1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 27

    அன்று ஆபிஸ்க்கு தான் செல்வாதாக மதி நினைத்துக்கொண்டு இருந்தாள். ஆனால் அன்று அனைவரும் சென்றது படத்திற்கு. குழந்தைகளுக்கு என்று வெளியான கார்ட்டூன் படத்திற்கு அழைத்துச் சென்றான்.

    மூவரும் படம் முடிந்து, அபிக்கு தேவையானதை வாங்க சென்றனர். அப்பாவும் மகனும் வாங்க, அவள் அமைதியாய் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

    அவர்கள் வாங்கி முடித்து, பாக்டரிகளை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, வழியிலேயே உணவையும் முடித்துவிட்டு இரவு தான் வீட்டிற்கு திரும்பினர். அப்போதும் அவள் பேசாமல் வந்தது ஏதோ ஒரு வகையில் அவனுக்கு கஷ்டமாகவே இருந்தது. மகனுடனாவது பேசுவாள். அன்று அவனிடம் கூட பேசாமல் வந்தது அவனுக்கு பிடிக்கவில்லை.

    அதன் பின்னும் அவள் அப்படியே இருக்க, அவளிடம் பேச அவன் முடிவு செய்துகொண்டான்.

    லேப்பில் விளையாடிக்கொண்டே உறங்கிய மகனை, கட்டிலில் படுக்கவைத்துவிட்டு மனைவிக்காக அவன் காத்து இருந்தான்.

    நினைவுகள் பின்னோக்கி சென்றது.

    அவன் பெல்டை உருவியதும், அவள் கண்களில் தெரிந்த மருட்சி, அதனையும் மீறி, அவள் பார்வை சொல்லாமல் சொன்ன விதம், "நீ இப்படித்தான்" என்று அவன் கோபத்தை அவள் மீது வெறுப்பாக மாற்றியது. சில நாட்களாக அவள் மீது ஏற்பட்ட சிறு சிறு பிடித்தமின்மையை அவன் அவள் மீது வெறுப்பாக காட்டத் தயாரானான்.

    அளவு கடந்த காதல், அதை முழுவதுமாக அவள் மீது காட்டி அவள் தனக்கு மட்டுமே உரியவன் என்று பறைசாற்றிக் கொண்டு இருந்தவன் அந்த நிமிடம் அவளை வெறுத்தான் என்றால் அது உண்மையே.

    "நீ என்னை காதலிக்கனும் அப்படின்னு நான் எதிர்பார்க்கல. உன் காதலையும் நான் எதிர்பார்க்கல, ஆனா எனக்கு நீ வேணும். அதுக்காக உன் உடலை நான் நேசிக்கல. நீ என் மேல வெறுப்ப வளர்த்து வைச்சு இருக்க. உன்ன நான் உன் அனுமதி இல்லாம எடுத்துக்கிட்டேன். ஆனா நான் எப்ப தொட்டாலும், உன்னையும் மீறி உன் விருப்பத்த நான் உன்கிட்ட பார்த்துருக்கேன். என்னிக்காவது உன்கிட்ட மிருகமா நடந்து இருப்பனா? உன்ன பூ மாதிரி பார்த்துக்கணும் அப்படின்னு தான் நினைக்கிறேன். ஆனா நீ?"

    "அதே நீ நான் தொட்டா வெறுப்பா இருக்கு அப்படின்னு சொன்னது முதல் உன்ன விட்டு நான் விலகி தான் இருக்கேன்"

    "அப்ப கூட என்னால முழுசா முடிலடி."

    "நாம சாகற வரைக்கும் நீ என் கண் முன்னாடி இருக்கணும் அப்படின்னு ஆசை பட்டேன். இனி என் கண் முன்னாடி நீ வராத. உன்ன பார்க்கவே நான் விரும்பல"

    "என்னடி என்ன புரிஞ்சுக்கிட்ட. நான் உன் மேல வைச்சது காதல் அப்படின்னு புரிஞ்சுக்க தெரிஞ்சுதுல்ல, அப்புறம் ஏன் அதை உணர மாட்டிங்கற?"

