்புறம் ரூம்க்குள்ள வந்ததும் அது சரி ஆய்டுச்சு."

    "அப்புறம்..."

    "நிறுத்து. நீ இப்படியே பேசி பேசி டைம ஓட்டிருவ போலேயே. மொதல்ல எனக்கு சப்போர்ட்டுக்கு ஒரு பொண்ண ரெடி பண்ணறேன். அன்னிக்கு நான் பார்த்ததுமே, உன் பையன் வந்தான்ல உன்ன அடிக்க வேண்டாம்னு, இப்ப நீ என்ன அடிக்கிறத தடுக்க எனக்கு ஒரு குட்டி வதனி வேணும்." என்றவன் அவளை அள்ளி எடுத்து கட்டிலில் போட்டான்.

    மூன்று மாதங்களுக்கு பின்பு,

    "சாரதாம்மா. நான் மதி பேசறேன்" என்று பார்த்திபனின் தோளில் சாய்ந்து கொண்டு, அபியை மடியில் வைத்துக்கொண்டு மதி சாரதாவிடம் பேச ஆரம்பித்தாள்.

    தோட்டத்தில் வீசிய குளுமையான தென்றல் போல சந்தனாவின் வாழ்விலும் தென்றல் வீசிக்கொண்டு இருந்தது.


    ---- சந்தனத் தென்றல் முற்றியது.

    Copy Right to Shrijo
     
    Caide, Deepu04, IniyaaSri and 2 others like this.
  10. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Anaivarukum En Nandrigal!
    Santhanath thendralai mudiththuvitten!
    Aduththa Kathai patriya intro viraivil tharugiren!
    Intha kathai puththagamaaga veli vara ullathu!
    Enave ungal karuththugalai ennudan pagirnthukollungal!
     
    IniyaaSri likes this.

Share This Page