1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கெட்ட வார்த்தைகளா-கேட்ட வார்த்தைகளா

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, May 15, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,783
    Likes Received:
    12,618
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:கெட்ட வார்த்தைகளா?
    -கேட்ட வார்த்தைகளா?:hello:

    பையன் அப்பாவிடம் சொன்னான்
    'அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '

    ' எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?"

    "கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
    9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ன்னு சொன்னேன்.

    சரி அப்புறம்...

    7 அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க .
    அதே எழவு தானே‍ வரும். சரி நீ என்ன சொன்ன?

    அதே எழவு தானே வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "

    " சரி, சரி நாளைக்கு வரேன் "

    அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்.

    "அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"

    " இல்லடா நாளைக்கு வரேன்"

    " சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு "

    " எதுக்குடா ?"

    " drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் .

    அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன். ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்.
    அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .

    ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும் லூசா அவன்.. சரி நீ என்ன பண்ணுன.

    ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும் லூசு-ன்னு சொன்னேன்.

    உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு .

    " சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "

    அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்

    " இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா "

    " இல்லடா நாளைக்கு வரேன்"

    " நீ போக வேணாம்பா "

    " ஏண்டா?"

    " என்னை ஸ்கூலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க"

    "என்னாச்சுடா?"

    "ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார்"
    அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க "

    "சயின்ஸ் டீச்சரா ..!! ‍ அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான் ?"

    " அதே தான்பா நானும் கேட்டேன் . டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க "

    நீதி: குழந்தைகள் "கெட்ட" வார்த்தைகள் பேசுவதில்லை.

    கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.
     
    kaluputti likes this.
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,370
    Likes Received:
    10,574
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Now a days many parents don't use such indecent language to the extent of being copied by children leading to dismissal.
    jayasala42
     
    Thyagarajan and kaluputti like this.
  3. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,159
    Likes Received:
    583
    Trophy Points:
    208
    Gender:
    Female
    It is all old world... of course when we hear it in tamil it is all the more 'green' than polished.

    Is it? I thought such/similar cursing words, but only nowadays in a different language like ****, f..k..etc, are used by children freely , is what heard , from many sources. Earlier only few did, but now only a few don't. All said and done, the behavior of the growing children is certainly influenced by the family, esp. parents.
     
    Thyagarajan likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    //குழந்தைகள் "கெட்ட" வார்த்தைகள் பேசுவதில்லை.

    கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.//

    இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, நாம் ..பெற்றவர்கள் எப்படி பேசுகிறோமோ அதைக்கேட்டுத்தான் கேட்டு குழந்தைகள் பேசுகிறார்கள்..எனவே, நம் வார்த்தை பிரயோகங்கள் நல்லபடி இருக்க வேண்டும்....இதையே மேலுள்ள உரையாடல் உணர்த்துவதாக நினைக்கிறேன்....பகிர்வுக்கு நன்றி :thumbup:
     

Share This Page