    "நீ உணர்ந்தா நாம இப்படி வாழ அவசியமே இருந்திருக்காதுடி. நீ உண்மைய சொல்லணும் அப்படின்னு நான் நினைக்கிறேன், எதிர்பார்க்கிறேன். எனக்கு கோபம் வர நீ காரணமா இருக்கலாம். அதே மாதிரி என் கோபத்தை உன்னால தோற்கடிக்க முடியும். அதை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டிங்கற? இந்த உலகத்துல யார் வந்து சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் உன் ஒருத்திய தவிர. இனி அதுவும் கிடையாது."

    "ஏண்டி நடிக்கிற. உனக்கு விருப்பம் இல்லாம நீ என் கூட வந்த. அன்னிக்கு உன்கிட்ட நடிப்போ, பொய்யோ இல்லை. இன்னிக்கு என் கிட்ட நடிக்கிற, உன் கண்ல பொய் தெரியுது."

    "நீ நடிக்கிற விஷயம் எனக்கு ரொம்ப கோபம் தருதுடி. உன்ன கொல்லற அளவுக்கு ஆத்திரமா இருக்கு"

    "உன்ன நான் அடிக்கிறேன்னு எனக்கே என் மேல கோபம் வரும். உன்னை அந்த சமயத்துல ஒரு தப்பு செஞ்ச குழந்தையா தான் பார்கிறேன். அதுக்கு ஏத்த மாதிரி தாண்டி நீயும் அப்ப என் முன்னாடி நிக்கற."

    "அன்னிக்கு ஒரு ஆபத்து அப்படின்னு வந்ததும் ஏண்டி என்ன நினைச்ச? எதுக்கு என்கிட்டே ஓடி வந்த? அவனுக்கு கண்டிப்பா என் கையால தண்டனை உண்டு அப்படின்னு என்ன புரிஞ்சு வைச்சு இருந்த நீ, நீ இல்லாம நான் என்ன பண்ணி இருப்பேன்னு யோசிக்க மறந்துட்ட. அப்படித்தான?"

    "இப்ப சொல்றேன். நீ காதலிச்சாலும் சரி, காதலிக்காட்டியும் சரி. நான் உன்ன சாகற வரைக்கும் காதலிக்கணும் அப்படின்னு நினைச்சு இருந்தேன். ஆனா நான் காதலிக்கற அளவுக்கு உனக்கு தகுதி இருக்கா? என் காதலுக்கு உரியவளா நீ? நீ என் மகனுக்கு அம்மா. அவ்ளோதான். அதுக்கும் மேல இனி உனக்கும் எனக்கும் இடைல ஒன்னும் இல்ல."

    "நீ என்ன என்ன ஒதுக்கி வைக்கறது? நான் உன்ன ஒதுக்கி வைக்கிறேன். இனி நீ எனக்கு எந்த வேலையும் செய்யணும் அப்படின்னு அவசியம் இல்ல. மைண்ட் இட்." என்றவன் ரெப்ரெஷ் செய்துகொண்டு அங்கிருக்கும் வேலைகளை கவனிக்கச் சென்றான்.

    கதவு திறக்கும் சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தவன், அவளைப் பார்த்ததும் முன்னறைக்கு சென்றான்.

    அவனது பாரா முகமும், அவன் சென்ற விதமும் அவளுக்கு கண்களில் நீர் வரவைத்தது.

    கண்கள் கலங்க அமைதியாக வந்து, அபியிடம் படுத்துக்கொண்டாள்.

    அவள் வரவிற்காக காத்திருந்தவன், அவள் வராமல் போக எட்டி பார்த்தான்.

