1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks Sree!
     
  2. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks Priya!
     
    sreeram likes this.
  3. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Will update Soon!
     
  4. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks @Rajijb
     
  5. srinithyasundar

    srinithyasundar Junior IL'ite

    Messages:
    40
    Likes Received:
    9
    Trophy Points:
    13
    Gender:
    Female
  6. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 7

    உறங்கி எழுந்த மதி ஒரு நிலையில்லாமல் தவித்துக்கொண்டு இருந்தாள். கிளம்புவதற்கு அவனிடம் சொல்லவோ, கேட்கவோ அவளுக்கு பயமாக இருந்தது. அடுத்து செய்ய வேண்டியதை நினைத்து அவளுக்கு கவலையாக இருந்தது.

    உள்ளே வந்தவன் அவளைப் பார்த்து எதுவும் சொல்லாமல் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தான்.

    மதியோ, "இந்த எரிமலை எப்ப வெடித்து சிதறும்னு தெரிலையே, இப்ப எப்படி சென்னை போறது. போன் வேற வேணுமே. என் போன வேற எடுத்து வைச்சிருப்பார் போலேயே" என்று குழம்பியவள், "இனி மறைத்து பயனில்லை. கேட்டுவிட வேண்டியது தான்" என்று முடிவு செய்தாள்.

    வெளியே வந்தவன், அவளுக்கு உணவு தருவித்தான். கொண்டு வந்து அங்கிருந்த மற்றொரு அறையில் இருந்த டைனிங் டேபிளில் வைத்தவன் அவளைத் திரும்பி பார்த்தான். அவளோ கவலையோடு அமர்ந்திருந்தாள்.

    "வந்து சாப்பிடு" என்று அவளருகே வந்து அழைத்தான்.

    அவளோ தீவிர சிந்தனையில் இருந்தாள்.

    அவள் முகத்தின் முன் விரல்களைச் சொடுக்கினான்.

    அதில் கலைந்த மதி திடுக்கிட்டு, அவனைத் திரும்பி பார்த்தவள், "எ.. எனக்கு போ.. போன் வே... வேணும்" என்றாள் கண் கலங்க.

    "சாப்பிட வர சொன்னேன்"

    "கொஞ்சம் அவசரம், ப்ளீஸ் போன் தாங்களேன்" என்றாள் கண்களில் நீர் வழிய.

    "---"

    "பிளீஸ், ரொம்ப அவசரம்" என்றாள் அவனை கெஞ்சுதலாக பார்த்தவாறே.

    "---"

    "என்னோட போன எடுத்து வைச்சிருக்கிங்கனு தெரியும். அது எதுக்கும்னு தெரியும். பிளீஸ் ஒரு 5 நிமிஷம் பேசிட்டு தந்துருவேன்."

    "----"

    அவன் பதில் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு தன்னையே நொந்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள். அவளையும் அறியாமல் அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது. அவள் இதயம் வலிக்க ஆரம்பித்தது.

    "ஒழுங்கா எழுந்து சாப்பிட வா" என்ற குரலில் எரிமலையின் சீற்றம் தெரிந்தது.

    "எனக்கு சாப்பாடு வேண்டாம். எனக்கு போன் தான் வேணும்" என்று தேம்பிக்கொண்டே கூறினாள்.

    "ஏய், என்னடி கொஞ்சம் விட்டா ஓவரா போற? என்ன பத்தி தெரியும்ல" என அவன் அவளை கோபத்தில் நெருங்க,

    அவள் பயத்தில் உட்கார்ந்தவாறே பின்னடைந்தாள், "நா.. நான் பே.. பேசலைனா அ... அபி சா... சாப்பிடமாட்டான்" என்று அழுகையும், ஆதங்கமும், பயமும் கலந்த குரலில் சொன்னாள்.

    அவளது பதிலில் அதிர்ந்த அவன், வேகமாக அவளை அறைந்தான். அறைந்த வேகத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த மதி, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு, "பிளீஸ், நே.. நேத்து நைட்ல இருந்து அவன்ட்ட பேசல, உங்க போனையாவது தாங்களேன். இந்நேரம் கண்டிப்பா என்கிட்ட பேசலைன்னு அழ ஆரம்பிச்சு இருப்பான். இன்னிக்கு காலைல இருந்து போன தேடி நொந்துட்டேன்." என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

    அவள் மீது கோபம் இருந்தாலும், எதுவும் பேசாமல், அவனது போனை எடுத்து கட்டிலில் அவள் முன்னே போட்டான்.

