1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குறிஞ்சி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 30, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அழகிய நீலம் உன் வண்ணம் - அது
    கொள்ளை கொள்ளும் என் எண்ணம்
    நீ வளருமிடமோ மலைப்பாங்கு
    மலைக்கே போர்வை தருவது உன் பாங்கு

    நீ ஒருமுறை மலர்ந்தால் மறுமுறை மலர
    உனக்கு வேண்டும் ஆண்டுகள் பன்னிரண்டு
    அப்படி மலர்கையில் உன்னை காண
    போதாது கண்ணிரண்டு

    நீலமலை என நீலகிரிக்கு அந்த பெயர்
    வந்ததோ உன்னால் என்கிறது வரலாறு
    நீ மலர்ந்தாலோ அந்த மலையிலே
    தெரிவதோ ஒரு நீண்ட நீல ஆறு

    நிலங்களை ஐவகையாய் பிரிக்கையில்
    மலையும் மலை சார்ந்த இடமும்
    குறிஞ்சி என பிரிக்கப்பட உன் பெயரே
    காரணம்

    எப்போதாவதுதான் நீ மலர்கிறாய், அதனால்
    உன்னை எப்போதும் பார்த்திருக்க உனக்காக
    அச்ச்சடித்தனர் தபால் தலை

    உனது பெயரோ குறிஞ்சி, நான் உன்னை
    என் வாழ்வில் காண்பேனா என என்
    நெஞ்சில் நெரிஞ்சி

    மலரே ..... குறிஞ்சி மலரே..............

    Name : Neelakurinji
    Botanical name : Strobilanthes Kunthiana
    Family : Acanthaceae
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குறிஞ்சி, ஆண்டுகள் பன்னிரண்டு உனைப் பார்க்க,
    இனி அந்தக் கவலை இல்லை எனக்கு,
    வேணியின் கவிதைக் கண்டு உனை அறிவேன்,
    நித்தமும், எனக்கில்லை நெஞ்சினில் நெறிஞ்சி.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ayyo evvalavu azhaga irukku ungal kavidhayum! indha kurunjiyum!!!!!! paarkka paarka salikkadhu kurinji!! padikka padikka salaikaadhu veniyin kavidhaigal!!!!! congrats dear good work keep going!!!:thumbsup
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Azhaganaya Kavidhai....
    Kurinji pookkal migaum azhagu.
    Ungal kavidhayal kurinji pookkal innum azhagaga therigindrana....
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Malarey.......... Kurinji Malarey......
    Paadalai ninaivu paduthivitteergal

    I know it blooms once in 12 years but I did not know it was this beautiful. So said that one has to wait for such a long time to see these beauties. I am reminded of tulips. Those are different ones no. I think these two flowers resemble only in their color. (Sorry if am wrong due to ignorance).

    Poo azhagaa? Veniyin kavithai azhagaa?
    Ethuvaa irundhaalum I will give credit for Veni only.

    Poo azhagaa irundhaalum adhan azhagai padam pidithu, adhan meyl kavi paadi namakku virundhalithadhu veniyandro?

    Good work.
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    குறிஞ்சி பற்றி குறிஞ்சிபோல் அழகான கவி சொன்ன வேணி !
    உங்கள் கவி படித்து எனக்கு நெஞ்சில் இல்லை நெருஞ்சில் .


    கங்கா'
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நன்றி வேநிமோகன் நா இப்ப தா குறிஞ்சி பூவயே பாக்குற என்னாமா இருக்கு உங்க கவிதை மாதிரியே குறிஞ்சி பூ சூப்பர்
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    உங்கள் பின்னூட்டங்கள் எனை மீண்டும் மீண்டும் நிறைய எழுத என்றுமே நல்ல ஊட்டம்தான். நன்றிகள் பல உங்களுக்கும் உங்கள் பின்னூட்டங்களுக்கும்
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    ரசிக்கத் திகட்டாத பல கவிதைகளை அள்ளி வழங்கும் அன்பு தோழி தந்த பின்னூட்டம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. எனது கவிதை ரசித்து, ரசனையுடன் பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    anbulla thozhi,

    enathu kavithaigalai naalum padiththu nall pinnoottam koduthth varum thozhikku nandrigal pala. Neengal eppothu engalukku kavithaigal tharap pogireergal??????
     

Share This Page