    உடை கூட மாற்றாமல் படுத்து இருந்தவளைப் பார்த்தவன், "உள்ளேயே பேசி இருக்கலாம். தூங்கிட்டா! துணி கூட மாத்தலையே, உடம்பு சரி இல்லையோ?" என்று எண்ணிக்கொண்டவன் அவளருகே சென்றான்.

    அழுதபடியே கண்கள் மூடி படுத்து இருந்தவளைப் பார்த்ததும், அவனது கோபம் மீண்டும் வெளியே வந்து, அவனது காதல் மனதை பின்னுக்கு தள்ளி வேடிக்கை பார்த்தது.

    கண்கள் கசிய படுத்து இருந்தவள், அருகில் அரவம் கேட்க, கண் மலர்த்தி பார்க்க, அங்கு கோபத்துடன் பார்த்திபன் நின்று கொண்டு இருந்தான்.

    அவள் மெல்ல எழுந்து உட்கார, அவள் உடல் சோர்வு அவனது கோபத்தை சற்று ஆற்றியது.

    "உடம்பு சரி இல்லையா?"

    "ம்ஹும்"

    "அதானே. உனக்கு என் கூட வெளிய வர்றது கூட உனக்கு பிடிக்கல. அதான் இப்படி பண்ணற"

    அந்த வார்த்தைகள் அவளுக்குள் பிரளையத்தையே ஏற்படுத்த, கண்கள் அணையையும் மீறி வெள்ளமாக பொழிந்தது.

    அவன் அங்கிருந்து "ச்சே" என்று வேகமாக வெளியேறினான்.

    அவனது உதாசீனம் அவளை உயிர் வரை உலுக்கிப் பார்த்தது.

    "என்ன இவன். இவனுக்கு என்ன நான் பொம்மையா? வேணுங்கறான். வேண்டாங்கிறான். அவன் இஷ்டத்துக்கு பேசறான்." என்று மனதில் குமைந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்து அவன் அறையை நோக்கி சென்றாள்.

    அவன் லேப்பில் வேலை செய்வதைப் பார்த்தவள், வேகமாக சென்று அதனைப் பிடுங்கி கட்டிலில் எறிந்தாள்.

    "ஏய்" என்று அவன் கோபமாக எழ, அவனையும் கட்டிலில் தள்ளியவள், அவன் மீது படுத்து, அவனை இறுக்கி அணைத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

    -- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
    Caide, Deepu04, Rajeni and 3 others like this.
  2. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Oru alavuku Long Post Pottuten.
    Next UD Naalaiku thaan!
    Ippa Paarthibana Ellarukum pidikkum apdinu ninaikiren!
    yenna Parthiban than unarvugala express pandra idathula, enaku pidichchathu! So!

    ungaludaiya karuththugalukkaaga kaathirukkiren!
     
    sreeram likes this.
  3. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Sakthi chellam... Supero super... Bayangara Romantic ...
    I loved it to the core... enaku enna sollanu theriyala pa... Vaarthaigal varala....
    Parthiban/mathiyin unarvugaluku seekirame oruthar oruthar bathil sollanum...
     
    Sivasakthigopi likes this.
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Wow.... Nalla super huh erunthathu update....ennaku eppavume Deepanai pidikum... ippa innum rombave pidikum... hmmm ippavathu intha ponnu manasula eeukaratha sonna thevala... pavam rendu perum... pls.... Sakthi... intha kannambuchi velayatulenthu konjam... vella konduvaanga pa...
     
    Sivasakthigopi likes this.
  5. Nithuashok2015

    Nithuashok2015 Bronze IL'ite

    Messages:
    74
    Likes Received:
    35
    Trophy Points:
    38
    Gender:
    Female

    Very nice :) Worth waiting!! Keep rocking...
     
    Sivasakthigopi likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மதி பாவம்டா நீ .சக்தி நல்ல பதிவு
     
    Sivasakthigopi likes this.
  7. RadhaBarani

    RadhaBarani Bronze IL'ite

    Messages:
    91
    Likes Received:
    39
    Trophy Points:
    38
    Gender:
    Female
    semma strong dialogues.. natural.flow of emotions.. unga karuthu ,yezhuthukkal arpudam!!! Romba pidichudu.inda episodes... was reading it many times to understand the thoughts and emotions of deepan...kandippa nalaiku update podynfa.. eagerly awaiting..
     