    அவள் வேகமாக எடுத்து கால் செய்ய ஆரம்பித்தாள்.

    "ஹலோ, சாரதாமா. நான் மதி பேசறேன்."

    "----"

    "என் போன் ரிப்பேர்"

    "----"

    "ஹல்லோ, அபி கண்ணா" என்று அவள் அழைத்தது தான் தாமதம். வேகமாக அவளிடம் வந்தவன் போனை பறித்து லவுட் ஸ்பீக்கரில் போட்டான்.

    "ஹெல்லோ அம்மா"

    குரலை கேட்ட மாத்திரத்தில் அழுகை அதிகமானாலும், அதை அடக்கி, "அபி கண்ணா"

    "அம்மா நேத்து ஏன் போன் பண்ணல?"

    "அம்மா போன் ரிப்பேர் செல்லம்" என்று கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே கூறினாள்.

    "நான் உன் மேல கோபமா இக்கேன்"

    "அச்சோ. அம்மா மேல கோபமா? அம்மா பாவம் இல்ல"

    "மானிங் நீ ஏன் பேசல?"

    "அம்மாக்கு வொர்க் டா"

    "ம்ம். சரி. அப்ப வப்ப எனக்கு டாயிஸ் வேணும்"

    "ம்ம். என்ன டாய்ஸ் வேணும்?"

    "அச்சோ. எனக்கு தெலையே. ரெண்டு பேதூம் போய் வாங்காமா?"

    "ம்ம்."

    "நீ எப்ப வரமா?"

    "கிளம்பிட்டேன். உடனே வரேன். நீ ஒழுங்கா சாப்பிட்டு தூங்கணும்"

    "ம்ம். இப்பதான் பப்பாம் சாப்தேன்"

    "அபி கண்ணா. சமத்தா இருக்கணும், பாட்டிய படுத்தக் கூடாது"

    "மாட்தேன். நீ சொன்ன மாறி பாட்டிய பத்திரமா பாத்துபேன்"

    "குட். மை அபி இஸ் எ கிரேட் மேன்"

    "லைக் மை டாட்" என்று அபி சிரித்தது.

    பார்த்திபனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை எட்டிப்பார்த்தது.

    இருவரும் கொஞ்சி, முத்தங்கள் பறிமாறிப் பின் தான் அணைத்தனர்.

    அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்த பார்த்திபன் அதை மிகவும் ரசித்தான். அணைத்த பின் அவனது கோபம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.

    போனை அணைக்கும் போது இருந்த அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவனைப் பார்த்ததும் மறைந்தது.

    ஆனால் மகனிடம் பேசியதால் வந்த மன திடத்தில், "நான் ஊருக்கு போகணும்".

    "நீ இங்க இருக்கற. நான் போய் அபிய கூட்டிட்டு வரேன்"

    "இல்ல. நான் இங்க இருக்க மாட்டேன்"

    "ஏய். என்ன மறுபடியும் கை நீட்ட வைக்காதே"

    "இது தான் என் முடிவு"

    "சரி உன் இஷ்டம். பட் என் மகன் என் கூட தான் இருப்பான்"

    அவனது பதிலில் அதிர்ந்தவள், "என்ன? உங்க பையனா?"

    "லுக். எதாவது சொல்லி உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காத. அஸ் வெல் அஸ் அபியோட பிறப்பையும் அசிங்க படுத்தாத" என்றான்.

    அதில் மெளனமாக வாயை மூடிக்கொண்டாள்.

    "கிளம்பு. போய் அபிய கூட்டிட்டு வரலாம்"

    "இப்போதைக்கு இங்கிருந்து கிளம்பி போய், அப்புறம் வர மாட்டேனு சொல்லிடுவோம்" என்று நினைத்துக் கொண்டாள்.

    இருவரும் மதிய உணவு முடித்து மகனைக் காண கிளம்பி வர, அவர்களுக்கு முன்னால், ராமசாமி கிளம்பி இருந்தார்.