    Sivasakthigopi likes this.
  8. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 28

    தன் மீது படுத்து அழுது இருக்கும் மனைவியைப் பார்த்ததும், அவனுக்கு ஒன்னும் புரியவில்லை "என்னாச்சு? எதற்கு அழுகிறாள்?" என்று குழப்பம் அடைந்தவன்,

    "வதனிமா! என்னம்மா? ஏன் அழற?"

    பதில் பேசாமல் அழுதுகொண்டே இருக்க, அவள் தலையை மெல்ல கோதிவிட்டான்.

    சிறிது நேரத்தில் அவள் அழுதவாறே உறங்கிப்போய் இருந்தாள்.

    அவள் உறங்கியதும் கூட, அவளை விலக்க மனமின்றி, அவளை மேலும் இறுக்கி உறங்க ஆரம்பித்தான்.

    உறவுகள் பலப்படுவது அன்பினால் மட்டுமே. அந்த அன்பு தராசில் வைக்கப்பட்டால், இரண்டு பக்கமும் சமமாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் அதிகமாகவும் மற்றொரு பக்கம் குறைவாகவும் இருக்கும் இடங்களில் பிணக்குகள் எழுவது இயல்பே.

    விடியல் மெல்ல புலர, பார்த்திபன் வழக்கம் போல துயில் எழுந்தான். தன் மீது துயில் கொள்ளும் மனைவியை துயில் கலைக்க மனமின்றி, அவள் தலையைக் கோதிக்கொண்டே படுத்து இருந்தான்.

    மெல்ல உறக்கம் கலைந்த மதி, சிரமப்பட்டு கண்கள் விழிக்க, அவள் உறக்கம் கலைந்தது தெரியாமல், அவன் அவன் பணியை தொடர்ந்து கொண்டு இருந்தான்.

    வேகமாக அவனிடம் இருந்து எழுந்தவள், "ரொம்பத்தான் கரிசனை. என்கிட்ட முகம் குடுத்து பேச கூட இவ்ளோ நாளா நேரம் இல்லையாம், இப்ப கரிசனை காட்டறாங்கலாம்" என்று சத்தமாக சொல்லி விட்டு எழுந்து சென்றாள்.

    அவள் சொல்லிச் சென்றவிதம், அவனுக்கு புன்னகையை அளித்தது. அவன் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.

    "சோ நான் பேசாதது இவளுக்கு வருத்தம். அதுக்குதான் முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்து இருக்கா." என்று மகிழ்ந்தவன் மகனிடம் சென்று படுத்தான்.

    காலையில் காபி தருவதில் இருந்து மீண்டும் பழையபடி செய்ய மதி ஆரம்பித்தாள். அலுவலகத்தில் வேறு விதமாக தொல்லை செய்ய ஆரம்பித்தாள்.

    அவளை 5 நிமிடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக அவன் பார்க்க வேண்டும். இல்லையெனில், அவன் எழுதினால் பேனாவைப் பறிப்பாள், போன் பேசினால் எழுந்து சென்று போனைப் பிடுங்குவாள், அவளிடம் பேசாமல் இருந்தால், அவன் கையில் இருக்கும் பைல்களை பிடுங்கி எறிந்துவிடுவாள்.

    ஆனால் அவன் அவளிடம் எதிர்பார்த்தது உரிமை கலந்த பிடிவாதமும் கோபமும் தானே. புன்னகை ஒன்றை சிந்தி அமைதியாக பேசுவான்.

    இரவில் அபியுடன் உறங்கினாலும், விடியலில், அவன் அவள் முன் நிற்க வேண்டும். இல்லாவிட்டால் அன்று முழுவதும் அவளிடம் அவன் மட்டுமே பேச வேண்டும். அவள் பேசவே மாட்டாள்.

    இவ்வாறாக நாட்கள் நகர, ஒரு நாள் ரிச்சார்ட்டில் வேலை என்று, அவளை தனி வீட்டில் விட்டுவிட்டு அவன் சென்று விட, அவள் உறங்க ஆரம்பித்தாள். திரும்ப வந்தவன், அவளை எழுப்பாமல், மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.

    சிறிது நேரம் கழித்து உறக்கம் கலைந்தவள், அவன் வேலை செய்வதைப் பார்த்து எழுந்து அமர்ந்தாள்.

    "போலாமா?" என்று கேட்டவளை திரும்பி பார்த்தவன் "ம்ம்" என்று சொல்லிவிட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

    அவள் ரெப்ரெஷ் செய்து வந்து அவனைப் பார்க்க, அவன் மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தான்.

    "என்ன பண்ணறிங்க? லேட் ஆச்சு. அபிய கூப்பிடனும்"

    "இரு போலாம்"

    "ப்ச்" என்றவள் அமைதியாக அவனெதிரே உட்கார்ந்தாள். 5 நிமிடங்கள் கடக்க பொறுமை பறந்தவள், வேகமாக எழுந்து லேப்பை இழுக்க, "வதனி" என்று பார்த்திபன் கோபத்தில் கத்தியே விட்டான்.

    "வர்றேன்னு சொன்னன்ல அப்புறம் ஏன் இப்படி பண்ற?" என்று அவன் கத்த,

    அவன் கோபத்தில் திகைத்தவள், எதுவும் பேசாமல் சென்று வெளியே அமர்ந்தாள்.

    சில நிமிடங்களுக்கு பின், அவளை அறையில் காணாமல் வெளியே வந்தவன், அங்கிருந்தவளைப் பார்த்ததும் தான் நிம்மதியானான்.

    "போலாமா?"

    எவ்வித அசைவும் இன்றி அப்படியே இருந்தாள்.

    காரில் செல்லும்போதும் ஆகட்டும், வீட்டிற்கு சென்றுமாகட்டும், உணவு பரிமாறையிலாகட்டும் அவள் அவனுக்கு தந்தது மவுனம் மட்டுமே.

    மறுநாள் மதியம், அபிக்கு உணவு தந்து வகுப்பில் விட்டவள், பாத்திரங்களை எடுத்துவைத்துவிட்டு, டேபிள் மேல் இருந்த அவனது செல்லை எடுத்து டிரைவருக்கு அழைத்தாள்.

    "வீட்டுக்கு போகணும். கார கீழ போர்டிக்கோவில நிறுத்துங்க" என்றவள் செல்லை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, பையை எடுத்துகொண்டு கிளம்பினாள்.

    "வதனி நில்லு"

    அவள் பதில் பேசாமலேயே செல்ல, அவனும் பின் தொடர்ந்தான்.

    அவனும் அவள் உடன் கிளம்பினான். அவளுடன் அன்று பேசியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் அவன் இருக்க, அவனிடம் பேசவே கூடாது என்ற முடிவில் அவள் இருந்தாள்.

    --- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
    Caide, Deepu04, IniyaaSri and 2 others like this.
  9. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Sakthi... semma ponga.... super best episode so far.... plssssss adutha update podunga Sakthi.... mandai kaiyuthu........
     
    Nithuashok2015 likes this.
  10. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 29

    அவளுடன் அன்று பேசியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் அவன் இருக்க, அவனிடம் பேசவே கூடாது என்ற முடிவில் அவள் இருந்தாள்.

    "ஏய். என்னதான் உனக்கு பிரச்சனை? நேத்து திட்டுனது கோபம். சரி அதையேன் இன்னிக்கும் பிடிச்சுக்கிட்டு சுத்தற?"

    "இப்ப பேச போறியா இல்லையா?"