    "அங்கிள் நீங்க இன்னொரு கார்ல வாங்க. நாங்க முன்னாடி போறோம்"

    "சரி தம்பி. சின்னதுரை ஆளுங்ககிட்ட பத்திரம்"

    "ம்ம்" என்றவன் சென்று காரில் ஏறினான்.

    அவனைப் பின் தொடர்ந்து ஏறியவள், அமைதியாக அமர்ந்தாள். காய்ச்சலும், காயத்தின் வலியும் அவளை உறக்கத்தில் ஆழ்த்தியது.

    பார்த்திபன், மகனைக் காணும் ஆர்வத்தில் வேகமாக காரைச் செலுத்தினான்.

    -- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
  7. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    pottuten!
     
  8. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அய்யய்யோ...ஒரே சஸ்பென்ஸா போகுதே கதை. :clap2::clap2::clap2::clap2:

    அதே சமயம் விருவிருப்பாகவும் இருக்கு. பயங்கர ஆர்வம காத்துக்கொண்டு இருக்கிறேன் உங்களின் அடுத்த பதிவுக்காக.
     
    Sivasakthigopi likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இது என்ன கதை புது ரூட்டில போகுது .சக்தி இனி சமத்தா அடுத்து அடுத்து பதிவு பண்ணிருங்க .
     
    Sivasakthigopi and sreeram like this.
  10. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 8,


    இடையில் இரண்டு இடங்களில் நிறுத்தி சற்று இளைப்பாறி, இரவு உணவை முடித்து, குழந்தைக்கு வேண்டிய சில பொருட்களை வாங்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தனர். இருந்தும் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவள் வழி சொல்லியதை தவிர்த்து. கார் அன்றைய நள்ளிரவில் மதியின் அப்பார்ட்மெண்டை அடைந்தது.

    அவளைப் பார்த்த காவலாளி, "என்ன மதிமா? தலைல காயம்?"

    "ஒன்னும் இல்ல தாத்தா, வழுக்கி விழுந்துட்டேன்"

    "ஹோ. அட அபி அப்பா! எப்ப தம்பி ஊர்ல இருந்து வந்தீங்க?"

    "இன்னிக்கு தான் தாத்தா."

    "சரி மா. நேரம் ஆச்சி. போய் பிள்ளைய பாருங்க. நீ வருவ வருவன்னு 8 மணி வரைக்கும் கீழ தான் இருந்தாங்க. அவன் தூங்கின பின்னாடி தான் மேல போனாங்க"

    "சரி தாத்தா."

    அவர் சென்று கதவைத் திறந்தார்.

    பார்கிங்கில் காரை நிறுத்தி, பைகளை எடுத்துக்கொண்டு இருவரும் இறங்கி, அங்கிருந்த லிப்ட் வழியாக மேலே சென்றனர்.

    அவள் முன்னே செல்ல இவன் பின் தொடர்ந்தான்.

    சென்றவள், ஒரு வீட்டின் முன் நின்றவள், தன் கைப்பையில் இருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தாள், இருவரும் உள்ளே சென்றதும், கதவை சாற்றி விட்டு, உள்ளே சென்றாள். அவன் அவளைப் பின் தொடர, உள்ளே சென்றவள், அவளது அவளது கையில் இருந்த பைகளை அங்கிருந்த ஹாலில் வைத்துவிட்டு, "இங்க உட்காருங்க" என்றவள், அதை ஒட்டி இருந்த அறைக்குள் நுழைந்தாள். அவன் அவளையே பார்த்துகொண்டு நின்றான்.

    சென்ற வேகத்தில். அபியை அழகாகத் தூக்கிக்கொண்டு வந்தவள், எதிர்பட்ட அவனிடம், வாயில் விரல் வைத்து, அமைதி என்று சைகை செய்தவள், அவனை பின் தொடர சைகையாலேயே அழைப்பு விடுத்து,நேராக வீட்டினுள் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தாள். அந்த அறை விடிவிளக்கில் மூழ்கி இருந்தது.

    உள்ளே வந்து குழந்தையை படுக்கவைத்து, அதன் பட்டுகன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டவள், ஏசியை ஆன் செய்தாள்.