    "பேச மாட்ட அப்படித்தான"

    "அப்ப நான் ஓனே வீக் எஸ்டேட் போறேன். நீ இங்கயே இரு. நீ பக்கத்துல இருந்து பேசாம இருக்கறதுக்கு, நான் எஸ்டேட் போயி, அங்க இருக்கற வேலைய பார்க்கறேன்." என்றவன் வேகமாக உடைகள் எடுத்துவைக்கச் சென்றான்.

    "நெஜமாத்தான் சொல்றானோ. இல்ல பொய்யா இருக்குமோ?" என்று குழம்பியவள், மெல்ல எட்டி பார்க்க, அவன் உடை எடுத்துவைப்பது தெரிந்து அவள் கோபம் அதிகரித்தது.

    வேகமாக அவனிடம் நெருங்கியவள், அவனிடமிருந்து பையை பறித்து அதில் இருந்ததை தூக்கிப்போட்டவள், சட்டமாக கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

    "வதனி, மறுபடியும் என் கோபத்த கிளராத"

    மெளனமாக அமர்ந்து பிடிவாதத்தை முகத்தில் தேக்கி, அமர்ந்து இருந்தவளைப் பார்த்த பார்த்திபன், பழைய கோபத்தை எட்ட ஆரம்பித்தான்.

    "ஏய் பன்றதெல்லாம் தப்பு. இதுல நீ பண்ற வேலையெல்லாம் டூ மச். நானும் போனா போகுதுன்னு விட்டா ரொம்ப பண்ற. நமக்கு ஒரு பையன் இருக்கான். அவனே பரவால்ல போல"

    மீண்டும் திரும்பி அவனை எறிட்டவள், முகத்தை திருப்பிகொண்டாள்.

    "ஏய், என்கிட்டே முகம் திருப்பாதைன்னு சொல்லிருக்கேன். நீ அடங்கவே மாட்டடி"

    "மொதல்ல எந்திரி. இல்லாட்டி நீ அவ்ளோதான்"

    அவன் கோபம் அதிகரிக்க, அதை அவன் பேச்சில் உணர்ந்தவள், வேகமாக எழுந்து, சென்றாள்.

    அவள் பேசாமல் சென்றது அவனுக்குள் ஏமாற்றத்தை பரப்ப, அது கோபமாக உருவெடுக்கும் நேரம், உள்ளே எட்டி பார்த்தாள், அவளைப் பார்த்ததும் ஒரு நொடி அவனுக்குள் மகிழ்ச்சி பரவியது, அவன் அவளை ஆவலாக பார்க்க, அவளோ, "போடா. உன்னைலாம் நான் லவ் பண்றேன் பார். என்ன சொல்லணும். எங்கையோ போ. என்னமோ பண்ணு. எனக்கென்ன" என்றவள் வேகமாக நகர்ந்தாள்.

    அதுவரை கோபமாக இருந்தவன், அவள் சொன்ன, "உன்னைலாம் நான் லவ் பண்றேன் பார்." என்ற வார்த்தைகள் அவனுக்குள் ஆழமாக ஊடுருவி நின்றது.

    அந்த வார்த்தைகளுக்காக தானே அவன் இத்தனை வருடங்களாக தவம் இருக்கின்றான். அதை அவள் சொன்னதும் அவனுக்குள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.

    அவள் சொன்ன மற்றவற்றை அவன் விட்டுவிட்டான்.

    வேகமாக அவளை தேடி சென்றவன், அவர்கள் அறையில், கட்டிலில் அமர்ந்து, அவனை திட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தவளைப் பார்த்து வேகமாக அவளிடம் சென்றான்.

    அவனைப் பார்த்தவள், "என்ன? கிளம்பியாச்சா? பாய்" என்றவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

    வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன், "இப்ப என்ன சொல்லிட்டு வந்த?"

    "என்ன சொன்னேன்?" என அவனிடமே கேட்டுவிட்டு அவள் யோசிக்க ஆரம்பித்தாள், "அச்சச்சோ என்ன உளறி வைச்சேன்னு தெரிலையே. ஒழுங்கா வந்த மாதிரியே இருந்து இருக்கலாம். கடுப்புல திரும்பி போயி என்ன சொன்னானோ தெரிலையே."என்று மனதிற்குள் புலம்ப,

    "அதென்ன போடாவா?"

    "கடவுளே, போடான்னு சொல்லிட்டனா, ஐயாவுக்கு பிடிக்காதே. ஏய் மதி, உனக்கு ஏன் இந்த வேலை?" என்று அவள் மனதிற்குள் அவளையே அவள் திட்ட ஆரம்பிக்க,

    "உன்கிட்ட தான் கேட்கறேன். அதுக்கு ஏன் இஞ்சி தின்ன மங்கி மாதிரி முழிக்கற?"

    "அது. அது..."

    "ம்ம். அது...?"

    "நான் அப்படிலாம் ஒன்னும் சொல்லல்ல"

    "ஹோ. சரி. நீ சொல்லிருந்தா விட்டறலாம்னு பார்த்தேன். இப்ப சொல்லல இல்லையா. சரி ஒன்னு பண்ணு, போயி என் டிரஸ் எல்லாத்தையும் எடுத்து வை"

    "அதெல்லாம் முடியாது."

    "சரி, அப்ப நீ சொல்லிட்டு வந்தத இப்ப சொல்லு. அதும் என் கண்ணா பார்த்து"

    "என்ன சொன்னேன்?"

    அவள் தோள்களை எனக்கு தெரியாது என்பது போல குலுக்கினான்.

    சில நொடிகள் நடந்தவற்றை ரீவைண்ட் செய்து பார்த்தவள், முகம் தானாக சிவந்தது.

    "தெரிஞ்சுடுச்சா? இப்ப சொல்லு"

    சில நொடிகள் தடுமாறியவள், "அதெல்லாம் முடியாது"

    "ஏன்?"

    "கோல்டன் வோர்ட்ஸ் ஆர் நாட் ரிபீட்டட் அகைன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து வேகமாக கதவை நோக்கி ஓடியவளை வேகமாக சென்று பிடித்தவன், அவளை சுவற்றோடு சாய்த்து, "சோ?" என்க,

    மாட்டிக்கொண்ட தவிப்பில் இருந்தவள், புடைவை முந்தானையை திருகிக்கொண்டே பார்வையை பூமியில் பதித்து நின்றாள்.

    அவளது தவிப்பு அவனை ஆட்டி பார்க்க, மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தினான். ஒரு நொடி அவன் பார்வையை சந்தித்தவள், அதில் தெரிந்த அவன் காதலின் வீரியம் தாங்காமல் மீண்டும் குனிந்து கொண்டாள்.

    அவள் முகத்தில் தெரிந்த செம்மை, அவள் படபடக்கும் கண்கள், துடிக்கும் இதழ்கள், என அனைத்தும் அவனை அவளின் மேல் பித்தம் கொள்ளச் செய்ய, அவள் முகம் நோக்கி குனிய, அதே நேரம், கீழே இருந்து வந்த மீனா அவர்கள் அறைக்கதவைத் தட்டினாள்.

    "அம்மா. ஐயா"

    அவன் செயலை குலைக்கும் விதமாக அவள் தட்டியதால், அவன் முகம் கோபத்தில் சிவக்க, அவள் அவனைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே, "சொல்லு மீனா"

    "அம்மா ஐயாவ பார்க்க ஒருத்தர் வந்து இருக்கார்"

    "யாரு? என்ன விஷயமாம்?"

    "யாரோ சங்கராம். ஐயாவுக்கு தெரியுமாம் மா"

    அதில் அவள் அதிர்ந்து அவனை பார்க்க, அவன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான்.

    --- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
    Caide, Deepu04, sreeram and 2 others like this.

Share This Page