    அதற்குள் குழந்தையிடம் விரைந்தவன் அவனருகில் அமர்ந்து, அவன் தலையை கோதி நெற்றியிலும் கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டான்.

    அவனது வேகத்தில் குழந்தை சிணுங்க, அவன் மெல்ல தட்டிகொடுத்தான்.

    வெளியே சென்ற மதி, கையில் பொம்மை மற்றும் அவளது கைப்பை சகிதம் உள்ளே நுழைந்தவள், அவற்றை உரிய இடத்தில் வைத்தாள். குளியறையில் நுழைந்து முகம் கழுவி வந்தவள், குழந்தையின் ஒரு பக்கத்தில் படுத்து, அவனை அணைத்தவாறே உறங்க ஆரம்பித்தாள்.

    சில நிமிடங்கள் அவர்களையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவன், எழுந்து உடை மாற்ற சென்றான்.

    அவன் திரும்பி வரவும், குழந்தை உறக்கத்தில் அழவும் சரியாக இருந்தது. அவன் செல்வதற்கும், மதி எழுந்து அவனை சமாதனப்படுத்தவும் சரியாக இருந்தது.

    "அபி கண்ணா. என் செல்லம்ல. அம்மா இங்கதான் இருக்கேன். தூங்குங்க"

    அவன் அவள் கழுத்தை கட்டிக்கொண்டு, நெஞ்சில் முகம் புதைத்து, உறங்க ஆரம்பித்தான்.

    மெல்ல அவனை தட்டி கொடுத்தவள், அப்போதும் சினுங்கல் நிற்காமல் இருக்க, எழுந்தவள், அவனைத் தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுத்தவாறே அறைக்குள் சில நிமிடங்கள் நடக்க, குழந்தை தூங்கிவிட்டான்.

    அவனை மீண்டும் அவனிடத்தில் படுக்க வைத்தவள், அவளும் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

    குழந்தையிடம் படுத்த பார்த்திபன், ஒரே முடிவுடன் உறங்க ஆரம்பித்தான்.

    மறுநாள் காலை அபி தான் அவனை எழுப்பிவிட்டான்.

    "அப்பா. அப்பா. என்திரிங்கபா. பாய் போலாம்"

    அவனது அழைப்பில் எழுந்த பார்த்திபன், அவனைப் பார்த்த வேகத்தில். அவனை இழுத்து நெஞ்சோடு அனைத்து படுக்க வைத்துக்கொண்டே தூக்கத்தை தொடர, குழந்தையோ, "அப்பா, வாங்க பா. பாய் போலாம்" என அவனை உலுக்கி எழுப்பி விட்டது.

    "பாய் போலாமே. எங்க போலாம்?"

    "டாயிஸ் வாங்க"

    "ஹோ போலாமே" என்று இருவரும் எழ அங்கு வந்த மதியைப் பார்த்த அபி, "அம்மா" என அவன் கைகளில் இருந்து கீழே இறங்கி ஓடினான்.

    அவனை எடுத்துக்கொண்டே, "குட்டி செல்லம், எழுந்தாச்சா?"

    "ம்ம். என்கு பால்?"

    "இப்ப பிரஷ் பண்ணுவமாம் தென் பால் குடிப்பமாம்"

    "ம்ம். நானும் அப்பாவும் பிரஸ் பண்றோம். நீ பால் கொந்து வா" என்றவன் இறங்கி பார்த்திபனிடம் ஓட, மதிக்கு வலித்தது.

    அவள் முகமாற்றத்தை கண்டு அவளிடம் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தவன், "ஊருக்கு போக கிளம்பு" என்று சொன்னவன், குழந்தையுடன் குளியலறை புகுந்தான்.

    குழந்தையும் அவனும் கிளம்பி வெளியே வர, சாரதா அவர்களுக்கு பால் கொண்டு வந்தார்.

    "வாங்க தம்பி."

    "ம்ம்" என்றவன் குழந்தையுடன் அங்கிருந்த சோபாவில் அமர, அவர் குழந்தைக்கு சிப்பரையும் அவனுக்கு கப்பையும் தந்தார். பின் சமையல் அறைக்குள் சென்றுவிட்டார்.

    அபி அவனது மடியில் அமர்ந்து, நெஞ்சில் சாய்ந்துகொண்டே பாலை குடிக்க, அவனை ஒரு கையில் அணைத்தவாறே அவனும் பால் குடிக்க ஆரம்பித்தான். அந்த வீட்டை மெல்ல ஆராய ஆரம்பித்தான். இரண்டு அறைகள் கொண்ட ஒரு அப்பார்ட்மெண்ட். பெரிய அறை தாய்க்கும் மகனுக்கும், மற்றொரு அறை அந்த முதியவருக்கு. சிறிய கிட்சென் மற்றும் டைனிங் ஹால், ஒரு ஹால் கொண்ட வீடு. அவனைப் பொறுத்த மட்டில், ஒரு நடுத்தர குடும்பம் வசிக்க போதுமானது.

    மெல்ல விழிகள் மலர்த்தியவன், அங்கிருந்த ஹாலில் அபியின் குழந்தை பருவ புகைப்படம் பார்த்தான். மற்றபடி வீடு மிகவும் எளிமையாக இருந்தது.

    அவர்கள் குடித்து முடிக்கவும், சாரதா வரவும் சரியாக இருந்தது.

    "மதி?"

    "கோவிலுக்கு போயிருக்கா தம்பி?"

    "நீங்க?"

    "நான் சுரேஷோட அத்தை."

    "சுரேஷ்?"

    "மதி பிரிண்ட்"

    "ஹோ?"

    அதே நேரம் மதி வீட்டிக்குள் நுழைய, "நாங்க கிளம்பிட்டோம். போலாமா?"

    "அ.. அது..."

    "சீக்கிரம் கிளம்பு. நாங்க ஒரு ரவுண்ட் போயிட்டுவர்றோம்"

    "இல்ல.. அ.. அது.. உ.. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்"

    "என்ன?"

    சாரதா உள்ளே செல்ல, மதி "அபி கண்ணா, பாட்டி உனக்கு சாக்கி தராங்களாம். போய் வாங்கிட்டு வா"

    "ஐ சாக்கி" என்று அவன் பார்த்திபனின் கையில் இருந்து இறங்கி ஓடினான்.

    அவள் அவளது அறைக்குள் நுழைந்தாள்.

    "என்ன?"

    "நாங்க உங்க கூட வரல" என்று அவளிடத்து இருந்த மொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டி கூறினாள்.

    "நீ வர்ற"

    "நாங்க வரல, வரவும் மாட்டோம்"

    வேகமாக அவளது கழுத்தை பிடித்தவன் அவளை அவள் பின்னே இருந்த சுவற்றோடு அவளை சாய்த்தான். கண்கள் அனலைக் கக்கின.

    "என் கூட வர்ற. என்ன பத்தி உனக்கு நல்லாவே தெரியும்." என்று கூறியவன், அவள் முகத்தில் வலியின் சாயலை உணர்ந்தவன் அவளை விடுவித்தான்.

    "உன்ன கூட்டிட்டு போகவும் தெரியும், தூக்கிட்டு போகவும் தெரியும். உனக்கு வேண்டியது எல்லாத்தையும் வாங்கி தரவும் தெரியும். இங்க இருந்து நீ ஒரு துரும்ப கூட கொண்டு வர அவசியமில்ல. புரிஞ்சுதா?"

    அவள் அழுதுகொண்டே சென்று கட்டிலில் படுத்தாள்.

    அபி "அம்மா" என்று அழைத்துக்கொண்டே வருவதைப் பார்த்த மதி, உடனே கண்களைத் துடைத்தாள்.

    அதைப் பார்த்த பார்த்திபனின் முகம் ஒரு நொடி மலர்ந்து பின் இறுகியது.

    அவள் எழுந்து அவர்களது உடைமைகளை அடுக்கத் தொடங்கினாள். மெல்லிய புன்னகை ஒன்றை சிந்திக்கொண்டே அவன் மகனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.

    எதிர்காலம் தனக்கு என்ன வைத்து இருக்கின்றது என்று தெரியாமல் மதி விதியின் போக்கில் செல்ல தீர்மானித்தாள். வெற்றி விதிக்கா? நம் மதிக்கா?

    -- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
    Caide, IniyaaSri, Deepu04 and 2 others like this.

Share This Page